Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 34
- Thread Author
- #1
16.2
இன்றும் சில கிராமங்களில் போக்குவரத்து வசதி இல்லாமல் இருக்க, மருத்துவமனைக்கு சில தூரம் நடந்து செல்ல வேண்டும் என்ற நிலைமையில் தான் இருந்ததை உணர்ந்து கதிர்வேலனுக்கு ஆபத்திற்கு உதவும் கடவுளாக முனியம்மா பாட்டி என்றவரின் இல்லம் தென்பட்டது.
கதிர்வேலனின் கரங்களில் இருந்த முல்லையைப் பார்த்து, 'என்னப்பா. என்ன ஆச்சு,பாம்பு கொத்திடுதா? அந்த பெண்ணை இந்த பாயில படுக்க வை' என்று குடிசைக்குள் இருந்த ஓலை பாயை பாட்டி சுட்டி காட்டியதும் கதிர்வேலன் தன் கரங்களில் ஏந்தி இருந்த முல்லையை குடிசையின் மத்தியில் இருக்கும் பாயில் படுக்க வைத்தார்.
முல்லையின் நிலையைக் கண்டு கதிர்வேலனின் கண்களும் கலங்கிய நிலையில்,'பாட்டி எப்படியாவது முல்லையை காப்பாற்றி கொடுத்திடுங்க. அவளுக்கு விஷம் ஏறாத அளவுக்கு நான் அவ கால்ல கயிறு கட்டிட்டேன். Pls பாட்டி என் முல்லையை காப்பாத்திடுங்க' என்று பதற்றத்தில் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்த கதிர்வேலனுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக,
'நான் பார்த்துக்கிறேன் நீ பதட்டப்படாத' என்றார் பாட்டி.
'தம்பி. முதல்ல இந்த பொண்ணுக்கு மயக்கம் தெளிவைக்கணும்' என்ற பாட்டி முல்லையின் முகத்தில் தண்ணீரை தெளிக்க. அவள் கண்கள் திறந்தப்பாடு இல்லை.
'தம்பி பாம்பு கடிச்சா தூங்க கூடாது பா'. என்ற பாட்டி, அவரிடம் இருந்த சில மூலிகைகளைக் கொண்டு புகையை எழுப்ப,
அப்போதும் முல்லை கண் விழிக்காமல் இருந்ததும், முல்லையின் காலில் பாம்பு கடித்த இடத்தை தன்னிடம் இருந்த கத்தியைக் கொண்டு கீறி முதலில் விஷத்தை வெளியே எடுத்தார் பாட்டி.
'தம்பி. இந்த குடிசைக்கு பின் பக்கம் வெள்ளை வேஷ்டி துணி காயும் அதை கொண்டு வா போ" என்று பாட்டி சொல்ல, கதிர்வேலன் வேகமாக குடிசையின் பின் புறம் ஓடினார்.
கதிர்வேலன் வருவதற்குள், முல்லை காலில் கதிர் கட்டிய மஞ்சள் கயிறை கழட்டிய பாட்டி, அந்த மாங்கல்யத்தை அங்குள்ள அம்மனின் அருகே வைத்தார்.
'பாட்டி இந்தாங்க துணி' என்று கதிர்வேலான் வெள்ளை துணியை பாட்டியிடம் நீட்ட,
'தம்பி. இந்த பொண்ணோட துணியை கழட்டிட்டு, இந்த வேஷ்டியை சுத்தி விடு பா' என்றார் பாட்டி.
பாட்டியின் வார்த்தையை கேட்டு கதிர்வேலனுக்கு ஐயோ என்று ஆகிப்போக, 'பாட்டி. இவ என்ன அத்த பொண்ணு. நான் எப்படி. என்னால முடியாது' என்று கதிர் சொன்னதும், 'என்னை மன்னிச்சுடு தம்பி. இந்த பொண்ணு உன் பொஞ்சாதின்னு நினைச்சேன்' என்றார் பாட்டி.
'இல்ல பாட்டி.' என்ற கதிர்வேலன், வேகமாக குடிசையில் இருந்து வெளியேறியவன், அவனுடன் இரண்டு பெண்மணியை அழைத்து வந்தான்.
'பாட்டி. இவங்கக்கிட்ட சொல்லி முல்லைக்கு துணி மாத்தி விடுங்க' என்ற கதிர்வேலன் குடிசையில் இருந்து வெளியேறியதும், அந்த பெண்மணிகளின் உதவியோடு முல்லையின் ஆடைகளை அகற்றி,
அவளை மூலிகை இலையில் படுக்க வைத்து, அவள் மயக்கம் தெளிய பாட்டி மேலும் சில மூலிகைகள் கொண்டு புகையை மூட்டி,அந்த வாசத்தை முல்லையின் நாசி அருகே எடுத்து செல்ல.
சில நொடிகளில் முல்லை மூச்சு திணறி மயக்கத்தில் இருந்து கண் விழித்தவள், தனக்கு என்ன ஆனது என்று யோசிக்கக்கூட முடியாமல் மீண்டும் விழிகளை மூடிக்கொண்டாள்.
'பாப்பா பாப்பா கண்ணை திற' என்று பாட்டி கத்தும் சாதம் கேட்டு கதிர்வேலன் குடிசைக்குள் நுழைய,
'தம்பி. உன் அத்தை பொண்ணை தூக்கி உக்கார வையி. அவளுக்கு நான் இந்த பச்சிளம் மருந்தை தரணும்' என்றார் பாட்டி.
மார்பளவு வெள்ளை துணியை முல்லை மீது போர்த்தி இருக்க, கதிர்வேலன் அவள் அருகே அமர்ந்து,'முல்ல. முல்ல கண்ணை திறந்து பாருடி' என்றதும், மெதுவாக விழிகளை மலர்ந்தாள் முல்லை.
கண்களை திறந்த முல்லையின் நினைவில் சற்று முன் அவளை பாம்பு கடித்த நிகழ்வை எண்ணி பார்த்தவள்,'மா..மா சார்..நா.நான் பாம்பு கடிச்சு செத்துட்டேனா..நான் சொர்கத்துக்கு வந்துட்டேனா. நீ. நீங்க ஏன் சொர்க்கத்துல இருக்கீங்க, நீ. நீங்க எனக்கு பண்ண நம்பிக்கை துரோகத்துக்கு நீ. நீங்க நரகத்துக்கு தானே போ. போவீங்க' என்று அரைகுறை மயக்கத்தில் புலம்பும் பெண்ணவளை பார்த்து சிரிப்பதா முறைப்பதா என்று புரியாமல் தன்னை தானே நொந்துகொண்டான் கதிர்வேலன்.
'தம்பி.. இது இலையையும் வேரையும் சேர்த்து அரைத்த சாறு,கொஞ்சம் கசப்பா இருக்கும், நீ இத உன் அத்த மகளுக்கு ஊத்தி விடு' என்று பாட்டி சொன்னதும்,
'முல்ல. இந்தாடி இதை குடி'என்று தன் கையில் இருந்த இலை சாற்றை முல்லையை குடிக்க வைக்க முயன்றான்.
முல்லையோ வாய் திறவாமல்,மேலும் கண்களை மூடிக்கொள்ள,'ஏய் ரவா லட்டு கண்ணை திறடி'என்று கர்ஜித்தவனின் குரலை கேட்டு முல்லை பயத்தில் விழிகளை மலர்ந்தவளின் கன்னத்தை பிடித்து அவள் வாயில் தன் கையில் இருந்த மருந்தை சட்டென்று ஊற்றி இருந்தான் கதிர்வேலன்.
மருந்தின் கசப்பில் உள்ள ஒவ்வாமையில் முல்லை ஒமட்டியவள்,'என்ன இது விஷமா?' என்று கேட்டதும்,
'வாயை மூடிக்கிட்டு குடி டி' என்று கதிர் கத்தியதும் மொடக்கென்று மருந்தை குடித்து முடித்தாள் முல்லை.
பாட்டி மேலும் நெருப்பை மூட்டி, சில பச்சை இலைகளை நெருப்பில் பொசுக்கி தூளாக்கி, சிறிது புகையை உண்டாகியவர், ''இந்த புகையை இந்த பொண்ணு சுவாசிச்சுகிட்டே இருந்தா தான் இரவெல்லாம் தூங்காமல் விழித்து இருப்பாள்' என்றார் பாட்டி.
'ஏன் பாட்டி.தூங்குனா என்னவாகும்' என்று கதிர்வேலன் கேட்க,' விஷம் உடலுக்கு பரவிடும் தம்பி. அதான் பாம்பு கடித்ததும் அவங்கள தூங்க விடாமல் பார்த்துக்கொள்ளனும்' என்றார் பாட்டி.
மருந்தை உட்கொண்ட முல்லை, 'மாமா சார். நம்ம எங்க இருக்கோம்' என்று சுயநினைவு வந்தவளாக கேட்க, 'உன்னை பாம்பு கொத்தியதும் நான் இந்த பாட்டிகிட்ட தூக்கிட்டு வந்துட்டேன் டி' என்றார் கதிர்வேலன்.
'அப்போ இன்னும் நான் சாகலையா' என்று முல்லை கேட்க,'நீ நல்லா தான் பாப்பா இருக்க, கவலைப்படாத' என்று தைரியம் கொடுத்தார் பாட்டி.
முல்லை பாயில் படுத்து இருக்க, கதிர்வேலனோ இன்னுமும் பதற்றத்தில் இருந்தவன், 'பாட்டி. முல்லை உடம்புல விஷம் பரவவில்லை தானே' என்று கேட்டார்.
'அப்படி எல்லாம் சொல்ல முடியாது தம்பி. உளுக்குள்ள விஷம் கண்டிப்பா பரவி இருக்கும், அதனால தான் இந்த பொண்ணோட உடல் சூட்டை கட்டுப்படுத்தி இவள் உடலை குளிர வைக்க, இலைபாக்களை இவளோட நெஞ்சு மற்றும் கால் பகுதி மேல் தடவி, ரத்த ஓட்டத்தை சீர் படுத்த வேண்டும்' என்ற பாட்டி, கதிர்வேலனிடம் பேசிக்கொண்டு தன் கையில் இருந்த மருந்தை முல்லையில் மார்பில் தடவியதும்,
'கொடுங்க பாட்டி. நான் காலுல தடவி விடுறேன்' என்ற கதிர்,
அவர் கரங்களால் முல்லைக்கு மூலிகை மருந்தை உள்ளங்காலில் தடவிக்கொடுத்தார்.
சில மணி நேரம் கடந்து முல்லையின் உடலில் குளுமை படர்ந்துக்கொண்டு இருக்க, அவளின் விழிகள் தானாக மூடிய நிலையில்,'பாப்பா பாப்பா தூங்கக்கூடாது மா' என்று உரக்க கத்தினார் பாட்டி.
'எ. எனக்கு தூக்கமா வருது பாட்டி' என்ற முல்லை அவளை மீறி கண்கள் மூட,
'தம்பி. இந்த பொண்ணு தூங்குனா அவ உயிருக்கே ஆபத்தாக முடியும் பா' என்ற பாட்டியின் வார்த்தையை கேட்டு கதிர்வேலனுக்கு பயம் உண்டாகியது.
'ஏய் ரவா லட்டு. தூங்கக்கூடாதுன்னு தானே சொல்றாங்க. கண்ணை திற' என்ற கதிர்வேலனின் குரல் எங்கோ கேப்பதை போல முல்லை மயக்கத்தில் மீண்டும் கண்களை மூட,
'முல்ல இங்க பாரு டி என்னை,நீ இப்போ தூங்கக்கூடாது' என்ற கதிர்வேலன் முல்லையின் கன்னத்தில் வேகமாக தட்டியதும்,வலியால் கண்கள் விழித்த முல்லையை பார்க்க கதிர்வேலனுக்கு பாவமாக இருந்தது.
'மாமா சார் எனக்கு தூக்கம் தூக்கமா வருது' என்ற முல்லை அவளை மீறி கண்கள் மூடி கதிர்வேலனின் இதயபகுதியில் சாய்ந்து இருந்தவளின் அருகாமையில் கதிரின் இதயம் இயல்புக்கு மாறாக வேகமாக துடித்து இருக்க,
'தம்பி. அந்த பொண்ணு வாட்டமா உன் மேல சாஞ்சிகிட்டு தூங்குதுபா' என்று குரலை உசத்தி கத்தினார் பாட்டி.
'ஐயோ.. ஏய் ரவா லட்டு. கண்ணை திறடி. இங்க பாரு. என்னை பாரு' என்ற கதிர்வேலன் தன் மீது சாய்ந்து இருந்த முல்லையை எழுப்பி சுவற்றில் சாய்து அமர வைத்தவன்,'பாட்டி. இவ தூங்காம இருக்க நம்ம என்ன பண்ணுறது' என்று பாட்டி கேட்கும் போதே, முல்லை மீண்டும் கண்கள் மூட முயன்றவளின் கன்னத்தில் வேகமாக தட்டிக்கொடுத்தான் கதிர்வேலன்.
***********************
இதே தருணம் பாண்டியனின் வீட்டில் ரோஜா வீட்டுக்கும் வாசலுக்கும் நடத்துக்கொண்டு இருந்தாள்.
'என்ன சின்னம்மா.ஏன் குட்டி போட்ட பூனை போல இங்கேயும் அங்கேயும் நடந்துகிட்டு இருக்கீங்க' என கேட்டுக்கொண்டே நாகராஜன் வீட்டின் முற்றத்தில் வந்து நின்றான்.
'மணி மாலை ஏழுக்கு மேலாச்சு. வாத்தி முல்லையை அழைச்சிட்டு போனதா ஜீவா அண்ணன் சொன்னாரு, ஆனா போனவுங்க இந்த நொடி வரை ஒரு போன்க்கூட பண்ணல' என்ற ரோஜா. தன் அலைபேசி வாயிலாக கதிர்வேலனை அழைத்து பார்க்க, அவரின் கைபேசி இணைப்பு தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக செய்தி வந்தது.
'சரி.கதிர் போனை எடுக்கலைனா என்ன. நீங்க ஜீவா அண்ணனுக்கு போன் பண்ணி பார்க்கலாமே' என்று நாகராஜன் சொல்ல, 'பெரிய அண்ணன் அந்த சற்குணத்தை சேர்த்து இருக்க மருத்துவமனையில் இருப்பதாக மெசேஜ் அனுப்பினாரு. அவரால இப்போதைக்கு போன் பண்ண முடியாது போல' என்றாள் ரோஜா.
'என்ன இது. கதிர் ஏன் போனை எடுக்கல, ஒரு வேள அப்படி எதாவது ஆகி இருக்குமோ!' என்ற நாகராஜனை கேள்வியாக பார்த்த ரோஜா,'எப்படி?' என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.
'இல்ல சின்னமா. உங்க வாத்தி முல்லைகிட்ட அவரோட காதலை.' என்று நாகராஜன் சொல்லும் முன்னே,
'என்னப்பா சின்ன எஜமான்.. என்ன காதல் கத்திரிக்காய்ன்னு பேசிகிட்டு இருக்க, என்ன விஷயம்' என்று கேட்டுக்கொண்டே கஸ்தூரி அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
கஸ்தூரி பேச்சைக் கேட்டு ரோஜா முகம் சுளிக்க,
'என்னம்மா உங்க ரெண்டு பேரோட உரையாடளுக்கு நான் குறுக்கே வந்துட்டேனா' என எப்போதும் போலவே குதர்க்கமாக கேள்வி கேட்டார் கஸ்தூரி.
'அத்த. மத்தவங்கள பேசுற மாதிரி என்கிட்ட ஜாடை மாடை பேச்செல்லாம் வச்சிக்காதிங்க. நான் வயசு வித்தியாசம் பார்க்க மாட்டேன்' என்று ரோஜா முகத்தில் அடித்ததை போல பேச,
'இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி பொரிந்து தள்ளுற. ஆமா! என்ன? நீயும் இவனும் மட்டும்தான் வீட்ல இருக்கிறீங்க. ஏன் வேற யாரும் இல்லையா' என்ற கஸ்தூரியின் கண்கள் முல்லையைத் தேடி அலைந்தது.
'இல்ல. வீட்ல நாங்க ரெண்டு பேர் தான் இருக்கோம். நீங்க என்ன திடீர்னு சொல்லாம வந்திருக்கீங்க' என்று ரோஜா கேட்க,
'ஏம்மா.என் அண்ணன் வீட்டுக்கு நான் சொல்லிட்டு தான் வரணுமா. இல்ல உங்க ரெண்டு பேருடைய பேச்சில..' என்று கஸ்தூரி முடிக்கும் முன்னே,
'அத்த. வேணா. வாங்கி கட்டிக்கிட்டு போயிடாதீங்க' என்று ரோஜா கத்தியதும், கஸ்தூரி பேச வந்த வார்த்தையை பாதியிலேயே விழுங்கிகொண்டார்.
Thank you to the readers who read my story and shared their thoughts.