Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் – 15
“எந்தச் சிந்தனையும் இல்லாமல் அவர் உலகம் அப்படிச் சட்டென நின்று போகும் அளவிற்கு நான் என்ன சொல்லிவிட்டேன்? நான் சொன்னது அவருக்குப் புரிந்ததா? இல்லையா? எனக்கு அந்த நேரத்தில் எதுவும் பிடிபடவில்லை. அவர் இருப்பிடம் போய்ச் சேர்ந்த பிறகு வரும் அழைப்பிற்காக நான் காத்திருந்தேன்.“
“அவர் நான் சொன்னவாரே வீடு போய்ச் சேர்ந்ததும் எனக்கு மீண்டும் அழைத்தார்.”
நான் என் சில்லறை வேலைகளை முடித்துவிட்டு படுக்கையில் ஒரு ஓரமாகக் கவிழ்ந்து கிடந்தேன். அவன் என் செல்ஃபோனுக்கு அழைப்பு விடுத்தான் சதிகாரன். பேசினோம் இருவரும்.
“நான் வீட்டுக்கு வந்துட்டேன். நீங்க என்ன சொல்ல வந்தீங்க எனக்கு ஒன்னும் புரியலை.”
“எதைக் கேக்குறீங்க?”
“ம்ம்ம் மீண்டும் முதல்ல இருந்தா?“
“சரி மனச போட்டுக் குழப்பிக்காம அமைதியா போய்ச் சாப்பிட்டு படுத்துத் தூங்குங்க.”
“அதெல்லாம் இருக்கட்டும். நான் வர்ற வழியிலேயே சாப்பிட்டுட்டு வந்துட்டேன்.”
“ஓ சரி சரி. நீங்க நல்ல விபரமான ஆள்தான். இந்நேரத்துக்கு அந்த ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல நின்னு எனக்குக் கால் பண்ணி பயமுறுத்தி விட்டு நீங்க மட்டும் நல்லா வயிறு முட்டச் சாப்பிட்டுட்டு போய்ட்டீங்க.”
“நீங்க இன்னும் சாப்பிடலயா?”
“இல்லை. நீங்க அப்படி சொன்னதும் எப்போ வீட்டுக்குப் போய்ட்டு கால் பண்ணுவீங்கனு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.”
“ம்ம்ம் அதான் இப்போ பத்திரமா வீட்டுக்கு வந்துட்டேன்ல? நீங்கப் போய்ச் சாப்பிட்டுட்டு வாங்க.”
“சாப்பிட்டதுக்கு அப்புறம்லாம் பேச முடியாது. ஆல்ரெடி ரொம்ப லேட். இந்த நேரத்துக்கு மேல நான் இப்படி ஃபோன் பேசிட்டு இருக்குறத யாராவது பார்த்தா பிரச்சனைதான்.”
“ஓ அப்படியா? அப்போ சரி நீங்கச் சாப்பிட்டுட்டு தூங்குங்க.”
“நான் உண்டாக்குன குழப்பத்த நானே தீர்த்துத் தெளிவு படுத்திட்டுப் போறேன். உங்களுக்கு என்ன குழப்பம்னு சொல்லுங்க?”
“அதான் ஆட்டோவில் ஏறுறதுக்கு கொஞ்சம் முன்னாடி என்னவோ சொன்னீங்கள்ல அதே விஷயத்த குழப்பாமல் உலறாமல் கொஞ்சம் ரத்தினச் சுருக்கமா மூனு வார்த்தையில சொன்னா நானும் அதைக் கேட்டுட்டு நிம்மதியா தூங்குவேன்.”
“எது மூனு வார்த்தையில சொல்லனுமா?”
“ஆமாம். லவ்வர்ஸ்னா ஹார்ட் டு தி ஹார்ட் கனெக்ஷன் இருக்கனும். நீங்க என்னடானா ஒன்பது மலைய சுத்தி வந்து ஏதோ பேசி என்னையும் சுத்த விடுறீங்க.”
“என்ன? லவ்வர்ஸா? யாரு?”
“நீங்களும் நானும்தான்.”
“அப்படினு நான் சொன்னனா? சும்மா எதையாவது கற்பனை பண்ணி வச்சிட்டு கடைசியில பைத்தியம் ஆகிறாதீங்க.”
“நீங்கச் சொல்லாட்டியும் அந்தக் கத்தி விழிப் பார்வையும் பக்கம் பக்கமா பேசிய வசனமும் உங்க மனச என்கிட்ட சொல்லிருச்சு. உங்க வாயும் அதைச் சொன்னால் நூறு சதவிகிதத் தெளிவோடு உறங்குவேன். இப்படிதான் நான் பைத்தியமாகனும்னு இருந்தால் நான் அதுக்குத் தயார்.”
“அவன் இப்படிச் சொன்னதும் எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் உண்மை. அவனுக்கு என்னையும் எனக்கு அவனையும் மனதளவில் மிக ஆழமாகப் பிடித்திருந்தது. ஆனால் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு எதுவும் தெரியாது. எனக்கு அவன்மீது காதல் இருந்தாலும் அவனைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ளாமல் வெளிப்படுத்துவதில் துளியும் விருப்பம் இல்லை. அதனால் அவன் காதல் நோக்கத்தோடு பேசும்போதெல்லாம் அதிலிருந்து தப்பிக்க வேறு ஏதாவது வேலையை என்மேல் போட்டுக்கொண்டு தப்பி விடுவேன்.”
“எனக்கு அவனைப் பார்த்ததும் பிடித்தது. ஆனால் ஏதோ ஒன்று என்னைத் தடுக்கிறது என்பது அவனுக்கு இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் புரிந்தது. அவனுக்கு என்னை விடாபிடியாகப் பிடித்து வார்த்தையை வாங்க மனமில்லை. அதேசமயம் இவள் இழுத்தடிக்கிறாள் என்று சளித்துப் போய் என்னைத் தூக்கியெறியவும் இல்லை. என்னுடைய எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருந்தான். அவனுடைய காத்திருப்பு அவன் மீதிருந்த காதலை பெருக்கிக் கொண்டே இருந்தது.”
“இந்த உறவிற்குப் பெயர் என்ன? இந்த உறவு தொடருமா? தொடராதா? என்று எதுவுமே தெரியாமல் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நானும் அவனும் பேசிக்கொண்டிருந்தோம். அந்த மூனு மாதமும் மொத்தமாகவே இரண்டு முறை சந்தித்தோம். ஒரு நாள் விட்டு ஒருநாள் அலைபேசியில் பேசினோம். ரொம்ப நேரம் இல்லை. அதிகபட்ச உரையாடலே ஐந்து நிமிடங்களாகத்தான் இருந்தது. அவனுடன் பேசிப் பழகிய அந்த மூன்று மாதமும் அவன் பெயரைத் தவிர வேறு எதைப்பற்றியும் தெரிந்து கொள்ள சந்தர்ப்ப சூழ்நிலை அமையவில்லை.”
“அவன் அழைக்கும் நேரம் நான் அழைப்பை ஏற்பதில்லை. அந்த நேரம் அவன் என்மீது கோபமோ வெறுப்போ அடைவதில்லை. அதற்கு மாறாக அவன் காத்திருக்கிறான். அந்தப் பொறுமை எனக்கு எப்போதும் இருந்ததில்லை. வழக்கத்திற்கு மாறாக ஒரு நாள் நானாகவே அவனுக்கு அழைத்தேன். ஆனால் அவன் அந்த அழைப்பை ஏற்கவில்லை. அவனுக்கு அழைத்துவிட்டுக் காத்திருந்த நேரம் என்னவோ முப்பது நொடி மட்டும்தான். அந்த முப்பது நொடி கடந்து அழைப்பு அதாகவே துண்டித்ததும் அடக்கவியலா கோபம் எனக்கு.”
“நான் அழைத்து அவன் ஏற்காமல் இருப்பது ஏதோ நான் தோற்றுப் போனதைப் போலச் சோர்வடையச் செய்தது. ஒரு அறை மணி நேரம் என்னால் இயல்பாக இயங்க முடியவில்லை. அவனைக் குத்திக் கொல்லும் அளவிற்கு ஆத்திரம் என் கண்ணை மறைத்தது. கோபத்தில் நிலை புரியாமல் என் கட்டுப்பாட்டை இழந்து தடுக்கி விழுந்தேன். விழுந்த வேகத்தில் என் பின்னங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட வலி என் ஆத்திரத்தைக் குறைத்தது. ஒரு கணம் யோசித்தேன் அவன் எந்த அளவிற்கு இந்த வலியை அனுபவித்திருப்பான் என்று.”
“கோபப்படுவது எளிது ஆனால் பொறுமை காப்பது கடினம். கடந்து செல்வது எளிது காத்திருப்பது கடினம். எளிமையான எல்லாவற்றையும் நான் எடுத்துக் கொண்டு கடினமான அனைத்தையும் அவன் தலையில் போட்ட போதும் கூட அவன் என்னை இறுக்கிப் பிடித்திருப்பதற்குப் பெயர்தான் காதல் என்று எனக்குப் புரிந்தது.
இப்படிப்பட்ட ஒருத்தனோடுதான் என் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் முடிவுசெய்தேன்.”
“முடிவு செய்த அந்த இரவு அவன் எனக்கு அழைத்திருந்தான். இருவரும் எப்போதும் போலப் பேசினோம். நான் அவனுக்கு அழைத்திருந்ததைக் கண்டு அவன் ஆச்சரியப்பட்டதாகவும் என்னை நினைத்துச் சந்தோஷப்பட்டதாகவும் சொன்னான். அவன் வேலையில் ஈடுப்பட்டிருக்கும் நேரம் செல்ஃபோன் ஒரு ஓரமாக இருக்கும். அந்த நேரத்தில் அழைத்தால் வேலை ஆர்வத்தில் அந்தச் சத்தம் கேட்காது என்றான். நானும் சரியென்று சொல்லி முடித்தேன்.”
“அடுத்த நாள் பேசும்போது இன்றும் நான் அழைப்பேன் என்று நினைத்து வேலை நேரம் முழுக்க செல்ஃபோனைக் கையருகே வைத்திருந்ததாகச் சொன்னான். நான் நினைத்ததைவிட அவனுக்கு என்மீது அதீத அன்பு. அதனால் நாட்களை இன்னும் தள்ளிப்போட வேண்டாம் என்று முடிவு செய்தேன். மறுநாள் சாயங்காலம் கோவிலுக்கு வரச் சொன்னேன். அவனும் வந்து வழக்கம்போல எனக்காகக் காத்திருந்தான்.”
“அவனைத் தூரத்திலிருந்து பார்த்ததும் சிறு தடுமாற்றம். ஏற்கனவே பழக்கப்பட்டிருந்தாலும் அன்று ஏனோ மீண்டும் புதிதான ஆள்ப் போலத் தெரிந்தான். அந்த நாள் அவனிடம் அவனைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துவிட்டு என் ஒப்புதலைக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நாளை இன்னும் சிறப்பாக மாற்ற அவன் எனக்காக வாங்கிக் கொடுத்த சேலையை அணிந்து அவன் அருகே சென்று நின்றேன்.”
“வழக்கத்தைவிட குறைவான ஆட்களே கோவிலில் இருந்தார்கள். அதனால் அதிக நேரம் மனசு விட்டுப் பேசும் வாய்ப்பு உருவானது. என்னைப் பார்த்ததும் எழுந்து நின்றவன் திகைத்துதான் போனான். அவனுக்கு என்னைக் கண்டதும் சில பல கோளாறுகள் உண்டாகியிருக்கும் போல அவன் முகத்தில் தயக்கமும் தவிப்பும் இருந்தது. ஆனால் எனக்கு அவன் அளவுக்கு இல்லை. சற்றுக் குறைவாகவே இருந்தது. காரணம், இதுதான் நடக்கப் போகிறது என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால் அவனுக்கு எதுவுமே தெரியாது. நான்கு கண்களும் சந்தித்து நினைவு திரும்பியதும் பேச வாயெடுத்தான்.”
“பாக்க ரொம்ப லட்சணமா இருக்கீங்க. இந்தச் சேலை உங்களுக்கு இவ்ளோ நல்லா இருக்கும்னு நான் எதிர்பாக்கலை.”
“நிஜமா நல்லா இருக்கா?”
“ம்ம்ம். சத்தியம்.”
“சாமி கும்பிட்டு வந்து பேசலாமா?”
“சரி.”
“அவனை ஒவ்வொரு முறை நெருங்கும்போதும் பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறான். என்னை இந்த அளவிற்கு பொருட்படுத்தும் ஆளை என் வாழ்வில் சந்தித்ததில்லை. இத்தகைய அன்பும் ஆதரவும் எனக்கானதா என்று அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு. அவன் நான் என்ன சொன்னாலும் ஒப்புக் கொள்வான். அவனது ஒவ்வொரு பேச்சிலும் தீர்க்கமான தெளவு இருக்கும். அவனுடைய இந்தப் பண்பு, அவன் எனக்காக எதையும் செய்வான் என்கிற மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.”
“அந்த நம்பிக்கை எனக்குக் காலம் முழுவதும் தொடர வேண்டும் என்கிற வேண்டுதலைத் தெய்வத்திடம் வைத்துவிட்டு, அவனைப் பார்த்தேன். அவன் உதடுகள் முனுமுனுத்துக் கொண்டிருந்தது. அவனும் என்னைப் போல எனக்காகவும் அவனுக்காகவும்தான் வேண்டியிருப்பான் என்று எனக்குத் தெரியும்.”
“சாமி தரிசனத்திற்குப் பிறகு ஒரு அமைதியான இடத்தைப் பிடித்து இருவரும் உட்கார்ந்தோம். அவனிடம் எப்படித் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. பயமும் காதலும் மாறி மாறிப் போட்டி போட்டு அடித்துக் கொண்டிருந்தது. இரண்டையும் பின் தள்ளி முதலில் மனதில் பட்ட விஷயத்தைத் தெரிவித்துவிடலாம் என்று தைரியத்தைக் கூட்டித் தயாரானேன். அதற்குள் அவனே பேசத் தொடங்கிவிட்டான்.”
“நான் ஒன்னு கேட்டால் தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே? பொதுவா இப்போ இருக்க பொண்ணுங்க தினமும் சேலை கட்டுவதில்லை. எதாவது விசேஷ நாட்களில் மட்டும்தான் கட்டுகிறார்கள். நீங்களும் அப்படித்தான். அதனால் இன்னைக்கு என்ன விசேஷமான நாள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”
“விசேஷம் என்று ஒன்றுமில்லை. இன்னைக்கு என்னுடைய பிறந்தநாள்.”
நான் இதைச் சொன்னதும் சற்று மெலிதாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு துளி வெட்கமும் கலந்திருந்தது. பார்க்க மிக அழகாய் இருந்தான்.
“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.”
“மிக்க நன்றி. ஆனால் எனக்கு இந்த வாழ்த்து மட்டும் போதாது.”
“பரிசுப் பொருள் எதிர்பார்க்குறீங்களா? அதெல்லாம் சும்மா கலக்கியர்லாம். உங்களுக்கு இன்னைக்கு எத்தனாவது பிறந்த நாள்னு மட்டும் சொல்லுங்க அத்தனை பரிசு வாங்கி குவிச்சர்லாம்.”
“ஐயோ அதெல்லாம் வேண்டாம்.”
“வேறு என்ன வேணும்?”
...தொடரும்...