Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 36
- Thread Author
- #1
17.2
வீட்டிற்கு தகவலை தெரிவித்த கதிர்வேலன், மீண்டும் குடிசைக்குள் நுழைய,
'தம்பி. உன் அத்த பொண்ணு வயத்துக்கு எதுவும் சாப்பிடக்கூடாது. அதனால பாட்டி வீட்ல சுடு சோறும் கருவாட்டு குழம்பும் தான் இருக்கு. நீ சோறு சாப்பிடுறியா' என்று பாட்டி கேட்டதும், 'இல்ல பாட்டி. எனக்கு பசிக்கல' என்ற கதிர்வேலனுக்கு முல்லையின் நிலையை எண்ணி மனதிற்குள் கவலை எழுந்தது.
முல்லைக்கு வைத்தியம் பார்த்த பாட்டி சொன்னது போலவே அன்றைய தினம் இரவு நேரம் முழுதும் முல்லையை உறங்கவிடாமல் கதிர்வேலன் பார்த்துக்கொள்ள.
மறுநாள் காலை வரை பாட்டி கொடுத்த பச்சிளம் மருந்தை உட்கொண்ட முல்லைக்கு முழுவதுமாக பாம்பின் விஷம் இறங்கி அவள் பழையபடி தேறி வந்ததும் பாட்டிக்கு நன்றி தெரிவித்த கதிர்வேலன், தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் பாட்டியின் கையில் கொடுத்தார்.
'தம்பி தம்பி என்னப்பா பண்ற, பணம் எல்லாம் வேண்டாம்' என்று பாட்டி பதற
'இருக்கட்டும் பாட்டி,கடவுள் மாதிரி நீங்கதான் முல்லையை காப்பாற்றி கொடுத்திருக்கீங்க, இந்த நன்றியை நான் உயிருள்ளவரை மறக்க மாட்டேன். உங்களுக்கு ரொம்ப நன்றி பாட்டி,
முல்லை. சொல்லிட்டு வா கிளம்பலாம்' என்ற கதிர்வேலன்,நேற்று இரவே குடிசை வாசலில் இவன் கொண்டு வந்து நிறுத்தி இருந்த தனது பைக்கில் ஏறி அமர்ந்தார்.
'பாட்டி.உங்களுக்கு ரொம்ப நன்றி பாட்டி. நான் செத்தே போயிட்டேன்னு நினைச்சேன். நீங்க என்ன காவந்து பண்ணிட்டீங்க' என்று முல்லை சொல்ல
'நான் சொன்ன மாதிரி பத்திய சாப்பாட்டை சாப்பிடு. உடம்ப பாத்துக்கோ.. இனி பயப்பட எதுவுமில்லை' என்று சொன்ன பாட்டி,
'இந்தாம்மா.இது உன் காலுல இருந்த மாங்கல்யம். அவசரத்துக்கு இதை உன் மாமன் மகன் உன் காலில் கட்டினதால தான் விஷம் உன் உடம்பில் ஏறாமல் இருந்துச்சு. இந்தா. இத பத்திரமா வச்சிக்கோ' என்ற பாட்டி அம்மன் படத்தின் அருகே இருந்து எடுத்த மாங்கல்யத்தை முல்லையிடம் கொடுக்க.
கோவில் சன்னதியில் நிற்க வைத்து ரோஜா அதை கதிர்வேலனின் புஜத்தில் கட்டியது முல்லைக்கு நினைவு வந்தது.
பாட்டி கொடுத்த மாங்கல்யத்தை தன் இதயத்தோடு இணைத்துக் கொண்ட முல்லை, 'போயிட்டு வரேன் பாட்டி' என்றபடி வாசலுக்கு வர,
'ஏய் ரவா லட்டு சீக்கிரம் வண்டியில ஏறு, நேரத்தோடு வீட்டுக்கு போகலாம்' என்று கதிர்வேலன் சொல்ல,
'ஏனோ முல்லைக்கு அந்த மாங்கல்யத்தை மீண்டும் கதிரிடம் கொடுக்க மனம் வராமல் இருக்க, முல்லை அதை பத்திரமாக தன் ரவிக்கைக்குள் ஒளித்து வைத்தவள், இயல்பாக இருப்பது போலவே கதிர்வேலனின் வண்டியில் ஏறி அமர, இவர்கள் இருவரும் பயணித்த இரு சக்கர வாகனம் குன்னக்குடியில் இருக்கும் பாண்டியனின் வீட்டை நோக்கி பறந்தது.
இதே சமயம் காலை 7மணி அளவில் 'அண்ணா.'என்று பதற்றத்துடன் கஸ்தூரி பாண்டியனின் வீட்டிற்கு ஓடி வர,
'என்ன ஆச்சு அத்த' என்று ரோஜா கேட்டதும், 'அண்ணன் எங்கே' என்று கஸ்தூரி கேட்க,
'என்ன கஸ்தூரி? ஏன் இப்படி பதட்டமா இருக்க? ஜெகதீஷ்க்கு ஏதாவது பிரச்சனையா' என்று பாண்டியன் வினாவினார்.
'ஐயோ அண்ண. நான் என்னனு சொல்லுவேன், அத எப்படி சொல்வேன், அது வந்து. உங்க மகன்' என்று கஸ்தூரி திக்கித் திணறிய தருணம்,
கதிர்வேலனும் முல்லையும் பைக்கில் வந்து இறங்க..அதேசமயம் ஜீவானந்தத்தின் கார் வந்து நின்றது.
கதிர்வேலனின் பைக்கில் இருந்து முல்லை இறங்க,அதே நேரம் ஜீவானந்தமும் அவர் காரின் கதவை திறந்துக்கொண்டு இறங்கியவரின் கழுத்தில் மாலை இருந்தது.
தன் மூத்த மகனை மாலையும் கழுத்துமாய் பார்த்த பாண்டியன் ஏதும் புரியாத நிலையில் நின்று இருக்க,
'பெரியவரே..என்ன ஏதாவது விசேஷமா' என்று ரோஜா கேட்க,
'அதானே.. என்ன அண்ணா. இப்போ எலக்ஷன் கூட இல்லையே, எங்க போய் சண்டையிட்டு மாலையும் கழுத்துமாக வந்து நிக்குற'என்று கதிர்வேலனும் கேட்க,
அதே சமயம் காரின் பின் இருக்கையில் இருந்து மனக்கோலத்தில் இறங்கிய திருமதி ஜீவானந்தத்தை பார்த்த அனைவரின் கண்களும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்த நிலையில், தன் எதிரே நின்று இருந்த முல்லையின் முகத்தை காண முடியாமல் ஜீவானந்தம் தலை குனிந்து நின்று இருக்க,
'பெரியவரே. என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்கீங்க?' என்ற ரோஜாவின் கேள்வியில்,'எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க' என்று கைகள் கூப்பி மன்னிப்பு கேட்டார் ஜீவானந்தம்.
அதே சமயம் காரின் பின் இருக்கையில் இருந்து மனக்கோலத்தில் இறங்கிய திருமதி மீனா ஜீவானந்தத்தை பார்த்த அனைவரின் கண்களும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்த நிலையில், தன் எதிரே நின்று இருந்த முல்லையின் முகத்தை காண முடியாமல் ஜீவானந்தம் தலை குனிந்து நின்று இருக்க,

இதுநாள் வரை முல்லை-ஜீவா, கதிர்-மீனா என்று இவர்களை ஜோடியாக எண்ணிக்கொண்டு இருந்த பாண்டியனுக்கு இந்த காட்சி பேர் அதிர்ச்சியை அளித்தது.
ஜீவானந்தம் மீனாவின் ஜோடியை பார்த்து கஸ்தூரிக்கு உள்ளுற மகிழ்ச்சி எழுந்தாலும் இந்த தருணத்தில் அதை வெளியே கட்டிகொள்ளாமல் 'பாவி மகளே. என்ன காரியம் டி பண்ணிருக்க' என்று தன் மகள் மீனாவின் தோளை பற்றி குலுக்கினாள் கஸ்தூரி.
மாலையும் கழுத்தும்மாக நின்று இருந்த மீனாவின் கண்கள் தன் எதிரே அதிர்ச்சியுடன் நின்று இருந்த கதிர்வேலனை குற்ற உணர்ச்சியுடன் பார்த்தது.
முல்லையின் முகத்தை காண முடியாமல் ஜீவானந்தம் வேகமாக தன் வீட்டுக்குள் நுழைந்தவரை பின் தொடர்ந்து மீனாவும் சென்று இருந்தாள்.
ஜீவானந்ததும் மீனாவும் ஒரே அறைக்குள் நுழைந்து இருக்க,'அண்ணா.' என்ற ரோஜாவின் குரல் காற்றோடு கரைந்து இருக்க, அதே சமயம் பாண்டியனின் வீட்டின் முன்னே முல்லையின் அப்பா முருகனின் கார் வந்து நின்றது..
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் முல்லை குழம்பி இருக்க, காரில் இருந்து இறங்கிய பார்வதி வேகமாக முல்லையின் கரங்களை பற்றி தன் வசம் இழுத்தார்.
அங்கே பார்வதியை எதிர்பார்த்திறாத முல்லை என்ன ஏது என்று கேட்பதற்குள், 'இந்த அநியாயம் எங்க நடக்கும்,
நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா,
இப்படி வாக்கு மீறுறதுக்கு நீ நடு வீட்ல தூக்கு போட்டுக்கிட்டு தொங்கலாம்' என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் பார்வதி பாண்டியனை பார்த்து ஏளனமாக பேச,
'வார்த்தையை அளந்து பேசுங்க.. என் அப்பாவை பத்தி தப்பா பேசினா மரியாதை கெட்டுடும்' என்று கதிர்வேலன் பதிலுக்கு பார்வதியிடம் சண்டைக்கு நின்றார்.
'போதும் நிறுத்துடா. உங்க குடும்பத்துக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு. இதே வீட்ல என் பொண்ண ஜீவானந்தத்துக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு உன் அப்பா பெரிய வீர வசனம் பேசி,என்னுடைய சொத்து சுகம் வேண்டாம்னு சொன்னான்.
ஆனா இப்போ அந்த ஜீவானந்தம் வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறானே! ஏன்!? என் பொண்ணால உங்களுக்கு சொத்து கிடைக்காது என்ற காரணத்தால தானே அந்த ஜீவா மீனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து இருக்கான்'என்று முருகன் கேட்டார்.
'மாமா. எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறீங்க?ஜீவா அண்ணன் முல்லையை கல்யாணம் பண்ணிக்க தான் ஆசைப்பட்டாரு,ஆனா இந்த திடீர் கல்யாணம்! நாங்களே எதிர்பார்க்காதது' என்று ரோஜா சொல்ல,
'இந்தாடி ரோஜா. நீ வாய மூடு. இது பெரியவங்க சமாச்சாரம். உனக்கு ஒன்னும் புரியாது' என்ற பார்வதி,
'என்னங்க. நான் நினைத்தது தான் சரி. உங்க பொண்ணு முல்லைய ஜீவா கல்யாணம் பண்ணா, நம்ம சொத்து சுகம் எல்லாம் இவங்களுக்கு வருமுன்னு இந்த ஆளு நெனச்சாரு, ஆனா இனி முல்லையால சொத்து கிடைக்காதுனு தெரிஞ்சதும். அழகா பிளான் பண்ணி அந்த ஜீவாவை அவங்க இரண்டாவது தங்கச்சி மகளுக்கு கட்டி வச்சுட்டாரு' என்று பார்வதி சம்மந்தமே இல்லாமல் பேசியதை கேட்டு பாண்டியனுக்கு வாய் வார்த்தை வராமல் இதயம் மட்டும் வலியை அனுபவித்தது.
'இங்க பாருங்க. இனியும் உங்க பொண்ணு இங்க இருக்குறதுல எந்த அர்த்தமும் இல்லை. வாங்க நம்ம முல்லையை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்'
என்ற பார்வதி முல்லையின் கரங்களைப் பிடித்து தன் வசம் அழைக்க,
இந்த நொடி வரை முல்லைக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று விளங்காத நிலையில் பணியில் உறைந்த நீரை போல நின்றிருந்தாள்.
'என்னப்பா பாண்டியா இது.போன முறை நீ கூட முல்லையை இந்த வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு வர போறேன்னு நீ சொன்னதை நினைச்சு நாங்களும் பஞ்சாயத்து பேசி சரி பண்ணிட்டு போனோமே! ஆனா இப்போ என்ன சொல்லாம கொள்ளாம ஒரு பெரிய பையன் கஸ்தூரி மகளை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறான்.
என்னப்பா இங்க என்னதான் நடக்குது' என்று இருவீட்டாருக்கும் சொந்தக்காரரான ஒரு பெரியவர் கேட்க.
'இதுதான் இந்த பெரிய மனுஷனுடைய லட்சணம். இந்த ஆள் எல்லாம் இந்த ஊர் பஞ்சாயத்து தலைவர். இவருக்கு ஒரு வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை வேற கேடு. ஹ்ம்... சொன்ன வாக்கை காப்பாத்தத வக்கில்லாத ஆளுங்ககெல்லாம் எதுக்காக பெரிய மனுஷனுங்கன்னு சொல்லிக்கிட்டு திரியனும்' என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பார்வதி பேசிய தருணம்,
'வாய மூடுங்க.எங்க வந்து யார கேவலமா பேசுறீங்க. எங்க அண்ணன் கல்யாணத்தை பற்றி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. ஒழுங்கு மரியாதையா இந்த வீட்டில் இருந்து வெளியே போங்க' என்று கத்திய கதிர்வேலன், பார்வதியை மிரட்ட.
'டேய். உன் அண்ணனுக்கு என் மகளை கல்யாணம் பண்ணி வைக்கிறதா தானேடா உன் அப்பா வாக்கு கொடுத்தாரு. இப்ப அந்த வாக்கு எங்க போச்சு. இதுதான் பெரிய மனுஷனுடைய பேச்சா' என்று முருகன் பாண்டியனை பார்த்து கேவலமாக பேசியதும்,
பாண்டியனுக்கும் இங்கே என்ன நடக்கிறது என்று புரியாத நிலையில், நெஞ்சை பிடித்துக்கொண்டு அப்படியே சரிந்தவரை பார்த்து ரோஜா கதிர்வேலன் என்று அனைவரும் பதறினார்கள்.
பாண்டியனின் நிலையை அறிந்திடாது ஜீவானந்தமும் மீனாவும் தங்கள் அறையில் இருக்க, ‘அப்பா அப்பா.' என்று ரோஜா பதறியதும்,
நெஞ்சை பிடித்துக்கொண்டு பாண்டியன் மயங்கிய வரை சற்றும் தாமதிக்காமல் தன் நண்பன் நாகராஜன் உதவியோடு கதிர்வேலன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தவருடன், ரோஜாவும் சென்றிருந்தாள்.
'ஏய். இதன் மேற்பட்டு தாய் மாமன பாக்குறேன்னு நீ இங்க வந்த, உன் கால ஒடச்சிடுவேன்' என்ற முருகன் கடுங்கோபத்துடன் முல்லையின் கையைப் பிடித்து காரில் ஏற்றினார்.
என் கதையை படித்து கருத்து தெரிவிக்கும் வாசகர்களுக்கு நன்றி.