Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 38
- Thread Author
- #1
அத்தியாயம் – 1
சிரிப்புடன் வரவேற்க சிலரும், கண்ணீரோடு வழியனுப்பச் சிலுரும் கும்பலாக நிறைந்திருந்தார்கள். நீண்ட நெடு ஒட்டி வைத்த பெட்டிகள் கூச்சலிட்டுக் கொண்டு, வரவும் போகவுமாக இருந்தார்கள். அவைகள் அனைத்தும் மறக்கவியலா பயணங்களை நமக்குப் பரிசாக்கும் தேவ தூதுவர்கள். அவைகள் நம் அனைத்து வகையான உணர்வுகளையும் மறையச் செய்து பயணத்தின் போதையில் நம்மை மூழ்கச் செய்து யாராலும் வேறு எதாலும் கொடுக்க முடியாத சில அறிய தெளிவுகளைக் கொடுத்து, நம் வாழ்வை வழிநடத்தும் ஆயிரங்கால் பிராணிகள்.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பொருட்களையும், பொறுப்புகளையும், உணர்வுகளையும் கடத்திச் செல்லும் அந்த வலிமையான இரும்புப் பூச்சி நமக்குச் சில சந்திப்புகளைத் தித்திப்பாய்க் கொடுத்துவிடுகிறது.
இரட்டைக் கோட்டு இரும்புப் பாதையில் சிக்குப் புக்கு சிக்குப்புக்கு என்று சத்தமிட்டுக் ஓடிக்கொண்டிருந்த ரயில் வண்டியில் நான் இன்று பயணித்தேன்.
எப்போதும் அதில் பயணிப்பதில் எனக்கு ஆசையைக் காட்டிலும் அச்சம்தான் சற்றுக் கூடுதலாக இருக்கும்.
இன்று எதிர்பாராத விதமாக என் மனதிலிருந்த அச்சம் உடைந்தது. அந்தச் சிதறலுக்குப் பிறகு எனக்குள் தனித் தனியாகப் பல பகுதிகள் இருப்பதையும், அந்த ஒவ்வொரு பகுதிக்கும் என்னால் செய்ய வேண்டிய சில நியாயங்கள் பாக்கி உள்ளது என்பதையும் நேற்று இரவு உணர்ந்தேன்.
அந்தப் பகுதியில் ஒன்றுதான் பயணம். நாகரீமான நகர வாழ்க்கையில் நான் வாழ்ந்து கொண்டிருந்தாலும், ஒருநாளும் நான் இவ்வூர் மக்களோடு ஒத்துப்போனது கிடையாது. எந்தவொரு போக்குவரத்து வசதியும் இல்லாத கிராமப் பெண் போலத்தான் நானும் வெளியே எங்கும் போவதில்லை. இப்பிரபஞ்சம் எவ்வளவு தாராளமாகப் பரந்து விரிந்திருந்தாலும், நான் எனக்காக உருவாக்கிக் கொண்ட உலகம் மிகச் மிகச் சிறியதே.
என்னுடைய உலகில் என்னுடைய சிறிய வீடும், என்னுடைய அலுவலகமும், அங்கு வந்து செல்லும் மக்களும்தான். அந்த மக்களும் நிரந்தரமானவர்கள் அல்ல. என்னைச் சந்திக்க வருவார்கள் காரியம் முடிந்ததும் காணிக்கையை செலுத்திவிட்டுப் பறந்து மறைந்துவிடுவார்கள். பல பேர் வந்து போவதால் நான் அவர்களை எல்லாம் எனக்குள் பதிவு செய்வதில்லை. எனக்காக எப்போதும் கதவைத் திறக்கும் என் வீடும் என் அலுவலகமும்தான் எனக்கான நிரந்தரம்.
அதற்குள்ளே சுழன்று கொண்டிருக்கும் ஒரு குழப்பமான உருவம்தான் நான்.
எனக்குச் சந்தோஷம், வருத்தம், சிரிப்பு, கண்ணீர், ஆறுதல், சண்டை, கொண்டாட்டம், பண்டிகை, நட்பு, பகையென எதுவும் கிடையாது. அதை எடுத்துக்கொள்ளும் சூழல் ஏற்பட்டாலும் என் கையை மடக்கிப் பைக்குள் திணித்துவிடுகிறேன். எனக்கு அதிலெல்லாம் ஈடுபடுவதில் விருப்பமும் இல்லை. அவற்றைப் பெற்றுக்கொண்டும் பிறருக்குத் திரும்பச் செலுத்திக் கொண்டும் நேரத்தை வீணடிப்பதில் துளியும் ஆர்வம் இல்லை.
காலை எழுந்ததும் என் வீட்டு மாடித் தோட்டத்தில் செடிகளைக் குளிப்பாட்டிவிட்டு, எனக்காக ஒருகோப்பைத் தேனீரைத் தயாரித்துக் கையில் வைத்துக் கொண்டு, அதைச் சுவைத்துக் கொண்டே புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருப்பேன். அதன்பிறகு காலை உணவு தயார் செய்து சாப்பிட்டுவிட்டு அலுவலகம் செல்ல நேரம் சரியாக இருக்கும்.
அலுவலக வேலை அனைத்தையும் பிசிர் இல்லாமல் செய்து முடித்துவிட்டு, என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு இடத்தில் என் மாலைப் பொழுதைச் செலவிடுவேன்.
சூரியன் சாய்ந்து மறைந்ததும் உடனே வீட்டிற்குத் திரும்ப வந்துவிடுவேன். இரவு நேர உலகம் எப்படி இருக்கும் என்று பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது.
என்னுடைய வீட்டின் கதகதப்பும் தாராளமும் வெளியே எங்கும் எனக்குக் கிடைத்துவிடப் போவதில்லையென நான் முழுமையாக நம்புகிறேன். என் வீட்டில் கிடைக்கும் ஆசுவாசத்தை அனுபவித்தபடியே இரவு உணவு சமைத்துச் சாப்பிடுவேன். மனதிற்குத் தோன்றினால் சில சமயம் பெயிண்ட்டிங், கூடை பின்னுவது, ஆடை தைப்பது, பாடல் கேட்பதெல்லாம் செய்வதுண்டு.
சனிக்கிழமை இரவு சிலவற்றை மறக்க மது. ஞாயிற்றுக்கிழமை மதிய உறக்கம். மீண்டும் திங்கட்கிழமை தொடங்கியதும் ஓட்டமும் தொடங்கிவிடும். இப்படித்தான் என் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சுழற்சியில் எனக்குத் தலைச் சுற்று வருவதில்லை. மாறாக, நான் சுழல்வது நின்றால்தான் தலைச் சுற்றல் வருகிறது. அதனால், என் வழக்கமான திட்டங்களைத் தள்ளி வைக்கவோ மாறுதல் செய்யவோ ஒருநாளும் நினைத்ததில்லை.
இதுதான் வாழ்க்கையென வரையறுத்துக் கொண்டு ஒரு நிலையான அட்டவணைப்படி ஓடிக்கொண்டிருந்த என்னை ஒரு குழந்தையின் புன்னகை நிறுத்தியது.
வழக்கம்போல நேற்றுக் காலை இரயில் நிலைய நடைமேடையில் நான் நின்று கொண்டிருந்தேன். நேற்று ஏனோ சூரியக் கதிர்களுக்குப் பதிலாக மழைத் துளிகள் அவ்விடத்தை நிரப்பி வழிந்து, ஓடிக் கொண்டிருந்தன. என் கண்ணில் பட்டவர்களில் சிலர் கலர் குடையுடனும் பலர் கருப்புக் குடையுடனும் அலைமோதிக் கொண்டிருந்தார்கள். ரயில் நிலையம் சலசலப்பாகக் காணப்பட்டது.
அங்கிருந்து நான் கிளம்புவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அப்போது எனக்கு முன்னே முதல் தண்டவாளத்தில் மஞ்சள் நிற கவுனுடன் ஒரு ஆறுமாத பெண்குழந்தையைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் என் தொண்டையைக் கவ்விப் பிடிப்பது போலவும் அடிவயிற்றில் குளிர் காற்று அடிப்பது போலவும் ஒரு இனம் புரியாத உணர்வை உணர்ந்தேன். அந்த உணர்வு எனக்கு அதுவரை அறிமுகமில்லாதது. என் உலகம் மங்கிய பிறகும் என் பார்வையில் அந்தப் பெண் குழந்தை மட்டும் மின்னிக்கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததும், எனக்குள் இருந்த ஆறு வயது சிறுமி வண்ணப் பட்டாம்பூச்சியைப் பார்த்ததும் இதயம் நெஞ்சைவிட்டுக் கண்கள் வழியே வெளியேறி, எல்லாவற்றையும் மறந்து அதன் பின்னால் போவது என் மனத்திரையில் படமாக ஓடிப் பின் களைந்தது. அந்தப் பத்து வயது சிறுமிக்குப் பட்டாம்பூச்சியின் மேல் இருந்த அளவில்லாத ஆசையும் அதை எட்டிப்பிடிக்கும் ஆர்வமும்தான் எனக்கு அந்தக் குழந்தையைப் பார்க்கும்போது இருந்தது.
என்னையறியாமல் என் கால்கள் அந்தக் குழந்தையின் புன்னகையை அள்ளிக்கொள்ள நடந்தன. ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த ரயில் நகர்ந்தது.
எப்படியாவது ஏறிவிட வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. எனக்கு ஏன் அந்த எண்ணம் வந்ததென்றும் புரியவில்லை. அந்தக் குழந்தையோடு உறவு கொண்டாட எனக்கு என்ன உரிமை உண்டுனெ என்னை நானே கேட்டுக்கொண்டேன். அதற்கும் எனக்கு விடை தெரியவில்லை.
சிக்கலான மனநிலையிலிருந்து வெளிவரத் தேவை இல்லாமல் முயற்சித்து நேற்று இரவு முழுவதும் தூங்காமலேயே இருந்தேன். என் கண்களை விட்டுத்தான் அந்தக் குழந்தை மறைந்ததே தவிர, என் மனதிலும் உயிரிலும் பெருவெள்ளமாய் ஓடிக் கொண்டுதான் இருந்தது.
காலை எப்போதும் போல அந்த இரயில் நிலையத்திற்குச் சென்றேன். இன்றும் அந்தக் குழந்தை என் கண்ணில் படும் என்கிற பேராசையில் என் வளர்ந்து முதிர்ந்த அறிவு முட்டாள்தனமாக நம்பிக் கொண்டிருந்தது. கண்கள் அந்தக் குழந்தையைப் பார்க்க முடியாத ஏமாற்றம் கண்ணீராய் வழிந்தது.
திடீரென யாரோ பெயர் தெரியாத நபர் ஒழுங்கற்ற உருவத்தில் வந்து என் கையைப் பிடித்து அந்த ரயிலில் ஏற்றி, ஒரு ஜன்னலோர இருக்கையில் என்னை அமரச் செய்துவிட்டு, ஜன்னல் கம்பிகளுக்கிடையே நுழைந்து வெளியேறித் துகளாய் மாறிக் காற்றில் மறைந்தார். என்னுடைய சுய விருப்பமும் தெளிவும் இல்லாமல் ஏதோ ஒரு யோசனையில் ரயில் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.
என் பார்வை படும் இடமெல்லாம் அந்தக் குழந்தை சிரித்து, தவழ்ந்து விளையாடுவது போலவேத் தோன்றும். ஆனால் உற்றுப்பார்த்தால் வேறு ஏதோ ஒன்று.
மஞ்சள் நிறத்தில் எதைப் பார்த்தாலும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற ஒரு எண்ணம் எனக்குள் பூத்துப் பூத்து உதிர்ந்தது.
அந்த ரயில் முழுக்க வேறுபட்ட வாழ்க்கை ஓட்டம்தான். பல மொழிகள், பல உருவங்கள், பல குணங்கள் என ரக ரகமாய் மனிதர்களைப் பார்த்தேன். அவர்கள் அனைவரும் என்னைப் போலவே ஏதோ ஒன்றினைத் தேடிப் போக வேண்டும் இல்லையென்றால் தானே தொலைந்து போக வேண்டும் என்றுதானே பயணிக்கிறார்கள் என்று மனதிற்குள்ளே மனுமுனுத்தேன்.
நின்றுகொண்டிருக்கும்போது கரைச்சலாக இருந்தது, நகர்ந்ததும் மெல்ல மெல்ல அமைதி கண்டது ரயிலும் என் மனதும்.
காலியான மனநிலையில் வெறுமெனச் சுற்றித்திரிந்தது என் எண்ணங்கள். எந்தவிதமான அசைவுகளும் இல்லாவிட்டாலும் நகர்ந்தது உலகம்.
ஜன்னலுக்கு வெளியே விறுவிறுவென ஓடிக்கொண்டிருந்த இயற்கையுடன் மௌனமான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். அப்போது என் இடது கன்னத்தில் ஒற்றைச் சொட்டு நீர் பட்டது. உடனே திரும்பினேன், என்னுடைய பக்கத்து இருக்கையில் ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்தாள். அவளை அப்போதுதான் பார்த்தேன். உணர்ந்தேன்.
அவளுடைய மனநிலை என்னுடையதைவிட மிகக் கவலைக்கிடமாக இருப்பதைப் புரிந்துகொண்டேன். அவளுடைய சோகம் தாங்கிய முகமும் தாளாத கண்ணீருமே அவளுடைய நிலையைப் பற்றி எனக்குச் சொல்லிவிட்டது.
அவள் என் உதவியாளராக இருக்கும் மலரைப் போலவே இருந்தாள். அதனால், அவளைப் பார்த்தவுடனே எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. அதுதான் நான் என் அலுவலகத்திற்குப் போகாமல் ஏதோ ஒரு ரயிலில் ஏறி எங்கோ போய்க் கொண்டிருக்கிறேன் என்பது. ரயில் பயணத்தின்போது இடையில் இறங்க முடியாது என்கிற காரணத்தினால் அடுத்த ரயில் நிலையம் வரும்வரை நான் காத்திருக்க வேண்டியிருந்தது.
நான் இன்று அலுவலகம் செல்ல முடியாது என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்ததால், என் உதவியாளருக்கு அழைத்து நான் விடுப்பு எடுத்துக்கொண்டேன் நீயும் அலுவலகம் வர வேண்டாம் என்றேன். மலர் திக்குமுக்காடினாள். அவளுக்கு நான் சொல்லியது புரியாததைப் போல “உண்மையாகவா? உண்மையாகவா?“ என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினாள். காரணம், நான் எப்போதும் விடுப்பு எடுத்ததே இல்லை. என்னுடைய வேலை நாட்களில் உடலில் ஏதாவது தொந்தரவு இருந்தாலும்கூட அலுவலகம் செல்லாமல் நான் இருந்ததே இல்லை.
என் தடம் சற்றுப் புரள்வதற்கான மூல காரணத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போதும் என்மேல் அவளுடைய கண்ணீர் துளி பட்டுத் தெரித்தது. இந்த முறை அவளிடம் பேச முயற்சித்தேன். நான் அழைப்பது அவளுக்குக் கேட்க்காதவாறு காதில் செவி ஒலிப்பெருக்கியை அணிந்திருந்தாள். நானும் அவளை என் பக்கம் திருப்ப என் கைகளை அவள் கண் முன்னாள் நீட்டி அசைத்தேன். அப்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் அவள் அப்படியே இருந்தாள்.
என் தலையை முன்னே கொண்டுவந்து அவள் முகத்தைப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது அவள் கண்களை இறுக்கமாக மூடியிருந்தாள். இடைவெளி விட்டு விட்டு வழியும் கண்ணீரைத் தன் கையினால் துடைத்துக் தள்ளிவிட்டு மீண்டும் அழத் தயாராகிக் கொண்டே இருந்தாள். அவளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
தொடரும் ♡➹