• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
58
பாலைவனத்து முல்லை
பகுதி – 27

ரோஜாவின் செயலில் நாகராஜனை விட ஸ்ரீனிவாசன் குழம்பி போனவன்.
'ஏய் ஏய் என்ன பண்ற.ஏன் உன் அண்ணனை நீயே அடிச்ச.' என்று புரியாமல் கேட்டான்.
'அதுவா.. உன் அண்ணன் போட்ட ஐடியா எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. அதனால. உங்க ஐடியாவை நான் எடுத்துக்குறேன்' என்றவள் அந்த அறையை சுற்றி பார்த்தாள்.
'சின்னமா. என்ன பண்றீங்க நீங்க. வாங்க முதல்ல நம்ம இங்க இருந்து வெளிய போகலாம். ஐயோ இப்போ ஏன் உங்க அண்ணனை அடிச்சீங்க.' என்று நாகராஜன் பதற்றத்துடன் கதிரின் அருகே சொல்ல.
'ஏய் உஷு. ரொம்ப சத்தம் போட்ட. உன் மண்டையை கூட அடிச்சி உடைச்சுடுவேன்' என்ற ரோஜா.. கையில் இருந்த கட்டையை நாகராஜனை நோக்கி வீச. கட்டையோ அவனை விட்டு சற்று தூரம் போய் விழுந்தது.
'ஏய்.நீ என்ன பைத்தியமா.இரு இரு நான் போய் என் அண்ணனை அழைச்சிட்டு வரேன்' என்ற ஸ்ரீனிவாசன் அங்கிருந்து வெளியே செல்ல முயன்றவனின் கையை பிடித்து இழுத்து. அவன் காலில் ஒரு எத்து வைத்தாள் ரோஜா.
கதிரிடம் இருந்து ரோஜா பயின்ற சில தற்காப்பு கலையை வைத்து ஸ்ரீனிவாசனை தன் முன்னே மண்டியிட வைத்த ரோஜா.
'பின்னாடி நின்னு எச்ச வேலை பார்க்குற உன் அண்ணனை நானே ஒரு நாள் என் போக்குல டீல் பண்ணிக்கிறேன். இப்போ நீ இங்க அமைதியா நல்ல பிள்ளையா இருக்கணும். அதை விட்டுட்டு ஓவரா சத்தம் போட்ட மவனே சங்குல சைனை போட்டுடுவேன்' என்ற ரோஜா. மயங்கி இருந்த முல்லையை மெதுவாக கோவில் அறையின் ஓரத்தில் படுக்க வைத்தாள்.
ரோஜா என்ன தான் செய்கிறாள் என்ற யோசனையில் நாகராஜன் தயக்கத்துடன் நின்று இருக்க.
'நீங்க என்ன மசமன்னு நின்னுகிட்டு இருக்கீங்க. போங்க. போய் வாத்தியை அந்த ஓரமா படுக்க வையுங்க' என்று ரோஜா சொல்ல. அவள் சொன்னதை அப்படியே செய்தும் முடித்தான் நாகராஜன்.
'சின்னமா.நீங்க என்னமோ பிளான் பண்ணுறிங்கனு தெரியுது. ஆனா என்ன பிளான்னு தான் தெரியல' என்று நாகராஜன் கேக்க.
'அது எனக்கே இன்னும் சரியா தெரியல. ஆனா நாளைக்கு என் வாத்திக்கு அந்த அல்டாப்பு தனம் கூட நடக்க இருக்குற கல்யாணத்தை நிறுத்த நான் இந்த சூழ்நிலையை பயன் படுத்திக்க போறேன்' என்றாள் ரோஜா.
அவள் சொன்னதை நாகராஜன் புரிந்துகொண்டாலும்.'ஆனா சின்னமா. நாளைக்கு கதிர் கல்யாணம் நின்னா. உங்க கல்யாணமும் தானே நின்னுடும்' என்று நாகராஜன் கேட்க.
'எனக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. எனக்கு தேவை என் வாத்தி நல்லா இருக்கணும். அதுக்கு அவர் விரும்புன பொண்ணு அவருக்கு கிடைக்கணும்' என்று ரோஜா சொல்ல.
அதே தருணம். ஸ்ரீனிவாசன் செல்லுக்கு அவன் அண்ணன் சுந்தரேசன்னிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.
மெசேஜ் வந்த சத்தம் கேட்டு ரோஜா சட்டென்று அவள் வசம் அந்த போனை பிடுங்கியவள்.
'என்ன ஸ்ரீனி. அங்கே எல்லாம் ஓகே தானே. நீ எதுக்கும் கவலைப்படாதே. நாளைக்கு காலையில இந்த ஊர் மக்களே உனக்கும் அந்த கதிர் தங்கச்சி ரோஜாவுக்கும் கல்யாணத்தை பண்ணி வைப்பாங்க. ஐயர் கூட நம்ம ஆளு தான். அண்ணன் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். நீ தைரியமா இரு. அப்புறம் இன்னோரு முக்கியமான விஷயம்.
பகலில் அக்கம் பக்கம் பார்த்து பேசு, இரவில் அதையும் பேசாதன்னு சொல்லுவாங்க. ஏன்னா சுவருக்குகூட காது இருக்கும். அதனால தான் நானே உனக்கு Text மெசேஜ் பண்ணுறேன்.
நீயும் எனக்கு Textல பதில் கொடு. கோவில்க்குள்ள இருந்துகிட்டு போன் பார்க்காத, போன் பேசாத. போனை Silentல வை.
நீங்க உள்ள இருக்குறது யாருக்கும் தெரியக்கூடாது' என்று சுந்தரேசன் குறுஞ்செய்தி அனுப்பி இருந்ததை வாசித்த ரோஜாவின் முகத்தில் கோவக்கனல் வீசியது.
'எவ்ளோ பெரிய கேவலவாதி இவன்.
முன்ன நின்னு சண்டை போட தெம்பு இல்லாத தற்குறி. பின்ன நின்னு எப்படி வாய் கிழிய பேசுது பாரு. இருக்கட்டும் இருக்கட்டும். முதல்ல வாத்தி முல்லை கல்யாணம் முடியட்டும்,அப்புறமா இந்த சுந்தரேசனுக்கு வாத்திகிட்ட சொல்லியே குடும்பக்கட்டுப்பாடு பண்ண சொல்லுறேன்' என்ற ரோஜாவை பார்த்து பயத்தில் எச்சில் விழுங்கினான் ஸ்ரீனிவாசன்.
சுந்தரேசன் அனுப்பிய மெசேஜ்க்கு 'ஓகே' என்ற பதிலை அனுப்பி வைத்த ரோஜா.
'டேய்.காலையில ஐயர் வந்து கோவில் கதவை திறக்குற வரைக்கும் நீ சத்தம் போட இருப்பியா' என்று கேட்க.
'மாட்டேன். நான் சத்தம் போடுவேன். ஐயோ யாராவது என்னை காப்பாத்துங்க. யா.'என்று ஸ்ரீனிவாசன் மீண்டும் கத்தும் முன்னே அவன் தலையில் ஓங்கி அடித்து இருந்தாள் ரோஜா.
ரோஜா அடித்த வேகத்தில் ஸ்ரீனிவாசனும் மயங்கி கீழே விழ.
'என்னை.நல்லவளாகவே இருக்க விட மட்டாங்க போல' என்ற ரோஜா. கையில் இருந்த கட்டையை எடுத்துக்கொண்டு நாகராஜனை நெருங்கி வர..
'ஐயோ சின்னமா. முதல்ல அந்த கட்டையை ஓரம் வையுங்க. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்' என்று சொன்னதும்.
'சில விஷயங்களை எல்லாம் தீர்த்துட்டு தான் பேசணும்' என்ற ரோஜாவின் பதிலில் விக்கெத்து போனான் நாகராஜன்.
ரோஜாவின் செயல்,அவளின் பேச்சு என்று நாகராஜனுக்கு எதுவும் விளங்காமல் போக நேரம் சரியாக இரவு ஒரு மணியை அடைந்திருந்தது.
************************************
இதே தருணம் மறுபக்கம் பாண்டியனின் வீட்டில் கதிர் முல்லை ரோஜா ஆகிய மூவரும் வீடு திரும்பாமல் இருந்ததை எண்ணி அனைவரும் பதற்றம் அடைந்தார்கள்.
ஆளுக்கு ஒரு பக்கமாக இவர்களைத் தேடிக் கொண்டு இருக்க,யாருக்கு என்ன ஆனது என்ற கவலையில் பாண்டியனுக்கு மீண்டும் நெஞ்சு வலி அதிகரித்தது.
தன் வீட்டில் இத்தனை பிரச்சனை நடந்தும் ஜீவாவிற்கு எந்த வீத உணர்வும் இல்லாத நிலையில் அவன் குடி போதையில் மயங்கி இருக்க..
'நீங்க என்னதான் தேடினாலும் ரோஜா கிடைக்கப் போறது இல்லை!! ரோஜாவை தேடி யாரு அலைந்து திரிந்தாலும் அவள் கிடைக்க மாட்டாள்..ஏன்னா!! நாளைக்கு விடிந்ததும் ரோஜாவுக்கும் அந்த சுந்தரேசன் தம்பிக்கும் கல்யாணம் நடக்கிறதை யாராலும் மாற்ற முடியாது' என்று தனக்குள் எண்ணிய கஸ்தூரி எதைப் பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சியில் வயிறு நிறைய உணவை உண்டு உறங்கவும் ஆரம்பித்து இருந்தார்.
'மாமா. பேசாம போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணலாமா' என்று முருகன் கேட்க.
'ஒரு ஆளு காணோம்னா கம்பளைண்ட் பண்ணலாம் மச்சான். ஆனா கதிர் முல்லை ரோஜான்னு முணு பேருமே காணோமே.இப்போ என்னனு போய் நம்ம கம்பளைண்ட் பண்ணுறது' என்ற பாண்டியனின் நிலையை எண்ணி மீனாவும் தவித்து போனாள்.
'அண்ணா. நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க. விடியும் முன்னே கண்டிப்பா நம்ம வீட்டு பசங்க வீட்டுக்கு வந்துடுவாங்க' என்று பார்வதி சொல்ல.'ஐயோ. நான் யாருக்கு என்ன பாவம் பன்னேனு தெரியல. ஏன் கடவுளே என் குடும்பத்தை இப்படி ஆட்டி படைக்கிற' என்று பாண்டியன் கண்ணீர் விட்டு கதற. அவரை யாராலும் சமாதானம் செய்ய முடியாமல் போனது.
நேரம் நள்ளிரவு இரண்டு மணியை நெருகியது.
திருமண வேலையை முன்னிட்டு சரஸ்வதி வீட்டில் இருந்து பாண்டியனுக்கு கைபேசி அழைப்பு வந்த வண்ணமாகவே இருக்க.
'ஐயோ. இப்போ நான் சம்மந்தி வீட்டுக்கு என்னன்னு பதில் சொல்லுவேன்.என் பிள்ளைங்களுக்கு என்னாச்சுனே தெரியலையே' என்று பாண்டியன் புலம்ப.
'அண்ணா. இது மறைக்கிற விஷயம் இல்லை.விடிந்தா கல்யாணம். பேசாம அவங்ககிட்ட நம்ம சூழ்நிலையை சொல்லுறது தான் சரியா இருக்கும்' என்றார் பார்வதி.
'ஆமா மாமா. பார்வதி சொல்லுற மாதிரி. நம்மளே அவங்ககிட்ட விஷயத்தை சொல்லிடலாம்' என்று முருகன் சொல்ல.
'என்னன்னு சொல்லுவ மச்சான். நம்ம பிள்ளைங்களுக்கு என்னாச்சுன்னு நமக்கே தெரியாத போது. சம்மந்தி வீட்டுல போய் என்னன்னு பேச சொல்றிங்க' என்று கேட்டார் பாண்டியன்.
'சரி. நீங்க சொல்லாதீங்க. நான் பேசுறேன்' என்ற பார்வதி.
பாண்டியனின் கைபேசியில் இருந்து சரஸ்வதியை அழைக்க..
'இங்க என்ன நடக்குது.' என்ற கூச்சளுடன் சரஸ்வதியும் அவளின் பிள்ளைகளான தனம் மற்றும் ரவியும் பாண்டியனின் வீட்டில் வந்து நின்று இருந்தார்கள்.
*********************************
இதே சமயம்..
கோவிலில்.மயக்கத்தில் இருந்த கதிரையும் முல்லையையும் ரோஜா உற்று பார்த்தப்படி அமர்ந்து இருக்க.
'சின்னமா. உங்க பிளான் தான் என்னங்க' என்று கேட்டான் நாகராஜன்.
'என்ன பண்ணுறதுனு தெரியல நாகா. ஆனா எதாவது பண்ணியே ஆகணும். இன்னும் கொஞ்ச நேரத்துல கண்டிப்பா வாத்திக்கு மயக்கம் தெளிஞ்சிடும். அவர் கண் விழிக்கும் போது இந்த ரூம்ல முல்லை மட்டும் தான் இருக்கனும். அதனால இந்த ஸ்ரீனியை கை வாயை கட்டி நம்ம வேற எங்காவது அடைத்து வைக்கனும்' என்ற ரோஜா தன் சுடிதார் ஷால் மூலம் ஸ்ரீனிவாசனின் கையையும் காலையும் சேர்த்து ஒன்றாக கட்டினாள்.
'இருங்க சின்னமா. இவன் வாயை நான் கட்டுறேன்' என்ற நாகராஜன். ஸ்ரீனிவாசனின் வாயை கட்டி. அவனை குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேறி தெப்பக்குளம் அருகே படுக்க வைத்தான்.
முல்லையும் கதிரும் மயக்கத்தில் இருந்ததை உர்ஜிதப்படுத்திகொண்ட ரோஜா.அதே அறையில் இருந்த அடியாள் ஒருவனையும் நாகராஜானின் உதவியோடு வெளியே இழுத்து வந்தவள்..
முல்லை கதிர் இருவரை மட்டும் ஒரே அறையில் வைத்து கதவை வெளிப்பக்கமாக சாத்திக்கொண்டாள்.
'சின்னமா. இப்போ நம்ம வீட்டுக்கு போகலாமா. பாவம் பாண்டியன் ஐயா உங்கள காணாம பயந்து போய் இருப்பாரு' என்று நாகராஜன் சொல்ல.
' ம். எனக்கு புரியுது. ஆனா இப்போ நம்ம அப்பாவுக்கு போன் பண்றதால இங்க எதுவும் மாறாது. மாறாக இந்த சூழ்நிலையை நம்ம சரியா பயன் படுத்துக்கிட்டா நாளைக்கு இதே கோவில்ல வாத்தி. முல்லை கழுத்துல தாலி கட்ட வாய்ப்பு இருக்கு' என்று ரோஜா சொல்ல.
'நீங்க என்ன சொல்றிங்கனு எனக்கு சத்தியமா புரியல சின்னமா. ஆனா எதுவா இருந்தாலும் நல்லது நடந்தா சரி தான்' என்ற நாகராஜன். கோவிலின் தெப்பக்குளம் அருகே அமர்ந்து இருந்தான்.
 
Member
Joined
Dec 5, 2025
Messages
58
நேரம் சரியாக 3.30am மணியை தொட்டு இருந்தது.
பாண்டியன் வீட்டில் சரஸ்வதி ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தார்.
'இன்னும் முணு மணி நேரத்துல கல்யாணத்தை வச்சிக்கிட்டு கதிரும் ரோஜாவும் எங்கன்னு கேட்டா உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லுறிங்களே.. இதெல்லாம் எந்த ஊருல அடுக்கும்' என்று காட்டு கத்தல் கத்தினார் சரஸ்வதி.
'இங்க பாருங்க. நடந்தது என்னனு எங்களுக்கும் தான் இப்போ வரை தெரியாமல் இருக்கு. அதனால் தயவு செய்து கொஞ்சம் நிதானமா இருங்க' என்று முருகன் சொல்ல.
'கேக்குறேனு தப்பா நினைக்காதீங்க. உங்க பொண்ணுக்கு வேற யார்கூடவாது.' என்று தனம் இந்த சந்திரப்பத்தை பயன்பப்படுத்தி ரோஜாவை அசிங்கப்படுத்தும் விதமாக பேசுவதை கேட்டு மீனாவிற்கு கோவம் வந்தது.
'போதும் நிறுத்துங்க.வாய் இருக்குனு எதையாவது பேசாதீங்க' என்று மீனா கடுப்புடன் சொல்ல. அதே சமயம்.
'வீட்ல யாரு இருக்கீங்க' என்ற கர்ஜனையோடு பாண்டியனின் வீட்டுக்குள் நுழைந்தான் சுந்தரேசன்.
சம்மந்தமே இல்லாமல் இவன் ஏன் இந்த நேரத்தில் நம் வீட்டிற்குள் நுழைகிறான் என்று பாண்டியன் எண்ணும் முன்னே.
'ஏங்க. என் தம்பி எங்கங்க' என்று கேட்டான் சுந்தரேசன்.
கூடி இருக்கும் அனைவரும் அவன் கேள்வியில் குழம்பி இருக்க.
'என்னப்பா நீ. உன் தம்பியை ஏன் இங்க வந்து கேக்குற' என்று கேட்டார் பாண்டியன்.
'உங்கள கேக்காம. வேற யார கேக்குறது. என்ன சார். என் தம்பியும் உங்க பொண்ணும் காதலிக்கிறாங்கன்னு தெரிந்து என் தம்பியை உங்க பிள்ளையை வச்சி அடிச்சது எல்லாம் மறந்து போயிட்டீங்களா' என்று சுந்தரேசன் கேட்க.
'டேய் டேய் என்னடா உளறுற. உன் தம்பியை என் பையன் அடிச்ச காரணமே. அவன் ஒரு பொம்பள பொறுக்கினு தானே' என்றார் பாண்டியன்.
'ஐயோ ஐயோ. ஏன் சார் இப்படி என் தம்பி மேல அநியாயமா பழி போடுறீங்க. உங்க பொண்ணும் என் தம்பியும் காதலிக்கிறாங்கன்னு தெரிந்து தான் நீங்க என் தம்பியை என்னமோ பண்ணிட்டீங்க' என்று சுந்தரேசன் பேசிக்கொண்டே போக..
'ஏங்க. என்ன சொல்லுறீங்க. யாரு யாரை காதலிக்கிறாங்க' என்று கேட்டான் ரவி.
'வேற யாருங்க. இதோ இந்த பாண்டியன் ஐயாவோட பொண்ணும் என் தம்பியும் தான் காதலிக்கிறாங்க.அவங்க கல்யாணம் நடக்கக்கூடாதுனு தான் இவரு அவசரம் அவசரமா அந்த ரோஜா பொண்ணுக்கு வேற மாப்பிளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணாரு. ஆனா இப்போ பாருங்க என் தம்பியை இவங்க வீட்டு பொண்ணு இழுந்துகிட்டு ஓடி போச்சு' என்று சுந்தரேசன் சொல்ல.
'ஏய். யார் வீட்டுக்கு வந்து யாரை பத்தி தப்பா பேசுற' என்று கத்திய முருகன். சுந்தரேசனின் சட்டை காலரை பிடித்த வேகத்தில்.
'நான் தான் அப்போவே சொன்னேனே. அந்த ரோஜாவோட பேச்சே சரியில்ல. அவ நம்ம குடும்பத்துக்கு வேணவே வேணான்னு சொன்னேனே' என்றாள் தனா.
'அடப்பாவிகளா. ஏன் இல்லாத கட்டு கதையெல்லாம் என் பொண்ணு மேல சுமத்துறீங்க.' என்று பாண்டியன் நிலைகுழைந்து போக.
'இங்க பாருங்க. நீங்க இந்த ஊர் பெரிய மனுஷன்னு தான் நான் உங்கள தனியா வந்து சந்திச்சு பேசிகிட்டு இருக்கேன். இதுவே உங்க இடத்துல வேற யாராவது இருந்து இருந்தா. என் டீலிங் வேற மாதிரி இருக்கும்' என்ற சுந்தரேசனின் செல் போன் மணி ஒலித்தது.
'நான் பாண்டியனின் வீட்டுக்கு சென்ற அரைமணி நேரத்தில் என் அலைபேசியில் என்னை தொடர்பு கொள்ளுங்கள்' என்று சுந்தரேசன் முன்னதாகவே அவனின் அடி ஆட்களிடம் தெளிவாக சொல்லி வைத்து இருந்தான்.
அவர்களும் சரியாக சுந்தரேசனை அலைபேசி மூலம் தொடர்புகொள்ள.
'ஹலோ.. சொல்லுங்க. அப்படியா. எங்க பார்த்திங்க.என்ன கோவில் பக்கமா' என்ற சுந்தரேசன்.
'இதோ இதோ.. இப்போவே நான் அங்க வரேன்' என்றவன் பாண்டியனின் வீட்டில் இருந்து வெளியேற பார்க்க.
'ஏங்க இருங்க.நீங்க பாட்டுக்கிட்டு வந்து ரோஜாவை பற்றி தப்பா பேசிட்டு இப்போ அமைதியா போன என்ன அர்த்தம்.இங்க என்ன தான் நடக்குது.'
என்று கஸ்தூரி ஒன்றும் தெரியாததை போல கேட்டுக்கொண்டே சுந்தரேசன் அருகே வந்தார்.
'ம்.இனி தான் எல்லாம் தெரியப்போகுது.உங்க பொண்ணு என் தம்பிக்கூட தான் போய் இருக்கா.இதோ இதோ.இப்போவே நான் பஞ்சாயத்தை கூட்டுறேன்' என்ற சுந்தரேசன் வேகமாக பாண்டியனின் வீட்டில் இருந்து வெளியேறினான்.
'மச்சான். இங்க என்ன நடக்குது. ஐயோ எனக்கு ஒன்னும் புரியலையே' என்று பாண்டியன் புலம்ப.
'இன்னும் இதுல புரிய என்ன இருக்கு. அதான் உங்க பொண்ணும் அந்த ஆளோட தம்பியும் காதலிக்கிறாங்கன்னு அந்த ஆளே சொல்லிட்டு போறானே' என்றாள் தனம் .
'அவன் சொன்னா அது உண்மை ஆகிடுமா. மாமா. ரோஜாவை பற்றி நமக்கு தெரியும் தானே. அவ அப்படியெல்லாம் பண்ண மாட்டா. இதுல வேற என்னமோ சதி இருக்கு மாமா' என்று மீனா சொல்ல.
'ஆமா அண்ணா. இந்த போலீஸ்க்காரன் நல்லவன் இல்ல.. அவனை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்' என்றார் பார்வதி.
இவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்லிக்கொண்டு இருக்க.'ஐயா ஐயா.அந்த போலீஸ்காரர் தாலி காத்த அம்மன் கோவில் பக்கத்துல பஞ்சாயத்தை கூட்டி இருக்காரு' என்று ஊரில் உள்ள ஒருவன் சொல்ல.
பாண்டியன் நிலைகுழைந்து அப்படியே தரையில் அமர்ந்து விட்டார்.
இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்ற எண்ணத்தில் முருகன் முதல் மீனா வரை பதற்றத்தில் இருக்க.
'ம். அம்மா.நல்லா குடும்பத்துல எங்களுக்கு சம்மந்தம் பார்த்த போ' என்ற தனம் ..
'சரி வாங்க வாங்க பஞ்சாயத்துக்கு போகலாம்' என்று சொல்ல.வேறு வழியே இல்லாமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அம்மன் கோவில் அருகே கூடி இருந்த பஞ்சாயத்துக்கு சென்றார்கள்.
*******************************
இதே தருணம். கோவில் அறையில் மயங்கிய நிலையில் இருந்த முல்லை முதலில் கண் விழித்தவளுக்கு தலை வலி அதிகமாக இருந்தது.
தன் தலையை இரு கைகளால் இறுக பற்றிகொண்டவள். அந்த அறையை சுற்றி பார்க்க.. அங்கே கதிர்வேலன் ஒரு மூலையில் மயக்கத்தில் இருந்தான்.
'ஐயோ மாமா சார். இவுக. ஐயோ நான்.' என்று தத்து தடுமாறி முல்லை அங்கிருந்து எழுந்தவள்.
'நம்ம ஏன் இங்க இருக்கோம். ரோஜா. ரோஜா எங்க?. ஐயோ இங்க என்ன தான் நடக்குது?' என்று குழம்பிய முல்லை. பொறுமையாக கதிரின் அருகே சென்று அவன் பக்கம் அமர்ந்தாள்.
ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கிறானா. இல்லை உறக்கத்தில் இருக்கிறானா என்று புரியாமல் முல்லை அவனை உற்று பார்த்தவள்.
'மாமா. மாமா சார்.' என்று கதிரை தட்டி எழுப்ப. அவன் பொறுமையாக விழிகள் மலர்ந்தவன்.
'என்னடி ரவா லட்டு. மாமாவுக்கு என்ன தர போற' என்று அரை போதை அரசனை போல கேட்டான்.
'ஐயோ இவுக வேற நிலைமை புரியாமல் நம்மள கடுப்பேத்தி பாக்கறாக' என்று முணங்கியவள்.
'மாமா சார் எழுந்துடுங்க' என்று கத்தியதும்.
'ஏண்டி இப்படி கத்துற' என்று அவளை விட அதிகமாக கத்திய கதிர் தரையில் எழுந்து சோம்பல் முறித்தவன்.
'நேத்து அடித்த சரக்குல மண்டை குள்ள குருவி பறக்குது' என்றப்படி இரண்டு கைகளால் தன் தலையயை இறுக்கமாக பற்றிக்கொண்டவன் கண் எதிரே பாவாடை தாவணியில் முல்லை நின்று இருக்க.
'நான் காண்பது கனவா இல்லை நினைவா' என்ற கதிரை ஏகத்துக்கும் முறைத்தாள் முல்லை.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top