Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 60
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
பகுதி - 28
'நேத்து அடித்த சரக்குல மண்டைக்குள்ள குருவி பறக்குது' என்றபடி இரண்டு கைகளால் தன் தலையயை இறுக்கமாக பற்றிக்கொண்டவன் கண் எதிரே பாவாடை தாவணியில் முல்லை நின்று இருக்க.
'நான் காண்பது கனவா இல்லை நினைவா' என்ற கதிரை ஏகத்துக்கும் முறைத்த முல்லை.
'ஹலோ மாமா சார். சரக்கு அடிச்சி உங்க மண்டையில வலி வரல. உங்க அருமை தங்கச்சி உங்கள அடிச்சி தான் உங்களுக்கு தலையை வலிக்குது' என்று முல்லை சொல்ல.
'என்னடி உளறுற. என் அம்மாவா' என்று கண்ணை சுருக்கி தன் எதிரே நின்று இருந்த முல்லையை கதிர்வேலன் உற்று பார்க்க..
'என்ன லுக்கு. ஒரு மனுஷன் இப்படியா நிதானம் தெரியாம குடிப்பான்' என்று கோவமாக கேட்டாள்.
கதிர் அந்த இடத்தை சுற்றி பார்த்தவன். 'ஏய் இது கோவில் தானே. நீ எப்படி இங்க.. அட நான் எப்படி இங்க.ஐயையோ. சரக்கு அடிச்சிட்டு இவளை நம்ம கிட்நாப் பண்ணிட்டோமா. ச்சி ச்சி. அதுக்கெல்லாம் தைரியம் வேணுமே. நம்ம தான் இவள லவ் பண்ற விஷயத்தையே சொல்ல முடியாம தாடி வச்சிக்கிட்டு சுத்திகிட்டு இருக்கோமே' என்று தனக்குள் கதிர் முணங்கினான்.
'ஐயோ! கதவு வேற வெளிய பூட்டி இருக்கே. இந்த ரோஜா எங்க போனா' என்ற முல்லை. பூட்டி இருக்கும் கதவை பிடித்து உளுக்கிக்கொண்டு இருக்க .
'ஏய் ரவா லட்டு. இங்க என்ன நடக்குது. நம்ம எப்படி இங்க இருக்கோம்' என்ற கதிரை முல்லை கோவமாக முறைத்தவள்.
நேற்றைய தினத்தில் இருந்து இந்த நொடி வரை நடந்த எல்லா விஷயங்களையும் முல்லை கதிரிடம் சொல்லி முடிக்க. கதிர் தன் பாக்கெட்டில் அவன் கைபேசியை தேடி பார்த்தவன்.
'ஐயோ பார்ல இருக்குற ஒருத்தன் என் போனை கேட்டான்னு கொடுத்தேன். அப்புறம் என்னாச்சு' என்ற கதிரை ஏகத்துக்கும் முறைத்த முல்லை
'இனியும் நடக்க என்ன இருக்குது. அதான் உங்கனால இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் இங்க தனியா மாட்டிக்கிட்டோமே!' என்று சொல்ல
'ஆனால் நீயும் நானும் எப்படி இங்கே.. நம்பளை எதுக்காக அம்மா அடிக்கணும்' என்று கேட்ட கதிரை பார்த்து
'எனக்கு மட்டும் என்ன தெரியும்' என்று கோபமாக சொன்னாள் முல்லை.
'இந்த பரதேசி சுந்தரை அடிச்சும் பாத்தாச்சு மிதித்தும் பாத்தாச்சு. ஆனாலும் மறுபடியும் மறுபடியும் அவன் என் பக்கமே வந்துகிட்டு இருக்கான். இரு இரு அவனுக்கு இன்னையோட ஒரு முடிவு கட்டுறேன்'
என்ற கதிர். பூட்டி இருந்த கதவை உலுக்கி பார்க்க..அப்போதும் கதவு திறக்காமல் தான் இருந்தது.
*********************************
இதே சமயம் மறுபக்கம் கோவிலுக்கு வெளியே பஞ்சாயத்து கூட்டப்பட்டு,அங்கே பாண்டியனின் குடும்பத்தினரை தவிர்த்து மீதம் இருக்கும் சில பேர் சுந்தரேசனின் ஆட்களாக இருந்தார்கள்.
இதற்கு இடையில் சரஸ்வதியின் பிள்ளைகளான ரவியும் தனமும் ரோஜாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற மனநிலையில் இருந்தவர்களின் வாய்க்கு பொறி கிடைத்தது போல சுந்தரேசன் உருவாக்கிய கட்டுக் கதைகளை அவர்கள் இருவருமே நம்ப ஆரம்பித்து இருந்தார்கள்.
'இன்னும் என்ன தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு.நான்தான் சொல்றேனே! என் தம்பியும் பாண்டியன் அய்யாவோட பொண்ணு ரோஜாவும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிரா காதலிக்கிறார்கள். ஆனா இவங்க நேசிக்கிறது பாண்டியன் அய்யாவோட பிள்ளை கதிருக்கு பிடிக்காததால தான், என் தம்பிய அவன் அடிச்சு கைய கால உடைச்சு, அவனை சாகுற நிலைமைக்கு ஆக்கிட்டான். ஏன். இதெல்லாம் உங்களுக்கும் தெரியும்தானே'
என்று சுந்தரேசன் அனைவரின் முன்னிலையிலும் கேட்க.
'ஆமாமா.கதிர் உங்க தம்பியை உயிர் போற அளவுக்கு அடிச்ச கதை எங்களுக்கும் தெரியுமே..ஆனா அது வேற ஏதோ பொண்ணு விவகாரம்ன்னு தானே சொன்னாங்க' என்று ஒருவர் சொல்ல
'அது வேற யாரோ ஒரு பொண்ணு எல்லாம் இல்ல.. என் தம்பி ரோஜாவை காதலிக்கிறதை பிடிக்காமல் தான் கதிர் என் தம்பியை அடிச்சான்' என்று சுந்தரேசன் சொல்ல..அங்கிருக்கும் பாதிப்பேர் அவன் சொல்வதில் உண்மை இருக்கும் என்று நம்பினார்கள்.
'அடப்பாவி.என்ன சொல்ற. யார் இடத்துல வந்து யாரைப் பத்தி தப்பா பேசுற.
என் பொண்ண பத்தி அடுத்து உன் வாயிலிருந்து ஒரு வார்த்தை தப்பா வந்தா கூட நாக்க இழுத்து வச்சு வெட்டிடுவேன்' என்று பாண்டியன் கோவில் வாசலில் நின்று கோபமாக கத்திக்கொண்டு இருக்கும் சமயம்,
'போதும் நிறுத்துங்க ஐயா. அதான் கோவிலுக்குள்ள நைட்ல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் ஒண்ணா இருந்து இருக்காங்களே. இனி இதுல பேச என்ன இருக்கு.
பேசாம உங்க வீட்டு பொண்ணுக்கும் என் தம்பிக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சிடுங்க' என்று சுந்தரேசன் சொன்னான்.
'என்ன கோவிலுக்குள்ள என் பொண்ணு இருக்காளா' என்று பாண்டியன் புரியாமல் கேட்க.
'இங்க கூடி இருக்குற எல்லா பெரியவுங்களுக்கும் நான் ஒன்னு சொல்லிக்கிறேன். இன்னைக்கு காலையில 7மணிக்கு இந்த பாண்டியன் ஐயா அவங்க பொண்ணுக்கு வேற ஆளுக்கூட கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணி இருக்காரு .அதனால இவங்க பொண்ணு என் தம்பியை இந்த கோவிலுக்கு வர சொல்லி அவ கழுத்துல அவனை தாலி கட்ட சொல்லி இருக்கு. ஆனா என் தம்பி முடியாதுன்னு சொல்லி இருக்கான். ஆனா அந்த பொண்ணு தாலி கட்டிக்காம நான் வெளிய வர மாட்டேன்னு கோவிலுக்குள்ளயே பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கு.' என்ற சுந்தரேசனின் பேச்சில் பார்வதிக்கு கோவம் எழுந்தது.
'இந்தாப்பா. நீ என்ன வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிகிட்டு இருக்க. அப்படியே நீ சொல்லுறது எல்லாம் உண்மையா இருந்தாலும். இப்போ உன் தம்பியும் ரோஜாவும் கோவிலுக்குள்ள தான் இருக்காங்கனு உனக்கு எப்படி தெரியும்' என்று பார்வதி கேட்க.
'என் தம்பி தான் எனக்கு போன் பண்ணி சொன்னான்' என்றான் சுந்தரேசன்.
'ஐயோ. ஏன் இப்படி என் பொண்ணு மானத்தை வாங்குற. உனக்கு என்ன தான் வேணும். உன் தம்பியை என் பொண்ணு முன்ன பின்ன பார்த்தது கூட இல்லையே' என்ற பாண்டியனின் முன்னே,
'உங்க பொண்ணு பார்க்காமல் பேசாமல் தான் இவரு இத்தனை பேர் எதிர்ல உங்க பொண்ணை பற்றி குத்தம் சொல்லுறாரா. எனக்கும் கூட இவரு பேச்சுல உண்மை இருக்குற மாதிரி தான் தோணுது.' என்று ரவி சொன்னதும்.
'இப்போ என்ன. அந்த கோவில் கதவை திறந்து பார்த்தால் உண்மை தெரியப்போகுது' என்ற தனத்திற்கு.ரோஜாவை பழி வாங்க இந்த சந்தரப்பதை பயன் படுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற.
அதே சமயம் சுந்தரேசன் கஸ்தூரியை பார்த்து கண் ஜாடை காட்டினான்.
அவன் மௌன மொழியை புரிந்துகொண்ட கஸ்தூரி.'ஐயோ ஐயோ. ஒரு நாள் இரவு ஒரு ஆணும் பெண்ணும் கோவில்ல தங்கி இருந்தா அது இந்த ஊருக்கே கெடாச்சே. அண்ணா. நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க. கோவில் கதவ திறந்து நம்ம ரோஜாவை பார்த்ததும் அவளை நீ எதுவும் கேக்காம பேசாம அவ ஆசைப்பட்ட ஸ்ரீனிவாசனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிட்டு' என்று கஸ்தூரி சொல்ல.
'அம்மா. நீ வாயை மூடு. ரோஜா மேல எந்த தப்பும் இருக்காது. கதிர் மாமாவும் முல்லையும் கண்டிப்பா எங்க இருந்தாலும் ரோஜாவை இங்க அழைச்சிட்டு வருவாங்க' என்று மீனா சொல்ல.
'ஆளாளுக்கு பேசுனது போதும்.முதல்ல கோவில் கதவைத் திறந்து உள்ள இருக்கிற ரோஜாவையும் அவ கூட இருக்குற ஆளையும் வெளியே வர சொல்லுங்க' என்று அதிதக் கோபத்தோடு சரஸ்வதியின் மகன் ரவி கத்தினான்.
*****************************************
விடியல் காலை 5 மணி அளவில் பூசாரி கோவிலின் கதவை திறக்க.
கூடியிருக்கும் அனைவரின் கண்களுக்கு முன்னே கோவில் வாசலில் வந்து நின்றது சுந்தரேசனின் தம்பி ஸ்ரீனிவாசன் மட்டும் தான்.
தன் தம்பியை பார்த்ததும்,'ஐயோ தம்பி.'என்று சுந்தரேசன் கட்டி அணைக்க.'ரோஜா.ரோஜா எங்க.' என்று கஸ்தூரி கேட்க.
'இதோ இங்க தான் இருக்கேன்' என்ற ரோஜாவை பார்த்து பாண்டியன் சிலையென உறைந்து போக. ஊர் மக்கள் அனைவரும் சுந்தரேசன் சொன்னது தான் உண்மை என்ற ரீதியில் அரசல் புரசலாக அவர்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள்.
'பார்த்திங்களா. நான் சொன்னது உண்மை தானே. இங்க பாருங்க. என் தம்பியும் இந்த பொண்ணும் தான் கோவில்ல ஒரு நாள் இரவு முழுதும் ஒண்ணா இருந்து இருக்காங்க' என்று சுந்தரேசன் சொல்ல.
' சரி சரி இந்த அசிங்கத்தை மேற்கொண்டு பேசி பெருசாகாமல் பேசாம இவங்க ரெண்டு பேருக்கு கல்யாணத்தை பண்ணி வச்சிடலாம்' என்றார் கஸ்தூரி.
சில நொடிகள் இவர்கள் பேசிய அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ரோஜா,'நீங்க சொல்றதெல்லாம் சரிதான்,ஆனா இந்த கோவில்ல நானும் இவனும் மட்டும் தனியா இல்ல. இன்னும் நீங்க எதிர் பார்க்காத ஆளுங்களும் என்கூட இருக்காங்க' என்று ரோஜா சொல்ல..
'வே. வேற யா?' என்று சுந்தரேசன் தன் கேள்வியை முடிக்கும் முன்னே. கோவிலுக்குள் இருந்து புயலை போல சீறி வந்த கதிர்வேலன் தன் வலது காலால் எத்தி ஸ்ரீனிவாசனின் மார்பில் ஒரு மிதி மிதித்த வேகத்தில் அவன் நாங்கடி தூரம் தள்ளி போய் விழுந்தான்.
ரோஜாவும் சீனிவாசனும் மட்டும்தான் கோவிலுக்குள் இருப்பார்கள் என்று எண்ணியிருந்த சுந்தரேசனுக்கு அங்கே கதிரை பார்த்ததும் கை கால்கள் நடுக்கம் எடுக்க.பாண்டியனுக்கோ. தன் மகளுடன் அவர் மகனை பார்த்ததும் உடலில் புது ரத்தம் சுறந்தது.
'ஐயோ ஐயோ. இப்படி தான் என் தம்பியை அடிச்சி அவங்க வீட்டு பொண்ணோட காதலை மறைக்கிறாங்க' என்று சுந்தரேசன் அனைவரின் முன்னே இன்னோரு நாடகத்தை அரங்கேற்ற.
'யோவ் நிறுத்து.என்ன நீ இவ்ளோ பொய் பேசுற. இப்படியெல்லாம் பொய் பேசினா சாமி கண்ணை குத்திடும்' என்ற முல்லையின் குரல் கேட்கும் திசையை கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க.. முல்லையும் நாகராஜனும் கோவிலுக்குள் இருந்து வெளியே வந்தார்கள்.
'என்னப்பா இது!? கோவில்ல உன் தம்பியும் ரோஜாவும் மட்டும்தான் இருப்பாங்க, ரெண்டு பேரும் தான் காதலிக்கிறாங்கன்னு இவ்வளவு நேரம் அவ்வளவு கதை பேசின! ஆனா இப்ப என்ன உள்ள பாண்டியனோட குடும்பமே இருக்கும் போல. ஹ்ம் ஹ்ம் இது எதுவும் சரியா படலையே' என்றார் ஒரு பெரியவர் ஒருவர்.