• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
30
பாலைவனத்து முல்லை❣️

பகுதி - 14

ஜீவானந்தம் விரட்டிய கார் அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தது.
'நல்ல வேள ஜீவா. நீ பாதி தூரம் போய் இருப்பியோன்னு நினைச்சேன்' என்று பாண்டியன் சொல்ல,
'அப்பா. தலைவர் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லையே' என்று கேட்டார் ஜீவானந்தம்.
'எந்தப் பிரச்சனையும் வந்துடக்கூடாது ஜீவா. மீறி வந்தால் நம்ம ஊருக்கு வரபோய் தான் அவருக்கு இந்த மாதிரி ஆகிடுதுன்னு,இங்க பஞ்சாயத்து தலைவரா இருக்கிற என்னோட பெயருக்கு கலங்கம் உண்டாக்குற மாதிரி ஆகிடும்' என்றார் பாண்டியன்.
'யாரு அப்பா அவரை இப்படி பண்ணி இருப்பாங்க'என்று ஜீவா கேட்க,
'தெரியல ஜீவா.யாராயிருந்தாலும் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் வரை நம்ம காத்திருக்க கூடாது,நம்ம பக்கத்துல இருந்து தலைவருக்கு என்ன ஆனது என்று நாமளும் கண்டுபிடிக்கணும்' என்று பாண்டியன் சொன்னார்.
திருச்சியின் முக்கிய பிரமுகர் சற்குணம் குன்னக்குடிக்கு வருகை தந்திருக்க. கிட்டதட்ட இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக முகமூடி அணிந்த சிலர் அவரை சரா மாறியாக தாக்கி,அவர் கொண்டு வந்த சில முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றுள்ளார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டு குன்னக்குடி பஞ்சாயத்து தலைவரான பாண்டியன் காதுக்கு செய்தி வந்தது.
ஆகையால்,பாண்டியனுக்கு அடுத்த நிலையில் தலைவர் ஸ்தானத்தில் இருக்கும் ஜீவானந்தமும், பாண்டியனும். தலைவர் சர்குணத்தை காண மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.
*******************
இதன் காரணமாகவே இன்று முல்லை ஜீவானந்ததுடன் திருச்சி செல்ல வேண்டிய காரியம் தடைப்பட்டு,
ஜீவானந்ததிற்கு பதில் கதிர்வேலன் முல்லையுடன் திருச்சிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியது.
இந்த காரணங்கள் தெரியாமல் நேற்றைய முன் தினம் நடந்த சில காரசாரமான நிகழ்வுகளை மனதில் கொண்டு முல்லை கதிர்வேலனின் வண்டியில் ஏறாமல், பஸ்ஸில் தனியாக செல்ல முடிவெடுக்க,
கோபம் கொண்ட கதிர்வேலனோ முல்லையை நடுரோட்டில் நின்றபடி மிரட்டிக்கொண்டு இருந்தார் .
எப்பொழுதும் போலவே இந்த முறையும் கதிர்வேலனின் சொல்லுக்கு பயந்து முல்லை அதே இடத்தில் நின்று இருக்க,
'என்ன.. திமிரு கூடி போச்சா? நான் கூப்பிட கூப்பிட எனக்கென்னனு பஸ்ல ஏறி போக ரெடியா ஆகிட்ட,
ஏன் என்கூட வந்தா மகாராணி கிரீடம் கீழ இறங்கிடுமா' என்று அர்த்தமே இல்லாமல் முல்லையிடம் பிரச்சனை செய்யும் கதிர்வேலனுக்கு என்ன தேவை என்று அவரே அறியாமல் தான் இருந்தார்
'இப்போ எதுக்காக மாமா சார் என்னை இப்படி திட்டிக்கிட்டு இருக்கீங்க.ஓ! நேத்து நிச்சயம் நடக்காமல் போக நான் தான் காரணம்ன்னு நீங்களும் கஸ்தூரி சித்தி போலவே நினைக்கிறீங்களோ' என்று வாய்விட்டு முல்லை தன் மனதில் உள்ளதை கேட்டு வைக்க..
'இவ என்ன பைத்தியமா? நேத்து நிச்சயம் நடக்காதது எனக்கு சந்தோஷம் தானே! அதுக்கேன் நான் கவலைப்பட போறேன்' என்ற பதிலை கதிர்வேலன் வாய்விட்டுச் சொல்லாமல்,மனதிற்குள்ளே புலம்பிக்கொண்டது தான் இவர்கள் இருவரின் பிரச்சனையாக இருந்தது.
கதிர்வேலன் முல்லையின் விழிகளை பார்த்தபடி தன் மனதிற்குள் பிணர்த்தி க்கொண்டு இருக்க,
'என்ன முறைக்கிறீங்க.அப்போ நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீங்களா' என்று மீண்டும் கேட்டாள் முல்லை.
'ஏய்.உன்னுடைய முட்டாள்தனமான கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை, கடைசியா கேட்கிறேன்! நான் உன்ன திருச்சிக்கு அழைத்து போகணுமா!
இல்ல நீ பஸ்ல போறியா' என்று கதிர்வேலன் வேண்டா வெறுப்பாக முல்லையிடம் பேசுவதைப் போல உணர்ந்தவள்,
'ஏன் இப்படி என்கிட்ட மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுறீங்க, இப்போ என்ன! என் இடத்துல மீனா இருந்து. மீனாவை நீங்க வெளியே அழைச்சிட்டு போகலன்னு என் மேல கோபப்படுறீங்களா!' என்று முல்லை கேட்டு வைத்தாள்.
'ஏன் டி .. நீ என்ன லூசா! இப்போ நான் உன்னை திருச்சிக்கு அழைச்சிட்டு போகணுமா வேண்டாமான்னு நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன்,
ஆனா நீ சம்மந்தமே இல்லாம என்னையே எதிர் கேள்வி கேட்கிற,என்னடி!?
என்ன பார்த்தா உனக்கு கேனையன் மாதிரி தெரியுதா' என்று சுற்றி இருப்பவர்களை மறந்து கதிர்வேலன் மீண்டும் முல்லையை திட்ட ஆரம்பித்திருந்தார்.
'இங்க பாருங்க. நீங்க இப்படி எல்லாம் திட்டினா நான் உங்க கூட வண்டில வரமாட்டேன். எனக்கு என் சர்டிபிகேட்டே வேண்டாம். நான் போறேன் போங்க' என்ற முல்லை அங்கிருந்து தன் வீட்டை நோக்கி நடந்தவளின் கையைப் பிடித்து வேகமாக தன் வசம் இழுத்தார் கதிர்வேலன்.
கதிர்வேலனின் செயலில் திட்டுகிட்ட பயந்த முல்லை,'என்ன பண்றீங்க' என்பதற்குள்,
'ஒழுங்கு மரியாதையா வண்டியில உட்காரு. இல்ல படுக்க போட்டு வண்டியை ஏத்திடுவேன்' என்று அவன் உறும்பியதும்,
'இங்க பாருங்க மாமா சார். நீங்க.' என்று முல்லை ஏதோ பேச வருவதற்குள்,
'வாய மூடுன்னு சொன்னேன்' என்று கதிர்வேலன் கர்ஜிக்க, பக் என்று முல்லை வாயை மூடியவள், மேற்கொண்டு எதுவும் பேசாமல் கதிர்வேலனின் பைக்கில் அமர்ந்து கொண்டாள்.
கதிர்வேலன் இயல்பான வேகத்தை விடவே அதி வேகமாக தன் இரு சக்கர வாகனத்தை திருச்சியை நோக்கி விரட்ட. வழி எல்லாம் விழுந்து விடுவோமா என்ற பயத்திலேயே முல்லை விழி பிதுங்கி அமர்ந்திருந்தவளை சைட் மிரரில் பார்த்தப்படி கதிர்வேலன் முறைத்துக் கொண்டே வந்தார் .
'ம்... என் கூட இவளுக்கு தனியா வரணும்னா வாயில பச்சை மிளகாய் வச்ச மாதிரி மூஞ்சி சுழிப்பா இருக்கும்.
ஐயோ.நான் ஒரு மானம் இல்லாதவன்.
இவ மனசுல நான் இல்லைன்னு தெரிஞ்சும்.
என் அண்ணன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கு ஏன் என் மேல பாசம் இருக்கணும்.ஏன் என்னை அவ நல்ல விதமா நினைக்கணும். என்கிட்ட ஏன் அவ சந்தோஷமா பேசணும்னு நான் நினைக்கிறேன்!'
என்று தனக்குத்தானே புலம்பிக்கொண்டே கதிர்வேலன் வண்டியை இயக்கினார்.
'ஆரம்பத்துல இருந்தே மாமா சாருக்கு நம்ப ண்ணா ஆக தான் மாட்டுது.
ஏதோ பாண்டியன் மாமா சொன்னதால இவரு நம்மள அழைச்சிட்டு போறாரு. கடவுளே திருச்சிக்கு போயி,சர்டிபிகேட் வாங்கிட்டு,மறுபடியும் வீடு திரும்பற வரைக்கும் மாமா சாருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் வந்துட கூடாது' என்று முல்லை வேண்டி முடிக்கும் முன்னே.
கதிர்வேலன் தன் இரு சக்கர வாகனத்தை பள்ளத்தில் இறக்க,'ஐயோ.'என்று கத்தியபடி முல்லை கதிர்வேலனின் இடுப்பை தன் வலது கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டாள்.
அவனின் காதல் கொண்ட நெஞ்சமானது பெண்ணின் தொடுகையில் ஒரு நொடி சிலிர்த்து அடங்க.ஒன்றல்ல இரண்டல்ல. தனது 18வயதில் இருந்தே முல்லையை தன் மனைவியாக எண்ணி இருந்த கதிர்வேலனுக்கு ஒரு கட்டத்தில் முல்லையின் மனதில் அவன் இல்லை என்று சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவனுக்கு எதிராக அமைந்து சாட்சி சொல்ல...
முல்லையை மறக்க முடியாமல் தவித்து போனவன்,அவள் நிழலைக்கூட தொடக் கூடாது என்று எண்ணி இருக்க.
இன்று அவளின் கரங்கள் அவன் இடையை சுற்றி வளைத்ததும்.ஒரு நொடிதான் அவன் காதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.
தன் இரு சக்கர வாகனத்தை ஓரம் நிறுத்தி, தன் இடுப்பை சுற்றி வளைத்தபடி அமர்ந்து, அவன் முதுகில் தலை சாய்த்து கண்கள் மூடி பயத்தில் நடுங்கி கொண்டு இருந்த பெண் அவளை திரும்பி பார்த்தவன் அவள் அழகை உள்ளூர ரசிக்கவும் மறக்கவில்லை.
பயத்தில் முல்லைக்கு ஒரு சொட்டு கண்ணீரும் அவள் விழிகளில் இருந்து வடிய.'அடியே ரவா லட்டு,இதுக்கெல்லாமா நீ பயப்படுவ. சரியான அழுமூஞ்சுடி நீ" என்ற கதிர்வேலனின் குரலில் சுயம் எழுந்தவள்.சட்டென்று அவனை நிமிர்ந்து பார்க்க,
சிறிய..மிக சிறிய புன்னகையை தன் உதட்டில் உதிர்த்த கதிர்வேலன்,
'என்ன அவ்வளவு பயமா உனக்கு?' என்று கேட்க. 'ஏன் இவ்வளவு பாஸ்ட்டா ஓட்டுறீங்க. உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு இப்படியே வண்டியில் இருந்து எங்கேயாவது தள்ளிவிட்டடலாம்னு நினைச்சீங்களா' என்று கேட்டு வைத்தாள் முல்லை.
வார்த்தைக்கு வார்த்தை 'என்னை உங்களுக்கு பிடிக்கலையா' என்று முல்லை கேட்கும் கேள்வியை ….இன்று வரை கருத்தில் கொள்ளாத கதிர்வேலனின் முன் கோபத்திற்கு அவன் இன்று இழந்து நிற்பது முல்லையின் நம்பிக்கையை என்று அறிந்திடாதவன்,
'ஆமா. உன்ன இப்படியே தள்ளிவிட்டுட்டு, தல முழுகிவிட்டு போயிடலாம்னு நினைச்சு தான் பள்ளத்துல இறக்கினேன்' என்று சொன்னதும்,முல்லை அதிகமாக அழ ஆரம்பித்து இருந்தாள்.
கதிர்வேலன் பேசும் சிறு சிறு வார்த்தைகளுக்கு கூட வேறொரு அர்த்தத்தை தன் மனதிற்குள் அசைப்போட்டு கொண்ட முல்லைக்கு தன் மீது கதிர்வேலனுக்கு எந்தவித பிரியமும் இல்லை என்பதை இந்த நொடி வரை நம்பிக் கொண்டு இருக்கின்றவள்,
'என்னை அழைச்சிட்டு போக இஷ்டம் இல்லனா பாண்டியன் மாமா கிட்ட அப்பவே முடியாதுன்னு சொல்லி இருக்கலாமே' என்று கேட்டு வைக்க.
'நான் சொன்னா மட்டும் அவர் கேட்பாரா என்ன? என்னமோ இன்னிக்கே உன்னுடைய சர்டிபிகேட் வாங்கி ஆகணும்னு என்னை உன் கூட அனுப்பி வச்சி இருக்காரு. எனக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா.
எல்லா வேலையும் உன்னால தான் பாதியிலேயே நிக்குது' என்று பதிலுக்கு கதிர்வேலனும் விருப்பமே இல்லாமல் முல்லையுடன் வேண்டா வெறுப்பாக வந்ததைப் போல பேசி வைத்தார்.
'ஆமாமா..என்ன வேலை இருக்கப் போகுது, சாயந்திரம் வந்தா போய் சரக்கு அடிக்கிற வேலை தானே இருக்க போகுது' என்று முல்லை பதில் கொடுக்க..
'அடியே. என்னடி நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் ரொம்ப ஓவரா பேசிக்கிட்டு இருக்க..பேசாம உன்ன நான் பஸ்லயே போக விட்டு இருக்கனும்’ என்று கதிர் சொல்ல.
'இப்ப மட்டும் என்னவாம்! வழியில பஸ் இருந்தா என்னை ஏத்தி விடுங்க. நான் தனியாவே போய் சர்டிபிகேட் வாங்கிட்டு வரேன்' என்றார் முல்லை.
'அப்படியா.அப்போ போ..முதல்ல இறங்கி போயி பஸ் எடுத்து சர்டிபிகேட் வாங்கு. அதுக்கு முன்னாடி. நீ பிடிச்சு வச்சிருக்கியே என்னோட இடுப்பு!! அதை விட்டுட்டு போடி' என்று கதிர்வேலன் சொல்ல.. அப்பொழுதுதான் தன் பார்வையை கீழ் நோக்கி பார்த்தாள் முல்லை.
ஆம்.இந்த நொடி வரை கதிர்வேலனின் இடையில் தன் கை கொடுத்து லாவகமாக இவள் கீழே விழாமல் அவனை பிடித்துக்கொண்டு இருக்க, கதிர்வேலனோ தன்னை அணைத்து இருக்கும் முல்லையை கள்ளத்தனமாக ரசித்தவன்,
'ஆனா நீ விவரம் தாண்டி. என் பின்னாடி உட்கார்ந்துக்கிட்டு.என்னுடைய இடுப்பையே புடிச்சுகிட்டு. என்னையே இவ்வளவு கேள்வி கேக்குற இல்ல!! உன் இடத்தில் மட்டும் வேற யாராவது இருந்தாங்கன்னு வை' என்று கதிர்வேலன் பல்லை கடித்ததும்..
'என்ன!? திட்டாம அவங்களை இந்நேரம் அழைச்சிட்டு போயிருப்பீங்க தானே.. ஆனா என்னை மட்டும் திட்றீங்க..திட்டுங்க திட்டுங்க..உங்களுக்கு என்னை திட்ட சொல்லியா கொடுக்கணும்' என்று மீண்டும் முல்லை மூக்கை உறிந்தாள்.
'ஏய்..பின்னாடி உக்காந்து சும்மா நச நசன்னு பேசிகிட்டு வராம அமைதியா இரு. திருச்சில உன் காலேஜ் வாசப்படிய மிதிக்கிற வரைக்கும் நீ வாயையே திறக்க கூடாது. மீறி திறந்தா!! கண்டிப்பா கீழ தள்ளி விட்டுட்டு, நான் போய்கிட்டே இருப்பேன்' என்ற கதிர்வேலன் வேகமாக வண்டியை அங்கிருந்து கிளப்பியதும்,
அவருக்கு பின்னே அமர்ந்து இருந்த முல்லை பேலன்ஸ் இல்லாமல் முன்னே சென்று பின்னே வந்தவள்,வண்டியில் கைப்பிடிமானம் எங்கே இருக்கிறது என்று தேடி இரண்டு கைகளாலும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு கண்களை மூடியப்படி கதிர்வேலனின் பின்னே அமர்ந்து கொண்டாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top