• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
62
பாலைவனத்து முல்லை – 29

'என்ன இது. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கலாமுன்னு எங்களை வர சொல்லிட்டு. இப்போ உங்களுக்குள்ள சம்பந்தம் பேசி முடிச்சுகிறீர்களே! இதெல்லாம் நல்லாவா இருக்கு' என்று சரஸ்வதி சத்தம் போட்டார்.
சரஸ்வதியின் வார்த்தையை கேட்டு..'போதும் நிறுத்துங்க. எங்க வீட்டுப் பெண்ணை பற்றி வாய் கூசாம உங்க பையனும் பொண்ணும் பேசும்போது நீங்க கேட்டுக்கிட்டு தானே இருந்தீங்க!! இதுக்கு மேலையும் உங்க பையனுக்கு எங்க வீட்டு பொண்ண கட்டிக் கொடுப்போம்ன்னு நீங்க நினைக்கிறீங்களா? தெய்வ வாக்குப்படி கதிர் மாமாவுக்கும் முல்லைக்கும் தான் திருமணம் நடக்கும். இந்த கல்யாணத்தை பார்க்க உங்களுக்கு இஷ்டம் இருந்தால் நின்னு பார்த்துட்டு போங்க. இல்லைனா இப்பவே கிளம்புங்க' என்று அந்த இடத்தில் மீனாவும் தன் விதியை உணர்ந்து கொண்டவளாக முல்லைக்கும் கதிர்வேலனுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று மனதார எண்ணினாள்.
பாண்டியனும் சரஸ்வதி முன்னே கையெடுத்து கும்பிட்டவர்,'ஒரு நல்லது கெட்டதுல தான் சொந்த பந்தங்கள் கூட நிக்கணும். ஆனா என் பொண்ணுக்கு ஒரு பிரச்சனைன்னு வந்ததும் உங்க பொண்ணும் உங்க பையனும் என் பொண்ண பத்தி எவ்வளவு கேவலமா பேசிட்டாங்க.ஒருவேளை ரோஜாவுக்கு அருள் இறங்கி முல்லையை என் வீட்டுக்கு மருமகளாகிக்கொள்ள வாக்கு சொல்லாவிட்டாலும், உங்க பொண்ணை என் வீட்டுக்கு மருமகளா ஆக்கிக்க நான் சம்மதித்து இருக்கவே மாட்டேன்' என்று பாண்டியன் சொல்ல..
ரோஜா மீது தவறு இருக்க வாய்ப்பில்லை என்று அந்த நொடியில் தனமும் ராவியும் உணர்ந்து கொண்டாலும்,அவர்களின் ஈகோ அவர்களின் கண்ணை மறைத்த நிலையில்..
'போதும். உங்க பொண்ண நீங்க யாருக்கு வேணா கட்டி குடுங்க.என் அக்காவுக்கு இந்த மாப்பிள்ளையை விட அழகா அறிவா ஒரு நல்ல பையனை பார்த்து கட்டி வைக்க எனக்கு தெரியும்' என்ற ரவி தன் அக்காவின் கையை பிடித்து அங்கிருந்து இழுத்துச் செல்ல.
சரஸ்வதிக்கு எப்படியாவது கதிருக்கு மாமியாராக வேண்டும் என்ற ஆசையில் மண்ணு விழுந்தது தான் மிச்சம்.
*****************************************
தன்னைச் சுற்றி இருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள், என்ன நடக்கிறது என்று புரியாத மனநிலையில் கதிரும் முல்லையும் நின்று இருக்க.
'அப்புறம் என்ன! சாமியே
அருள் வாக்கு சொல்லிடுது.பாண்டியா!! முல்லையை உன் வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போ. அவ காலடி எடுத்து வைத்த நேரம் உன் மகளுக்கும் நல்லபடியா திருமணம் நடக்கும்' என்று ஊர் பெரியவர்கள் சொல்ல.
இன்னும் ஒரே மணி நேரத்தில் முகூர்த்த நேரம் கூடி வர இருக்க..கதிருக்கும் முல்லைக்கும் திருமணம் ஏற்பாடு செய்த நிலையில்..
இந்த முறை கதிருக்கும் முல்லைக்கும் சம்மதம் இருக்கிறதா என்பதை அங்கு யாரும் கேட்காத பட்சத்தில்,
'சரி சரி. சாமி மலையேரட்டும்' என்ற பூசாரி. கற்பூரத்தை ஏற்றி ரோஜாவின் முன்னே காட்ட..அதுவரை ஆக்ரோஷமாக இருந்த ரோஜா, கற்பூரத்தை எடுத்து தன் நாவில் வைத்தபடி சாந்தம் அடைந்து மயங்கி கீழே சரிந்தவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான் நாகராஜன்.
ரோஜா மயக்கம் தெளிந்து எழுந்தவளை கை தாங்கலாக பார்வதியும் மீனாவும் தூக்கி அமர வைத்தனர்.
தனலட்சுமி உடன் கதிர்வேலனுக்கு நடக்க இருக்கும் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று எண்ணிய ரோஜாவிற்கு அந்த இறைவனே துணை இருக்க...
அவள் மீது பாண்டி அய்யனார் அருள் இறங்கி குறி சொன்னதை ரோஜாவிடம் மீனா எடுத்து சொல்ல.
ரோஜாவின் மனதில் எல்லையில்லாத மகிழ்ச்சி நிலவியது.
ரோஜா தன் முகத்தில் இருந்த வியர்வைத் துளிகளை துடைத்துக்கொண்டவள் வேகமாக எழுந்து கதிர்வேலன் மற்றும் முல்லையின் அருகே சென்று
'உங்க ரெண்டு பேருக்கு தான் அந்த கடவுள் கல்யாணத்தை பண்ணி வைப்பாருன்னு எனக்கு முன்னதாகவே தெரியும்' என்றவள்.
'அப்பா. நடப்பதெல்லாம் நன்மைக்கு தான். அதை மட்டும் நம்புவோம். எனக்கும் முல்லைக்கும் ஒரே அளவு ட்ரெஸ் தான். அதனால, எனக்கு எடுத்த கல்யாண புடவையை மாப்பிளை வீட்டு சார்புல நம்மளே முல்லைக்கு கொடுப்போம்.
மீனா அண்ணி. நீங்க நாகராஜன் கூட போயி கல்யாணத்துக்கு தேவையான எல்லா பொருளையும் கோவிலுக்கு எடுத்துட்டு வந்துடுங்க. அய்யனார் இறங்கி அருள் சொன்ன மாதிரி வாத்தியும் முல்லையும் கோவில் குழத்தில் முங்கி எழுந்து.அவங்க திருமணம் பாண்டி ஐயனார் அருளால் நல்லபடியா முடியட்டும்' என்றாள் ரோஜா.
அடுத்த ஒரு மணி நேரத்தில்..
ரோஜாவின் மேல் பாண்டி ஐயனார் இறங்கி அவர் சொன்ன வாக்கில் ஒரு எழுத்துக்கூட அச்சு பிசறாமல் கதிர்வேலன் முல்லையின் திருமணத்தை பாண்டியனும் முருகனும் முன் நின்று நல்லபடியாக நடத்தி வைக்க...
கடவுள் சன்னிதானத்தில் பெரியவர்களின் முன்னிலையில். திரு.கதிர்வேலன், பாண்டி ஐயனார் ஆசி பெற்ற மாங்கல்யத்தை முருகனின் மகள் முல்லையின் கழுத்தில் அணிவித்தார்.
கதிர் முல்லை இருவரின் ஜோடியை பார்த்து கூடி இருந்த அனைவரும் வாழ்த்து சொல்ல.
ஒரே மணி நேரத்தில் தன் வாழ்வில் நடந்த மாற்றத்தை எண்ணி புதுமன ஜோடிகள் உணர்வுகளுக்கு எல்லாம் அப்பார்ப்பட்ட மனநிலையில் தான் இருந்தார்கள்.
முல்லையின் கழுத்தில் கதிர்வேலன் மாங்கல்யத்தை அணிவிக்கும் நொடியில் கூட இந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லை என்று அவனும். இவனுக்கு விருப்பம் இல்லை என்று அவளும் தவறாக எண்ணி இருக்க..
கதிர்வேலன் முல்லையின் மனதில் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் காதலை இனி எங்கனம் உணர்ந்து, இருவரும் அவர்களின் இல்லற வாழ்க்கையில் நலம்பெற வாழப் போகிறார்களோ!
--------------------------------------------
பல தடைகளை மீறி, ரோஜாவின் எண்ணம் போலவே கதிர்வேலன் முல்லையின் திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.
முன்னதாகவே ரோஜா, ரவி, கதிர், தனம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த உணவை முல்லைக் கதிர் கல்யாணம் முடிந்தவுடன் சொந்த பந்தங்களுக்கு வயிறார பந்தி பரிமாறப்பட்டது.
மணமக்கள் இருந்த சூழ்நிலையில் இவர்கள் மட்டும் உணவை உண்ணாமல் இருக்க.
'நல்ல நேரத்தில் மாப்பிளை பெண்ணை
வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்' என்ற பாண்டியனின் சொல்லை கேட்டு புதுமண ஜோடியை வீட்டுக்கு அழைத்து செல்ல. வழியெல்லாம் முல்லையும் கதிரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் தான் பயணித்தார்கள்.
அனைவரும் சில நிமிடங்களிலேயே பாண்டியனின் இல்லத்திற்கு வந்து சேர.
'ரோஜா. உன் அண்ணன் அண்ணிக்கு நீயே உன் கையால ஆரத்தி எடு" என்றார் பார்வதி.
'இருக்கட்டும் அத்த. இந்த வீட்டுக்கு மூத்த மருமக மீனா அண்ணி தானே. அவங்களே ஆரத்தி எடுக்கட்டும்' என்ற ரோஜாவின் மனதில் இனி கதிர்வேலனுக்கு முல்லை தான். முல்லைக்கு கதிர்வேலன் தான் என மீனா மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினாள்.
ரோஜாவின் எண்ணப்படியே மீனா அவள் கரங்களால் முல்லை கதிருக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அனுப்பி வைக்க.
சாமி அறையில் தன் பொற்க்கரங்களால் விளக்கை சுடர் விட செய்தாள் முல்லை.
'அம்மாடி முல்ல. இந்த வீட்டுக்கு நீ மருமகளா வரணும்னு உன் அம்மா ரொம்ப ஆசை பட்டா.அவ ஆசைப்படியே நீ உன் தாய் மாமன் வீட்டுக்கு மருமகளா வந்துட்ட. எனக்கு ரொம்ப சந்தோசம் தாயி' என்ற முருகனின் அருகே சிரித்த முகத்துடன் நின்று இருந்தார் பார்வதி.
'கதிர், முல்ல.மச்சான் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க' என்று பாண்டியன் சொன்னதும்.
திருமண ஜோடிகள் இருவரும் பார்வதி முருகன் காலில் விழுந்ததும்,சட்டென்று பார்வதியின் விழிகள் ஈரமானது.
'என்ன அத்த. என்னாச்சு' என்று ரோஜா கேட்க..
தன் முந்தனையைக் கொண்டு அவர் கண்ணீரை துடைத்துக்கொண்ட பார்வதி. முல்லையின் நெற்றியில் இதழ் பதித்து.
'நீ நல்லா இருப்ப. நீ மாசில்லா வைரம். உன் அருமை புரியாம நான் உன்னை ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்டேன். உனக்கு நான் பண்ண பாவம் தான் என் வயத்துல ஒரு குழந்தையை நான் சுமக்க குடுப்பணை இல்லாம போயிடுது' என்ற பார்வதியை கட்டி அணைத்து முல்லை கண்கள் கலங்க.. கதிர்வேலனுக்கோ ஐயோ என்று கடுப்பாக இருந்தது.
'அத்த. பாவம் பண்ணவுங்களுக்கு எல்லாம் குழந்தை இருக்காதுனா. இந்த உலகத்துல 99%ஆளுங்களுக்கு பிள்ளையே பிறக்காது அத்த. இந்த ஜென்மத்துல உங்களுக்கு முல்லை அண்ணி தான் குழந்தையா இருக்கணும்னு விதி. அத புரிஞ்சிகிட்டு நீங்க இனி நிம்மதியா இருங்க' என்றாள் ரோஜா.
'மாமா. நீங்களும் பசங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க' என்று முருகன் சொன்னதும். பாண்டியனும் மனதார முல்லை கதிர்வேலனை ஆசிர்வாதம் செய்தவருக்கு.இனி எப்படி தன் மகளுக்கு திருமணம் நடக்கப்போகிறது என்ற கவலையும் இருக்க தான் செய்தது.
பெரியவர்களின் ஆசியை பெற்றுக்கொண்டு மணமக்கள் இருவரும் இறுக்கமான மனநிலையில் ஒன்றாக ஹாலில் அமர்ந்து இருக்க.அவர்கள் இருவருக்கும் பால் பழம் கொடுத்து சில சம்பர்த்தாயங்கள் செய்து முடித்தார்கள்.
'மீனா அண்ணி.எங்க கஸ்தூரி அத்தையை காணோம்.'என்று ரோஜா கேட்க.
'முல்லைக்கு கல்யாணம் முடிந்த மகிழ்ச்சியில கஸ்தூரி நடந்தே பத்தியாத்திரை போய் இருப்பா' என்று சொல்லிக்கொண்டே மீனாவின் அப்பா ஜெகா உள்ளே நுழைய.
தன் தந்தையை பார்த்த மீனா முகத்தை திருப்பிக்கொண்டு சமையலறை புகுந்து இருந்தாள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெகாவை பார்த்த முருகன்.'என்ன சகல. உங்கள ரொம்ப நாளா பார்க்கவே முடியல. எங்க தான் போனீங்க' என்று முருகன் கேட்க.
'எதிர் பாராத விதமா என் பொண்ண ஜீவா மாப்பிளை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்ததும். என்னால பாண்டியன் மாமா முகத்த பார்க்க தயக்கமா இருந்துச்சு. அதுவும் இல்லாம முல்லையும் என் பொண்ணு மாதிரி தான். அவ வாழ்க்கையில ஒரு நல்லது நடக்காம உங்க யாரையும் பார்க்க எனக்கு தைரியம் இல்ல சகல' என்ற ஜெகாவை பார்த்து பாண்டியன் பதில் பேசாமல் அமைதியாக இருந்தார்.
தன் மீதும், மீனா மீதும் பாண்டியன் வருத்தத்தில் இருக்கிறார் என்று அறிந்து இருந்த ஜெகா.'கதிர் மாப்புள்ள. எப்படியோ என் சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீயும் குடும்பஸ்த்தனா ஆகிட்ட' என்ற ஜெகா கதிரை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவிக்க.
முல்லைக்கோ இங்கே நடக்கும் எந்த காரியமும் அவள் மனதிற்கு மகிழ்ச்சியை தரவில்லை என்பது தான் உண்மையாக இருந்தது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top