• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
48
பாலைவனத்து முல்லை - 23.2

'அப்பா... நம்ம கிளம்பலாமா' என்று சரஸ்வதியும் பாண்டியனும் பேசிக்கொண்டு இருந்த இடத்தை நோக்கி வேகமாக நடந்து வந்த படி ரோஜா கேட்க,
'என்னமா ரோஜா என் பையன்கிட்ட பேசிட்டியா?' என்ற சரஸ்வதி,
'கதிரு...தனாக்கிட்ட பேசுனியா' என்று கேட்டார்.
'ஆன்ட்டி... எங்க அப்பா எங்ககிட்ட சொல்லாம இந்த சந்திப்பை ஏற்பாடு பண்ணிட்டாரு, இப்போதைக்கு நாங்க என்ன கருத்து சொன்னாலும் அதை நீங்க எங்க சம்மதமா எடுத்துப்பிங்க, அதனால நாங்க வீட்டுக்கு போய் பேசிட்டு அப்புறம் எங்க அப்பாவை உங்களுக்கு போன் பண்ண சொல்லுறோம், இப்போ நாங்க கிளம்புறோம்' என்ற ரோஜா வேகமாக கோவிலில் இருந்து வெளியேறி இருந்தாள்.
தன் மகளின் செயலில் முகம் மாறிய பாண்டியன்,'சரி சரசு... நான் வீட்டுக்கு போய் போன் பண்ணுறேன், பசங்ககிட்ட சொல்லிடு' என்றவாறு அவரும் கோவிலில் இருந்து வெளியேற,
'இப்போ உனக்கு சந்தோசமா... உன் பிடிவாததுக்கு இன்னும் நான் எவ்வளவு அசிங்க படனும்ன்னு தெரியல' என்ற தனா... தன் தம்பியுடன் கோவிலில் இருந்து வெளியே செல்ல,
'அடி போடி... நான் எப்பாடு பட்டாவது உங்க கல்யாணத்தை முடித்து வைப்பேன்' என்று சபதம் எடுத்தார் சரஸ்வதி.
கோவிலில் இருந்து வெளியேறிய பாண்டியனின் குடும்பத்தை அழைத்து கொண்டு நாகராஜன் தன் காரை பொறுமையாக விரட்டிக்கொண்டு இருக்க,
'என்ன அப்பா... ஏன் இப்படி பண்றீங்க' என்று கேட்டாள் ரோஜா.
' என்ன ரோஜா... உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறது தப்பா' என்று பாண்டியன் கேட்க,
'என் கல்யாணத்துக்காக ஏன் தனாவை வாத்திக்கு கட்டி வைக்க நினைக்கிறீங்க' என்று கேட்டாள் ரோஜா.
'எல்லாம் காரணமா தான் ரோஜா...'என்று பாண்டியன் சொல்ல,
'என்ன பொல்லாத காரணம் ' என்று சற்று கடுமையாக கேட்டாள் ரோஜா.
'உனக்கு இதுவரை 20க்கு மேற்பட்ட மாப்பிளையை பார்த்துட்டேன்,ஆனா எல்லோரும் சாமி ஆடுற பெண்ணை நாங்க எங்க குடும்பத்துக்கு எடுத்துக்க மாட்டோமுன்னு தான் சொன்னாங்க, ஆனா சரஸ்வதி அப்படி இல்ல, ஏன்னா கிட்டத்தட்ட உன்னோட நிலைமையில தான் தனலட்சுமியும் இருக்குறதால,அந்த பொண்ணு கல்யாணமும் இதுவரை நடக்காம இருக்கு, அதான் நானும் சரசும் பேசி பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்துக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கோம்' என்று பாண்டியன் சொன்னதும் தான், தன் தந்தையின் மனநிலை கதிருக்கு புரிய வந்தது.
'சரி நீங்க சொல்லுறது எனக்கு புரியுது... ஆனா அதுக்காக மூணு வயசு பெரிய பெண்ணை நீங்க நம்ம வாத்திக்கு கல்யாணம் பண்ணி வைப்பிங்களா' என்று ரோஜா கேட்க,
'அதனால என்ன... எனக்கும் உங்க அம்மாவுக்கும் ரெண்டு வயசு வித்தியாசம், ஏன் நாங்க கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழலையா' என்று கேட்டார் பாண்டியன்.
'இல்ல பா...எனக்காக நீங்க வாத்தி வாழ்க்கையை அடமானம் வைக்கிறது எனக்கு பிடிக்கல, நீங்களே போன் பண்ணி சரசு ஆன்ட்டிக்கிட்ட இந்த கல்யாணத்துல என் பிள்ளைய்ங்களுக்கு விருப்பம் இல்லைனு சொல்லிடுங்க' என்று ரோஜா சொல்லவும், நாகராஜன் விரட்டிய காரை பாண்டியன் வீட்டு வாசலில் நிறுத்தவும் சரியாக இருந்தது.
ரோஜா கோவமாக காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் செல்ல,'என்ன கதிரு உன் தங்கச்சி நான் பேச வந்ததை கேட்காம இப்படி கோவபடுறா... நீயே சொல்லு,நம்ம ரோஜாவுக்கு நம்ம எத்தனை இடத்துல மாப்பிளை பார்த்து அது தட்டி போய் இருக்கு, இந்த இடம் ரொம்ப நல்ல இடமுன்னு எனக்கு தோணுது கதிரு... அதுவும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பதால கண்டிப்பா நம்ம வீட்டு பெண்ணை அவங்க நல்லா தான் பார்த்துப்பாங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு' என்றார் பாண்டியன்.
இங்கே இத்தனை பேச்சும் நடந்தும் கதிர்வேலன் அமைதியாகவே இருக்க,
'என்னப்பா கதிர்... உன் தங்கச்சி வழக்கைக்காக உன் வாழ்க்கையை வீணாக்க போறேன்னு நீ நினைக்கறியா' என்று பாண்டியன் கேட்க,
ஒரு நொடி தன் தந்தையை அடிபட்ட பார்வை பார்த்த கதிர்வேலன்,
'உங்களுக்கு எது சரின்னு படுதோ அதையே பண்ணுங்க அப்பா... நமக்கு நம்ம அம்மா நல்லா இருக்கணும்' என்று தன் தங்கையின் வாழ்க்கைக்காக தனாவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார் கதிர்வேலன்.
'தெரியும் கதிர்... ரோஜாவிற்காக நீ கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவன்னு எனக்கு தெரியும்' என்ற பாண்டியன் நிம்மதி பெருமுச்சுடன் காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் செல்ல,
மீண்டும் கதிர்வேலன் மனதில் முல்லை ஹாஸ்பிடலில் வைத்து அவனை எடுத்தேரிந்து பேசிய வார்த்தைகள் மட்டுமே நினைவுக்கு வந்தது.
********************************
இதே தருணம் கதிர்வேலனுக்கு கோவம் வரும்ப்படி பேசியதை எண்ணி முல்லை தன்னையே நொந்து கொண்டவள். மீண்டும் மீண்டும் தன்னை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் இல்லை என்று கதிர் சொன்னது தான் அவளின் நினைவுக்கு வந்த வண்ணமாகாவே இருந்தது.
ஆனால் கேசவனுக்கோ... முல்லையின் இந்த திடிர் மாற்றம் நிம்மதியை கொடுக்க...'கதிரு... இனி தான் டா உனக்கு இருக்கு' என்று அவன் தனக்குள் எண்ணிக் கொண்டான்.
இரவு 8மணி அளவில் முல்லை தலையில் கை வைத்தபடி மருத்துவமனையில் உள்ள காத்து இருப்பு இருக்கையில் அமர்ந்து இருக்க,'முருகன் கண் விழிச்சிட்டாரு... நீங்க போய் பார்க்கலாம்' என்றார் செவிலியர்.
இத்தனை கலவரத்திலும் தன் தந்தையின் சிகிச்சை நல்ல முறையில் நடந்து முடிந்ததை எண்ணி உள்ளுற முல்லை மகிழ்ச்சி அடைய...
'முல்ல வா உன் அப்பாவை போய் பார்க்கலாம்' என்று அழைத்தாள் பார்வதி.
முல்லையும் பார்வதியும் சிகிச்சை அறைக்குள் நுழைய...கேசவன் அச்சம் கொண்டவனாக வாசலில் நின்று இருந்தான்.
முகத்தில் செயற்கை சுவாசத்தின் உதவியோடு முருகன் கண் விழித்து பார்க்க, தன் தந்தையை அந்த நிலையில் பார்த்த முல்லையின் விழிகள் கண்ணீரை தத்தெடுத்துக் கொண்டது.
'என்னங்க...' என்று முருகன் அருகே ஈர விழிகளுடன் பார்வதி செல்ல... தூரமாக நின்று இருக்கும் முல்லையை இமைகள் அசைத்து தன் அருகே அழைத்தார் முருகன்.
தன் தந்தையின் அசைவை அறிந்து முல்லை முருகன் அருகே செல்ல, அவரின் மாஸ்க்கை எடுத்தப்படி 'ப.. பயந்துட்டியா' என்று கேட்டார் முருகன்.
முருகனின் கேள்வியில் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை இழுத்து பிடித்து இருந்த முல்லையை பார்த்து,'உன்னை அனாதையா விட்டுட்டு அப்பா போக மாட்டேன்' என்றவரின் சொல்லில்,
'அப்பா.....' என்று கதறி அழுதாள் முல்லை.
தன் மகளின் கண்ணீரை பார்த்து முருகனின் விழிகளும் ஈரமாக,'அம்மாடி முல்ல... அழாத, உன் அப்பாவுக்கு இனி ஒன்னும் ஆகாது' என்றார் பார்வதி.
நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்வதியும் முருகனும் இதுவரை தன்னிடம் இன்முகத்துடன் பேசி இல்லாத நிலையில்... முல்லை இப்போது இருக்கும் சூழ்நிலையில் இவர்களின் அன்பான வார்த்தை அவளுக்கு அனுசரணையாக இருந்தது.
பார்வதி நல்ல மனம் கொண்டவர்... முருகன் தான் பார்வதியை இதுநாள் வரை முல்லைக்கு நீ தாயாக நடந்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை புகட்டாமல் இருந்து உள்ளார்.
யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பார்வதியின் புத்தி எங்கே போனது என்ற கேள்விக்கு பதில்!!
ஆதியில் இருந்தே மாற்றான் பெண்ணுக்கு பிறந்த பிள்ளையை நாம் ஒரு அடி தள்ளி வைத்து தான் வளர்க்க வேண்டும் என்று பார்வதியின் வீட்டில் சொல்லிக் கொடுத்த தவறான அறிவுரையாக கூட இருக்கலாம்.
ஆனால் ஏனோ இன்று காலை கேசவன் முருகனிடம் நடந்துக்கொண்டதை நினைத்து பார்வதிக்கு முல்லை மீது இரக்கம் வந்து இருக்க, இந்த இரக்கத்தால் யாருக்கு என்ன பாதகம்,யாருக்கு என்ன சாதகம் என்று இறைவன் ஒருவனே அறிந்து இருந்தான்.
தன் கணவனின் சோகமான முகத்தை பார்த்து,'என்னங்க... வலி அதிகமா இருக்கா...' என்று பார்வதி கேட்க,'ம்... ஆமா ரொம்ப வலிக்குது' என்றார் முருகன்.
'அப்பா...நீங்க அதிகம் பேசாதீங்க... போக போக வலி குறையும்' என்று முல்லை சொல்ல,
'ம்... நான் நல்லா தான் இருக்கேன். நீயும் உன் சித்தியும் போய் சாப்பிடுங்க' என்றார் முருகன்.
'இருக்கட்டும் அப்பா... நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க' என்று முல்லை சொல்ல,
'அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க... கிளம்புங்க' என்ற செவிலியரின் குரலில் முல்லையும் பார்வதியும் சிகிச்சை அறையில் இருந்து வெளியேற... கலங்கிய விழிகளுடன் முல்லை நடந்து செல்வதை பார்த்து முருகனின் மனதில் பாரம் கூடி போனது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top