Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
ஓவியம்
“அப்படி அந்த இந்து உங்களை என்னன்னு கொடுமை படுத்துவாங்க?”
“இரு சொல்றேன். சரியா ஐந்து மணிக்கு எந்திரிக்கணும். வீட்டில இருக்குற எல்லா வேலையையும் செய்யனும். அப்படி இப்படின்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன். அது வீடு மாதிரியே இருக்காது. மிலிட்டரி கிரவுண்ட் மாதிரி இருக்கும். இப்படி இருந்துகிட்டே இருக்கும் போது தான், இந்துவின் பெரிய தம்பி பாண்டிக்கு, என்னுடைய அக்கா லட்சுமியை கல்யாணம் பண்ணி வெச்சாங்க. என் பாண்டியன் மாமா தங்கமான மனுஷன். அவரு என் அக்கா லட்சுமியை நல்லா பாத்துக்கிட்டாரு. ஆனால், என் அக்காவின் கெட்ட நேரம் பிரசவத்தில் என் அக்கா இறந்து ட்டாள். அவ இறந்த உடனே அவளுடைய குழந்தை கதிரை நான் தான் வளர்த்தேன்.”
“அதுக்கு நடுவுல மறுபடியும் இந்து மாசமாகி, இரண்டாவதா பெண் குழந்தை ஷாமிலியைப் பெத்தாங்க. அதுக்கப்புறம் அந்த வீட்டில எப்ப பாரு அவங்க குழந்தையை பார்த்துக்கொள்ளாமல், நான் கதிரை பாத்துக்கிறேன்னு சண்டை வந்துகிட்டே இருக்கும். நான் அதை காதில் வாங்கிக்க மாட்டேன். இப்படியே இருந்துக்கிட்டு இருக்கும் பொழுது, மறுபடியும் இந்து இதோ முல்லை இருக்கிறாள் பாரு. இவளை வயித்தில் சுமக்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் அவங்களோட சின்ன தம்பி பழனி என்னை விரும்புவதாக சொல்லி, எனக்கும் அவருக்கும் கல்யாண பேச்சு ஆரம்பித்தது. ஆனால், நான் என் கதிரை பார்த்துக் கொள்ளணும் என்பதற்காக, யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தேன்.”
“கதிருக்கு மூணு நாலு வயசு இருக்கும்போது கதிர் துறுத்துருன்னு இருப்பான். அவன் யார் பேச்சையும் கேட்கவே மாட்டான். அதுவும் இந்துவ கண்டாலே அவனுக்கு பிடிக்காது. அவன் விளையாடிக்கொண்டு இருக்கும் போது, பக்கத்துல இருக்கிற எண்ணெய் பாட்டில் கீழே விழுந்து, அதில் இந்து வழுக்கி விழுந்து முல்லை பிறந்துட்டா. குறைப் பிரசவத்தில் பிறந்ததால் இந்துக்கு கதிர் மேல இன்னும் ரெண்டு மடங்கு கோவம் வந்துச்சு. கதிரை அவங்களுக்கு சுத்தமா பிடிக்காமல் போச்சு.”
“இப்படியே வருஷங்கள் ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஆனா, முல்லையை சின்ன வயசுல இருந்தே கதிருக்கும், எனக்கும் ரொம்ப பிடிக்கும். அதுக்கு காரணம் அவ குழந்தையாக பிறந்த உடனே, முல்லை தான் உனக்கு பொண்டாட்டின்னு, நான் என் அண்ணன் சந்திரன் எல்லாரும் அவனுக்கு சொல்லிச் சொல்லி வளர்த்தோம். நான் கதிர் மேல ரொம்ப பாசமா இருந்தது, இந்துவுடைய தம்பி பழனிக்குப் பிடிக்கல. எனக்கும், பழனிக்கும் சீக்கிரம் கல்யாணம் நடந்தாகனும் என்று முடிவு பண்ணி, அன்னைக்கு எனக்கும் அந்த வெள்ளை உளுந்து பழனிக்கும் கல்யாண ஏற்பாடு நடந்தது. அப்போ கதிருக்கு 13 வயது முல்லைக்கு 8 வயது இருக்கும்.” என்றார் மூச்சுவிடாது.
“என்னாச்சு? கல்யாணம் வரை போய் ஏன் கல்யாணம் நடக்கலை?” என்று பதறினான் மணி.
“இருடா மூச்சு வாங்குது.”
“அத்தை தண்ணி குடிக்கிறிங்களா?”
“உன் அத்தை இந்த நேரத்தில் தண்ணி குடிக்காது. தண்ணி அடிக்கும்” என்றான்.
“ஏன் இங்க டேப் இல்லையா? தண்ணி அடிச்சு தான் குடிக்கணுமா?”
“அதுசரி. இந்த குடும்பத்தைப் பற்றி தெரியாம முல்லை பாப்பா சீக்கிடுத்து.”
“அடேய் அடங்கு.” என்றார் கீதா.
“சரி நீ சொல்லு?” என்றான் மணி.
கதிர்க்கு பதிமுன்று வயசு. முல்லைக்கு எட்டு வயசு இருக்கும் போது, ❤மலரும் நினைவுகள் ❤
“ஓவியா, அந்த ரூம்ல என்ன தனியா பண்ணிகிட்டு இருக்க?”
“மாமா இங்க வந்து பாரு. அங்க மேல ஒரு டப்பா இருக்குல்ல. எனக்கு அதை எடுத்து குடு.”
“அய்யோ இந்த ரூம்க்கு எல்லாம் நான் வரமாட்டேன். உன் அம்மா நான் இங்க எல்லாம் வரக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.” என்று கதிர் பதறினான்.
“மாமா மாமா அதை எனக்கு எடுத்து கொடு. எனக்கு அந்த மிட்டாய் சாப்பிடணும் போல ஆசையா இருக்கு.”
“சொல்றேன் இல்ல ஓவியா. என்னால முடியாது.”
“அப்ப என்னை உனக்கு பிடிக்கலையா? நான் உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். எனக்கு இந்த உலகத்துல என்ன வேணும்னாலும் கேளு. உனக்காக செய்ய கதிர் மாமா இருக்காருன்னு கீதா அத்தை சொன்னாங்க. அப்போ அவங்க பொய் சொன்னாங்களா? நீ எனக்காக எதையும் செய்யமாட்டியா?”
“இந்தச் சித்தி எப்படி கோர்த்து விடுது பாரு. ஏய் ஓவியா! இரு இரு இப்ப எதுக்கு அழுவுற மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு இருக்க? இந்தக் கண்ணு இருக்கு பாரு. இந்த கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் கூட என்னால தாங்க முடியாது. இப்போ உனக்கு என்ன அந்த மிட்டாய் டப்பா தானே வேணும். இரு நான் எடுக்கிறேன்.” என்று 13 வயதுப் பையனாக இருந்த கதிர் மேசை மேல் ஏறி அந்த மிட்டாய் டப்பாவை எடுக்க போக, அலமாரிக் கதவு தானாக திறந்து அலமாரியில் உள்ள நகை பணம் அனைத்தும் கீழே விழுந்தது. அந்த சமயம் பார்த்து இந்து உள்ளே வர❤❤
“ஐயோ மாமா. மாமா இங்க பாரு அம்மா வந்துட்டாங்க. வா வா நாம்மரெண்டு பேரும் போய் ஒழிந்துக்கலாம்.” என்றழைத்தாள்.
“ஏய்! வேணாம் வேணாம். அப்படி என்ன உன் அம்மா சொல்ல போறாங்க? இங்கேயே இருப்போம்” என்று சொல்லி இவர்கள் இருவரும் அங்கேயே நிற்க,
“டேய் கதிர். திருட்டுப்பயலே. நான் உன்னை இங்க வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல. இங்க ஏன்டா வந்த?” என்றார் இந்து.
“இங்க பாருங்க. என்ன நடந்தது என்று தெரியாமல் என் மகன திருடன்னு எல்லாம் சொல்ற வேலை வெச்சுக்காதீங்க” என்று வந்தார் கீதா.
“ஏய் கீதா! உனக்கும் சரி, இதோ இருக்கிறான் பார், இவனுக்கும் சரி. இந்த ரூம்குள்ள இடமில்லை. ஒழுங்கு மரியாதையா இவனை அழைச்சிகிட்டு வெளியே போ.”
“வாடா கதிர். நீயேன்டா இங்க வந்த?”
“ஏய் நில்லு. உன் கைல என்னடா இருக்கு?” என்று இந்து நிறுத்த, கதிரோ, “ஒன்னும் இல்ல” என்றான்.
“என்ன இருக்குன்னு கேக்குறேன் இல்ல. சொல்லுடா?” என்று மிரட்ட,
“ம்... என் கையில் குச்சி மிட்டாய் இருக்கு. உங்க மகளுக்கு குடுக்குறதுக்குள்ள நீங்க வந்திட்டீங்க. இந்தாங்க நீங்க இதை வாயில வச்சுக்கோங்க.” என்று சொன்னபடி கதிர் இந்துவிடம் திமிராக சொல்லிவிட்டு வெளியே வந்தான்.
“கிழவி இருந்தாலும் உன் மகனுக்கு ரொம்ப நக்கல் தான். பதிமுன்று வயதிலேயே மாமியாருக்கு குச்சி மிட்டாய் குடுத்து இருக்கான்.” என்றான் மணி.
“என் மகனுக்குள் இருக்கும் சக்தி அப்படிடா. அவன் குடுக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டா, மாமியார் பொண்டாட்டின்னு வஞ்சகம் இல்லாமல் வகையா குடுப்பான்.”
“ம்... போதும் நீ கண்டினியூ பண்ணு.” என்று கதை கேட்க ஆரம்பித்தான்.
“அப்புறம் அந்த சின்ன வயசுலேயே கதிரும், முல்லையும் காதல் வசனம் எல்லாம் பேசினாங்க. முல்லை நீயே சொல்லுமா நான் தண்ணி அடி, இல்ல குடிச்சிட்டு வரேன். நீ சொல்லுமா?” என்றார்.
“என் அம்மா கதிர் மாமாவை திட்டிய பிறகு.”
❤மலரும் நினைவுகள்❤
“சாரி மாமா. என்னால் தானே நீ திட்டுவாங்கின?”
“ஏய் பரவாயில்ல. உன் அம்மாவுக்கு வேற வேல இல்ல. எப்ப பாரு என்னை திட்டிக்கிட்டே தான் இருப்பாங்க. நீ அதுக்கெல்லாம் கவலைப்படாதே. உனக்கும் ஒரு குச்சி மிட்டாய் எடுத்துட்டு வந்தேன் இந்தா” என்று நீட்டினான்.
“ஐ தேங்க்ஸ் மாமா. ஏன் இன்னும் சோகமா இருக்க?”
“இல்ல. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல.”
“அப்போ, நம்ம ரெண்டு பேரும் ஓடி போகலாமா?”
“ம்... இல்ல இல்ல. நான் பெரிய ஆளாகி. கார் எல்லாம் ஓட்ட கத்துக்குட்டு, உன்னை கார்ல வந்து அழைச்சிகிட்டு போறேன்.”
“நீ எங்க போகப் போற மாமா?”
“தெரியல. ஆனா, உன் அம்மா கண்ணுல படாத இடத்துக்கு போகணும். எனக்கு இங்க இருக்க பிடிக்கவே இல்ல. என் சித்தி தான் எனக்கு துணையா இருந்துச்சு. இப்போ அதையும் உன் பழனி மாமா கல்யாணம் பண்ணுறாரு. என் அப்பாவும், அம்மாவும் போய் சேந்துட்டாங்க நான் இனி எதுக்கு இங்க இருக்கணும்?”
“அப்போ நீ எனக்காக இல்லையா? போ. நான் உன்கிட்ட பேச மாட்டேன்.”
“ஏய் இரு எங்க போற?”
“உனக்கு தான் என்னை பிடிக்கலையில்ல. போ மாமா” என்று சொன்னப்படி முல்லை ஓடிப் போக, அவளை கதிர் தூரத்த, முல்லை ஓடி போனவள் ஒருவன் மீது மோதினாள். அவன் அகில் என்கிற பெயருடைய இந்துவின் துரத்து சொந்தம் அகிலன்.
“முல்லை ஏன் இப்படி ஓடி வர? வா வா மாமாகிட்ட வா” என்று அழைத்தான் அகிலன்.