Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 44
- Thread Author
- #1
21.2
'என்ன!? தெரியாம பண்ணிட்டானா. ஏய். உன் தம்பி கை வச்சது என் பொண்ணு மேல.எவ்ளோ தைரியம் இருந்தா இவன் இப்படி ஒரு கேவலத்தை பண்ணி இருப்பான்' என்ற முருகனின் முன்னே குடி போதை தலைக்கேறிய நிலையில் நின்று இருந்தான் கேசவன்.
'என்னங்க.நான் தான் சொன்னேனே. அவன் கட்டிக்க போற பொண்ணு என்ற உரிமையில தான்' என்று பார்வதி சொல்லும் முன்னே,
'வாயை மூடு' என்று கத்தினார் முருகன்.
'இதான் இவனுக்கு கடைசி எச்சரிக்கை. இனி முல்லை பக்கமே இவன் வரக்கூடாது.. மீறி வந்தா உன் தம்பியை நானே கொன்னு போட்டுடுவேன்' என்ற முருகன், மீண்டும் கேசவனின் கன்னத்தில் ஒரு அறை விட,
'யோவ் மாமா. என்ன. அப்படியென்ன நான் தப்பு பண்ணிட்டேன்னு என்னை அடிக்கிற!' என்று முருகனை மரியாதை இல்லாமல் பேசிய கேசவனின் பார்வை அழுதப்படி நின்று இருந்த முல்லையை முறைத்து பார்த்தது.
கேசவனின் பார்வையை கண்டு முல்லை உடல் நடுங்கி, அவள் தன் தந்தை பின்னே ஒளிந்து இருக்க,
'நான் தானே உன் பொண்ணை கட்டிக்க போறேன். ஏன்? அவகிட்ட நான் இந்த உரிமையை கூட எடுத்துக்க கூடாதா' என்ற கேசவனை முருகன் வெட்டவா குத்தவா என்ற எண்ணத்தோடு பார்த்து இருக்க,
'டேய் தம்பி. கொஞ்சம் அமைதியா இருடா' என்று கேசவனை அடக்கினார் பார்வதி.
'அக்கா. நீ சும்மா இரு அக்கா. யோவ் மாமா. நைட் ஒரு மணிக்கு உன் பொண்ணு ரூமுக்கு நான் போனதுக்கே உனக்கு கோவம் வருதே. ஒரு நாள். ஒரு நாள் நைட் முழுக்க உன் பொண்ணும் அந்த கதிரும், பாண்டியன் வீட்டுக்கே வராம எங்கேயோ போய் நைட் முழுக்க கூத்து அடிச்சிட்டு வந்து இருக்காங்களே! ஏன்? அப்போ அந்த கதிர் இவளை தொடாமலா இருந்து இருப்பான்' என்ற கேசவனின் வார்த்தையை கேட்டு முல்லை மேலும் அழுதவள்,
'அப்பா. இவன் சொல்லுற மாதிரி எல்லாம் எதுவும் நடக்கல. என். என்னை பாம்பு'என்று முல்லை சொல்லும் முன்னே,
'நீ எதுவும் சொல்ல வேணா. நீ போய் படு, ஏய்.நீ வெளிய போ. இனி குடிச்சிட்டு நீ இந்த வீட்டு வாசப்டியை மிதிக்க கூடாது. போ. இப்போவே வெளியே போ' என்று கேசவனை பார்த்து கட்டளையிட்டார் முருகன்.
'ஐயோ. தவளை தன் வாயால் கெடுவதை போல இவனே இவன் கல்யாணத்தை கெடுத்துக்க போறான்' என்று புலம்பிய பார்வதி,
'டேய் தம்பி நீ போய் மொட்டை மாடியில படு போ' என்று வலுகட்டாயமாக கேசவனை அங்கிருந்து பார்வதி வெளியேற்ற, கேசவனோ அந்த மது போதையிலும் வன்மத்துடன் முல்லையை முறைத்தப்படி அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
அவன் சென்றும் கூட அழுதுக்கொண்டு இருந்த முல்லையை பார்த்து மனம் இறங்கிய முருகன்,
'இசக்கி.முல்லைக்கு பால் காச்சி எடுத்துட்டு வா' என்று சொல்ல, பல வருடமாக வீட்டு வேலை செய்யும் இசக்கி என்ற பெண்மணி சில நிமிடமிகளில் பால் குவழையுடன் வந்தவர் அதை முல்லையிடம் கொடுத்தார்.
'அம்மாடி. பாலை குடிச்சிட்டு உன் ரூம்ல போய் கதவை பூட்டிகிட்டு படு' என்றவாரு முருகன் சோபாவில் படுத்து கண்கள் மூடியவரை நன்றி கலந்த பார்வையுடன் கடந்து சென்று தன் அறையில் படுத்துக்கொண்டாள் முல்லை.
மறுநாள் காலை அனைவருக்கும் ஆதவன் அழகான விடியலை கொடுக்க,
நேரம் பத்து மணி அளவில் முல்லை அவள் அறையை சுத்தம் செய்துக்கொண்டு இருந்தவள் கண்ணுக்கு கதிர்வேலன் தன் காலில் கட்டிய இறைவனின் அருள் பெற்ற மாங்கல்யம் தென்பட்டது.
அந்த மஞ்சள் கயிறை கையில் எடுத்து முல்லை கலங்கிய விழிகளுடன் பார்த்து இருக்க,
'முல்ல. ஏய் முல்ல வெளியே வா'என்ற கேசவனின் குரலைக்கேட்டு முல்லை மீண்டும் தாலி கயிறை துணிக்கு கீழ் மறைத்து வைத்தவள்,
'என்ன?' என்று கோவமாக கேட்டப்படி அவள் அறையில் இருந்து வெளியே வந்தாள்.
'இவ தான் முல்ல. நான் கட்டிக்க போற பொண்ணு. இவளை தான் நீங்க செக் பண்ணனும்' என்ற கேசவன்.அவனுடன் செவிலியர் பெண் ஒருவரை அழைத்து வந்து இருக்க,
'டேய் தம்பி. என்னடா. இப்போ முல்லைக்கு என்ன பிரச்சனைன்னு அவளை செக் பண்ண இவங்கள இங்க அழைச்சிட்டு வந்து இருக்க' என்று பார்வதி கேட்டார்.
'பிரச்சனை முல்லைக்குன்னு நான் நர்ஸை இங்க அழைச்சிட்டு வரல, எதிர்காலத்துல முல்லையால பிரச்சனை வரக்கூடாதுன்னு தான் நான் இவங்கள அழைச்சிட்டு வந்தேன்' என்று கேசவன் சொல்ல,
'என்னடா உளறுற.'என கேசவனின் கேவலமான புத்தியை அறிந்திடாத பார்வதி அவர் தம்பியை கேள்வி கேட்க்கும் நேரம், முல்லையும் ஏதும் புரியாமல் செவிலியரை பார்த்தப்படி நின்று இருக்க,
'அக்கா.இவ அந்த கதிர் கூட ஒரு நாள் முழுக்க பகல் நைட்டுனு தங்கி கூத்தடிச்சிட்டு வந்து இருக்கா,
அதான் இவ இன்னும் கன்னி..' என்று கேசவன் தன் வார்த்தையை முடிக்கும் முன்னே முல்லை கேசவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தவளின் இதயம் எரிமலையென வெடித்து கண்களில் கோவக்கனல் வீச,
கேசவனை சுட்டேரிக்கும் பார்வை பார்த்து இருந்தாள் முல்லை.
'ஏய்.என் மேலையே கை வைக்கிறியா'என்ற கேசவன் முல்லையின் கையை பிடித்து முறுக்கி,
'உண்மையை சொன்னா உனக்கு கோவம் வருதா' என்றவன்,
'கலா. நீ போய் அவளை செக் பண்ணு போ' என்று அவன் அழைத்து வந்த பெண்ணுக்கு கட்டளையிட,
'டேய் கேசவா.' என்ற கர்ஜனையுடன் இவன் முன்னே வந்து நின்றார் முருகன்,
'ச்சி. நீயெல்லாம் ஒரு ஆம்பளையா. நேத்து நீ பண்ண கேவலத்துக்கு அப்பவே உன்னை நான் குழி தோண்டி புதைத்து இருக்கனும்' என்ற முருகன் கோபத்துடன் கேசவனை அடிக்க கை ஓங்க,
முருகனை தடுத்து பிடித்து தன் முழு பலம்க்கொண்டு கேசவன் தள்ளி விட்ட வேகத்தில்,முருகன் நிலை தடுமாறி கீழே விழ.
அவர் பின் தலையில் அடிபட்டு, அப்படியே கண்கள் மூடியவரின் விழிகள் இறுதியாய் கண்ணீருடன் அனாதையாக நின்று இருந்த தன் மகள் முல்லையை மட்டுமே உள்வாங்கி இருந்தது.
முருகனை கேசவன் தள்ளிவிட்ட வேகத்தில் அவர் கீழே விழுந்து அவரின் பின் தலையில் அடிப்பட்ட நிலையில் முருகன் முழுவதுமாக மயங்கிய வரை பார்த்து முல்லையும் பார்வதியும் பதறிப் போனார்கள்.
என்னதான் முருகனை பார்வதி இரண்டாம் தாரமாக திருமணம் செய்து இருந்தாலும் முருகனின் மீது அவருக்கு அன்பு இருக்கும் பட்சத்தில் தன் கணவனின் நிலையைக் கண்டு பதறிய பார்வதி,' டேய் படுபாவி என்ன காரியம் பண்ணிட்ட' என்று கேசவனின் கன்னத்தில் அறைந்தார்
ஆத்திரத்தில் முருகனை தள்ளிவிட்ட கேசவனுக்கும் அந்த நொடி என்ன செய்வது என்று புரியாமல் தவித்து நின்றான்.
கேசவனுடன் வந்திருந்த செவிலியர் முருகனுக்கு முதலுதவி செய்யும் பட்சத்தில் 'இவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வருது, இவர உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போகணும்' என்று சொல்ல,
'அப்பா அப்பா.' என்று முல்லை கதறி அழ, அடுத்த நொடியே கேசவன் முருகனை மருத்துவமனையில் சேர்த்தான்.
'எப்படி இவர் தலையில அடிபட்டுச்சு, இது போலீஸ்கேஸ் ஆச்சே ' என்று மருத்துவர் சொல்ல,
'அது..அது பாத்ரூம் போகும்போது வழுக்கி விழுந்துட்டாரு' என்று கேசவன் பொய்யுரைத்தவனின் வார்த்தைக்கு எதிர் பேச்சு பேசும் நிலையில் முல்லையும் இல்லாமல் இருக்க,
'டாக்டர் என் அப்பாவை எப்படியாவது காப்பாத்துங்க' என்று மருத்துவரிடம் கதறி அழுதாள் முல்லை.
'டாக்டர். என் புருஷனை காப்பாத்துங்க' என்று பார்வதியும் மருத்துவரிடம் மன்றாட முருகனுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆத்திரத்தில் முருகனை தள்ளி விட்டாலும் தன் அக்கா கணவன் முருகனின் உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று எண்ணிய கேசவனும் உள்ளூர பயத்துடன் இருந்தான்.
'அப்பா அப்பா.' என்று மேலும் முல்லை கதறி அழுதபடி சிகிச்சை அறையின் வாசலில் நின்று இருந்தவள்,
'என் அப்பாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உன்னை நான் சும்மா விடவே மாட்டேன்' என்று கேசவனை பார்த்து எச்சரித்தாள்.
முல்லையை வாய் திறக்க விட்டால் தனக்கு தான் பிரச்சனை நேர்ந்திடும் என்று அறிந்திருந்த கேசவன்,'ஏய். எவ்வளவு திமிரு இருந்தா என்னையே மிரட்டுவ,இப்போ நான் நினைச்சா கூட உன் அப்பா கதையை இந்த ஹாஸ்பிடல்யே வச்சு முடிக்க முடியும்' என்று முல்லையை கேசவன் பயமூட்டும் விதமாக பேசியதும், முல்லையின் முகத்தில் அச்சம் குடி கொண்டது.
'டேய்.என்னடா பேசுற? அவர் என் புருஷன்' என்று பார்வதி தன் தம்பியை மிரட்ட.
'அக்கா. என்ன காப்பாத்திக்க நான் என்ன வேணாலும் பண்ணுவேன். இவ மட்டும் வீட்ல நடந்ததை போலீஸ்ல சொல்றேன், வேற எங்காவது சொல்றேன்னு கதை அளந்துக்கிட்டு இருந்தா! அந்த டாக்டர்க்கிட்ட காசு கொடுத்து உள்ளே இருக்கிற உன் புருஷன் கதையை முடிக்க சொல்லிடுவேன், அப்புறம் இந்த சொத்து சுகத்துக்கெல்லாம் இவதான வாரிசு. இவ கழுத்துலையும் தாலிய கட்டி வீட்டோட அடச்சு வச்சுடுவேன். என்னை பத்தி உனக்கு தெரியும் தானே' என்று கேசவன் தன் சொந்த அக்கா என்று பாராமல் பார்வதியை மிரட்ட. முல்லைக்கு அந்த இடத்தில் அமைதியை கடைபிடிப்பதை தவிர வேறு வழி இல்லாமல் போனது.