• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

பாகம் - 24(1)

Member
Joined
Dec 5, 2025
Messages
50
பாலைவனத்து முல்லை
முல்லை - 24.1
***************************
இதே சமயம் இரவு நேர உணவிற்காக பாண்டியன் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்க,ரோஜா மட்டும் முகத்தை கோபமாக வைத்தபடி இருந்தாள்.
'என்ன ரோஜா உன் முகமே சரியில்லையே' என்று கஸ்தூரி கேட்க,
'அத்த... உங்ககிட்ட சண்ட போடுற நிலைமையில் நான் இல்ல.கொஞ்சம் வாயை மூடுங்க'என்றாள் ரோஜா.
'இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு என்ன எடுத்தெறிந்து பேசுற' என்ற கஸ்தூரி,தன் கையில் இருந்த ஒரு புகைப்படத்தை பாண்டியனிடம் காட்ட,
'என்ன கஸ்தூரி என்ன போட்டோ இது'
என்று பாண்டியன் கேட்க,'அண்ணா... இந்த பையனுக்கு நம்ம ரோஜாவை கல்யாணம் பண்ணி கொடுக்கலாமா' என்று கஸ்தூரி கேட்க...
'என்ன...ஆடு நனைத்துன்னு ஓநாய் கவலைப்படுது' என்று கேட்டார் கதிர்வேலன்
'என்னப்பா இப்படி பேசுற...ஏன் ரோஜா வாழ்க்கையில எனக்கு அக்கறை இல்லையா'என்று கஸ்தூரி கேட்க
'என் கல்யாணத்தைப் பற்றி யாருக்கும் எந்த கவலையும் வேண்டாம். எனக்கு இப்போ கல்யாணம் பண்ற ஐடியா இல்ல' என்றாள் ரோஜா.
'என்ன ரோஜா...பெரியவங்க கிட்ட இப்படியா பேசுவ' என்று பாண்டியன் கேட்க ...
'அப்பா...அங்க மாமாவுக்கு தலையில அடிபட்டு ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க...பாவம் முல்லை! தனி ஆளா அங்க என்ன அல்லோல படுறான்னு தெரியல... அவங்கள போய் பாக்கணும்னு உங்களுக்கு தோணவே இல்ல!! ஆனா அதை விட்டுட்டு என் கல்யாண கதையை பேசிக்கிட்டு இருக்கீங்க' என்றாள் ரோஜா.
'என்னமா!? எனக்கு மட்டும் முருகனைப் போய் பார்க்கணும்னு விருப்பம் இல்லையா என்ன!? ஆனா நம்ம அங்க போனா அது சரிவராதுமா... கண்டிப்பா நம்ம போறதால இன்னும் அவங்களுக்கு மன கஷ்டம் தான் அதிகமாக இருக்கும்' என்று பாண்டியன் சொல்ல...
'சரியா சொன்னீங்க அண்ணா...துஷ்டனை கண்டால் ஓரடி தூரம்...இனிமே அந்த முருகன் குடும்பத்துக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் வேண்டாம். சரி சொல்லுங்க! இந்த போட்டோல இருக்கிற பையனை நம்ப ரோஜாவுக்கு மாப்பிள்ளை கேட்கலாமா' என்றார் கஸ்தூரி.
'இல்ல கஸ்தூரி... நான் ரோஜாவுக்கும் கதிருக்கும் வேற இடத்துல பெண் பார்த்துட்டேன்' என்று பாண்டியன் சொல்ல,
'ஐயோ என்ன அண்ணா சொல்ற' என்று கஸ்தூரி பதறினார்.
'இந்த அஞ்சரை பெட்டி வாய் ஏன் இப்படி பதறுது' என்று தனக்குள் எண்ணியப்படி கதிர்வேலன் கஸ்தூரியை பார்த்து இருக்க,
'என்ன அண்ணனா நீங்க... ரோஜாவுக்கு ஏத்த இடமா நான் ஒரு வரணை கொண்டு வந்து இருக்கேன், நீங்க என்ன அதுக்குள்ள வேற யாரையோ பார்த்துட்டேன்னு சொல்லுறீங்க' என்று படபடப்புடன் கேட்டார் கஸ்தூரி.
'நான் பார்த்த இடமும் நல்ல இடம் தான். கூடிய சீக்கிரம் இந்த வீட்டுள்ள இரண்டு நல்ல காரியம் நடந்தே தீரும்' என்ற பாண்டியனின் சொல்லில் ரோஜா கோவம் வந்தவளாக எழுந்து தன் அறைக்குள் சென்று இருந்தாள்.
'கதிர்... ரோஜாவை நீ தான் சமாதானம் பண்ணனும். அடுத்த வராதுள்ள ஒரு நல்ல நாளாக பார்த்து உனக்கும் தனாவுக்கும், ரோஜா சிவாவுக்கும் நிச்சயம் பண்ண நான் ஏற்பாடு பண்றேன்' என்ற பாண்டியனின் சொல்லில் கஸ்தூரியின் முகத்தில் நிலவிய பதற்றத்தை கதிர்வேலன் கண்டுகொண்டு தான் இருந்தான்.
'அப்புறம் நம்ம முருகனை போய் பார்க்க ஏற்பாடு பண்ணு, ஆயிரம் தான் இருந்தாலும் உன் அத்த புருஷன் அவரு' என்று பாண்டியன் சொல்ல,
'அப்பா... அதான் அந்த ரவா லட்டு நம்ம உறவே வேணான்னு சொல்லிட்டாளே... பின்ன ஏன் நம்ம அவங்கள போய் பார்க்கணும்' என்ற கதிர்வேலனின் மனதில் முல்லை பேசிய வார்த்தைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
'அப்படியெல்லாம் சொல்லக்கூடாது கதிரு... முல்லை நிலைமையில் இருந்து யோசித்து பார்த்தா தான் உனக்கு அவளோட மனநிலை புரியும்... பாவம் அந்த புள்ள... அவளை குறை சொல்லி மேலும் நம்ம குடும்பத்துக்கு பாவத்தை சேர்த்து வைக்காத' என்ற பாண்டியன் பொறுமையாக நடந்து தன் அறைக்குள் சென்றார்.
'என்னடா இது... அந்த சுருள் வாயன் சுந்தரேசேன் வேற ரோஜாவை அவன் சொல்லுற மாப்பிளைக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி நமக்கு ஆர்டர் போட்டு இருக்கான். ஆனா நம்ம என்னமோ வேற எவனையோ ரோஜாவுக்கு மாப்பிளை பார்த்து வச்சிருக்கே, இப்போ இந்த செய்தி மட்டும் அவனுக்கு தெரிஞ்சா என்னை பத்தி ஸ்டேஸ் வச்சே மானத்தை வாங்கிட்டுவானே' என்று தனக்குள் எண்ணிய கஸ்தூரி... தன் கைபேசியுடன் வேகமாக வெளியேறி இருந்தார்.
கஸ்தூரியின் நடவடிக்கையில் கதிருக்கு சந்தேகம் எழுந்திட,' டேய் நாகா... அந்த கஸ்தூரி அத்த நடவடிக்கை சரி இல்ல... அவங்க மேல ஒரு கண்ணு வச்சிக்கோ' என்றார் கதிர்வேலன்.
***************************
கதிர்வேலனுக்கும் ரோஜாவிற்கும் திருமணம் செய்ய பாண்டியன் ஏற்பாடு செய்யும் விஷயங்கள் எதுவும் ஜீவாவிற்கு தெரியாமல் இருக்க, தினமும் ஜீவா மதுவின் பழக்கத்திற்கு ஆளாகி இருந்தார்.
மீனாவும் நடந்த சம்பவங்களை ஜீரணிக்க முடியாத நிலையில், இன்னமும் கதிர்வேலனையும் மறக்க முடியாமல்...ஜீவாவையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருதலைக்கொல்லியாக தவித்து இருக்க...
ரோஜாவை சுந்தரேசன் ஏற்பாடு செய்த மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் கஸ்தூரியும் அல்லோலப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்.
ரோஜாவிற்கோ!! திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் இருக்க... ஆனால் தன் வாழ்விற்காக தன் அண்ணனின் வாழ்க்கையை அடமானம் வைப்பதற்கு அவளுக்கு ஒரு துளி சம்மதமும் இல்லாமல் இருந்தது.
யார் என்ன நினைத்தாலும் ரோஜாவிற்கும் கதிருக்கும் சரஸ்வதியின் பிள்ளைகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பாண்டியன் ஆணித்தரமாக முடிவெடுத்த நிலையில் அடுத்து வரும் முகூர்த்தத்திலேயே அவர்களின் திருமணத்திற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என்று தன் மனதிற்குள் முடிவெடுத்து இருந்தார்.
ஜீவாவிற்கும் மீனாவிற்கும் எப்படி திருமணம் நடந்தது என்று கதிர்வேலன் தன் தரப்பில் விசாரித்துக் கொண்டிருந்தவனுக்கு கிடைத்தது என்னவோ தோல்விதான்.
மீறி ஜீவாவிடமோ மீனா விடமோ இவர்களின் திருமண நிகழ்வைப் பற்றி கேட்டால் இருவரும் பிடி கொடுக்காமல் பேசி இருக்க, இந்த நொடி வரை இவர்களின் திருமணம் எந்த சூழ்நிலையில் நடந்தது என்பதை யாரும் அறிந்திடாமல் தான் இருந்தார்கள்.
இதேசமயம் மறுபக்கம் சிவகங்கை மருத்துவமனையில் முருகனை பார்வதியும் முல்லையும் கவனமாக பேணிக் காத்து இருக்க, தன் தந்தைக்கு அந்த இடத்தில் முல்லை தாயாகவே மாறி பணிவிடை செய்ய ஆரம்பித்து இருந்தாள்.
முருகனின் உடல் நிலையை தூரத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டு இருந்த கேசவனுக்கு!
முருகன் எதிரில் சென்று தான் செய்த தவறுக்கு உண்டான மன்னிப்பை கேட்கும் அளவுக்கு திராணி இல்லாத நிலையில், எங்கே தன்னை தன் அக்கா கணவன் வீட்டை விட்டு துரத்தி விடுவாரோ என்ற பயம் கேசவனுக்கு இருக்கத்தான் செய்தது.
நாட்கள் வேகமாக நகர்ந்து செல்ல...
இந்த இடைப்பட்ட நாட்களில் பாண்டியன் கைப்பேசி வாயிலாக சரஸ்வதியை அழைத்து தன் மகளுக்கும் மகனுக்கும் சரஸ்வதி குடும்பத்திலேயே சம்பந்தம் வைப்பதற்காக சம்மதத்தை தெரிவித்தார்.
பத்து நாட்கள் கடந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து முருகனை பார்வதியும் முல்லையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல... அப்போதும் கேசவன் முருகனின் எதிரே வருவதை தடுத்துருந்தான்.
முருகனின் சொந்த பந்தங்கள் சிலர் மாறி மாறி முருகனின் உடல் நிலையை அவர் வீட்டிற்கு வந்தே விசாரித்துச் செல்ல... அன்றைய தினம் பாண்டியனின் குடும்பத்தில் உள்ள அனைவரும் முருகனைப் பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு வந்து இருந்தார்கள்.
*****************************
ஆயிரம் தான் இருந்தாலும் சொந்தபந்தங்களுக்குள் நல்லது கெட்டதை ஒன்று கூடி கலந்து செய்திட வேண்டும் என்று முடிவெடுத்த பாண்டியன்,
முருகனின் கோபத்திற்கு ஆளானாலும் பரவாயில்லை என்று எண்ணி தன் குடும்பத்துடன் முருகன் வீட்டிற்கு செல்ல... என்னாளும் இல்லாத திருநாளாக பார்வதியும் முருகனும் பாண்டியனின் குடும்பத்தை மரியாதை உடனே வீட்டிற்குள் அழைத்தார்கள்.
அனைவரும் கூடி இருக்கும் இடத்தில் கலகம் செய்ய ஒருவர் இருக்கத்தான் செய்வார்கள் என்பதைப் போல கஸ்தூரியும் பாண்டியன் குடும்பத்துடன் வந்து இருக்க...
ஜீவா, மீனா, ரோஜா, பாண்டியன் கதிர்வேலன் என்று அனைவரும் முருகன் வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தார்கள்.
இன்றைய தினம் இவர்கள் அனைவரும் தன் வீட்டிற்கு வருவார்கள் என்று அறிந்திடாத முல்லைக்கு இவர்களின் சந்திப்பு ஒரு வகையில் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மறு வகையில் இப்படிப்பட்ட குடும்பத்தில் தனக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை என்ற ஏக்கம் அவள் மனதில் இருக்கத்தான் செய்தது.
பாண்டியனின் சொல்லை மீற முடியாமல் கதிர்வேலன் முருகனின் வீட்டிற்கு வந்திருந்தவனுக்கு ஏனோ முல்லையின் முகத்தை பார்ப்பதற்கே விருப்பம் இல்லாமல் இருக்க, அதற்கு காரணம் மருத்துவமனையில் வைத்து முல்லை கதிர்வேலனின் மனம் நோங்கும்படி பேசிய வார்த்தைகள் தான் என்று ரோஜா அறிந்திருந்தாள்.
தான் மருத்துவமனையில் கதிர்வேலனை அவமானப்படுத்தும் விதமாக பேசியதால்தான் அவன் தன்னை காண மறுக்கிறான் என்ற கூற்றை உணர்ந்திடாத முல்லையோ! தன்னைக் கண்டாலே கதிர்வேலனுக்கு பிடிக்காத காரணத்தால் தான் தன் முகத்தைக் கூட பார்க்காமல் திரும்பிக் கொள்கிறான் என்று மேலும் தனக்குள் அவளே ஒரு பிம்பத்தை உருவாக்கி இருந்தாள்.
இவர்கள் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தவறாக எண்ணி இருக்க, ஜீவானந்தமோ முல்லைக்கு அவன் செய்த துரோகத்தை எண்ணி உள்ளுக்குள் நொந்து கொண்டு இருக்க...மீனாவோ அந்த இடத்தில் வாய் திறவாமல் அமைதியை கடைப்பிடித்து இருந்தாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top