Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 38
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
முல்லை – 18.1
எப்படியோ தாங்கள் போட்ட திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில் பார்வதியும் கஸ்தூரியும் கண்களால் ஜாடை காட்டி ஒருவருக்கு ஒருவர் பார்த்து நகைத்து கொண்டார்கள்.
தனது அறையில் மாலையை கழட்டி தூக்கி வீசிய ஜீவானந்தத்திற்கு நேற்று இரவிலிருந்து, ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை தன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை யோசித்துப் பார்த்து தலைவலி வந்தது தான் மிச்சம்.
மீனாவும் ரூமின் மூலையில் அமர்ந்து கால்களை கட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதவளின் இதயம் முழுதும் கதிர்வேலனின் வசம் மட்டுமே இருக்க, ஜீவானந்தம் மீனாவின் திருமணம் எப்படி நிகழ்ந்தது என்பதை இவர்கள் இருவரும் நினைத்துப் பார்ப்பதற்கு கூட விருப்பம் இல்லாத நிலையில் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் தங்களுக்குள்ளேயே புலுங்கி புலுங்கி அழுதுகொண்டு இருந்தார்கள்.
பாண்டியனின் இல்லத்தில் இருந்து முருகனும் பார்வதியும் முல்லையை சிவகங்கைக்கு அழைத்துச் செல்ல, காரில் அமர்ந்திருக்கும் முல்லைக்கும் சற்று முன்பு அவள் கண்ட காட்சி கனவா நினைவா என்பதை கூட யூகிக்க முடியாத அளவில் இமைகள் மூடாமல் வெரித்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.
முருகனும் பார்வதியும் மாறி மாறி பாண்டியனை வசை பாடிக் கொண்டு இருக்க,'என்னங்க. அந்த பாண்டியனை நம்ம சும்மா விடக்கூடாது. எங்கே நம்ம அந்த ஆளை பஞ்சாயத்துல நிக்க வச்சு கேள்வி கேட்கப் போறோம்ன்னு தான் அந்த ஆளு மயக்கம் வந்த மாதிரி நடிக்கிறான். ஆனாலும் கண்டிப்பா நம்ப அந்த ஆள சும்மா விட கூடாதுங்க. முல்லை மனசுல ஆசைக்காட்டி மோசம் பண்ணதுக்கு அந்த ஆளோட குடும்பமே தண்டனையை அனுபவித்து ஆகணும்' என்று பார்வதி எரியும் நெருப்பில் எண்ணெயை ஊத்தினார்.
'ஆமா பார்வதி. அன்னைக்கு பணம் முக்கியம் இல்ல முல்லையோட வாழ்க்கை தான் முக்கியம்ன்னு நம்ம சொந்த பந்தம் எதிர்ல என்னை அசிங்கப்படுத்தினவன்! இன்னைக்கு அவன் பெரிய பையனை அவனோட சின்ன தங்கச்சி மகளுக்கு கட்டிக் கொடுத்து இருக்கிறான். இந்த நம்பிக்கை துரோகத்துக்கு கண்டிப்பா பாண்டியன் பதில் சொல்லியே ஆகணும்' என்று சொன்ன முருகனுக்கு..மீனாவிற்கும் ஜீவானந்ததிற்கும் எப்படி திருமணம் நடந்தது என்று தெரிய வாய்ப்பில்லை எனினும்,
விரைவில் அவர்களின் திருமணத்திற்கு உண்டான காரணம் வெட்ட வெளிச்சமாக தெரிய வரும்.
*********************************
இதே தருணம் நெஞ்சு வலியில் மயங்கி சரிந்து விழுந்த பாண்டியனை ரோஜாவும் கதிர்வேலனும் மருத்துவமனையில் சேர்த்து இருக்க..மருத்துவர் பாண்டியனுக்கு ஹார்ட் அட்டாக் வந்துள்ளதாக தெரிவித்த நிலையில்,தன் தந்தையின் நிலையை எண்ணி ரோஜா கதறி அழுதாள்.
ஜீவானந்தம் மீனாவின் திருமண கோலத்தை எண்ணிப் பார்த்த கதிர்வேலனுக்கு இது எப்படி சாத்தியம் என்று யோசிகிக்க கூட நேரம் இல்லாத சூழ்நிலை அமைந்திருக்க,
இந்த நொடி தன் தந்தையின் உடல்நலம் தேறி அவர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே கதிர்வேலனின் மனதில் இருந்தது.
மருத்துவர் பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்க,தன் தந்தையை எண்ணி ரோஜா கதறி அழுதவள் மனதிலும் தன் தந்தையின் உடல் நலத்தை தவிர்த்து ஜீவானந்தம், மீனா, முல்லை ஆகிய மூவரின் எண்ணம் ஒரு துளி கூட இல்லாமல்,
எப்படியாவது பாண்டியன் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று அவளும் தெய்வத்தை வழிபட்டுக் கொண்டு இருந்தாள்
***************************
இதே தருணம் திருச்சியிலிருந்து கிளம்பிய முருகனின் கார் சிவகங்கையில் உள்ள முல்லையின் வீட்டிற்கு வந்தடைய,
'பார்வதி.முல்லைய உள்ள அழிச்சிட்டு போ, நான் போயி நம்ப சொந்தக்காரங்களை சந்தித்து, அந்த பாண்டியன் என் பொண்ணுக்கு பண்ண துரோகத்துக்கு நியாயம் கேட்க சொல்லி தகவல் சொல்லிட்டு வரேன்' என்ற முருகன் காரை அவர்களின் சொந்தக்காரர்களின் வீட்டிற்கு விரட்ட, பிரம்மை பிடித்ததை போல நின்றிருந்த முல்லையை அழைத்துக் கொண்டு பார்வதி வீட்டிற்குள் நுழைந்தார்.
'என்ன அக்கா,போன காரியமெல்லாம் நல்லபடியா முடிந்ததா' என்று வீட்டின் முற்றத்தில் அமர்ந்தபடி கேசவன் கேட்க,
'எல்லாம் நம்ம நெனச்சு பார்த்ததை விடவே சூப்பரா நடந்திடுச்சுடா தம்பி, இனி உனக்கும் முல்லைக்கும் கல்யாணம் நடக்க வேண்டியது தான் பாக்கி' என்று பார்வதி சொல்ல,கேசவன் கண்களால் முல்லையை துகிள் உரித்துக் கொண்டு இருக்க, முல்லைக்கோ இந்த நொடி வரை அவள் எங்கே இருக்கிறாள் என்று முல்லையின் மூளை உணர்வில்லை என்பதுதான் உண்மை.
'என்ன அக்கா. முல்லை பொம்மை மாதிரி நிக்கிறாள்' என்று கேசவன் கேட்க,
'இருக்காதா பின்ன! பத்தே நிமிஷத்துல அவ காதல் கோட்டை மண்ணோடு மண்ணாக இடிஞ்சு விழுந்திடுதே! அந்த அதிர்ச்சி தான் அவளுக்கு 'என்று பார்வதி கிண்டலாகச் சொல்ல..
'என்ன அக்கா சொல்லுற.. அதுவா எங்க இடிஞ்சு விழுந்துச்சு, நம்ம தானே தரைமட்டமா இடிச்சி சாச்சிருக்கோம்'
என்று கிண்டலுடன் கேசவன் பதில் கொடுக்க,
இந்த இரண்டு முட்டாள்களுக்கும் தெரியவில்லை! முல்லை தன் மனதில் முதலில் எழுப்பிய காதல் மாளிகையின் அஸ்திவாரமே அவள் கதாநாயகன் கதிர்வேலனை நினைத்து தான் என்று.
****************************
ஜீவானந்தமும் முல்லையும் தான் காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று எண்ணிய கேசவன் எப்படியாவது இவர்கள் குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கி ஜீவானந்தத்தையும் முல்லையையும் பிரிக்க வேண்டும் என்று எண்ணி பல தில்லுமுல்ல வேலைகளை செய்தவன், அடுத்த முகூர்த்தத்திலேயே முருகனின் சம்மதத்தோடு முல்லையை திருமணம் செய்ய கற்பனை கோட்டையை கட்ட ஆரம்பித்து இருக்க,
தன் மகள் மீனாவை எப்படியாவது ஜீவானந்தத்திற்கு திருமணம் செய்து பாண்டியனின் வீட்டிற்கு மூத்த மருமகளாக அனுப்பி வைக்க வேண்டும் என்று எண்ணிய கஸ்தூரியின் எண்ணம் நிறைவேறி இன்று மீனாவும் திருமதி ஜீவானந்தமாக மாறி இருந்தாள்.
இருப்பினும் இந்த திருமணம் எப்படி நடந்தது என்று கஸ்தூரியும் அறிந்திடாமல் இருக்க,உண்மையை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் ',மீனா. மீனா.' என்று ஜீவானந்ததின் அறையின் கதவை தட்டினாள் கஸ்தூரி.
நீண்ட நொடிகள் கஸ்தூரி கதவை தட்டி பார்த்தும் மீனாவும் ஜீவானந்தமும் அவர் அவர்கள் அமர்ந்து இருந்த இடத்திலேயே பிடித்து வைத்த பிள்ளையார் கணக்காக அமர்ந்து இருந்தார்கள்.
தன் தந்தையை மருத்துவ மனையில் சேர்த்து இருக்கும் செய்தியை கூட அறிந்திடாத ஜீவானந்தம் அவன் அறையில் சூழ்நிலை கைதியாக அமர்ந்து இருந்தான்.
'மீனா கதவை திற' என மேலும் கஸ்தூரி வேகமாக கதவை தட்டியதும்,'பீச். உன் அம்மாவுக்கு என்ன தான் வேணுமாம் ' என்று கர்ஜித்தான் ஜீவா.
இதுவரை கோவமாக ஒரு வார்த்தை கூட பேசிடாத ஜீவானந்தத்தின் இந்த குரலை கேட்டு மீனாவிற்கு உடல் நடுங்கியது.
'ஏய். மீனா! கதவை திற டி' என்று மீண்டும் கஸ்தூரி கதவை தட்டும் நேரம் ஜீவானந்தம் வேகமாக கதவை திறந்தவன்,'ஏன் இப்படி இம்ச பண்ணுறிங்க, என்ன வேணும் உங்களுக்கு' என்று கத்தியவனின் கண்கள் இரண்டும் ரத்த சிவப்பைக் கூட்டி இருந்தது.
ஜீவாவின் கோபமான முகத்தை பார்த்து கஸ்தூரியும் பயந்து இருக்க,
'கேட்கிறேனே. ஏன் இப்படி கதவ தட்டி என் உயிரை எடுக்குறீங்க' என்று அதைவிட அதிகமான கோபத்துடன் ஜீவா கேட்க,
'இல்ல ஜீவா. அண்ணா. அண்ணனுக்கு நெஞ்சுவலி வந்து கதிர் ஆஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போயிருக்கான், அதை சொல்ல தான் கதவை தட்டினேன்' என்று சொன்னார் கஸ்தூரி.
'என்ன! சொல்றிங்க. அப்பாக்கு என்ன ஆச்சு' என்று பதறிய ஜீவானந்தம், சற்றும் தாமதிக்காமல் தன் வீட்டில் இருந்து கதிர்வேலனின் பைக்கில் மருத்துவமனையை நோக்கி விரைந்தான்.
தன் மகளுக்கும் ஜீவானந்ததுக்கும் எப்படி திருமணம் முடிந்தது என்ற சந்தேகத்தில் தன் மகளிடம் பேச்சு கொடுக்க ஜீவாவின் அறைக்குள் நுழைந்த கஸ்தூரி,'மீனா கண்ணு. என் தங்க மகளே. இப்போ தான் டி உன்ன பெத்து எடுத்துக்கு உண்டான பலனை நான் அடைஞ்சு இருக்கேன்' என்ற கஸ்தூரி மீனாவின் கன்னத்தை வருடி அவளுக்கு முத்தமிட்டாள்.
தன் அன்னையின் செயலில் கோவம் கொண்ட மீனா,'இங்க பாரு.ஒழுங்கா போய்டு. இல்லைனா அம்மானு கூட பார்க்காம உன்னை என் கையாளயே கொன்னுடுவேன்' என்ற மீனா, அதே கோபத்துடன் ஜீவாவின் அறையில் இருந்து வெளியேறினாள்.
தன் மகளின் முக வருத்தத்தை வைத்தே அவளின் மனநிலையை யூகித்த கஸ்தூரிக்கு,'அடியே மீனா நில்லு டி' என்று தன் மகளை பின் தொடர்ந்து வீட்டின் முற்றத்திற்கு வந்து மீனாவின் கையை பிடித்துக்கொண்டாள்.
'ஆமா. ஜீவா எப்படி உன் கழுத்துல தாலி கட்டினான். நேத்து நைட்'என்று கஸ்தூரி தன் கேள்வியை முடிக்கும் காட்டிலும்,'அம்மா.. இதுக்கு மேல எதாவது பேசின. வேணா நல்லா இருக்காது சொல்லிட்டேன்' என்று அஃரோஷமாக கத்திய மீனாவின் குரலைக்கேட்டு கஸ்தூரி அப்படியே அடங்கி போனார்.
தன் அன்னையை கடுங்கோபத்துடன் முறைத்து பார்த்த மீனா,'பெரிய மாமாவுக்கு என்னாச்சு' என்று கேட்க,'அந்த முல்லையோட அப்பன், பாண்டியன் அண்ணனை கேவலமா பேசிட்டான், அதான் அண்ணனுக்கு உடம்புக்கு முடியாம போச்சு' என்ற கஸ்தூரியின் வார்த்தையை கேட்டு மீனாவுக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது.
*****************************
இதே தருணம் பாண்டியனை சிகிச்சைக்காக சேர்த்து இருக்கும் மருத்துவமனையில்,
'நீங்க போய் உங்க அப்பாவை பார்க்கலாம், ஆனா இனி அவரு எமோஷனல் ஆகாம பார்த்துக்கொங்க' என்ற மருத்துவரின் வார்த்தை முடியும் முன்னே ரோஜாவும் கதிர்வேலனும் அவர்களின் தந்தை இருக்கும் சிகிச்சை அறைக்குள் நுழைந்து இருந்தார்கள்.
தன் தந்தை பாண்டியனின் நிலையை எண்ணி ரோஜா கதறி அழுத்ததும், கதிர்வேலனின் கண்களும் கலங்கி இருக்க, 'கதிர்.' என்று தன் நடு பிள்ளையை பாண்டியன் அவர் அருகே அழைத்தார்.
'அப்பா.' என்று தன் தந்தையை கட்டிக்கொண்ட கதிரின் கைகளை பற்றிக்கொண்ட பாண்டியனின் விழிகளில் கண்ணீர் பெறுகிய நிலையில்,'அப்பா கவலைப்படாதிங்க அப்பா, உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாரு' என்று கதிர்வேலன் தன் தந்தைக்கு தைரியம் கொடுத்தார்.
'அப்பா. நீங்க இந்த மாதிரி நேரத்துல இமோஷனல் ஆகக்கூடாதுனு டாக்டர் சொல்லி இருக்காரு' என்று ரோஜாவும் தன் தன் தந்தையை சமாதானம் படுத்த,
இதே நேரம்,'அப்பா.'என்ற ஜீவாவின் அழைப்பில் பாண்டியனின் விழிகளில் அப்படியொரு கோவம் தெரிந்தது.
'அப்பா. உங்களுக்கு என்னாச்சு அப்பா' என்று கண்கள் கலங்கி ஜீவானந்தம் தன் தந்தையை நெருங்கியதும், 'கதிர் அவனை இங்க இருந்து போக சொல்லு' என்று கத்திய பாண்டியனின் மூளையில் இருந்த கோவம் ஜீவாவின் பக்கம் என்ன நியாயம் இருக்கிறது என்ற உண்மையை கேட்டு தெரிந்துக்கொள்ள முடியாமல் தடுத்து இருந்தது.