• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 5, 2025
Messages
21
பாலைவனத்து முல்லை
பகுதி - 1௦.2
அன்றைய நாள் முழுதும் ரோஜா தன் அண்ணன் கதிர்வேலனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நாகராஜன் மதிய உணவை எடுத்து செல்ல வீட்டுக்கு வந்த போதும் கூட தன் அண்ணனை பற்றி ரோஜா கேட்கவில்லை.
“இந்தாப்பா வேலைக்காரா! ஏன் கதிர் வீட்டுக்கு வந்து சாப்பிட மாட்டானா” என்று கஸ்தூரி கேட்க,
“அத்த... அவருக்கு நாகராஜன் என்று ஒரு பெயர் இருக்கு” என்ற ரோஜாவின் பதிலில் கஸ்தூரி முகத்தை திருப்பிக்கொண்டு தோட்டப்பக்கம் சென்றார்.
“நாகா அண்ணா... கதிர் மாமா ஏன் வீட்டுக்கு சாப்பிடல வரல” என்று மீனா கேட்க,
“நைட் வருவாருங்க” என்ற நாகராஜன் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சிலம்பம் திடலுக்கு சென்றார்.
காலையில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்த கதிர்வேலன் தன் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் தன் எதிரே இருக்கும் மண் மூட்டையில் கையை மடக்கி ஆத்திரம் அடங்க குத்திக்கொண்டு இருக்க,
“டேய் டேய் கதிரு... என்னடா பண்ற” என்று பதற்றத்துடன் தன் நண்பனை தன் வசம் இழுத்தார் நாகராஜன்.
“என்ன கதிர் நீ... இப்படி நீயே உன்னை காயப்படுத்திகிறதால என்ன மாறப்போகுதுனு நினைக்கிற?”
“அப்பா எனக்கும் மீனாவுக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணுறாரு நாகா”
“நல்லது தானே கதிர்.
நீ மீனாவை கல்யாணம் பண்ணிக்கோ.”
“உளராத! நான் காதலிச்சது முல்லையை தான்.”
“அது தான் ஒருதலை காதலாச்சே!”
“இருந்தாலும் என்னால எப்படி முல்லையை தவிர்த்து வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியும்?”
“சும்மா அதையே சொல்லாத கதிர். நீ உன் காதலை முல்லைகிட்ட சொல்லுறதுக்கு முன்னாடி உன் அண்ணன் முல்லையை லவ் பண்ணிட்டாரு. சரி உன் அண்ணன் காதலிச்சாலும் பரவாயில்ல, முல்லை உன்னை லவ் பண்ணி இருந்தாளாவது உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க உன் தங்கச்சி எதாவது முயற்சி பண்ணி இருப்பாங்க. ஆனா முல்லையும் தானே நண்பா உன் அண்ணனை காதலிக்கிறாங்க”
“டேய்... இதெல்லாம் எனக்கு தெரியாதா! நீ என்னமோ எனக்கு தெரியாத விஷயத்தை பேசுற மாதிரி பேசற.”
“ம்...அப்போ உனக்கு எல்லாம் தெரியுது தானே. இருந்தும் நீ ஏன் மீனாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்ல மாட்டுற.”
“இருந்தாலும்டா...”
“இந்த இருந்தாலும் பறந்தாலும் எல்லாம் வேண்டா கதிரு.
முதல்ல நீ தண்ணி சாப்பிடுறதை நிறுத்து.
நேத்து நைட் கூட நீ குடிச்சிட்டு முல்லையை கட்டிப்பிடித்து பெரிய கலாட்டா பண்ணிட்ட.”
“என்னடா சொல்லுற! நான் முல்லையை கட்டிப்பிச்சேனா!?”
“பின்ன என்ன!? நேத்து நீ ரொம்ப பண்ணிட்ட. அதனால தான் உன் தங்கச்சி இனிமே உன்கூட பேசவே மாட்டேன்னு போய்ட்டாங்க.”
“ஓ... அதான் அம்மா காலையில இருந்து என்கிட்ட கோவமா இருக்காங்களா?”
“இங்க பாரு கதிரு... மீனா உனக்காக உயிரையே கொடுக்க துணிஞ்சு இருக்கு, நீ முதல்ல மீனாவை ஏத்துகலைன்னா கூட, முல்லையை மறக்க ட்ரை பண்ணு”
“அந்த ரவா லட்டை மறக்க முடியாம தானே டா நான் இந்த ஊர விட்டே ஓடிப்போனேன்”
“இதுக்கு மேல உன்னால ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. ஒழுங்கா உன்னை நேசிக்கிற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ. உன் விஷயம் மட்டும் உன் அண்ணனுக்கு தெரிந்தால் அப்புறம் உங்க குடும்பத்துல பிரச்சனை தான் வரும்”
“டேய் ஏன் டா நீ வேற! இப்போ என்னை என்ன தாண்டா பண்ண சொல்லுற?”
“மீனாவை கல்யாணம் பண்ணிக்கோ, அதுக்கு முன்னாடி மீனா கூட சகஜமா பேசு” என்று நாகராஜன் சொன்னதும், கதிர்வேலன் தன் நண்பன் பேசியதை கேட்டு பெருமூச்சுடன், “ம்... ட்ரை பண்ணுறேன்” என்றார்.
************************
சிவகங்கையில் இருக்கும் முருகனின் வீட்டில் பார்வதி எல்லை இல்லாத மகிழ்ச்சியில் இருக்க, “என்ன அக்கா ரொம்ப ஹாப்பியா” என்று தன் உடன் பிறப்பை பார்த்து கேட்டான் கேசவன்.
“பின்ன இருக்காதா கேசவா! இனி அந்த முல்லை தொல்லை நமக்கு இல்லடா. இந்த சொத்து முழுக்க நம்மகிட்ட மட்டுமே இருக்க போகுது” என்று பார்வதி சொல்ல,
“அப்படினு நினைத்தால் உன்னை விட ஒரு முட்டாள் வேற யாரும் இல்லை” என்றான் கேசவன்.
“என்னடா தம்பி சொல்லுற! அப்போ இந்த சொதுக்கு எல்லாம் நான் சொந்தக்காரி யாக முடியாதா” என்று பார்வதி அதிர்ச்சி அடைய,
“வாய்ப்பே இல்லை” என்றான் கேசவன்.
“அக்கா... இப்போதைக்கு முல்ல சொத்து வேண்டான்னு எழுதி கொடுத்தாலும் நாளைக்கு அவளுக்கு பிறக்க போற பிள்ளைக்கு தாத்தா சொத்துல எல்லா உரிமையும் இருக்கு. அதனால தான் சொல்லுறேன்,என்ன நடந்தாலும் முல்லை கழுத்துல நான் தாலி கட்டி, அவளை இந்த வீட்டோட அடைச்சு வைக்கணும் அக்கா” என்ற கேசவனின் முகம் கொடூரமாக மாறியது.

“ஆனா... அந்த பாண்டியன் தான் முல்லைக்கு அவன் பையனை கல்யாணம் பண்ணி தர போறதா சொன்னானே” என்று பார்வதி கேட்க,
“அவன் சொன்னா போதுமா. யார் என்ன சொன்னாலும் முல்லை என்னோட பொஞ்சாதி மட்டும் தான். அவளை மறுபடியும் எப்படி இங்க அழைச்சிட்டு வரதுனு எனக்கு தெரியும்” என்ற கேசவனின் மூளை அதி வேகமாக தவறான பாதையில் முல்லையை அடைய தயாரானது.
நாள் முழுவதும் கதிர்வேலன் வீட்டுக்கு வராமல் இருக்க, ஒரு நாளைக்குள் மூன்று முறையேனும் தன் அண்ணனிடம் அலைபேசி வாயிலாக பேசும் ரோஜா இன்று கதிர்வேலனை அழைக்காமல் இருக்க,
“என்ன ரோஜா! நைட் மணி ஒன்பது ஆச்சே, ஏன் இன்னும் கதிர் மாமா சாப்பிடல வரல” என்று கேட்டாள் மீனா.
மீனா கேட்ட அதே கேள்வி முல்லையின் மனதில் எழுந்து இருந்தாலும், ஏனோ கஸ்தூரியின் குத்தல் பேச்சை கேட்ட முல்லைக்கு இப்போதெல்லாம் கதிரைப்பற்றி பேசவே தயக்கமாக இருந்தது.
கதிர்வேலனை பற்றி மீனா கேட்டதும்,”அவன் இந்நேரம் எங்க குடிச்சிட்டு கவுந்து படுத்துகிட்டு இருக்கானோ” என்று கஸ்தூரி சொல்ல, அதே தருணம் ஜீவானந்தமும் பாண்டியனும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
வெளியே சென்று வரும் நபர்களுக்கு உடனே அருந்த தண்ணீரை கொடுக்கும் வழக்கம் முல்லைக்கு இருப்பதால், அவளும் ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துவந்து பாண்டியனிடம் நீட்ட,”எப்படியெல்லாம் எல்லோரையும் கைக்குள்ள போட்டு வச்சிருக்கா பாரு. நான் பெத்தது தான் எதுக்கும் பிரயோஜனம் இல்லை” என்று முணுமுன்னுத்தார் கஸ்தூரி.
பாண்டியன் குடித்த நீர் குவளையை ஜீவானந்தன்னிடம் கொடுத்த பாண்டியன்,”என்ன இன்னும் கதிர் வீட்டுக்கு வரலையா?” என்று கேட்டார்.
“ஹ்ம்...உங்க சின்னப் பையன் சீக்கிரம் வீட்டுக்கு வந்தா மழை வானத்தை பொளந்துகிட்டு ஊத்துமாச்சே” என்று கஸ்தூரி செல்ல,
உண்மைக்கு இடியுடன் கூடிய மழையில் நனைந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார் கதிர்வேலன்.
“டேய் என்ன டா நீ, மழை வருதுன்னு தெரியும் தானே,ஏன் ஓரமா நின்னு வந்தா என்ன!? முல்ல... அவனுக்கு துண்டை எடுத்துக்கொடு” என்று ஜீவானந்தம் சொல்ல,தன் அருகே இருந்த துண்டை எடுத்த முல்லை அதை மீனாவிடம் கொடுத்த பிறகு சமையலறைக்குள் சென்று நின்றுக் கொண்டாள்.
வீட்டில் உள்ள அனைவரின் தேவை அறிந்து நடந்துகொள்ளும் முல்லைக்கு கஸ்தூரியின் பேச்சைக்கேட்டத்தில் இருந்து எந்த வேலை செய்தாலும் அதில் தயக்கம் இருக்க, முல்லையின் மாற்றத்தை பார்த்த ரோஜாவிற்கு கஸ்தூரி மீது தான் கோவம் எழுந்தது.
“டேய் போய் டிரஸ் மாத்திட்டு வா சாப்பிடலாம்” என்று ஜீவானந்தம் தன் தம்பியை அழைக்க, இன்றும் கதிர்வேலன் குடித்து இருப்பதை ரோஜா கண்டுகொண்டவள், தன் அண்ணனிடம் பேசாமல் சமையலறைக்குள் புகுந்துகொண்டாள்.
இவர்கள் அனைவரும் ஒன்றாக இரவு உணவை முடித்ததும்,” ஜீவா... நாளைக்கு காலையில் ஐந்து மணிக்கு கிளம்புனா தான் சரியா இருக்கும், நீ நேரத்தோட போய் படு” என்ற பாண்டியன் அவர் அறைக்குள் செல்ல,
“சரி எல்லோரும் போய் தூங்குங்க” என்ற ஜீவானந்தம் முல்லையை பார்த்து கண்கள் சீமிட்டி,”குட் நைட் முல்லை” என்றவாறு தன் அறைக்கு சென்று இருந்தார்.
இன்று தன் நண்பனின் வீட்டுக்கு செல்லாமல் அவர் அறையிலேயே உறங்க சென்ற கதிர்வேலனை,”மாமா...” என்று மீனா அழைக்க,மீனாவிடம் முகம் கொடுத்து பேசாமல் தன் அறைக்குள் சென்று கதவை ஓங்கி அடித்து சாத்திகொண்டார் கதிர்வேலன்.
“ப்ச்... இந்த மாமாகிட்ட நம்மனால தனியா பேசவே முடியல” என்று மீனா புலம்பிக்கொண்டே வேறொரு அறைக்கு செல்ல, அங்கே கஸ்தூரி தன் மகளுக்காக காத்து இருந்தார்.
“என்ன அம்மா... ஏன் இந்த நேரத்துல வர சொன்ன, ரோஜாவும் முல்லையும் தூங்க போயிட்டாங்க, சீக்கிரமா சொல்லு என்ன விஷயம், எனக்கு தூக்கம் வருது” என்று மீனா சொல்ல,
“அடியே... தூக்கமா முக்கியம். இங்க பாரு, நான் சொல்லுறத நல்லா கேட்டுக்கோ. நாளைக்கு புடவை நகை எல்லாம் எடுக்க போகும் போது, முல்லையை விடவே நீ அதிகமா வாங்கிக்கோ.அதே மாதிரி உனக்கு வாங்குற முகூர்த்த புடவையை அவளை தொடவே விடாதே” என்று கஸ்தூரி தன் மகளுக்கு தூபம் போட்டார்.
“ஏன் அம்மா... முல்லை தொடுறதால என்ன ஆகப்போகுது” என்று மீனா கேட்க,
“அவ ராசி இல்லாத பொண்ணு டி. அவ பிறந்ததும் நல்லா இருந்த என் அக்கா போய் சேர்ந்துட்டா. அவளை கூட வச்சிக்கிட்டா அவ அப்பனுக்கே பிரச்சனைன்னு தான் அவளை ஹாஸ்டளுக்கு அனுப்பி படிக்க வச்சான் முருகன். அதான் சொல்லுறேன். நீ அவகிட்ட கொஞ்சம் தள்ளியே இரு.
நாளைக்கு நான் கடையில வச்சி இதெல்லாம் சொன்னால் அந்த ரோஜாவும் கதிரும் என்கிட்ட சண்டைக்கு வருவாங்க. அதனால தான் நான் உன்னை தனியா அழைத்து வந்து சொல்லி தறேன்” என்று கஸ்தூரி இல்லாதலையும் பொல்லாதத்தையும் சொல்லிக்கொடுக்க,
“சரி சரி நான் பார்த்துக்குறேன் நீ தூங்கு” என்ற மீனா அந்த அறையில் இருந்து வெளியே வர, அப்போது தான் கையில் தண்ணீர் பாட்டிலுடன் முல்லை சமையலறைக்குள் நுழைந்தாள். “ஐயோ நம்ம பேசுனத முல்லை கேட்டு இருப்பாளா” என்று மீனா நினைத்துக்கொண்டே ரோஜாவின் அறைக்குள் நுழைய, அங்கே ரோஜா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் அருகே மீனாவும் படுத்துக்கொண்டாள்.
நீண்ட நேரம் கடந்தும் முல்லை சமையலறையில் கண்களில் கண்ணீருடன் நின்று இருந்தவள், சற்று முன்பு கஸ்தூரி மீனாவிடம் பேசிய உரையாடல்கள் அணைத்தையும் கேட்க நேர்ந்தது.
“உண்மையில் நம்ம ராசி இல்லாத பொண்ணு தானா!? அதனால தான் நம்ம முதலில் அவர் கூட வாழணும்னு ஆசைப்பட்ட அந்த வாழ்கை நமக்கு கிடைக்காமல் போச்சா!” என்று முல்லை ஆதங்கத்தில் வாய்விட்டு புலம்ப...
“என்ன சொல்லுற நீ! அப்படி யார்கூட நீ முதல்ல வாழ ஆசைப்பட்ட வாழ்கை உனக்கு கிடைக்காமல் போச்சு?” என்ற குரலில், முல்லை திடுக்கிட்டு திரும்பியவளின் முன்னே புருவம் இடுங்க நின்று இருந்தது....

🫶என் கதையை படித்து கருத்து தெரிவிக்கும் வாசகர்களுக்கு நன்றி.
Thank you to the readers who read my story and shared their thoughts.🌹
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top