Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
முல்லை - 2௦.1
தன் தந்தையை குற்றவாளியை போல அனைவரும் கேள்வி கேட்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் கதிர்வேலன் கோவம் கொண்டு அனைவரையும் எதிர்த்து பேச வாய் எடுக்கும் முன்னே, 'என் பக்கம் தான் தப்பு இருக்கு.முல்லைக்கு நான் பண்ணது பெரிய நம்பிக்கை துரோகம், ஆனா இதெல்லாம் என்னை மீறி நடந்த விஷயம், இருந்தாலும் இந்த தப்புக்கான தண்டனையை நானே ஏத்துக்குறேன், இப்போ நான் என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க' என்று பாண்டியன், அவரே முன் வந்து மீனா ஜீவா செய்த அவசர கல்யாணத்துக்கு உண்டான தண்டனையை தானே ஏற்றுக்கொள்ள முடிவு செய்து இருந்தார்.
'பின்ன என்னப்பா முருகா. அதான் பாண்டியனே இறங்கி வந்து என்னவேணும்னு கேக்குறாரே, இப்போ அவர்கிட்ட இருந்து என்னதான் நீ எதிர் பார்க்குற' என்று பெரியவர்கள் கேட்க,
'வேற என்ன. ஆசை வார்த்தை பேசி முல்லையை இவங்க குடும்பம் ஏமாத்தியதற்காக, முல்லையை பெத்த அப்பா என்ற ஸ்தானத்துல என் புருஷன் முருகன் காலுல விழுந்து இந்த பாண்டியன் மன்னிப்பு கேட்கணும்' என்ற பார்வதியின் வார்த்தையை கேட்டு கூடி இருக்கும் அனைவரின் முகமும் இறுக்கமாக மாறி இருக்க, கேசவன் மற்றும் முருகனின் முகம் மற்றும் பிரகாசமாக ஜொலித்தது.
'ஏய். யார் காலுல விழுந்து! யார் மன்னிப்பு கேக்குறது' என்ற கதிர்வேலன் தன் கை காப்பை முட்டி வரை ஏற்றிக்கொண்டு பார்வதியை ஆத்திரதோடு நெருங்கி வர,
'நான் பண்ண தப்புக்கு என் அப்பா ஏன் மன்னிப்பு கேட்கணும். நானே முருகன் மாமா காலுல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்' என்ற ஜீவானந்தம் முருகனை நெருங்கி வர,
'யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டாம்' என்று சத்தமாக கத்தி சொன்னாள் முல்லை.
வந்ததில் இருந்து அமைதியாக நின்று இருந்த முல்லையின் வார்த்தையை கேட்டு அனைவரும் அவளை பார்க்க,
'யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டாம், பாண்டியன் மாமா என்னை அவர் வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போக நினைத்தது உண்மை தான். ஆனா!! ஏன்? எப்படி? என்ற கேள்வி எல்லாம் தாண்டி இப்போ ஜீவா மாமாவுக்கும் மீனாவுக்கும் கல்யாணம் முடிஞ்சிடுது. அதனால இனி இந்த விஷயத்தை காரணம் காட்டி என் பாண்டியன் மாமாவையோ, இல்ல என் அம்மா பிறந்த குடும்பத்தையோ பழி வாங்க எனக்கு இஷ்டம் இல்லை. இந்த பஞ்சாயத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
உங்கள எல்லாம் என் அப்பா இங்க அவசரப்பட்டு வர வச்சி இருக்காரு. அவருக்காக நான் உஙகங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். யாரும் இனி இந்த விஷயத்தை பற்றி பேசாதீங்க' என்ற முல்லையின் வார்த்தையை கேட்டு பார்வதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டு இருக்க, இதே தருணம் பாண்டியணை அசிங்கப்படுத்த எண்ணிய முருகனுக்கோ, அவர் சொந்தங்களுக்கு மத்தியில் பெருத்த அவமானமாக இருந்தது.
'ஏய் முல்ல என்ன பேசுற நீ' என்று பார்வதி கோவமாக முறைத்ததும்,'எல்லாம் தெரிந்து தான் பேசுறேன். இன்னைக்கு மட்டும் இல்லை என்னைக்குமே நான் என் மாமாவுக்கு எதிரா எந்த காரியமும் பண்ண மாட்டேன்' என்ற முல்லையின் மனதில் "மாமா" என்ற சொலுக்கு உரியவராக பாண்டியன் மட்டுமே இருக்க, கதிர்வேலனோ முல்லை பேசும் எல்லா சொற்களும் ஜீவாவை எண்ணி தான் என்று தப்பான மனகணக்கு போட்டுகொண்டான்.
முல்லையின் பேச்சை கேட்டு பாண்டியன் பெருமிதம் அடைய,'நீ வீட்டுக்கு வா. உன் காலை உடைத்து அடுப்புல வைக்கிறேன்' என்ற பார்வதியின் வார்த்தையை காதில் வாங்காமல் முல்லை இயல்பாக நின்று இருந்தாள்.
முல்லையின் இத்தகைய செயலில் பாண்டியனுக்கு அவள் மீது அவர் கொண்ட அன்பு பல மடங்காக உயர்ந்து இருக்க. முருகனுக்கோ இந்த தருணம் பெருத்த அவமானமாக இருந்தது.
'இங்க பாரு முருகா. உன் பொண்ணு வயசுல சின்னவளா இருந்தாலும் ரொம்ப பக்குவமா, அதுவும் அவளோட தாய் மாமனுக்கு பாதகம் இல்லாத மாதிரி பேசி இந்த பிரச்சனையை சுலபமா தீர்த்து வச்சிட்டாள், அதுவும் இல்லாம மாமா மச்சான்க்குள்ள இந்த பிரச்சனை எல்லாம் வரது சகஜம் தான் பா. இப்போ என்ன! அதான் பாண்டியன் அவருக்கே தெரியாம தான் அவரோட பெரிய பையன் கல்யாணம் நடந்ததா சொல்லுறாரே! பின்ன என்ன பா விடு, அதெல்லாம் என்ன ஏதுன்னு அவங்க கேட்டு தெரிஞ்சிகிட்டோம், நீ இனி இதெல்லாம் நினைத்து பிரச்சனையை பெருசாக்காத' என்றார் பெரியவர் ஒருவர்.
யார் பேசுவதையும் காதில் வாங்காத முருகனுக்கோ, சபைக்கு நடுவே வைத்து முல்லை தன் பேச்சை மீறிய கோவத்தோடு சேர்த்து, பாண்டியணை பழி வாங்க முடியவில்லை என்ற ஆதங்கமும் அவர் மனதில் கருவேலம் செடியை போல முல்லை மேல் அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச அன்பையும் அவர் இதயத்தில் இருந்து உரிந்து எடுத்து இருந்தது.
'சரி சரி அப்புறம் என்ன. பஞ்சாயத்து முடிந்தது' என்று பெரியவர் சொல்ல,
'ஐயா ஒரு நிமிடம்' என்ற ரோஜாவின் குரலில் பெரியவர்கள் அனைவரும் அதே இடத்தில் நின்று இருக்க,
'என்னமா. உனக்கு எதாவது சொல்லணுமா' என்று ஒருவர் கேட்க,
'ஆமா ஐயா. நான் முல்லைகிட்ட ஒரு ஐந்து நிமிடம் தனியா பேசணும்' என்றாள் ரோஜா.
'இதுல என்னமா இருக்கு. முல்ல உன் அத்த பொண்ணு தானே.. தாரலாமா பேசு' என்று ஒரு பெரியவர் சொல்ல,
'இல்ல ஐயா. இவங்கெல்லாம் எங்கள இனி முல்லைகிட்டயே நெருங்க விட மாட்டாங்க' என்றாள் ரோஜா.
'ஆமா. நெருங்க விட மாட்டோம் தான். நீ ஏன் முல்லைகிட்ட பேசனும், அதெல்லாம் முடியாது. இனி முல்லை நிழலை கூட நீங்க தொடக்கூடாது'' என்ற பார்வதி முல்லையின் கையை பிடித்துக்கொண்டு காரில் ஏற முயன்றதும்,
'முல்ல. நீ போகாத. நான் உன்கூட பேசணும்' என்ற ரோஜா
வேகமாக முல்லையை அழைத்துக்கொண்டு தன் தந்தை அருகே சென்றவள்,
'அப்பா. முல்லையை உங்களுக்கு மருமகளா ஆகிக்க தானே உங்களுக்கு ஆசை. இப்போ கூட அதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு அப்பா' என்ற ரோஜாவின் வார்த்தையில் உள்ள அர்த்தத்தை புரிந்துக்கொண்ட முல்லையின் கண்கள் கண்ணீரை வெளியேற்ற,
அதே தருணம் பாண்டியனின் கண்கள் கதிர்வேலனை தன் அருகே அழைத்தது.
'என்ன ப்பா.அந்த முருகன் மண்டையை உடைத்து இந்த ரவா லட்டை நம்ம வீட்டோடு அழைச்சிட்டு வரட்டுமா!?' என்று கதிர்வேலன் கேட்க,
'வாத்தி. பேசாம நீங்க முல்லையை கல்யாணம் பண்ணிக்கொங்க' என்று ரோஜா சொன்னதும்,
'அவ்ளோ தானே பண்ணிடலாம்' என்ற கதிர்வேலன் ரோஜாவின் வார்த்தையை உள்ளுற உணர்ந்தவன்,'எ. என்ன சொல்றிங்க?' என்று விழிகள் பிதுங்கி கேட்டார்.
'சொல்லு கதிர். முல்லையை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா?' என்று பாண்டியன் கேட்க,
'ஏன் முல்ல.உன் மாமா சாரை நீ கல்யாணம் பண்ணிகுறியா' என்று ரோஜா கேட்டதும்.
கலங்கிய விழிகளின் சொந்தக்காரியான முல்லையின் கண்கள் கதிர்வேலனை பார்த்ததும், கதிர்வேலனின் கண்களில் காதல் தோல்வி அப்பட்டமாக தெரிந்தது.
ஆனால் அந்த தோல்வி முல்லையை நினைத்து தான் என்பதை அறிந்திடாத முல்லைக்கு என்ன பதில் சொல்வது என்று தயக்கம் ஏற்பட்ட நிலையில்,
'சரி வாத்தி. முல்லை அப்புறம் சொல்லட்டும், முதல்ல நீங்க சொல்லுங்க. உங்களுக்கு முல்லையை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சம்மதமா' என்று ரோஜா கேட்க,
தன் அண்ணனை நேசித்த பெண் எப்படி தன்னை மனமுடிக்க சம்மதம் தெரிவிப்பாள்,மீறி இந்த திருமணத்திற்கு முல்லை சம்மதம் சொன்னாலும் அது கட்டாயத்தின் அடிப்படையில் தான் இருக்கும் என்று எண்ணிய கதிர்வேலன் முதல் ஆளாக.
'இல்ல. எனக்கு முல்லையை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை' என்று அவர் சொல்லி முடிக்கும் தருணம்.
'ஏய். உனக்கு வெக்கமா இல்ல. அடுத்த முகூர்த்ததில் உனக்கும் என் தம்பிக்கும் கல்யாணத்த வச்சிக்கிட்டு இங்க இவங்ககிட்ட நின்னு சம்மந்தம் பேசிக்கிட்டு இருக்கியே. அப்படி என்னடி உனக்கு இந்த குடும்பத்து மேல பாசம் பொத்திகிட்டு வருது.' என்று அனைவரின் முன்னிலையிலும் காட்டு கத்தல் கத்திய பார்வதி.. முல்லையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு காரை நோக்கி நடக்க,
முல்லைக்கோ.'எனக்கு முல்லையை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை' என்று கதிர்வேலன் சொன்ன வார்த்தை மட்டுமே அவள் காதில் கேட்டுக்கொண்டே இருந்த நிலையில்.
மீனாவை நேசித்த கதிர்வேலனுக்கு தன்னை திருமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லை என்று எண்ணியவள்,
இனி எக்காரணத்தைக் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் கதிர்வேலனின் கண் முன்னே வந்து விடக்கூடாது என்று முடிவெடுத்து, கனத்த இதயத்துடன் குன்னக்குடியில் இருந்து சிவகங்கைக்கு சென்ற முல்லையை தடுத்து நிறுத்த உரிமை இருந்தும்,
முல்லையின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஆளாக அவள் சென்ற பாதையை பரிதாபமாக பார்த்து இருந்தான் கதிர்வேலன்.
பஞ்சாயத்து நடந்த இடத்தில் இருந்து கோவமாக ரோஜா காரில் ஏறி அமர்ந்தாள்.
'அப்பா. நீங்க நாகா கூட கிளம்புங்க, எனக்கு பக்கத்துல கொஞ்சம் வேலை இருக்கு நான் முடிச்சிட்டு வந்துடுறேன்'
என்று கதிர்வேலன் சொல்ல,
'ஏய் மீனா. ஜீவாவை அழைச்சிட்டு வா. நம்ம அண்ணன்கூட காருல போகலாம்' என்று தன் மகளை அழைத்தார் கஸ்தூரி.
'ரோஜா. அவங்க ரெண்டு பேர் இந்த காருல ஏறினா நான் காருல இருந்து இறங்கிடுவேன்' என்று பாண்டியன் சொல்ல,
'அப்பா. எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். அத்த. சீக்கிரமா வந்து காருல உக்காருங்க' என்று ரோஜா சொல்ல, கஸ்தூரி முதல் ஆளாக காரில் ஏறி அமந்துக்கொண்டார்.
ஜீவாவின் வருகைக்காக மீனா நின்று இருக்க,'மீனா. நீ உன் அம்மாகூட வீட்டுக்கு போ. அண்ணனை நான் அழைச்சிட்டு வரேன்' என்று கதிர்வேலன் சொன்னதும், மீனா தயக்கத்துடன் ஜீவாவை பார்க்க, அவனோ அவளை கண்டுகொள்ளாமல், முல்லை சென்ற பாதையை வெறித்து பார்த்து இருந்தான்.
'அடியே மீனா. வா' என்று மீண்டும் கஸ்தூரி அழைத்ததும், மீனா அங்கிருந்து கிளம்பியதும், 'அண்ணா. நீ வா உன்கூட நான் பேசணும்' என்ற கதிர்வேலன் ஜீவாவை அழைத்துக்கொண்டு நேரே கதிர்வேலனின் சிலம்பம் திடலுக்கு சென்றார்.
தன் தம்பி எதற்க்காக தன்னை அழைத்து வந்தான் என்று ஜீவா அறிந்து இருந்தாலும், 'என்ன விஷயம்' என்று கடமைக்கென்று கேட்க, 'நான் எதைப்பற்றி கேட்க போறேன்னு உனக்கு தெரியாதா' என்று கேட்டார் கதிர்வேலன்.
'இங்க பாரு கதிரு. உன்னோட எந்த கேள்விக்கும் என்னால பதில் சொல்ல முடியாது, மீறி நீ என்னை கட்டாயப்படுத்தி எதையாவது தெரிஞ்சிக்க ஆசைப்பட்டா அப்புறம் நான் உசுரோடவே இருக்க மாட்டேன்' என்ற ஜீவாவின் பதிலில் கதிர்வேலனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
'என்ன அண்ணா நீ. என்ன பேச்சு பேசுற.உயிரை விடுற அளவுக்கு என்ன அண்ணா உனக்கு பிரச்சனை' என்று மீண்டும் கதிர்வேலன் அதே கேள்வியை அழுத்தத்துடன் கேட்டதும்,
'ஏய். ஒரு முறை சொன்னா உனக்கு புரியாதா. என்னை எதுவும் கேக்காத, நான் எதுவும் சொல்ல மாட்டேன்' என்ற ஜீவா. சிலம்பம் தடலை விட்டு கால் நடையாக நடந்து அங்கிருந்து வெளியேறி இருந்தார்.