• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
44
பாலைவனத்து முல்லை

முல்லை 21.1

இரவு மணி ஒன்பதை நெருங்கி இருக்கும்.
'மீனா அண்ணி சாப்பிட வாங்க' என்று ரோஜா அழைத்தாள்.

'எனக்கு பசிக்கல ரோஜா' என்ற மீனாவோ ஜீவா அறையில் தரையில் பாய் விரித்து படுத்து இருந்தவள். ரோஜா குரலை கேட்டு எழுந்து அமர்ந்தாள்.

ரோஜாவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் கஸ்தூரி அனுமதியின்றி ஜீவாவின் அறைக்குள் நுழைந்து,' ஏய் மீனா உனக்கு புத்தி இல்லையா, எதனால நீ தரையில பாய் விரிச்சு படுத்து இருக்க! நீ இந்த குடும்பத்தோட மூத்த மருமகள். உனக்கு தான் இங்கே எல்லா உரிமையும் இருக்கு' என்று சம்பந்தமே இல்லாமல் தன் மகளின் உரிமைக்காக குரல் கொடுத்தார் கஸ்தூரி

'அம்மா. எனக்கு இருக்கிற பிரச்சனை தெரியாம நீ எதையாவது பேசி என் கோபத்துக்கு ஆளாகாத, ஒழுங்கா இந்த வீட்ல இருந்து வெளியே போயிடு. இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது' என்று தன் அன்னையை வார்த்தையால் குதறி எடுத்தாள் மீனா

'ஆமா ஆமா. நான் ஒருத்தி இருக்கும்போதே இந்த வீட்ல உன்னை ஒரு ஆளாக யாருமே மதிக்கல! இப்ப நானும் இங்கே இருந்து போயிட்டா இவங்க எல்லாரும் சேர்ந்து உன்னை இந்த வீட்டோட வேலைக்காரியா கூட மாத்திடுவாங்க' என்ற கஸ்தூரியின் பார்வை ரோஜாவை தான் சுட்டிக்காட்டியது

'இங்க பாருங்க அத்த. எதுடா சாக்குனு எங்களை குறை சொல்ற வேல வச்சுக்காதீங்க. இப்ப என்ன! மீனா அண்ணிக்கு இங்க என்ன குறை இருக்கு? யாரு அவங்கள மதிக்கல?' என்று ரோஜா கேட்க.

'வேற யாரு. மீனா கழுத்துல தாலி கட்டியது ஜீவா தானே. ஆனா அவன் என்னமோ இவளை விட்டுட்டு எப்போ பாரு முல்லையை நினைச்சு சுத்திகிட்டு இருக்கானே! இதெல்லாம் எந்த ஊரு நியாயம்' என்று கேட்டார் கஸ்தூரி.

'அத்த.உங்க பொண்ணு நல்லதுக்கு தான் சொல்றேன். இனி ஜீவா அண்ணன் வாழ்க்கையில் முல்லை இல்லவே இல்லை. இதை உங்க மூளையில நல்லா ஏத்திக்கோங்க. நீங்களாவே எதையாவது பேசி நல்லா இருக்கிற குடும்பத்தை நக்க வச்சுட்டு போயிடாதீங்க. முதல்ல ஜெகதீஷ் மாமா வந்ததும் இந்த வீட்ல இருந்து நீங்க கிளம்பற வழிய பாருங்க' என்ற ரோஜா கஸ்தூரியை முறைத்த வண்ணம் அங்கிருந்து சென்றாள்.

'பாத்தியா டி மீனா.வேற வீட்டுக்கு வாழ போற பொண்ணுக்கு இவ்வளவு வாய் இருக்குன்னு!!
ஆனா நீ இந்த வீட்டோட மருமக. நீ என்ன உம்மானா சாமி மாதிரி உட்கார்ந்து இருக்க. முதல்ல எழுந்து கட்டில்ல படு.இந்த ஆம்பளைங்க தானா நம்ப வழிக்கு வர மாட்டாங்க. நம்ப தான் அவங்கள நம்ப வழிக்கு வர வைக்கணும். முதல்ல இந்த மாதிரி அழுமூஞ்சியா இல்லாம! நல்லா மூஞ்ச கழுவிட்டு,எங்க அண்ணி லட்சுமியுடைய நகை எல்லாம் கேட்டு வாங்கி போட்டுக்கிட்டு, இந்த நாட்டாமை படத்துல வருவாங்களே கு.ஷுப்பு, அவங்கள மாதிரி நல்லா சிக்குனு இரு புரியுதா' என்ற கஸ்தூரி தன் மகளுக்கு தூபம் போட்டபடி அங்கிருந்து வெளியே செல்ல.
மீனா தன் அன்னையைப் பார்த்தவள், தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் பாயில் படுத்துக்கொண்டாள்.

இதே தருணம் தென்னந்தோப்பில் இருக்கும் நாகராஜனின் குடிசையில் கதிர்வேலன் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருக்க. ரோஜா சாப்பாட்டு பையுடன் தன் அண்ணனை பார்க்கச் சென்றாள்.

'நண்பா.சின்னம்மா சாப்பாட்டோட வந்திருக்காங்க' என்று நாகராஜன் சொல்ல,'சின்னமாவும் வரல பெரியம்மாவும் வரல, இந்தாங்க உங்க நண்பனுக்கு இந்த சாப்பாட்டை குடுங்க, நான் கிளம்புறேன்' என்று கோவமாக சொன்னாள் ரோஜா.

'அம்மா. ம்மா இருங்க. இப்ப ஏன் என்கிட்ட கோவமா இருக்கீங்க' என்று கதிர்வேலன் நல்ல முறையில் தன் தங்கையிடம் பேச..ரோஜா கதிரை மேலிருந்து கீழ் வரை கண்களால் நோட்டமிட்டவள்,'என்ன வாத்தி. இன்னும் சரக்கு உள்ள போகலையா?' என்று கேட்டாள்

'சரக்கு வீட்டுகுள்ள பத்திரமா இருக்கு. இனிமேல் தான் குடிக்கணும். நான் உங்க கிட்ட பேசணும்ன்னு தான் காத்துகிட்டு இருக்கேன். சரி சொல்லுங்க போன்ல ஏன் என்கிட்ட கோவமா பேசினீங்க' என்று கதிர்வேலன் கேட்க,

'பின்ன எப்படி பேச சொல்றீங்க! நீங்க இன்னைக்கு முல்லைக்கிட்ட பேசுனது ரொம்ப தப்பான அணுகுமுறை, எனக்கு சுத்தமா பிடிக்கல' என்றாள் ரோஜா.

'மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லாதீங்க. ரவா லட்டுக்கு என்னை பிடிக்காது. அனாலதான் நானே முன்னாள வந்து அந்த மாதிரி பேசினேன்' என்று கதிர்வேலன் சொல்ல

'என்னது! முல்லைக்கு உங்கள பிடிக்காதா! அப்படின்னு அவ சொன்னாளா' என்று ரோஜா கேட்க,

'ஆமா...முல்லைக்கு உங்க யாரையும் பிடிக்காது.முல்லைக்கு என்னை மட்டும் தான் பிடிக்கும். இந்த உலகத்திலேயே என் முல்லைக்கு பிடிச்சது நான் மட்டும் தான்' என்ற ஜீவா. மூக்கு முட்ட குடித்துவிட்டு நாகராஜனின் குடிசைக்குள் நுழைய.

நாகராஜன், கதிர்,ரோஜா என்று மூவரும் ஜீவாவின் மாற்றத்தை எண்ணி அதிர்ச்சி கலந்த கவலையுடன் இருந்தார்கள்.

'என்ன எல்லோரும் அப்படி பாக்கறீங்க. ஆமா என் மேல தான் முல்லைக்கு அன்பு அதிகம். நான் அவளை எந்த அளவுக்கு நேசித்தேன் தெரியுமா,ஆனா. ஆனா அவளுக்கு நான் துரோகம் பண்ணிட்டேன், நான் பாவி. நான் படுபாவி'என்று பிணர்த்திய ஜீவானந்தம் நாகராஜன் வீட்டில் இருந்த கட்டிலில் அமர்ந்து மேலும் குடிப்போதையில் புலம்ப ஆரம்பித்தான்.

தன் அண்ணனின் நிலைமையை கண்டு கதிர்வேலனுக்கு என்ன செய்வதென்று விளங்காமல் போனது.

'வாத்தி.உங்க பழக்கத்தை இப்போ பெரியவரு தொடங்கி இருக்காரு, நீங்க ரெண்டு பேருமே இந்த குடியை குடிக்க ஒரே காரணம் தான். ஆனா உங்க ரெண்டு பேருக்குமே அமைய இருந்த நல்ல வாழ்க்கையை நீங்களே கெடுத்துகிட்டு ஏன் இப்படி குடிக்கு உங்கள அடிமை படுத்துக்கிறீங்கன்னு தெரியல' என்ற ரோஜா.. அவள் கொண்டு வந்த சாப்பாட்டை ஜீவாவிற்கு கொடுத்தாள்.

'வேண்டா. எனக்கு சாப்பாடு வேண்டா. நான் முல்லைக்கு பண்ண பாவத்துக்கு நான் பட்டினி கிடந்தே சாக போறேன்' என்ற ஜீவாவை பார்த்து ரோஜாவிற்கு கோவம் எழுந்தது.

'இங்க பாருங்க. ஏற்கனவே அந்த கஸ்தூரி அத்த நம்ம குடும்ப மானத்தை வாங்குற மாதிரி பேசிகிட்டு இருக்கு, இதுல நீங்க வேற இப்படி குடிச்சிட்டு முல்லை பேரை சொல்லிக்கிட்டு இருந்தா அது தான் நீங்க முல்லைக்கு பண்ணுற பெரிய பாவம். இந்தாங்க சாப்பிட்டுட்டு நீங்க இங்கேயே படுங்க, வாத்தி. பெரியவரு இங்கேயே தூங்கட்டும்' என்று ரோஜா சொல்ல,

அன்றைய தினம் இரவு ஜீவா அவர் அறைக்கு செல்லாமல் நாகராஜன் வீட்டிலேயே மது மயக்கத்தில் உறங்கி இருந்தார்.

*****************************

சிவகங்கையில் முருகன் வீட்டில், முல்லையின் அறையில் அழுது அழுது பசியால் சோர்ந்து போய் சுருண்டு படுத்து இருந்த முல்லைக்கு அவள் வாழ்வே சூனியமாக தோன்றியது.

சொல்லி அழ உற்ற தோளும் இல்லை.
தனக்காக பேச அன்னையும் இல்லை.
தன் மனதை புரிந்துகொள்ளும் அன்பில் தன் தந்தையும் இல்லை.
என்று தனக்குள் நொந்துக் கொண்டவள் அப்படியே பசியால் கண்கள் மூடினாள்.

நள்ளிரவு ஒரு மணி அளவில் முல்லையின் அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு முல்லை கண் விழித்தவளுக்கு பசி மயக்கத்தில் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.

மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க, சோர்வுடன் எழுந்து சென்றவள், கதவை திறக்க,அங்கே ஒரு மார்க்கமாக நின்று இருந்தான் கேசவன்.

'என்ன வேணும் உங்களுக்கு' என்று கேசவனை கோபத்துடன் முல்லை கேட்க, அவனோ அவள் கேள்விக்கு பதில் தராமல். முல்லையை மேல் இருந்து கீழ் வரை பார்வையால் எல்லை மீறிக்கொண்டு இருந்தான்.

அவனின் கண் போன இடத்தை பார்த்து முகம் சுழித்த முல்லையோ தன் ஆடைகளை சரி செய்துகொண்டவள், 'என்ன வேணும்' என்று மீண்டும் கோபத்துடன் கேட்க,

'நீ தான் டி வேண்டும்' என்றவனின் வார்த்தையில் முல்லையின் முகத்தில் இறுக்கம் கூடியது.

'ச்சி. மனுஷனா நீ, உன் பொறுக்கி புத்தியை எல்லாம் வேற எங்காவது போய் காட்டு' என்ற முல்லை வேகமாக அவள் அறையின் கதவை மூட முயன்றவளின் கையை பிடித்து வளைத்து தன் வசம் அணைத்துக்கொண்டான் கேசவன்.

'ஏய் ச்சி விடு' என்று கேசவனிடன் இருந்து திமிரிய முல்லைக்கு.ஒரு பக்கம் பசி மயக்கம். மறுபக்கம் பாம்பு கொத்திய இடத்தில் வலி என்று அவளை இம்சிக்க. எவ்வளவு போராடியும் கேசவனிடம் இருந்து தன்னை காத்து கொள்ள முடியாமல் முல்லை துடித்து போனாள்.

'ஏய் விடுன்னு சொல்லுறேனே. அப்பா. அப்பா' என்று முல்லை தன் தந்தையை கத்தி அழைக்க, கேசவன் முல்லையின் வாயை அழுத்தி மூடியவனின் செயலில் முல்லைக்கு மூச்சு முட்டியது.

இருப்பினும் இரவு நேரம் என்பதால் முல்லையின் குரலை தெளிவாக கேட்ட முருகன் தன் அறையில் இருந்து வெளியே வர, அவரை தொடர்ந்து பார்வதியும் வந்தவரின் காதில் முல்லையின் அனத்தல் சத்தம் தெளிவாக கேட்டது.

'என்ன சத்தம் இங்க. முல்லை கத்துன மாதிரி இருந்துச்சே' என்ற முருகன் முல்லையின் அறைக்கு செல்ல, அங்கே மது போதையில் கேசவன் முல்லையின் வாயை மூடிக்கொண்டு அவளை வலுகட்டாயமாக அவன் கட்டுப்பாட்டில் அணைத்து இருப்பதை பார்த்த முருகன்,

'டேய். என்ன பண்ற' என்று கோபத்துடன் கத்திய வேகத்தில் முல்லை கேசவனின் கையை கடித்தவள்,அவன் வலியால் துடிக்கும் நேரம் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல முருகனை நோக்கி ஓடி வந்து தன் தந்தையின் பின்னே பயத்தில் ஒளிந்துகொண்டாள்.

தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்ற சொல்லுக்கு அர்த்தம் சேர்ப்பதை போல முல்லையிடம் கேசவன் நடந்துகொண்டதை பார்த்து முருகனுக்கு சொல்ல முடியாத அளவுக்கு கோவம் எழ, அதே கோபத்துடன் கேசவன் அருகே சென்ற முருகன் பளார் பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்த வேகத்தில்,

'ஏங்க ஏங்க என் தம்பி ஏதோ தெரியாம பண்ணிட்டான். அவன் கட்டிக்க போற பொண்ணு என்ற உரிமையில பண்ணிட்டான்'என்று பார்வதி முருகனின் கையை பிடித்து மேலும் அவர் கேசவனை அடிக்காதப்படி தடுத்து இருந்தாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top