Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 34
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
முல்லை – 16.1
'யார் இவங்கெல்லாம்? உங்க நண்பர்களா மாமா சார்' என்று முல்லைக் கேட்டு வைக்க,
'என்னடி திமிரா. இந்த ரவுடி பசங்கள பார்த்தா உனக்கு என் ஃப்ரெண்டு மாதிரி தெரியுதா' என்றவன், வேகமாக அவர்களை நெருங்கி சென்று,
'டேய். என்னடா பண்றீங்க, என் பைக் மேல இருந்து கையை எடுங்க' என்று உறுமினார் கதிர்வேலன்.
'ஏய். குன்னக்குடியில் எங்க ஐயாவை எவனோ வெட்டி போட்டு இருக்கிறான். இந்த ஊரு முழுக்க பந்த் நடக்குது. அது தெரியாம நீ என்ன ஒய்யாரமா உன் வண்டிய இங்க நிறுத்தி வச்சிருக்க' என்று ஒருவன் கேட்க,
'உங்க கொய்யாவை யார் வெட்டினாங்களோ அங்க போய் இப்படி எகுரு. அத விட்டுட்டு என்கிட்ட எல்லாம் எகுருற வேலை வச்சுக்காத' என்று பதிலுக்கு கதிர்வேலன் அங்கிருந்த நபர்களை மிரட்ட ஆரம்பித்தார்.
'ஏய்..என்ன வாய் ரொம்ப அதிகமா ஆகாது, யாரு ஊருக்கு வந்து யாரு சத்தம் போடறது. இந்த ஊருக்கே எங்க ஐயா தான் பெரியவரு.அவர ஒரு ஆளு வெட்டி போட்டு இருக்கான்னு சொல்றோம். நீ என்னமோ ஜோடி போட்டுகிட்டு இங்க வந்து நிக்கற.. போ போ.. கிளம்பு கிளம்பு. எங்க ஊர்ல இன்னைக்கு பந்த் நடக்க போகுது. எண்ணி ஒரு மணி நேரத்துக்குள்ள இங்க எந்த பைக் நின்னாலும் கொளுத்திடுவோம்' என்று இன்னொருவன் மிரட்ட.
'அய்யோ. சரிங்க ஐயா, நான் பயந்துட்டேன். நான் கிளம்புறேன்' என்றபடி பவ்யமாக கதிர்வேலன் தன் மார்புக்கு நடுவே கைகளை கட்டிக்கொண்டு அந்த நபர்களைப் பார்த்து சொன்னவன், கண் அசைவினாலே முல்லையை வண்டியில் ஏறும்படி சொன்னார்.
'ஐயோ மாமா சார் எனக்கு ரொம்ப பயமா இருக்கு' என்று அந்த அடியாட்களை பார்த்து பயத்தில் முல்லை நடுக்கம் கொள்ள,
'ஏய் உஷு.. பேசாம வண்டியில ஏறி உக்காரு. ஊர் போய் சேருற வரை நீ வாயை திறக்ககூடாது' என்ற கதிர்வேலன் கல்லூரியிலிருந்து நேரே தன் ஊரான குன்னக்குடிக்கு முல்லையுடன் பயணம் சென்றார்.
வழியெல்லாம் முல்லைக்கு பயத்தில் நாக்கு வறண்டு போய்,வாய் திறந்து எதையும் கேட்க முடியாத நிலையில் முல்லை அமர்ந்திருக்க.அவளின் விழிகளின் சோர்வை வைத்தே, அவள் பசியை அறிந்து கொண்ட கதிர்வேலன்,'அடியே. எதாவது சாப்பிட்டு வீட்டுக்கு போகலாமா' என்று கேட்டார்.
'ஹ்ம் ஹ்ம்.சாப்பாடு வேணா மாமா சார், எனக்கு பயத்துல நாக்கு வறண்டு போச்சு,நீங்க எனக்கு தண்ணி மட்டும் வாங்கி கொடுங்க' என்று முல்லை கேட்க,
'ஏன்.நான் உன்கூட தானே இருக்கேன், அப்படி என்ன மேடமுக்கு பயத்துல நாக்கு தள்ளிடுது' என்று அதற்கும் சண்டையிட்டான் கதிர்வேலன்.
'நீங்க தானே வாயை திறக்கவே கூடாதுன்னு சொன்னீங்க,அதான் நான் உங்ககிட்ட எதுவும் பேசல'
என்று முல்லைச் சொல்ல.
மேலும் அவளிடம் எந்த தர்க்கமும் பண்ணாமல் கதிர்வேலன் தன் வண்டியை ஒரு சிற்றுண்டி கடையில் நறுத்தியவன் முல்லைக்கு பிடித்த முக்கனி பழசாற்றை வாங்கிக் கொடுத்தான்.
'எனக்கு ஜூஸ் எல்லாம் வேண்டாம் மாமா சார், தண்ணி மட்டும் போதும்' என்று முல்லை சொன்னதும்,'இந்த கடைக்காரர் போடுற ஜூஸ் கூட தண்ணி மாதிரி தான் இருக்கு, குடி' என்று கதிர்வேலன் சொல்ல,
கடைக்காரர் கதிர்வேலனை முறைத்துக்கொண்டே மிக்ஸ்சியில் பழங்களை போட்டு அரைக்க ஆரம்பித்தார்.
'மாமா சார். நீங்களும் ஜூஸ் குடிங்க' என்ற முல்லை தன் கையில் இருந்த பழ சாற்றை கதிரிடம் நீட்டியதும்,
ஒருக்கணம் முல்லையை காதலுடன் பார்த்தவன் அடுத்த கணமே,'எனக்கு இதெல்லாம் பிடிக்காது' என்றவன்,
தண்ணீர் பாட்டிலை வாயில் கவுத்துக்கொண்டு அங்கிருந்து தள்ளி சென்று நின்றுக் கொண்டான்.
'ஹ்ம். உங்களுக்கும் முக்கனி ஜூஸ் பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் மாமா சார். ஆனா நான் அந்த ஜூஸை உங்களுக்கு கொடுக்குறது தான் உங்களுக்கு பிடிக்கல' என்று தன்னுள் எண்ணிக்கொண்ட முல்லை தன் தாகத்தை தீர்த்துக்கொள்ள பழ சாற்றை முழுதாக குடித்து முடித்தாள்.
'என்ன குடிச்சி முடிச்சிட்டியா,போகலாமா' என்று கதிர்வேலன் கேட்டதும்,
'ஆங் போகலாம் மாமா சார் ' என்றவளை தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு கதிர்வேலன் குன்னக்குடியை நோக்கி பயணித்தார்.
மாலை நேர தென்றல் காற்றை தன் தேகத்தில் உணர்ந்தப்படி முல்லை கதிர்வேலனின் பின்னே அமர்ந்து இருக்க, வெள்ளை வேஷ்டி,வெள்ளை சட்டை அணிந்து கொண்டு. அடியாட்கள் அங்கும் இங்கும் கடைகளை அடைக்கச் சொல்லி பிரச்சனை செய்து கொண்டிருந்த காரணத்தால், கதிர்வேலன் நேரடியாக தன் ஊருக்கு செல்லாமல், கிராமப்புறங்களில் வளைந்து நெளிந்து இரண்டு மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு
3 மணி நேர பயணத்தில் சென்று கொண்டு இருக்க,
'என்ன மாமா சார். என்ன நீங்க வண்டியை ஓட்டிகிட்டே இருக்கீங்க.இன்னும் வீட்டுக்கு போக எவ்வளவு நேரம் தான் ஆகும்' என்று பொறுமை இழந்தவளாக முல்லை கேட்டு வைத்தாள்.
'ஏய். எனக்கு மட்டும் உன்னை பின்னாடி உட்கார வச்சிக்கிட்டு சுத்தனும்னு தலையெழுத்தா என்ன.
ஊரெல்லாம் அந்த சற்குனத்தின் அடியாட்கள் கட்டையும் கத்தியும் வச்சிக்கிட்டு பிரச்சனை பண்ணிக்கிட்டு அலையுறானுங்க. நான் மட்டும் தனியா இருந்திருந்தால் கூட இங்கே நடக்கிற கதையே வேற.ஆனா நீயும் இருக்கிறதால தான் ஊரை சுத்தி உன்ன அழிச்சிட்டு போறன். அமைதியா வா. இல்லன்னு வையேன்,அப்படியே குட்டையில தள்ளி விட்டுடுவேன்'
என்று கதிர்வேலன் பேசி முடிப்பதற்குள் மீண்டும் ஒரு பள்ளம் வர,வண்டியில் இருந்து ஒரு காலை ஊன்றிய கதிர்வேலன், இன்னோரு காலை கீழே வைக்கும் சமயம் முல்லை பிடிமானம் இல்லாமல் வண்டியில் இருந்து கீழே விழுந்தவள், இரண்டு சுற்று சுற்றி தாமரை குலத்திற்குள் தொப் என்று விழுந்திருந்தாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கூட விபத்து நேரிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக,இந்த காட்சி அமைந்திருக்க.
உடம்பெல்லாம் சேரும் சகதியுடன் முல்லை தாமரைக் குளத்தில் இருந்து எழ முடியாமல் தவித்தவளை பதறி போய் கதிர்வேலன் தூக்க சென்றவன்,' ஏண்டி. வண்டிய ஒழுங்கா பிடிச்சுக்கிட்டு உட்காரனும்னு தெரியாதா' எனக் திட்டிக்கொண்டே அவளைக் கைப்பிடித்து தூக்க, மீண்டும் அவள் கால் வழிக்கு அதை குளத்தில் விழுந்தாள்.
கதிர்வேலன் தான் வேண்டுமென்றே தன்னை கீழே தள்ளி இருக்கிறான்'
என்று நினைத்த முல்லைக்கு வார்த்தை தடுத்து கண்களில் கண்ணீர் மட்டுமே பெருகிய நிலையில்,
'நீங்க சொன்ன மாதிரியே என்னை தள்ளி விட்டுட்டீங்க இல்ல மாமா சார், இதுக்கு நீங்க என்ன அழைச்சிட்டு வராமலேயே இருந்திருக்கலாம்'
என்றபடி கண்களை துடைத்துக்கொண்டு அவன் கைபிடிக்காமல் தானாக குளத்தில் இருந்து மேலே ஏறி வந்தவள்,
அவனை திரும்பிப் பார்க்காமல் எந்த ஊர், எந்த வழி என்று அறியாமல் கால் போன போக்கில் அங்கிருந்து நடக்க ஆரம்பித்து இருந்தாள்.
முல்லையின் பேச்சை கேட்ட கதிர்வேலனுக்கு அவள் வார்த்தைகளை கேட்டு கோவம் வர,'ஐயோ கடவுளே. நீ இருக்கியா இல்லையா. ஏன் இவளுக்காக நான் எது பண்ணாலும் இப்படி பிரச்சனையாகவே வந்து முடியுது. இவளை யாராவது வேணும்னே தள்ளி விடுவாங்களா' என்று வாய் விட்டு புலம்பிய கதிர்வேலன்,தன் பைக்கை தள்ளிக்கொண்டு,
'ஏய் நில்லுடி.' என்று முல்லையை அழைத்தபடி அவளை பின்தொடர,
'இந்தாடி. நில்லுன்னு சொல்றேன்ல இல்ல' என்று முல்லையின் கையை பிடிக்க வந்த கதிரை,'வேண்டா மாமா சார், என் மேல் சேரும் சகதியுமா இருக்கு,குன்னக்குடிக்கு நான் இப்படியே நடந்து போறேன்.
நான் போயி பாண்டியன் மாமா கிட்ட நீங்க வேணும்னே தான் என்னை தள்ளிவிட்டீங்கன்னு சொல்றேன்' என, சிறுபிள்ளை போல அவள் வேகமாக எத்தி அடி எடுத்து வைக்க..
'ஏய் ரவா லட்டு.நில்லுன்னு சொல்றேன்ல'
என்ற கதிர்வேலன்,மீண்டும் வேகமாக அவளின் கரங்களைப் பிடித்து தன் வசம் இழுத்த வேகத்தில், மரம் செடி கொடிகளுக்கு நடுவில் இருந்து சலசலவேன சத்தம் ஏற்பட்ட நிலையில் முல்லை,'மாமா சார் என்ன சத்தம் இது' என்று கேட்க.
'ஐயோ பாம்பு டி.'என்று கதிர்வேலன் கத்தியதும்,சற்றும் தாமதிக்காமல் அவன் கழுத்தை தன் இரு கரங்களால் கட்டிக் கொண்ட முல்லை,'ஐயோ பாம்பு மாமா சார்.என்னை காப்பாத்துங்க மாமா சார்' என முல்லை பதறும் நேரம்
அவள் காலில் தன் பல் தடத்தை பதித்திருந்தது நல்ல பாம்பு.
'ஆ..'என்று முல்லை வலியால் கத்தியவள், வாயில் நுரை தள்ளி அப்படியே மயங்கி சரிந்தவளை,'ஏய் முல்ல.' என்று பதறிய கதிர்வேலன் தன் மடியில்
தாங்கி இருந்தார்.
முல்லை மயங்கி சரிந்ததும் கதிர் துடித்து போனார்.
என்ன செய்வது என்று புரியாமல், 'முல்ல. முல்ல...' என்று அவள் கன்னத்தில் தட்டியும் எந்த பயனும் இல்லாமல் போனது.
பாம்பின் விஷம் மேலும் உடலில் பரவாமல் இருக்க தன் கைக்குட்டைக் கொண்டு முல்லையின் காலில் கட்டி விட எண்ணிய கதிர்வேலன் தன் சட்டை பையில் கைக்குட்டையை தேடி! அது கிடைக்காமல் போனது.
நொடிகள் கடக்க, கதிர்வேலனின் இதயத்தில் பயம் பரவிக்கொண்டு இருக்க, சற்றும் தாமதிக்காமல் அவர், ரோஜாவிற்கு அருள் வந்து கதிர்வேலனின் புஜத்தில் கட்டிவிட்ட மஞ்சள் கயிறை கழட்டி முல்லையின் கண்ட காலில் கட்டவிட்டார் கதிர்வேலன்.
எந்த ஊர்? என்ன இடம்? என்று தெரியாமல் கதிர்வேலனும் முல்லையும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி இருக்க, 'இங்க ஹாஸ்பிடல் எங்க இருக்குன்னு கூட தெரியலையே' என்ற கதிர்வேலனின் முகத்தில் வியர்வை படர ஆரம்பித்தது.
தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் முல்லையின் உயிர்க்கு ஆபத்து என்று எண்ணிய கதிர்வேலன், தன் இருசக்கர வாகனத்தை ஓரம் நிறுத்தி, முல்லையின் ஆவணங்களை தன் சட்டைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டவன், முல்லையை தன் கையில் ஏந்தியப்படி ஊருக்குள் நடக்க ஆரம்பித்தார்.
ஐந்து நிமிட நடையில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து இரண்டு பெண்மணிகள் பேசிக்கொண்டு இருக்க, 'ஏங்க.இங்க ஹாஸ்பிடல் எங்க இருக்கு?' என்று பதற்றதுடன் கதிர்வேலன் கேட்க,
'என்ன தம்பி என்னாச்சு. ஐயோ இந்த பொண்ணுக்கு வாயில நுரை தள்ளி இருக்கே, என்னப்பா பாம்பு கொத்திடுதா' என்று சரியாக கணித்து கேட்டார் அந்த பெண்மணி.
'ஆமாங்க.அந்த தாமரை குளத்தாண்ட வரும்போது தான் பாம்பு கொத்திடுது' என்ற கதிர்வேலனின் கரங்களில் முல்லை ஈர ஆடையில் வாயில் நுரை தள்ளியபடி முழு மயக்கத்தில் இருந்தாள்.
'தம்பி.இது கிராமம். ஹாஸ்பிடலுக்கு போகணும்னா இங்கே இருந்து ஒரு மணி நேரம் ஆகுது நடந்து போகணும்.
இந்த நேரம் பஸ் கூட ஊருக்குள்ள வராதுப்பா.
பேசாம நம்ப முனியம்மா பாட்டிகிட்ட வைத்தியம் பாத்துக்கலாம். நீங்க வாங்க' என்று அந்த பெண்மணி கதிர்வேலனை மருத்துவச்சியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.