• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
53
பாலைவனத்து முல்லை
பகுதி – 25.1


ஒரு வழியாக முருகன் வீட்டில் இருந்து பாண்டியனின் குடும்பத்தினர் விடை பெற்று இருக்க,
'பார்வதி. உன் தம்பியை வர சொல்லு' என்றார் முருகன்.
தன்னால் முருகன் மரண வாசல் வரை சென்று திரும்பியவரை இப்போது தான் கேசவன் நேருக்கு நேர் சந்தித்து இருக்க,
முருகனோ கேசவனை அழுத்தமாக முறைத்தப்படி பார்த்து இருந்தார்.
ஒரே வீட்டில் இருந்துக்கொண்டு இனியும் ஓடி ஒழிய முடியாது என்று எண்ணிய கேசவன்,'மாமா.. என்னை மன்னி.' என்று அவன் வார்த்தையை முடிக்கும் முன்னே,
'யாரைகேட்டு உனக்கும் என் மகளுக்கும் வர வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம்ன்னு சபையில எல்லோர் முன்னிலையிலும் சொன்ன ?' என்று முருகன் கேட்க, முருகனின் இந்த வார்த்தை முல்லைக்கு ஆச்சிரியத்தை கொடுத்தது.
'என்ன மாமா நீங்க. ஏற்கனவே எனக்கும் முல்லைக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறதா நீங்க சொன்னது தானே' என்ற கேசவனை முருகன் அழுத்தமாக பார்க்க,
'என்ன முல்ல. உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே' என்று மிரட்டும் தோரணையில் கேட்டான் கேசவன்.
கேசவனின் குரலில் சற்று பயந்த முல்லை, இதற்கு மேலும் தனக்கென்று எந்த விருப்பு வெறுப்பும் இல்லை, இனி தன் தந்தையின் நிம்மதி தான் அவளுக்கு முக்கியம் என்று எண்ணியவள்,
'என் அப்பா யாரை சொன்னாலும் நான் அவங்கள கல்யாணம் பண்ணிப்பேன்' என்றவள் வேகமாக தன் அறைக்குள் சென்றவளை கேள்வியாக பார்த்தார் முருகன்.
'அப்புறம் என்ன மாமா.இதுநாள் வரை முரண்டு பிடித்துக்கொண்டு இருந்த உங்க பொண்ணே என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டா. இன்னும் என்ன தாமதம். பேசாம வர வெள்ளிக்கிழமை ஒரே அடியா எங்க கல்யாணத்தை முடிச்சிடலாமா' என்று கேசவன் கேட்க,
ஒரு கணம் கேசவனின் விழிகளை நேருக்கு நேராக பார்த்த முருகன்,
'நீ ரொம்ப ஆசைப்படுற.முடிச்சிடலாம். சீக்கிரம் உன் ஆசைப்டியே எல்லாத்தையும் முடிச்சிடலாம்' என்ற முருகன் தன் அறைக்குள் சென்றார்.
'அக்கா. இனி தான் அக்கா நம்ம நினைத்தது எல்லாமே நடக்க போகுது' என்ற கேசவனை ஏரேடுத்து பார்க்காத பார்வதி, முருகனின் பின்னே சென்று இருக்க,
'முதல்ல இந்த நல்ல விஷயத்தை சுந்தரேசன் சார்கிட்ட சொல்லணும்' என்று எண்ணிய கேசவன்.. முருகனின் வீட்டில் இருந்து நேராக ASI சுந்தரேசனின் இல்லத்திற்கு சென்று இருந்தான்.
****************************
முருகன் வீட்டில் இருந்து வேனில் கிளம்பிய பாண்டியனின் குடும்பம் சில மணி நேரத்திலேயே குன்னக்குடியை சென்றடைந்தார்கள்.
இத்தனை நாட்கள் கடந்து முல்லையை நேரில் பார்த்த ஜீவா, சோகம் தாங்காமல் மீண்டும் மது கடையை நோக்கி சென்று இருந்தான்.
ஏனோ தன் திருமணத்திருக்காக தனலட்சுமியை கதிர்வேலனுக்கு கட்டி வைப்பது சரியில்லை என்று எண்ணிய ரோஜாவிற்கு தன் தந்தையிடம் எடுத்து சொல்லி புரிய வைக்க வாய்ப்பே இல்லாமல் போக, பாண்டியனோ அடுத்து வரும் முகூர்த்தத்தில் தன் பிள்ளைகளுக்கு நிச்சியத்தை முடிக்க முடிவெடுத்து இருந்தார்.
முருகனின் இல்லத்தில் கேசவன் பேசியதை எண்ணி பார்த்த கதிர்வேலனோ கோவத்தின் உச்சத்திற்கு சென்றாவன்,
அவனும் மாதுவை மறக்க மதுவே வழி என்று எண்ணி சாராயக்கடையை நாடி ஓட, அன்றைய தினம் இரவு நேரம் கதிர்வேலன் மூக்கு முட்ட குடித்தவன் நேராக வந்தது என்னவோ தன் நண்பன் நாகராஜனின் வீட்டிற்கு தான்.
கதிர்வேலன் மதுவின் வீரியத்தில் உள்ளே நுழைந்தவன்,'ஹாய் ப்ரோ. நீ எப்ப வந்த Man.' என்று தன் எதிரே முழு போதையில் அமர்ந்து இருந்த ஜீவாவை பார்த்து கேட்க,
'உன் அண்ணன் வந்து ஒரு மணி நேரம் ஆச்சு நண்பா' என்று சொன்னான் நாகராஜன்.
தன் அண்ணனின் வாடிய முகத்தை கண்டு சோகமான கதிர்வேலன்,'Why ப்ரோ. ஏன் இப்படி சோகமா இருக்க. உனக்கு என்ன தான் பிரச்சனை.' என்று அந்த போதையிலும் தெளிவாக தன் அண்ணனை கேள்வி கேட்க,
'என் பிரச்சனையை விடு கதிரு. என் முல்லைக்கு வர போற பிரச்சனையில இருந்து அவளை எப்படியாவது காப்பாத்தணும் கதிரு' என்றான் ஜீவானந்தம்.
தன் வார்த்தையில் கதிர்வேலனின் புருவம் ஏறி இறங்க,'என்ன அண்ணா சொல்றிங்க. முல்லைக்கு என்ன பிரச்சனை' என்று கேட்டான் நாகராஜன்.
'முல்ல. முல்ல என்னை தான் உயிருக்கு உயிரா காதலிச்சா. ஆனா இப்போ அவளை அந்த கேசவன் கல்யாணம் பண்ணா அவன் கண்டிப்பா முல்லையை சந்தேகப்பட்டு அவளை குத்தி பேசி அவளை சித்திரவதை பண்ணி அவ வாழ்க்கையை நாசமாக்கிடுவான்' என்று ஜீவானந்தம் சொல்ல.
'அது அவ தலையெழுத்து அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும் கேட்டான்' கதிர்வேலன்.
தன் தம்பியின் அலட்சியமான பேச்சில் ஜீவானந்தம் சட்டென்று கதிரின் சட்டை காலரை பிடித்து,'முல்லை பாவம் கதிரு. அவளுக்கு கண்டிப்பா அந்த கேசவனை கல்யாணம் பண்ணிக்க விருப்பமே இருக்காது. அவ அப்பாவுக்கு பயந்து தான் அவ இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருப்பா. Pls டா நம்ம தான் இந்த கல்யாணத்தை எப்படாயாவது நிறுத்தணும் கதிர்' என்று ஜீவானந்தம் சொல்ல.
'அதெல்லாம் என்னால முடியாது. அந்த ரவா லட்டு அன்னைக்கு அவ விஷயத்துல என்னை தலையிடவே கூடாதுன்னு சொல்லிட்டா. இனி நான் அவ இருக்குற திசை பக்கம் கூட போக மாட்டேன்' என்ற கதிர் அப்படியே தரையில் சரிந்து குடி போதையில் மயங்கவும் செய்தார்.
'நீ என்ன வேணா சொல்லு. என் முல்லைக்கும் அந்த கேசவனுக்கும் கல்யாணம் ஆகவே கூடாது' என ஜீவானந்தமும் தனக்குள் புலம்பியவாரு நாகராஜனின் வீட்டில் சரிந்து இருக்க,
'இது வீடா இல்ல இந்த நாட்டு அப்பா நடத்துற பாரா' என்று தனக்குள் புலம்பிய நாகராஜன் அவன் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருந்தான்.
******************************
இதே தருணம்.கேசவன் சுந்தரேசனின்வீட்டிற்கு சென்றவன்,
'இப்போ என்ன பண்ணுறது சார்' என்று கேட்க,'அந்த ரோஜாவிற்கு பார்த்த மாப்பிளை எந்த ஊர்' என்று விசாரித்தான் சுந்தரேசன்.
'எனக்கு முழுசா எந்த விவரமும் தெரியாது சார். இருங்க நான் கஸ்தூரி அக்காவுக்கு போன் பண்ணுறேன்' என்ற கேசவன் தன் அலைபேசி வாயிலாக கஸ்தூரியை அழைக்க,
'சொல்லு. கேசவா. என்ன உனக்கும் முல்லைக்கும் நிச்சியமா' என்ற கேள்வி முடியும் முன்னே.'ஏய். அந்த ரோஜாவிற்கு நான் பார்த்த மாப்பிள்ளையை தானே பேசி முடிக்க சொன்னேன்' என்று வார்த்தையில் தன் கோவத்தை வெளிப்படுத்தினான் சுந்தரேசன்.
'ஐயோ. இந்த கேசவன் அந்த சுருள் வாயன்க்கிட்ட போட்டுக் கொடுத்துட்டான் போல' என்று எண்ணிய கஸ்தூரி.'அது. அது வந்து சார். நான். நான் நீங்க சொன்ன மாப்பிளையை பற்றி என் அண்ணன்கிட்ட பேசுறதுக்கு முன்னாடியே. அவரு ரோஜாவுக்கும் கதிருக்கும் ஒரே இடத்துல சம்மந்தம் பேசி முடிச்சிட்டார்' என்று தயக்கத்துடன் சொன்னாள் கஸ்தூரி.
'ஏய் என்ன. உன் பொண்ணுக்கும் அந்த ஜீவாவுக்கும் கல்யாணம் நடந்து முடிஞ்சிடுதுனு திமிர்ல இருக்கியா என்ன?' என்று சுந்தரேசன் கோவமாக கேட்க,
'ஐயோ அதெல்லாம் இல்ல சார். இப்போகூட ரோஜாவுக்கு என் அண்ணன் பார்த்த சம்மந்தத்தை எப்படி வெட்டி விடலாமுன்னு தான் சார் யோசிச்சிகிட்டு இருக்கேன்' என்றார் கஸ்தூரி.
'ஹஃங். யாரு! நீ யோசிக்கிறியா. சரி தான். நீ யோச்சி கிழித்தது எல்லாம் போதும். இங்க பாரு. நாளைக்குள்ள அந்த ரோஜாவுக்கு பார்த்து இருக்க மாப்பிளையின் முழு முகவரி எனக்கு வேணும். அப்புறம் அங்க என்ன விஷயம் நடந்தாலும் நீ உடனடியா எனக்கு போன் பண்ணி சொல்லிகிட்டே இருக்கனும்' என்று சுந்தரேசன் கஸ்தூரிக்கு கட்டளையிட.
'கண்டிப்பா சார்.. விக்ரம்ல வர ஏஜென்ட் டீனா மாதிரி நான் உங்களுக்கு விசுவாசமா இருப்பேன் சார்' என்ற கஸ்தூரியின் வார்த்தையை கேட்டு சுந்தரேசன் தனக்குள் ஒரு திட்டத்தை தீட்டி இருந்தான்.
****************************
அன்றைய தினம் இரவு நேரம் முருகனின் இல்லத்தில் முல்லை பார்வதி முருகன் என்று மூவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்க,
முல்லையோ சாப்பாட்டு தட்டை தடவிக்கொண்டு இருந்தாளே தவிர ஒரு வாய்க்கூட சாப்பிடாமல் தான் இருந்தாள்.
'இன்னோரு இட்லி வைக்கவா' என்று பார்வதி முல்லையை கேட்டதும்,'எனக்கு போதும் சித்தி. அப்பா நீங்க மாத்திரையை போடுங்க' என்ற முல்லை.நேரத்தோடு தன் அறையில் சென்று படுக்க தயாரானாள்.
முல்லையின் நடவடிக்கையை கண்காணித்துஇருந்த முருகன்.'பார்வதி. நீ போய் படுத்துக்கோ. நான் அப்புறம் வரேன்' என்றவர். முல்லையின் அறை வாசல் கதவை தட்ட,'அப்பா.'என்று சிறு குழப்பதுடன் அறையின் கதவை திறந்தாள் முல்லை.
அறையின் வாசலை கடந்து உள்ளே நுழைந்த முருகனோ.'என்னமா தூக்கத்துல எழுப்பிட்டேனா' என்று கேட்க,'இல்ல ப்பா. தூக்கம் வர மாதிரி இருந்துச்சு. ஆனா கண் மூடி படுத்தா தூக்கம் வரல' என்றாள் முல்லை.
'ம். சரி. நீ தூங்குற வரைக்கும் அப்பா உன் கூட இருக்கேன். நீ படுத்துக்கோ' என்று முருகன் சொல்ல.'அப்பா. நீங்க!!.' என்று ஆச்சிரியமாக முருகனை பார்த்தாள் முல்லை.
'ம்.நான் தான். நீ படுத்துக்கோ அப்பா உன்கூட இருக்கேன்' என்று முருகன் சொல்ல. தன் தந்தையின் பேச்சை கேட்டு முல்லை அவள் கட்டிலில் கால்கள் குறுக்கி, கண்கள் மூடி படுத்துக்கொண்டவளின் தலை மாட்டில் அமர்ந்த முருகன். முல்லையின் தலையை தாங்கி இருந்த தலையணை எடுத்து தூரம் வைத்தபடி, தன் மகளை தன் மடியில் ஏந்திக்கொண்டார்.
தன் தந்தையின் செயலில் இது கனவா நினைவா என்று குழம்பிய முல்லையின் தலையை முருகன் வாஞ்சையாக வருடிக்கொடுக்க, மீண்டும் தன் தாயின் கருவறைக்குள் முல்லை பத்திரமாக இருப்பதை போல உணர்ந்தவளின் விழியின் ஓரத்தில் கண்ணீர் கசிந்தது.
தன் மகளின் கண்ணீர் துளிகள் முருகனின் தொடையை நனைக்க, 'அம்மாடி! உனக்கு கேசவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா' என்று கேட்டார் முருகன்.
தன் தந்தையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது. என்ன பதில் சொன்னால் அவர் மகிழ்ச்சி அடைவார். என்ன பதில் சொன்னால் அவர் கோவப்படுவார்' என்று தனக்குள் சில கேள்விகளை முல்லை கேட்டுக்கொண்டாள்.

'எதுவா இருந்தாலும் தைரியமா மறைக்காம அப்பாகிட்ட சொல்லுமா' என்றார் முருகன்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top