• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
42
2௦.2

ஜீவா ஏன் உண்மையை மறைக்க வேண்டும் என்ற கேள்வி கதிர்வேலன் மனதில் எழுந்த தருணம், கதிரின் கைபேசிக்கு அவன் நண்பன் நாகராஜனிடம் இருந்து அழைப்பு வர,'என்னடா அவங்கள வீட்டுல விட்டுட்டியா' என்று விசாரித்தான் கதிர்வேலன்.

'இப்போ தான் நண்பா இறக்கி விட்டேன். அப்புறம் உங்க அப்பா உனக்கு ஒரு வேலை கொடுத்து இருக்கார்' என்ற நாகராஜன் சில வேலைகளை கதிரிடம் சொல்லி முடித்தவன்,'அப்புறம் உங்க பாசமலர் கூட உங்கள உடனே போன் பண்ண சொன்னாங்க' என்ற நாகராஜன் கைபேசி இணைப்பை துண்டித்ததும், கதிர்வேலன் சற்றும் தாமதிக்காமல் தன் தங்கை ரோஜாவை கைபேசி வாயிலாக அழைத்தான்.

தன் அண்ணனிடம் இருந்து வந்த அழைப்புக்கு,'வாத்தி. உங்களுக்கு அறிவு இருக்கா' என்று எடுத்ததும் கேட்ட தன் தங்கையின் கேள்வியில் குழம்பி போனான் கதிர்வேலன்.

***************************

'என்னாச்சு அம்மா. ஏன் என்னை திட்டுறீங்க' என்று கதிர் புரியாமல் கேட்க,

'பின்ன. நீங்க பண்ண வேலைக்கு உங்கள கொஞ்சுவாங்களா. நான் தான் உங்களுக்கும் முல்லைக்கும் கல்யாணம் பண்ண அப்பாக்கிட்ட சம்மதம் கேட்டேனே. உங்கள யார் அதுக்குள்ள முல்லையை உங்களுக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்லைன்னு பொய் சொல்ல சொன்னாங்க' என்று கோவமாக கேட்டாள் ரோஜா.

ரோஜாவின் கேள்வியில் கதிரின் முகத்தில் கவலை குடிகொண்டது.

'கேக்குறேனே. உங்கள யார் அப்படி முந்திரி கொட்டை மாதிரி பேச சொன்னாங்க' என்று ரோஜா கேட்க,

'அப்படி பேசாம. வேற எப்படி பேச சொல்றிங்க.என்னை கல்யாணம் பண்ணிக்க முல்லைக்கு இஷ்டமான்னு கேக்கும் போது, அவ முகம் போன போக்கை நீங்க பார்த்தீங்க தானே' என்ற கதிர்வேலனின் கேள்வியில் ரோஜாவிற்கு மேலும் கோவம் எழுந்தது.

'அவளுக்கு இன்னைக்கு மட்டும் இல்ல. என்னைக்குமே என்னை பிடிக்காது' என்று கதிர் சொன்னதும்,'உங்கள முல்லைக்கு பிடிக்காதுன்னு அவ உங்ககிட்ட சொன்னாளா' என்று கேட்டாள் ரோஜா.

'இதெல்லாம் சொன்னா தான் புரியுமா என்ன. அவ கண்ணை பார்த்தே நான் கண்டு பிடிப்பேன்' என்று கதிர் சொல்ல,
'அநேகமா உங்க கண்ணை செக் பண்ணி கண்ணாடி போடணும் போல' என்று கடுப்புடன் சொன்னாள் ரோஜா.

'என்ன மா நீங்க.நான் முல்லையை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைனு சொன்னது தப்புன்னு நீங்க சொல்றிங்களா' என்று கதிர் கேட்க,
'அது தப்பு இல்ல வாத்தி. நீங்க பண்ணது முட்டாள் தனம்' என்றாள் ரோஜா.

'நீங்க என்ன வேணா சொல்லுங்க.ரவா லட்டுக்கு என்னை பிடிக்காது. அதனால தான் நானே முன் வந்து இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொன்னேன்' என்று கதிர் சொல்ல,

'இல்ல வாத்தி. நீங்க பண்ணது சரியில்ல. பாவம் முல்லை. நீங்க அப்படி சொன்னதும், முல்லையின் முக மாற்றத்தை நான் கவனிச்சேன். பாவம் அவள்' என்று ரோஜா சொன்னதும் கதிரின் மனதிரையில் முல்லையின் கலங்கிய விழிகள் ஒரு நொடி தோன்றி மறைந்தது.

'ஆமா. அவ கவலையா தான் இருந்தாள்.ஆனா அந்த கவலைக்கு காரணம் அவ ஆசைப்பட்ட வாழ்கை அவளுக்கு கிடைக்கல என்ற வருத்தம் தான்' என்று கதிர்வேலன் சொல்ல, ரோஜாவிற்கு இதற்கு மேலும் அவனுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது என்று எண்ணியவள், சட்டென்று தன் கைபேசி இணைப்பை துண்டித்தாள்.

தன் தங்கை ரோஜா சொன்னதை எண்ணி பார்த்த கதிருக்கு ஏனோ முல்லை இவனை நேசிக்கும் விஷயம் நம்ப முடியாத உண்மையாக தான் இருந்தது.

அதற்கு காரணம் இவர்கள் இருவருமே ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் உணர்வுகளை இதுவரை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளாத காரணமாக தான் இருந்தது.

******************************

இதே தருணம் குன்னக்குடியில் இருந்து முருகன். வீட்டுக்கு வந்த கையோடு முல்லையை வார்த்தையால் வதைக்க ஆரம்பித்து இருந்தார்.

'உண்மையில் நீ எனக்கு பிறந்த பெண் தானா?' என்ற முருகனின் கேள்வியில் முல்லைக்கு அவள் தேக ரத்தம் உறைந்து போனது.

'எல்லாம் கொழுப்பு. உடம்பெல்லாம் திமிரு. நம்ம மானத்தை வாங்க இவ எத்தனை நாள் காத்து இருந்தாள் தெரியல. இதோ இப்போ நம்ம சொந்தக்காரங்க எதிர்ல நம்ம மரியாதையே போச்சு' என்று பார்வதி அவர் பங்குக்கு முருகனுக்கு கோவம் வரும்ப்படி பேசிக்கொண்டு இருந்தாள்.

'மாமா. உங்க பொண்ணு பண்ண காரியத்துக்கு அங்கேயே இவளை நீங்க நாலு சாத்து சாத்தி இருக்கனும்' என்று கேசவன் சொல்ல, இவர்கள் யார் பேசுவதையும் காதில் வாங்காத முல்லைக்கு வாழ்க்கையே வெறுத்து போனது.

'ஹ்ம். இனி இவளை அடித்து எல்லாம் எந்த பயனும் இல்லை. பார்வதி. இவளுக்கு சோறு தண்ணி கண்ணுல காட்டாத. கழுதைக்கு அப்போ தான் நம்ம அருமை புரியும்' என்ற முருகன் கோவமாக வீட்டில் இருந்து வெளியேறியவரை தொடர்ந்து கேசவனும் சென்றான்.

'ஏய்.இதுவரைக்கும் சித்தி கொடுமைனா என்னன்னு நீ பார்த்ததே இல்ல தானே. இனி பார்ப்ப பாரு' என்ற பார்வதி முந்தனையை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு கோவமாக தன் அறைக்குள் புகுந்து இருந்தார்.

யார் என்ன பேசினால் என்ன. நான் இருக்கும் மனநிலைக்கு நீங்கள் எனக்கு அறுசுவை விருந்தே கொடுத்தாலும் என்னால் அதை சாப்பிட முடியாது, என்று தனக்குள் எண்ணிய முல்லை அவள் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டு கட்டிலில் சோர்ந்து விழுந்தவளின் காதில் கதிர்வேலனின் சொற்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டு இருந்தது.

இதுல கவலைப்படவோ ஆச்சிரியப்படவோ ஒன்னுமே இல்லையே. என்னைக்குமே என்னை மாமா சாருக்கு பிடிக்காது தானே. அவர் நேசித்தது மீனாவை தானே. அதனால் தான் இன்னைக்கு பாண்டியன் மாமா கேட்டக்போது கூட என் மேல விருப்பம் இல்லைனு சொல்லிட்டாரு' என்று தனக்குள் எண்ணிய முல்லைக்கும் கதிர்வேலனின் மனதில் அவள் தான் இருக்கிறாள் என்ற உண்மை தெரியாமல் போனது.

முல்லையின் வீட்டில் இருந்து வெளியேறிய கேசவன் நேரே ASI சுந்தரேசனின் வீட்டுக்கு தான் சென்றான்.

கேசவனை பார்த்ததும்,'என்ன கேசவா.உனக்கு கொடுத்த வாக்கை நான் நிறைவேற்றி விட்டேன் பார்த்தியா' என்று கேட்டான் சுந்தரேசன்.

'சார். நீங்க வேற மாதிரி சார். நான் கூட உங்கள வாய் சொல் வீரன்னு தான் நினைச்சேன் சார். ஆனா உண்மையில் நீங்க காரியக்காரன் சார்' என்று கேசவன், சுந்தரேசனை பார்த்து வாயால் பெருமை பீத்தினான்.

'ம். இது ஆரம்பம் தான். இனிமே தான் அந்த கதிர்வேலன் குடும்பத்துக்கு அடி மேல் அடி விழப்போகுது' என்ற சுந்தரேசனின் முகத்தில் அப்படியொரு வன்மன் தெரிந்தது.

'ஆனா சார். அந்த ஜீவாவும் மீனாவும் எப்படி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாங்க' என்று கேசவன் கேட்க,

'அதெல்லாம் தெரிஞ்சிகிட்டா. நீ என் இடத்துல இருப்ப. நான் உன் இடத்துல இருப்பேன்' என்று சுந்தரேசன் சொல்ல,

'எப்படியோ சார். என் மாமன் பொண்ணு முல்லையை மறுபடியும் எங்க வீட்டுக்கு வர வச்சிட்டீங்க.. எனக்கு அது போதும் சார்' என்று மகிழ்ச்சியாக சொன்னான் கேசவன்.

'ஆமா. உன் மாமன் மகளை வச்சி அந்த கதிர்வேலனோட அப்பனை பழி வாங்க போறதா சொன்னிங்க. என்ன பஞ்சாயத்துல வச்சி அந்த ஆளை அசிங்க படுத்தினீங்களா' என்று சுந்தரேசன் கேட்க,

'அட இல்ல சார். நம்ம நினைத்த எதுவும் அங்க நடக்கல' என்ற கேசவன்.
காலையில் குன்னக்குடி பஞ்சாயத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் சொல்லி முடித்தான்.

'என்ன சொல்ற கேசவா. ஒவ்வொரு விஷயத்தையும் நம்ம பார்த்து பார்த்து பண்ணும் போது,உன் பக்கம் இருந்து இப்படி சொதப்புனா நல்லாவா இருக்கு' என்று சுந்தரேசன் கேட்க,
'எல்லாம் அந்த முல்லையால வந்துச்சு, அவ தான் கடைசி நேரத்துல காலை வாரி விட்டுட்டா'என்று கோவமாக சொன்னான் கேசவன்.

'என்ன நீ இவ்ளோ சாதாரணமா சொல்லுற. சரி. இனி இது உன் பிரச்சனை. நீ கேட்ட உதவியை நான் பண்ணிட்டேன். இப்போ நான் கேட்ட விஷயம் என்னாச்சு' என்று சுந்தரேசன் கேட்க,'நான் கஸ்தூரி அக்காகிட்ட விஷயத்தை சொல்லிட்டேன். அவங்க உங்க விஷயத்தை பார்த்துப்பாங்க' என்றான் கேசவன்.

'ம். எல்லாம் சரியா நடக்கணும். அந்த கதிர்வேலன் குடும்பம் என் முன்னாடி மண்டி போடணும்' என்ற சுந்தரசன் தான் ஜீவா மீனா திருமணம் நடக்க காரணமாக இருந்த ஆசாமி.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top