• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
ஓவியம்8️⃣
“அப்படி அந்த இந்து உங்களை என்னன்னு கொடுமை படுத்துவாங்க?”

“இரு சொல்றேன். சரியா ஐந்து மணிக்கு எந்திரிக்கணும். வீட்டில இருக்குற எல்லா வேலையையும் செய்யனும். அப்படி இப்படின்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன். அது வீடு மாதிரியே இருக்காது. மிலிட்டரி கிரவுண்ட் மாதிரி இருக்கும். இப்படி இருந்துகிட்டே இருக்கும் போது தான், இந்துவின் பெரிய தம்பி பாண்டிக்கு, என்னுடைய அக்கா லட்சுமியை கல்யாணம் பண்ணி வெச்சாங்க. என் பாண்டியன் மாமா தங்கமான மனுஷன். அவரு என் அக்கா லட்சுமியை நல்லா பாத்துக்கிட்டாரு. ஆனால், என் அக்காவின் கெட்ட நேரம் பிரசவத்தில் என் அக்கா இறந்து ட்டாள். அவ இறந்த உடனே அவளுடைய குழந்தை கதிரை நான் தான் வளர்த்தேன்.”

“அதுக்கு நடுவுல மறுபடியும் இந்து மாசமாகி, இரண்டாவதா பெண் குழந்தை ஷாமிலியைப் பெத்தாங்க. அதுக்கப்புறம் அந்த வீட்டில எப்ப பாரு அவங்க குழந்தையை பார்த்துக்கொள்ளாமல், நான் கதிரை பாத்துக்கிறேன்னு சண்டை வந்துகிட்டே இருக்கும். நான் அதை காதில் வாங்கிக்க மாட்டேன். இப்படியே இருந்துக்கிட்டு இருக்கும் பொழுது, மறுபடியும் இந்து இதோ முல்லை இருக்கிறாள் பாரு. இவளை வயித்தில் சுமக்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் அவங்களோட சின்ன தம்பி பழனி என்னை விரும்புவதாக சொல்லி, எனக்கும் அவருக்கும் கல்யாண பேச்சு ஆரம்பித்தது. ஆனால், நான் என் கதிரை பார்த்துக் கொள்ளணும் என்பதற்காக, யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தேன்.”

“கதிருக்கு மூணு நாலு வயசு இருக்கும்போது கதிர் துறுத்துருன்னு இருப்பான். அவன் யார் பேச்சையும் கேட்கவே மாட்டான். அதுவும் இந்துவ கண்டாலே அவனுக்கு பிடிக்காது. அவன் விளையாடிக்கொண்டு இருக்கும் போது, பக்கத்துல இருக்கிற எண்ணெய் பாட்டில் கீழே விழுந்து, அதில் இந்து வழுக்கி விழுந்து முல்லை பிறந்துட்டா. குறைப் பிரசவத்தில் பிறந்ததால் இந்துக்கு கதிர் மேல இன்னும் ரெண்டு மடங்கு கோவம் வந்துச்சு. கதிரை அவங்களுக்கு சுத்தமா பிடிக்காமல் போச்சு.”

“இப்படியே வருஷங்கள் ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஆனா, முல்லையை சின்ன வயசுல இருந்தே கதிருக்கும், எனக்கும் ரொம்ப பிடிக்கும். அதுக்கு காரணம் அவ குழந்தையாக பிறந்த உடனே, முல்லை தான் உனக்கு பொண்டாட்டின்னு, நான் என் அண்ணன் சந்திரன் எல்லாரும் அவனுக்கு சொல்லிச் சொல்லி வளர்த்தோம். நான் கதிர் மேல ரொம்ப பாசமா இருந்தது, இந்துவுடைய தம்பி பழனிக்குப் பிடிக்கல. எனக்கும், பழனிக்கும் சீக்கிரம் கல்யாணம் நடந்தாகனும் என்று முடிவு பண்ணி, அன்னைக்கு எனக்கும் அந்த வெள்ளை உளுந்து பழனிக்கும் கல்யாண ஏற்பாடு நடந்தது. அப்போ கதிருக்கு 13 வயது முல்லைக்கு 8 வயது இருக்கும்.” என்றார் மூச்சுவிடாது.

“என்னாச்சு? கல்யாணம் வரை போய் ஏன் கல்யாணம் நடக்கலை?” என்று பதறினான் மணி.

“இருடா மூச்சு வாங்குது.”

“அத்தை தண்ணி குடிக்கிறிங்களா?”

“உன் அத்தை இந்த நேரத்தில் தண்ணி குடிக்காது. தண்ணி அடிக்கும்” என்றான்.

“ஏன் இங்க டேப் இல்லையா? தண்ணி அடிச்சு தான் குடிக்கணுமா?”

“அதுசரி. இந்த குடும்பத்தைப் பற்றி தெரியாம முல்லை பாப்பா சீக்கிடுத்து.”

“அடேய் அடங்கு.” என்றார் கீதா.

“சரி நீ சொல்லு?” என்றான் மணி.

கதிர்க்கு பதிமுன்று வயசு. முல்லைக்கு எட்டு வயசு இருக்கும் போது, ❤மலரும் நினைவுகள் ❤
“ஓவியா, அந்த ரூம்ல என்ன தனியா பண்ணிகிட்டு இருக்க?”

“மாமா இங்க வந்து பாரு. அங்க மேல ஒரு டப்பா இருக்குல்ல. எனக்கு அதை எடுத்து குடு.”

“அய்யோ இந்த ரூம்க்கு எல்லாம் நான் வரமாட்டேன். உன் அம்மா நான் இங்க எல்லாம் வரக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.” என்று கதிர் பதறினான்.

“மாமா மாமா அதை எனக்கு எடுத்து கொடு. எனக்கு அந்த மிட்டாய் சாப்பிடணும் போல ஆசையா இருக்கு.”

“சொல்றேன் இல்ல ஓவியா. என்னால முடியாது.”

“அப்ப என்னை உனக்கு பிடிக்கலையா? நான் உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். எனக்கு இந்த உலகத்துல என்ன வேணும்னாலும் கேளு. உனக்காக செய்ய கதிர் மாமா இருக்காருன்னு கீதா அத்தை சொன்னாங்க. அப்போ அவங்க பொய் சொன்னாங்களா? நீ எனக்காக எதையும் செய்யமாட்டியா?”

“இந்தச் சித்தி எப்படி கோர்த்து விடுது பாரு. ஏய் ஓவியா! இரு இரு இப்ப எதுக்கு அழுவுற மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு இருக்க? இந்தக் கண்ணு இருக்கு பாரு. இந்த கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் கூட என்னால தாங்க முடியாது. இப்போ உனக்கு என்ன அந்த மிட்டாய் டப்பா தானே வேணும். இரு நான் எடுக்கிறேன்.” என்று 13 வயதுப் பையனாக இருந்த கதிர் மேசை மேல் ஏறி அந்த மிட்டாய் டப்பாவை எடுக்க போக, அலமாரிக் கதவு தானாக திறந்து அலமாரியில் உள்ள நகை பணம் அனைத்தும் கீழே விழுந்தது. அந்த சமயம் பார்த்து இந்து உள்ளே வர❤❤

“ஐயோ மாமா. மாமா இங்க பாரு அம்மா வந்துட்டாங்க. வா வா நாம்மரெண்டு பேரும் போய் ஒழிந்துக்கலாம்.” என்றழைத்தாள்.
“ஏய்! வேணாம் வேணாம். அப்படி என்ன உன் அம்மா சொல்ல போறாங்க? இங்கேயே இருப்போம்” என்று சொல்லி இவர்கள் இருவரும் அங்கேயே நிற்க,

“டேய் கதிர். திருட்டுப்பயலே. நான் உன்னை இங்க வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல. இங்க ஏன்டா வந்த?” என்றார் இந்து.

“இங்க பாருங்க. என்ன நடந்தது என்று தெரியாமல் என் மகன திருடன்னு எல்லாம் சொல்ற வேலை வெச்சுக்காதீங்க” என்று வந்தார் கீதா.

“ஏய் கீதா! உனக்கும் சரி, இதோ இருக்கிறான் பார், இவனுக்கும் சரி. இந்த ரூம்குள்ள இடமில்லை. ஒழுங்கு மரியாதையா இவனை அழைச்சிகிட்டு வெளியே போ.”

“வாடா கதிர். நீயேன்டா இங்க வந்த?”

“ஏய் நில்லு. உன் கைல என்னடா இருக்கு?” என்று இந்து நிறுத்த, கதிரோ, “ஒன்னும் இல்ல” என்றான்.

“என்ன இருக்குன்னு கேக்குறேன் இல்ல. சொல்லுடா?” என்று மிரட்ட,

“ம்... என் கையில் குச்சி மிட்டாய் இருக்கு. உங்க மகளுக்கு குடுக்குறதுக்குள்ள நீங்க வந்திட்டீங்க. இந்தாங்க நீங்க இதை வாயில வச்சுக்கோங்க.” என்று சொன்னபடி கதிர் இந்துவிடம் திமிராக சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

“கிழவி இருந்தாலும் உன் மகனுக்கு ரொம்ப நக்கல் தான். பதிமுன்று வயதிலேயே மாமியாருக்கு குச்சி மிட்டாய் குடுத்து இருக்கான்.” என்றான் மணி.

“என் மகனுக்குள் இருக்கும் சக்தி அப்படிடா. அவன் குடுக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டா, மாமியார் பொண்டாட்டின்னு வஞ்சகம் இல்லாமல் வகையா குடுப்பான்.”

“ம்... போதும் நீ கண்டினியூ பண்ணு.” என்று கதை கேட்க ஆரம்பித்தான்.

“அப்புறம் அந்த சின்ன வயசுலேயே கதிரும், முல்லையும் காதல் வசனம் எல்லாம் பேசினாங்க. முல்லை நீயே சொல்லுமா நான் தண்ணி அடி, இல்ல குடிச்சிட்டு வரேன். நீ சொல்லுமா?” என்றார்.
“என் அம்மா கதிர் மாமாவை திட்டிய பிறகு.”

❤மலரும் நினைவுகள்❤
“சாரி மாமா. என்னால் தானே நீ திட்டுவாங்கின?”

“ஏய் பரவாயில்ல. உன் அம்மாவுக்கு வேற வேல இல்ல. எப்ப பாரு என்னை திட்டிக்கிட்டே தான் இருப்பாங்க. நீ அதுக்கெல்லாம் கவலைப்படாதே. உனக்கும் ஒரு குச்சி மிட்டாய் எடுத்துட்டு வந்தேன் இந்தா” என்று நீட்டினான்.

“ஐ தேங்க்ஸ் மாமா. ஏன் இன்னும் சோகமா இருக்க?”

“இல்ல. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல.”

“அப்போ, நம்ம ரெண்டு பேரும் ஓடி போகலாமா?”

“ம்... இல்ல இல்ல. நான் பெரிய ஆளாகி. கார் எல்லாம் ஓட்ட கத்துக்குட்டு, உன்னை கார்ல வந்து அழைச்சிகிட்டு போறேன்.”
“நீ எங்க போகப் போற மாமா?”

“தெரியல. ஆனா, உன் அம்மா கண்ணுல படாத இடத்துக்கு போகணும். எனக்கு இங்க இருக்க பிடிக்கவே இல்ல. என் சித்தி தான் எனக்கு துணையா இருந்துச்சு. இப்போ அதையும் உன் பழனி மாமா கல்யாணம் பண்ணுறாரு. என் அப்பாவும், அம்மாவும் போய் சேந்துட்டாங்க நான் இனி எதுக்கு இங்க இருக்கணும்?”

“அப்போ நீ எனக்காக இல்லையா? போ. நான் உன்கிட்ட பேச மாட்டேன்.”

“ஏய் இரு எங்க போற?”

“உனக்கு தான் என்னை பிடிக்கலையில்ல. போ மாமா” என்று சொன்னப்படி முல்லை ஓடிப் போக, அவளை கதிர் தூரத்த, முல்லை ஓடி போனவள் ஒருவன் மீது மோதினாள். அவன் அகில் என்கிற பெயருடைய இந்துவின் துரத்து சொந்தம் அகிலன்.

“முல்லை ஏன் இப்படி ஓடி வர? வா வா மாமாகிட்ட வா” என்று அழைத்தான் அகிலன்.
 
Joined
Feb 6, 2025
Messages
111
“நீங்க ஒன்னும் என் மாமா இல்ல. ஓவியம் தான் என்னோட மாமா.” என்றாள் முல்லை.
“யாரு அந்தத் திருட்டு பயலா? ஏய் நீ ஏன்டா இவளை தூரத்துற?” என்று அதட்டினான்.
“நீ யாருடா அதை கேக்க?” என்று பதிலுக்கு இவனும் கேட்டான்.
“ஏய்! உன்னைவிட நான் ரெண்டு வயசு பெரியவன். மரியாதை இல்லாம டா போட்டுப் பேசுற.”
“ஆமா. என்னைவிட நீ பொறுக்கித்தனம் பண்றதுல பெரியவன் தான்.” என்றான் அவன் அசராது.
“இரு இரு. நான் என் அத்தைகிட்ட சொல்றேன்.”
“நீ செத்து போன உன் ஆயாகிட்ட சொன்னாலும், எனக்குப் பிரச்னை இல்ல. போடா பீடா மண்டை. ஆளைப்பாரு பாக்க அப்படியே பதுசு மாதிரி இருத்துகிட்டு, செய்றது எல்லாம் கேப்மாரிதனம். போடா என் டால்டா.”
“ஏய்! என்னைப் பற்றி உனக்குத் தெரியல. இரு உன்னை என்ன பண்றேன் பாரு.”
“நீ அப்புறம் பண்ணு. எனக்கு இப்ப நீ பண்றதை பாக்க இன்ட்ரெஸ்ட் இல்ல. போ போய் உன் இந்து அத்தைக்கு இலக்கணம் சொல்லி குடு. உன் தலைக்கணம் எல்லாம் என்கிட்ட காட்டின ஒட்ட நறுக்கிடுவேன்.” என்றான் கதிர்.
“இருடா. நேரம் வரட்டும் உனக்கு இருக்கு.”
“டேய் அகில்! என்ன வந்ததும் வராததுமா என் மவன்கிட்டயும், என் மருமவகிட்டயும் வம்பு பண்ணுற?”
“யாருக்கு யாரு மருமகள். முல்லை எனக்கு பொண்டாட்டியா வர போறா. நான் தான் இவ கழுத்துல தாலி கட்டுவேன்.” என்றான் திமிராக.
ஏய் நீ என்று இல்ல. இந்த உலகத்துல யார் என்ன சொன்னாலும் சரி, இந்த ஓவியாவின் ஓவியமும் நான் தான். இந்த கதிரின் முல்லையும் இவள் தான். உன் இந்து அத்தை சொல்ற மாதிரி, இந்த கள்வனின் கன்னியும் என் அழகி தான். போடா போ. வந்துட்டான் வண்டியை கிழப்பிக்கிட்டு. இங்க பாரு உன்னை பற்றி எனக்கும் எல்லாம் தெரியும்டி. அமைதியா போயிரு சொல்லிட்டேன்.”
“என்ன? என்ன தெரியும்?”
“ம் பொண்ணுங்ககிட்ட கடலை போடுறேன்னு சொல்லி, கடலை மிட்டாய் சாப்பிட ஆச படுற பையப்புள்ள தானே நீ. உன் வேர்க்கடலை விக்கிற பிசினஸ் எல்லாம் என்கிட்ட வச்சுக்காத. கடாயில் மண்ணை போட்டு உன் வேர்க்கடலை பயிரை எடுத்து உனக்கே பொட்டலம் போட்டு கையில குடுத்திடுவேன்.”
“டேய் கதிர்!”
“ஆமாடா. நான் தான். போ போ காத்து வரட்டும். என் தியேட்டரில் உன் படத்தை ஓட்டினேன் வை மவனே ஸ்கிரீன் கிழிந்து தொங்கும். போடா போ.”
“மவனே ஏன் இவ்வளவு டென்சன்?”
“பின்ன என்ன சித்தி. இவன் நேர்ல பார்க்க தான் பழம். ஆனா, பின்னாடி நிறைய வேலை பாக்குறான். ஒருநாள் தொக்கா மாட்டுவான். அப்ப இருக்கு இவனுக்கு. ஏய் ஓவியா நீ வா.” என்றான்.
“ஏய் முல்லை! நீ என்ன அவன் கூப்பிட்டா போய்டுவியா?”
“ஆமா. என் கதிர் மாமா கூப்பிட்டா நான் போவேன் தான். வா மாமா நம்ம குச்சி மிட்டாய் சாப்பிடுவோம்.”
“ம்... வா. உனக்கு குருவி ரொட்டியும் சேர்த்து தரேன்” என்று சொன்னபடி கதிர் முல்லையை அழைத்து செல்ல, அகில் கோபத்துடன் தன் அத்தை இந்துவிடம் சென்றவன், கதிரை பற்றி இல்லாதத்தையும் பொல்லாதத்தையும் சொல்ல, இந்து இன்னும் அதிகமாக கதிர் மீது கோவம் கொண்டாள்.
“இல்ல இந்த கீதா இருக்குற திமிரில் தான் அந்த கதிர் ஆடுறான் .எரியுறத பிடிங்கிட்டா கொதிப்பது அடங்கும். டேய் பழனி.” என்று தம்பியை அழைத்தாள்.
“அக்கா.”
“அடுத்த வாரம் உனக்கும் கீத்துக்கும் இதே வீட்டுல கல்யாணம்” என்று இந்து சொல்ல, ஓவிய மாளிகையே கல்யாண கலையில் ஜொலித்தது.
“கதிர் மாமா. இந்த செயின் கழண்டுட்டே வருது. இதை போட்டுவிடேன்.”
“ம்... காட்டு.”
“ஏய் ஓவியா அம்மா கூப்பிடுறாங்க” என்றாள் ஷாமிலி.
“மாமா இரு இதோ வரேன்.”
“ஏய் இந்தா செயின் வாங்காம போற பாரு” என்று கத்தினான்.
“இரு மாமா. வந்து வாங்கிக்கிறேன்” என்று முல்லை சொல்ல, கதிர் அந்த செயினை தன் பாக்கட்டில் போட்டுக்கொண்டான்.
அதேநேரம் முகூர்த்த நேரம் வர, “நவீன் ஓவியா எங்க?” என்றான் கதிர்.
“மொட்டை மாடியில அகில் கூட இருக்கான்னு இப்ப தான் அம்மா சொன்னாங்க.”
“சரி.” என்று சொன்னபடி முல்லையின் செயினை எடுத்துக்கொண்டு கதிர் மாடிக்கு செல்ல, அகில் கதிரை பார்த்ததும் வேர்த்து விருவிருத்தப்படி. நின்று இருந்தான்.
“ஓவியா. ஓவியா எங்க இருக்க? ஏய் முல்லை உன்னை தான். இந்தா உன் செயின்.” என்று அழைத்தான்.
“டேய் ஓவியா இங்க இல்ல. நீ கீழே போ.” என்று விரட்டினான் அகில்.
“ஏய் நகரு. அது அது ஓவியாவின் சுடிதார் சால்தானே? இங்க இருக்கு.”
“இல்ல. இது தெரியல.”
“ஏய் நகரு. ஐயோ! முல்லை! என்னாச்சு வாயில ரத்தம் வருது?” என்றான்.
“கதிர் மாமா இ...இவன் அவனுக்கு முத்தம் தர சொன்னான். நான் தரலன்னு என்னை அடிக்கிறான். மாமா வா நம்ம அம்மாகிட்ட சொல்லுவோம்.”
“ஏய்! யாரு முறை பொண்ணு மேல, யாரு கை வைக்கிறது” என்று அகிலனைப் பார்த்து கத்தினான் கதிர்.
“ஐயோ! கதிர் மாமா நீ வா நம்ம கீழே போகலாம்.”
“ஏய் நீ போ அங்க.” என்று சொன்னபடி கதிர் கோவமாக முல்லையை அந்த பக்கம் தள்ளிவிட, அவள் தள்ளி போய் கீழே விழுந்தவளின் வலது பக்கம் புருவத்தில் அடிபட்டு ரத்தம் வந்தது.
பாதி மயக்கத்தில், “கதிர் மாமா. வேணாம் வா. வேணாம் மாமா” என்று முல்லை சொன்னப்படி மயங்கி கீழே விழ, இந்த காட்சியை பார்த்த இந்து, “ஐயோ முல்லை. என்னாச்சு? டேய் கதிர்! என் மகளை என்னடா பண்ண? அகில் என்னப்பா ஆச்சு?” இங்கே நடந்தது தெரியாமல் கதிரிடம் கோவமாக பேசி, அகிலனிடம் விளக்கம் கேட்டாள்.
“அத்தை அது. அது வந்து, ஹான் இந்த திருட்டு பையன் கதிர், நம்ம முல்லை கழுத்தில் இருந்த செயினைத் திருட பார்த்தான். அவ கொடுக்கலன்னு அவளை தள்ளி விட்டுட்டான்.”
“டேய்! பொய் சொல்லாதடா.”
“சரி நான் தான் பொய் சொல்றேன் வச்சுக்கோ. நீ சொல்லு இங்க என்ன நடந்தது? சொல்லுடா?”
“அது வந்து...”
“ஏய்! வாய மூடு. நீ ஒரு திருட்டு பையன்னு எனக்கே தெரியும். அவன் பாக்கெட்டை செக் பண்ணுங்க” என்று சொல்ல அதற்கு ஏற்றது போல் முல்லையின் செயின் கதிரின் பாக்கெட்டில் இருக்கவும், இந்த திருட்டு பயலை இதுக்கு மேல இங்க விட்டு வைக்க முடியாது. என் பொண்ண சாவடிச்சிட்டு, இந்த நகையை திருட பார்த்து இருக்கான். டேய்! மொதல்ல இவனை போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணனுங்க.” என்று சொல்லி இந்து ஆர்ப்பாட்டம் பண்ணினாள்.
அதற்கு ஏற்றது போல் அங்கு வந்த இந்துவின் சொந்தக்காரர் ஒருவர், “ஆமா. இவன சீர்திருத்தப்பள்ளியில் போட்டாதான் இவன் திருந்துவான்” என்று சொல்ல முல்லை மயக்கத்தில் இருக்க, கதிரை கைது செய்வதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் வேளையில்,
“பார்த்த இல்ல. உனக்கு ஒரு நாள் நான் ஆப்பு வைபேன் என்று சொன்னேனே வச்சிட்டேன் பாருடா. உன் முறை பொண்ணுகிட்ட ஒரே ஒரு முத்தம் கேட்டதுக்கு, ஹீரோ மாதிரி வந்து அவளை காப்பாற்றின இல்ல. இப்ப நீ ஜெயிலுக்கு போக போற. நான் அவளை என்ன வேணாலும் பண்ணுவேன். முல்லை எனக்கு தான். அவளை நான்...” என்று அகில் கேவலமாக சொல்ல, கதிர் அருகில் இருந்த கத்தியை எடுத்து அவனின் வலது கையில் ஓங்கி ஒரு போடு போட்டான்.
அகிலின் ரத்தம் பட்டு முல்லை மயக்கத்தில் இருந்து தெளிந்தவள், கண் எதிரில் கதிரை அரெஸ்ட் பண்ணுவதை பார்த்தவள். அன்றும் கண்களில் கண்ணீருடன் கதிரை தன் கருவிழியில் உள்வாங்கி இருக்க, இன்றும் அதே நிலைமையில் நின்று இருந்த முல்லையின் கண்களில் தன் கணவனாக கதிரே அவள் முன் நின்று இருந்தான்.
“ஏய்! நீ இன்னும் போகலையா?” அவனை கட்டி அணைத்தவள், “மாமா என்னை எங்க போக சொல்ற?” என்றாள்.
“ஏய்! என்ன இது தலையில ரத்தம்?”
“நீ தானே என்னை தள்ளி விட்ட. ஆ... வலிக்குது மாமா.”
“ஏய்! இங்க பாரு. நீ விழுந்ததை நான் பாக்கவே இல்ல. என...எனக்குத் தெரியாது. ஏய் ஏன் அழற?”
“என்ன கிழவி? உன் மவன் போலீஸ் காரிகிட்ட சரண்டர் ஆகுறான்?”
“சின்ன வயசில் இருந்தே அவ கண்ணுல கண்ணீர் வந்தா, இவன் கரஞ்சிடுவான். இதோ தெரியுதா அவனின் பதற்றம்?”
“அப்படினா மச்சான். நீ இவங்களை...”
“ஹேய்! ஷட் அப் மேன்.”
“மவனே! நான் வேணும்னா வெளிய போறேன்டா.”
“நீங்க யாரும் போக வேணாம். நாங்க போறோம்.” என்றான்.
“மாமா நீ இப்போ எங்க போன?”
“ம்... குச்சி மிட்டாய் வாங்க. இந்தா பிடி.”
“ஐ தேங்க்ஸ் மாமா.”
“ம்... சாப்பிடு” என்றான்.
“ஐ லவ் யூ கதிர் மாமா. நான் பயந்துட்டேன். நீ என்னை வெறுத்துட்டியான்னு. உன் மனைவி என்ற ஒரு சந்தோஷம் எனக்கு போதும் மாமா.”
“ஏய்! இரு. இந்த சந்தோஷம் உனக்கு நிலைக்கணும்னா நான் போடுற கண்டிஷனுக்கு நீ சரி சொல்லணும்.”
“நான் என்ன பண்ணணும்? நான் என்ன பண்ணால் உன் கூட என்னால் வாழ முடியும். சொல்லு மாமா? என் காதலை நீ நம்பணும்னா நான் செய்யட்டும்?” என்றாள் முல்லை.
“ம்... அது இங்க பேச வேணாம் லாட் ஆப் டிஸ்டர்பன்ஸ். சோ நம்ம உள்ள போகலாம் வா.”
“என்ன கிழவி இது? அப்படி என்ன உன் மவன் கண்டிசன் போட போறான்? இது எல்லாம் கனவா, இல்ல நினைவா?”
“ம்... கதிர் கனவு நினைவாகிட்டுடா என் மவன் அவன் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டான்டா.” என்று சந்தோசித்தார் கீதா.
“என்ன கிழவி சொல்ற?”
“ஏய்! இது நானும், என் மவனும் இந்துக்கு வரைந்த ஓவியம்டா.”
“அப்ப இதல்லாம் ஸ்கெட்சா?” என்றான் மணி.
“ம்... இது கதிர் பிளான்டா. முல்லையை கோவில்ல பார்த்ததுமே அவனுக்கு தெரியும்டா. அவ இவன் சின்ன வயசில் இருந்து காதலித்த முல்லையோவியம் என்று.
“அப்போ இனிமே?”
“இனிமே என்ன என் மவன் கையால் அந்த இந்துக்கு குச்சி மிட்டாய் தான்” என்றார் கீதா.
“ஐயோ! இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே.” என்று அலறினான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top