• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
35
கஸ்தூரியின் பேச்சை காதில் வாங்க விருப்பம் இல்லாமல், நாகராஜன் அங்கிருந்து வெளியேறி இருக்க,

'ஆமா. எங்க முல்லையுயைம் உன் சின்ன அண்ணனையும் ஆளையே காணோம், காலைல அவங்க ரெண்டு பேரும் பைக்ல போனதா அக்கம் பக்கத்துல பேசிக்கிட்டாங்களே!' என்று கேட்டார் கஸ்தூரி.

'இது நல்லா இருக்கே. இங்கே இருந்து முல்லையும் வாத்தியும் ஒன்னா போனத உங்க வீட்டு பக்கத்துல இருக்குறவங்க பேசிக்கிட்டாங்களா.. ஹ்ம். ஏன் இப்படி பொடி வச்சு கேள்வி கேக்குறீங்க.இப்போ உங்களுக்கு என்ன தெரியணும்' என்று ரோஜா நேருக்கு நேராக கேட்க,

'இல்ல. காலைல கதிரும் முல்லையும் வெளியே போனாங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் எங்க போயிருக்காங்கன்னு விசாரிச்சிட்டு போகலாமுன்னு வந்தேன்' என்று கஸ்தூரி கேட்க,

'முல்லையோட சர்டிபிகேட் வாங்குறதுக்காக வாத்தி அவளை திருச்சிக்கு அழைச்சிட்டு போயிருக்காரு விவரம் போதுமா இல்ல இன்னும் வேணுமா' என்று ரோஜா கேட்க,

'அப்போ அண்ணனும் ஜீவானந்தமும் எங்கே?' என்று கஸ்தூரி கேள்வி கேட்கும் நேரம் பாண்டியன் மட்டும் வீட்டிற்குள் நுழைந்தார்.
தன் தந்தையை பார்த்ததும்,'அப்பா.பெரிய அண்ணன் வரல?' என்ற ரோஜா,வாசலில் ஜீவாவை காணாமல் குழப்பமாக கேட்க,

'சர்குணம் ஐயாவோட பொண்ணு மட்டும் தான் அவர்கூட தனியா இருக்காங்க, பாவம் அவருக்கு பிறகு அங்க ஆம்பளை துணை வேற யாரும் இல்லை ரோஜா. அதனால ஹாஸ்பிடல்ல கூடவே இருந்து ஜீவாவை பார்த்துக்க சொல்லி இருக்கேன்' என்றார் பாண்டியன்.


நான் வேணும்னா பெரிய அண்ணனுக்கு நாகாக்கிட்ட சாப்பாடு கொடுத்து அனுப்பவா' என்று ரோஜா கேட்க, 'நான் வரும் போது நம்ம பசங்ககிட்ட சொல்லி வாங்கி தர சொல்லிட்டேன்மா. ஒன்னும் பிரச்சனை இல்லை' என்ற பாண்டியனின் கையில் நீர் குவளையை நீட்டினாள் ரோஜா.

'என்ன கஸ்தூரி. நீ மட்டும் வந்து இருக்க. மீனா வரலையா' என்று பாண்டியன் கேட்க,

'அவ பக்கத்து ஊர்ல ஒரு பொண்ணுக்கு மேக் அப் போட போயிருக்கா அண்ணா' என்றார் கஸ்தூரி.

'என்ன நீ. ஏன் மீனாவை தனியா அங்கெல்லாம் அனுப்பி வச்சிருக்க' என்று பாண்டியன் கேட்க,'கூட அந்த விளங்காத மனுஷனும் தான் போய் இருக்காரு' என்று கஸ்தூரி ஒட்டாமல் பதில் அளித்தார்.

'ம். நல்லது தான்' என்ற பாண்டியன், 'என்ன ரோஜா. கதிரும் முல்லையும் இன்னும் திருச்சியில இருந்து வரலையா, வாசல்ல கதிர் வண்டியை காணோமே' என்றவரின் கேள்விக்கு ரோஜா பதில் தரும் முன்னே,

'ம்.எட்டு மணி ஆக போகுது. வயசுக்கு வந்த பொண்ணு ஒரு பையன்கூட, அதுவும் மாமன் மகன் கூட, அதுவும் இன்னோரு பொண்ண விரும்புற ஒரு ஆம்பள கூட இத்தனை மணி நேரம் ஊர் சுத்துறது நல்லாவா இருக்கு' என்ற கஸ்தூரியின் கேள்வியில் ரோஜாவின் முகம் தீ குழம்பாக மாறியது.

'இங்க பாரு கஸ்தூரி. வாய் புளிக்குதா மாங்காய் புளிக்குதான்னு எல்லாம் பேசக்கூடாது. திருச்சியில ஒரே பிரச்சனை. பந்த் நடக்குது. அதனால கூட முல்லையும் கதிரும் வர தாமதமாக வாய்ப்பு இருக்கு, அதனால நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு' என்ற பாண்டியன் அலைபேசி வாயிலாக கதிர்வேலனை அழைத்து பார்க்க, அப்போதும் இணைப்பு இணைக்க முடியாத நிலையில் தான் இருந்தது.

'ம். என்னமோ சொல்லுங்க. கத்திரிக்கா முத்துனா கடைத்தெருவிக்கு வராமலா போகும்.சரி நான் போய்ட்டு வரேன்' என்ற கஸ்தூரி எப்படியாவது முல்லையின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டி மிக கேவலமான வார்த்தைகளை உச்சரித்தார்.

அப்போதில் இருந்தே கஸ்தூரியின் இயல்பு இது தான் என்று அறிந்திருந்த ரோஜாவும் பாண்டியனும் கஸ்தூரியின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

'அப்பா. நீங்க உக்காருங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்' என்ற ரோஜாவின் மனதில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க போவது என்ற எண்ணம் தோன்றிய நிலையில் ரோஜாவே கதிர்வேலனின் கைபேசிக்கு அழைத்து பார்க்க, இப்போதும் அவரின் அலைபேசி உயிர் பெற்ற பாடு இல்லை.

முல்லைக்கும் கதிருக்கும் என்னானது என்ற கவலையில் ரோஜா இருக்க, கஸ்தூரி பாண்டியன் வீட்டில் இருந்து வெளியேறியவள் சற்றும் தாமதிக்காமல் இந்த விஷயத்தை முல்லையின் சித்தி பார்வதியின் தம்பி கேசவனிடம் தெரியப்படுத்தினாள்.

**************************

இதே தருணம். சற்குணம் என்ற நபருக்காக மருத்துவமனை வளாகத்தில் காவல் இருந்த ஜீவானந்தத்தின் கைபேசிக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர,

'ஹலோ.யாருங்க பேசுறது' என்று கேட்டதும், எதிமுனையில் இருந்து ஜீவானந்தத்திடம் யார் என்ன சொன்னார்களோ, அவர் சற்றும் தாமதிக்காமல் தன் காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் இருந்து அதித கோபத்துடன் வெளியேறி இருந்தார்.

இதே சமயம் கிராமத்தில் பாம்பு கடித்த வலியை மறந்து முல்லை கதிர்வேலனிடம் சண்டையிட்டுக்கொண்டு இருக்க,

'ஏன் பா தம்பி.உன் அத்த பொண்ணு உன்கிட்ட சண்டை போட சொன்னா! அவ தூக்கத்தை மறந்துக்கூட உன்கூட சண்டை போடுவா போலவே?' என்ற பாட்டியை கோவமாக முறைத்தாள் முல்லை.

'ஆமா ஆமா பாட்டி.இவளுக்கு நானா ஊறுகா மாதிரி. எப்போ பாரு என்னை தான் வம்பு பண்ணுவா' என்று கதிர்வேலன் சொல்ல,

'பொய் பாட்டி பொய். இவுகளுக்கு தான் என்னை பிடிக்கவே பிடிக்காது பாட்டி' என்ற முல்லையின் கண்களை ரசனையாக ரசித்து இருந்தான் அவளின் மாமன் மகன்.

'அப்படியா.ஆனா எனக்கு என்னமோ உன்னை பாம்பு கடிச்சிடுதுனு இந்த தம்பி துடித்த துடிப்பை பார்த்தா. இவரு உன்னை அளவுக்கு அதிகமா நேசிக்கிற மாதிரி தான் தெரியுது' என்ற பாட்டியின் வார்த்தையில், முல்லையின் பதில் என்னவாக இருக்கும் என்று கதிர்வேலன் தன் காதுகளை தீட்டி வைத்து காத்து இருக்க,

'எல்லாம் நடிப்பு பாட்டி நடிப்பு. இவுக தான் என்னை வேணும்னே. ஹ்ம் ஹ்ம் இல்ல இல்ல. நான் வேணான்னு நினைச்சு என்னை குளத்துல தள்ளி விட்டாக. இவகனால தான் என்னை பாம்பு கொத்துச்சு.
இப்போ எனக்கு மட்டும் எதாவது ஆச்சுன்னா இவுகள தான் என் பாண்டியன் மாமா கேள்வி கேப்பாரு. அதனால தான் பயந்துகிட்டு என்னை காப்பாத்த சொல்லி உங்ககிட்ட கேட்டு இருப்பாரு இந்த மா..மா.. சா.ரு..' என்று தன் முகத்தை கோவமாக திருப்பிக்கொண்ட முல்லையை அப்படியே பிடித்து அவள் இதழ்களில் முத்தமிட வேண்டும் என்று உள்ளுற ஏங்கி இருந்தான் கதிர்வேலன்.

இப்படியே முல்லை கதிர்வேலனிடம் சண்டை போட்டு கொண்டு இருக்க. இப்படியாவது அவள் உறங்காமல் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் கதிர்வேலனும் முல்லையிடம் பேச்சு கொடுத்தார்.

'பாட்டி இப்போ நான் இவளை வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாமா' என்று கதிர்வேலன் கேட்க

'இல்லப்பா.இன்னும் இரண்டு முறை மருந்து கொடுக்கணும்.நீ இப்போ அழைச்சிட்டு போனினா வழியில இந்த பொண்ணு தூங்கிடும். அதனால நைட்டெல்லாம் என் கண்காணிப்பில் இருக்கட்டும். நாளைக்கு காலையில நீ உன் அத்தை மகளை வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்' என்றார் பாட்டி.

'அய்யய்யோ.இன்னைக்கு நைட்டு நான் இங்க தங்கனா. மாமா தேடமாட்டாரா' என்று முல்லை பாண்டியனை மனதில் கொண்டு சொன்னதை, ஜீவானந்தத்திற்காக முல்லை கவலைப்படுகிறாள் என்று எண்ணிய கதிர்வேலன்.

'அண்ணனுக்கு நான் போன் பண்ணி சொல்லிக்கிறேன்' என்றப்படி தன் கைபேசியுடன் வெளியே சென்றார்.

தற்போது கதிர்வேலனும் முல்லையும் இருப்பது கிராமம் என்பதால், அங்கே போனில் சிக்னல் கிடைக்காமல் இருக்க, சற்று தூரம் தள்ளிச் சென்ற கதிர்வேலன், முதலில் தன் அண்ணன் ஜீவானந்தத்தை அழைக்க, அவனின் கைப்பேசி இணைப்பு இணைக்கப்படாத காரணத்தால், உடனே தன் தங்கையான ரோஜாவை அழைத்தான்.

கதிர்வேலனின் எண்ணை பார்த்ததும் அடித்துப் பிடித்து போனை எடுத்த ரோஜா,'வாத்தி. என்ன ஏதாவது பிரச்சனையா. மணி என்ன ஆச்சு. ஏன் நீங்க இன்னும் வீட்டுக்கு வரல. முல்லை நல்லா இருக்காள் தானே' என்று கேட்க,

'இல்லம்மா. இங்க ஒரு பிரச்சனை' என்றார் கதிர்வேலன்.

'என்ன பிரச்சனையா!? என்ன சொல்றிங்க. என்ன பிரச்சனை' என்று ரோஜா கேட்க, முல்லையை பாம்பு கொத்திய கதையை கதிர்வேலன் சொன்னதும்,

'என்னது பாம்பா!? ஐயையோ முல்லைக்கு இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லையே' என்று துடி துடித்து போனாள் ரோஜா.

'நீங்கபதட்ட படாதீங்க அம்மா. இங்க கிராமத்துல நாட்டு மருந்துக்கு பேர் போன ஒரு பாட்டி தான் முல்லைக்கு வைத்தியம் பாக்குறாங்க.ஆனா நைட் எல்லாம் முல்லை தூங்காமல் இருக்கணுமாம்! அதனால நான் இங்கேயே நைட்டு நான் அவளுக்கு வைத்தியம் பார்த்துட்டு, முல்லையை காலையில அழைச்சிட்டு வரேன்,
ஜீவா அண்ணனுக்கு போன் பண்ணா அவர் போனை எடுக்கல, நீங்களே அவங்கக்கிட்ட விவரத்தை சொல்லிடுங்க' என்றான் கதிர்வேலன்.

'பெரியவர் இன்னும் வீட்டுக்கு வரல வாத்தி. யாரோ சற்குணமாம். அவருடைய நலனுக்காக பெரியவர் ஹாஸ்பிடல்லையே தங்கிட்டாரு. அப்பா தான் வந்ததும் ஏன் இன்னும் நீங்க வரலைன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாரு. சரி நான் உடனே அப்பா கிட்ட விவரத்தை சொல்றேன். மற்றபடி முல்லைக்கு பயப்பட பெருசா ஏதுவும் இல்லையே' என்று மீண்டும் ரோஜா பயந்த நிலையில் கேட்டாள்.

'இல்ல இல்ல.நான்தான் கூட இருக்கிறேனே. முல்லையை நான் பார்த்துக்கிறேன்' என்று தைரியம் சொன்னபடி கதிர்வேலன் கைபேசி இணைப்பைத் துண்டித்தார்.

'ம்... என்னன்னே தெரியல மனசே சரியில்லையே' என்று தனக்குள் எண்ணிய ரோஜா,நேராக தன் தந்தையிடம் சென்று விவரத்தைச் சொன்னாள்.

பாண்டியனும் துடித்துப் போனவர், 'இப்போ முல்லைக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லையே, கதிரை கூட இருந்து பார்த்துக்க சொல்லுமா, நம்ம வேணும்னா எங்க இருக்காங்கன்னு கேட்டு அவங்கள போய் அழைச்சிட்டு வரலாமா' என்று பாண்டியன் கேட்க,


'அப்பா. நம்மள விடவே வாத்தி முல்லையை நல்லா பார்த்து பாரு' என்று ரோஜா சொன்னதும், அமர்ந்த இடத்திலேயே முல்லைக்கு எந்த பிரச்சனையும் நேர்ந்து விடக்கூடாது என்று தெய்வத்தை வழிபட்டுக் கொண்டார் பாண்டியன்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top