• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
38
18.2

தன் தந்தையின் கோவம் நியாயம் என்று அறிந்திருந்த ஜீவானந்தம் பாண்டியனின் முன்னே கைகை கட்டி, குற்றத்தை தன் மீதே ஏற்றுக்கொண்ட நிலையில் நின்று இருக்க,'கதிர். அந்த நம்பிக்கை துரோகியை இங்க இருந்து போக சொல்லு' என்று பண்டியன் இயல்புக்கு மாறாக கத்தியதும்,
'அப்பா. நான் சொல்ல வரத கொஞ்சம் கேளுங்க Pls' என்று ஜீவானந்தம் தன் தந்தையிடம் கெஞ்சினார்.

இதுநாள் வரை முல்லையை நேசிப்பதாக சொன்ன ஜீவானந்தம் இப்போது ஏன் மீனாவின் கழுத்தில் தாலி கட்டி இருக்கின்றான் என தெரிந்துக்கொள்ள கூட விருப்பமில்லாத பாண்டியன், 'கதிர். இப்போ அவனை போக சொல்றியா இல்லையா' என்று கத்திய வேகதில், 'நான் போறேன்' என்ற ஜீவானந்தம், வேகமாக சிகிச்சை அறையில் இருந்து வெளியேறினார்.

'கதிர்.உனக்கு உன் அண்ணனே துரோகம் பண்ணிட்டான், இந்த பாவம் அவனை சும்மா விடாது'என்ற பாண்டியனின் விழிகள் அப்படியே ரோஜாவின் பக்கம் திரும்பியது.

'ஐயோ. அவன் முல்லைக்கு பண்ண பாவமெல்லாம் என் பொண்ணு தலைமேல தான் விடிய போகுது'
என்று பாண்டியன் மேலும் கதறி அழுதவறை சமாதானம் செய்ய முடியாமல் ரோஜாவும் கதிரும் தவித்து போனார்கள்.

****************************

மருத்துவமனை வாசலில் நின்று இருந்த ஜீவாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

தன்னை பெற்ற தந்தையே தன்னை தவறாக எண்ணி தன் தம்பி தங்கை முன்னே தன்னை அசிங்கப்படுத்தி பார்க்கும் நிலை ஏற்பட்டத்தை எண்ணி ஜீவாவிற்கு அவர் மீதே அவருக்கு கோவம் எழுந்தது.

ஜீவா மீனாவின் திருமணம் எப்படி சாத்தியம் என்று சந்தேகித்த கதிர்வேலன், தன் தந்தை இருக்கும் சிகிச்சை அறையில் இருந்து வேகமாக வெளியேறி வந்தார்.

'அண்ணா.' என்று நிலைகுழைந்து அமர்ந்து இருக்கும் ஜீவாவை கதிர் அழைக்க..

'கதிர்.அப்பா. அப்பாவுக்கு என்னாச்சு டா. டாக்டர் என்ன சொன்னாங்க' என ஜீவா பதற்றத்துடன் கேட்டார்.

'அப்பாவுக்கு பிரஸ்ட் அட்டாக் ண்ணா' என்ற கதிர்வேலனின் கண்ணீர் சிந்தும் விழிகளை கண்டு ஜீவாவிற்கு யாரோ அவன் இதய துடிப்பை நிறுத்தி விட்டதை போல உணர்ந்தார்.

'டாக்டர் என்னடா சொன்னாரு.' என்று அதிர்ச்சியுடன் ஜீவா கேட்க,
'மருந்து மாத்திரை கொடுத்து இருக்காங்க, இன்னைக்கு ஈவினிங் வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடலாம்' என்று கதிர்வேலன் சொன்னதும் ஜீவா ஒரு முறை தன் தந்தை இருக்கும் சிகிச்சை அறையை எட்டி பார்த்தவன்,

'அப்பாவ பார்த்துக்கோ கதிர்' என்ற ஜீவா அங்கிருந்து வெளியேற முயன்றவரின் கையை பிடித்துக்கொண்டார் கதிர்வேலன்.

தன் தம்பி எதற்காக தன்னை பற்றி இருக்கிறான் என்று அறிந்திருந்த ஜீவா,'என்னை எதுவும் கேக்காத கதிர். நீ கேக்க போற எந்த கேள்விக்கும் என்கிட்ட பதிலில்லை' என்ற ஜீவா கனத்த இதயத்துடன் மருத்துவ மனையில் இருந்து வெளியேறினார்.

பாண்டியன் நீண்ட நேரம், 'முல்லைக்கு நம்ம துரோகம் பண்ணிட்டோம், அந்த பொண்ணு பாவம் நம்மள சும்மாவே விடாது' என்று வாய்விட்டு புலம்பியவர். ஒரு கட்டத்தில் அப்படியே உறங்கியும் இருக்க,

'வாத்தி. பெரியவரு என்ன சொன்னாரு. மீனாவை எப்படி அவர் கல்யாணம் பண்ணாரு' என்று அனைவருக்கும் இருக்கும் ஒரே கேள்வியை தான் ரோஜாவும் கேட்டாள்.

தன் தந்தை கண்கள் மூடி ஓய்வு நிலையில் இருப்பதை கண்ட கதிர்வேலன், ரோஜாவை அழைத்துக்கொண்டு சிகிச்சை அறைக்கு வெளியே வந்தவன், 'நான் அண்ணன்கிட்ட கேக்குறதுக்கு முன்னாடியே அண்ணா எதைப்பற்றியும் என்கிட்ட கேக்காதன்னு சொல்லிட்டாரு, எதனால இந்த திடீர் கல்யாணம்ன்னு எனக்கு புரியல, பாவம் ரவா லட்டு. ஜீவா அண்ணன் மேல அவ உயிரையே வச்சிருக்கா' என்றார் கதிர்வேலன்.

'வாத்தி. இப்போ நம்ம கவலைப்பட வேண்டியது முல்லையை பத்தி இல்ல. மீனாவை பத்தி' என்று ரோஜா சொன்னதும் கதிர்வேலனின் புருவம் இடுங்கியது.

'என்ன அம்மா சொல்றிங்க. மீனாவை பத்தியா' என்று கதிர் கேட்க,
'ஆமா. மீனாவை பத்தி தான், ஏன்னா. முல்லைக்கு ஜீவா அண்ணன் மேல காதல் இருக்கான்னு கேட்டா! ஆமா இருக்குனு சொல்ல என் உள் மனசு ஒத்துக்கல,

ஆனா மீனாவுக்கு உங்க மேல ரொம்ப பிரியம் இருந்துச்சு. அது எனக்கு நல்லாவே தெரியும். அதே போல தான் ஜீவா அண்ணாவும். முல்லையை ஜீவா அண்ணா கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டது நூறு சதவீதம் உண்மை. ஜீவா அண்ணா காதல் தூய்மையானது.

ஆனா இப்போ இவங்க ஜோடி சேர்ந்து இருக்குறத பார்த்தா, அதுவும் இந்த திடீர் கல்யாணத்தை நினைத்து பார்த்தால் நேத்து நைட் தான் ஏதோ பிரச்சனை நடந்து இருக்கனும்' என்று சரியாக கணித்து சொன்னாள் ரோஜா.

'ம். எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு ம்மா. சரி. அப்பாவை வீட்டுக்கு அழைச்சிட்டு போனதும், நானே நேத்து நைட் என்ன நடந்துச்சுனு மீனா கிட்ட விசாரித்து பாக்குறேன்' என்ற கதிர்வேலன், முல்லை நூறு சதவீதம் ஜீவாவை தான் நேசிக்கிறாள் என்று நம்பினான்.

***************************

ஜீவா முல்லையின் காதல் நிறைவேறாமல் போனதை எண்ணி கதிர்வேலன் கவலை கொண்டிருக்க, இதே தருணம் சிவகங்கையில். முருகன் இல்லத்தில், முல்லையின் அறையில் அவள் கட்டிலில் அமர்ந்து இருந்த முல்லைக்கு இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஜீவா மீனாவின் மனகோலம் நினைவுக்கு வந்தது.

கதிருக்கும் முல்லைக்கும் இறைவனால் போட்ட முடிச்சியை எவராலும் அவிழ்க்க முடியாது என்ற உண்மையை அவர்கள் இருவருமே இந்த நொடி வரை நம்பாமல் இருக்க,

முல்லை ஜீவாவை நேசித்து இன்று காதல் தோல்வி அடைந்திருக்கிறாள் என்று கதிரும்.

கதிர் மீனாவை நேசித்து இன்று காதல் தோல்வி அடைந்திருக்கிறான் என்று முல்லையும் மாறி மாறி தவறுதலாக புரிந்து கொண்ட நிலையில்,

இருவருமே மனதளவில் வருத்தம் அடைய, கதிர் வாழ்வில் இனி மீனா இல்லை என்பதை கதிர் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டதைப் போலவே, இனி ஜீவா தன் வாழ்க்கையில் இல்லை என்ற உண்மையை முல்லையும் பெரிய விஷயமாக கருதாமல் இருந்தாள்.

இருப்பினும் கதிர்வேலனின் காதல் தோல்வியுற்றதை நினைத்து கவலை அடைந்த முல்லையின் கண்கள் தானாக தன் மாமா சாரை நினைத்து கலங்க,
எப்படி ஜீவா மீனாவின் கல்யாணம் நடந்திருக்கக்கூடும் என்ற யோசனை முல்லைக்கும் எழுந்த நிலையில் அவள் அமர்ந்திருந்த அறையின் கதவை முருகன் தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

முல்லையில் கண்ணீரைப் பார்த்து ஜீவாவை நினைத்துதான் அவள் அழுகிறாள் என்று நினைத்த முருகன், 'போதும். நீ அழுததெல்லாம் போதும். இனி நீ பாண்டியன் வீட்டுக்கு மருமகளா போக வாய்ப்பே இல்லை. நாளைக்கு பாண்டியன் பேர்ல நான் பஞ்சாத்துல புகார் கொடுக்க போறேன். நீ வந்து அவனுக்கு எதிரா சாட்சி சொல்லணும்' என்று முறைப்புடன் சொன்னார் முருகன்.

'என்னது! மாமா பேர்ல கம்ப்ளைன்ட் கொடுக்க போறிங்களா! ஏன்' என்று கோபமாக கட்டிலில் இருந்து முல்லை எழுந்ததும்,

'என்ன நீ! இப்படி மட தனமா கேள்வி கேக்குற.அந்த ஆளு உனக்கு பண்ண நம்பிக்கை துரோகத்துக்கு அந்த ஆள் மேல கம்ப்ளைன்ட் கொடுக்காமல், கால் பவுன்ல அவனுக்கு மோதிரமா போட முடியும்' என்று கேட்டுக் கொண்டே பார்வதி அறைக்குள் நுழைய,

'நீங்க இந்த பிரச்சனையை பெருசாக்காம கொஞ்சம் அமைதியா இருங்க.அப்பா. பாண்டியன் மாமா மேல எந்த தப்பும் இல்ல. ஜீவா மாமா,மீனாக்கு நடந்த திருமணத்துல கண்டிப்பா பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கும். நீங்க அவங்க குடும்பத்தை பழிவாங்க என்னை பயன்படுத்திக்க பார்க்காதீங்க,அது இந்த ஜென்மத்துல நடக்காது' என்று முல்லை தைரியம் வந்தவளாக பேசினாள்.

தன் மகளின் பேச்சை கேட்டு முருகன் கோவம் அடைந்து, 'ஏய்! உன்கிட்ட நாளைக்கு அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்க நீ வருவியா வரமாட்டியான்னு நான் கேட்கல!! நீ நாளைக்கு வந்தே ஆகணும். அந்த பாண்டியன் அவனோட வீட்ல என்னை நிக்க வச்சி என் சொந்த பந்தம் எதிர்ல என் சொத்து வேணாம் சுகம் வேணா, முல்லையோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம். முல்லை தான் இந்த வீட்டுக்கு மருமகன்னு வாய் கிழிய பேசனான் பாரு! இப்போ அந்த பேச்சுக்கு பதில் அடி கொடுக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. கண்டிப்பா நாளைக்கு பஞ்சாயத்துல அவன் வந்து நின்னே ஆகணும்' என்று திட்டவட்டமாக சொன்ன முருகன் அதே கோபத்தோடு முல்லையின் அறையிலிருந்து வெளியே செல்ல, முல்லைக்கு என்ன செய்வது என்று புரியாமல் தன் தாவணி முந்தனையை முடிப்போட்டுக் கொண்டு இருந்தாள்.

முல்லையின் தயக்கத்தை பார்த்த கேசவன் உள்ளூர சிரித்துக் கொண்டாலும், 'என்ன முல்ல. உன் தாய் மாமாவுக்கு இப்படி ஒரு நிலைமை வந்துடுச்சுன்னு கவலைப்படுறியா' என்று ஆறுதல் சொல்வதைப் போல அவளை நெருங்கி வர.

'இதுக்கெல்லாம் நீங்கதான் காரணம்னு எனக்கு தெரியும்' என்ற முல்லையை பார்த்து ஏளனமாக சிரித்த கேசவன்,

'இது ஆரம்பம்தான் செல்லம். இன்னும் அந்தப் பாண்டியன் குடும்பத்தையும், அந்த கதிர்வேலனையும் நான் என்ன பாடு படுத்துறேன்னு பாரு' என்ற கேசவன் முல்லையை எச்சரித்தபடி அவள் கன்னத்தை தொட வந்தவனின் கரங்களை கோபமாக தட்டிவிட்டாள் முல்லை.

முல்லை அதே கிண்டலுடன் கேசவனை பார்த்து சிரித்தவள்,'என் மாமா சார் கால் தூசிய கூட உங்களால தொட முடியாது. மீறி அவரை சீண்டினால் நஷ்டம் உங்களுக்கு தான். ஏன் ஏற்கனவே உங்க தலைய அவரு உடைச்சு, இவ்வளவு பெரிய கட்டு போட்டு இருக்கீங்களே மறந்து போச்சா' என்று முல்லை கேட்க,

'மறக்கல டி மறக்கல,எதையும் நான் மறக்கல, என் மேல கை வச்சதால தான் அந்த கதிர்வேலன் இனி வாழ்க்கையில சந்தோஷத்தையே அனுபவிக்க முடியாதா அளவுக்கு அவன் குடும்பத்தை சந்தி சிரிக்க வைக்க போகிறேன்' என்ற கேசவன்,
'ஆங் சொல்ல மறந்துட்டேன். அடுத்த முகூர்த்தத்தில் உனக்கும் எனக்கும் கல்யாணம்' என்றபடி முல்லையின் அறையில் இருந்து வெளியே சென்றவனை முல்லை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள் .
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top