Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
ஓவியம்
ஓவியா என்று கைபேசியில் பேசியதைக் கேட்ட கதிர் கோபம் கொண்டு, “ஏய் நீ என்ன பேர் சொன்ன?” என்று கேட்டான்.
“அது வந்து முல்லைன்னு சொன்னேன்.”
“இல்ல பொய் சொல்ற? நீ ஓவியா. ஓவியான்னு தானே சொன்ன?” என்றான் கோபம் குறையாது.
சிறிதாக பெருமூச்சு விட்டு, “ஆமா மாமா. நான் உன்னுடைய அத்தை மகள் முல்லையோவியம் தான்” என்று முல்லை சொன்ன மறுநிமிடம், கதிர் அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்தான்.
“ஏய்! நான் சாகுற வரைக்கும் உங்க யார் முகத்துலயும் முழிக்கக்கூடாதுன்னு நினைச்சேன். ச்சீ அந்த குடும்பத்தைச் சேர்ந்தவ தான் நீன்னு தெரிஞ்சிருந்தா, உன் பக்கமே நான் வந்துருக்க மாட்டேன். இப்ப என்ன பிளான் பண்ணி என்னை உங்க வலையில சிக்கவைக்க வந்திருக்க. என் சொத்து... அந்த சொத்து தானே உங்களுடைய டார்கெட்.” என்றான் கதிர்.
“மாமா என்ன பேச்சு பேசுற? எந்த சொத்து எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது.”
“ஏய்! வாய மூடு. நீ மாமா மாமான்னு சொல்லும்போது, என் காதில் ஈயத்தை காச்சு ஊத்துற மாதிரி இருக்கு. உன் முகத்தில் முழிக்குறதே பாவம். ஒழுங்கு மரியாதையா இந்த வீட்டை விட்டுப் போய்டு.”
“என்னால முடியாது மாமா. நான் ஏன் போகனும்? நீ கட்டின தாலி என் கழுத்துல இருக்கு. நீ என்னோட புருஷன் மாமா.” என்று தன் உரிமையை வேண்டினாள்.
“என்ன புருஷனா? அடிச்சு வாய ஒடச்சிடுவேன். யார் யாருக்குப் புருஷன்? இங்க பாரு. ஒழுங்கு மரியாதையா நான் கட்டின தாலியை என் கையில் கழட்டிக் கொடுத்துட்டு, இந்த வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போயிடு. உன்னை பார்த்தாலே எனக்கு காண்டாகுது.”
“நான் ஏன் போகணும்? என்னால போக முடியாது மாமா. நீ என்னை ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ண. இப்ப என்ன என்னை பிடிக்காத மாதிரி பேசுற?” என்று அவனிடம் எதிர்வாதம் செய்தாள்.
“ஆமாடி. உன்ன ஆசைப்பட்டு தான் கல்யாணம் பண்னேன். நீ திருடியா இருந்தாலும் சரி. இல்ல உன் அக்கா தொழில் செய்ற ஆள் மாதிரி நடித்தாலே, அது உண்மையாகவே இருந்தாலும் சரி. நான் சந்தோஷமாக உன் கூட வாழ்ந்திருப்பேன். ஆனா, எப்போ நீ அந்த இந்துவின் குடும்பம்ன்னு தெரிந்ததோ, இந்த உலகத்தில நான் வெறுக்கும் முதல் ஆள் நீ தான்டி. உன் அம்மா பெயரை கேட்டாலே எனக்கு... எனக்குக் கொலை வெறி ஏறுது.” என்று சொன்னபடி கதிர் அருகில் இருந்த டேபிளை எட்டி உதைத்தான்.
“மாமா! இங்க பாரு. என் அம்மா செஞ்ச தப்புக்கு நான் என்ன செஞ்சேன்? அந்த சின்ன வயசிலேயே நான் உன்னை காதலிச்சேன். அது உனக்கு தெரியாதா?”
“ஏய் வாய மூடு. அன்னைக்கு நீயும் தானே அங்க நின்னு, நடந்த விஷயத்தை எல்லாம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்த. நீ என்ன சின்ன குழந்தையா?”
“ஆமா மாமா. அப்போ எனக்கு வெறும் எட்டு வயசு தானே. எனக்கு என்ன தெரியும்? என்னைபோய் விரோதியா பார்க்குறியே மாமா.”
“ஏன், எட்டு வயசுல எனக்கு அது வேணும், இது வேணும்னு என்னை எடுத்து தர சொல்லி தின்ன தெரிந்தது இல்ல. அப்ப மட்டும் உனக்கு எல்லாம் தெரிஞ்சுதா?” என்றான்.
“மாமா! எதுக்கு எத பேசுற? நான் உன்னை இத்தனை வருஷமா, என் இதயத்தில் வைத்து காதலிச்சேன் தெரியுமா. நீ எங்க இருப்பேன்னு எத்தனை வருடம் தேடி இருக்கேன்னு, உனக்கு என்ன தெரியும்? நான் படிச்சு போலீசான முதல் வேலையே, நீ எங்க இருக்கன்னு நான் தேட ஆரம்பித்து விட்டேன். நீ இந்த ஊர்ல இருக்கன்னு தெரியாமலேயே நான் இந்த ஊருக்கு வந்த முதல் நாள், நீயா தானே என்னை இந்த வீட்டுக்கு தூக்கிட்டு வந்த? நான் என்ன பிளான் பண்னேன். இங்க வந்து உன் போட்டோவை பார்த்த உடனே, நான் விரும்பும் என் கதிரோவியம் மாமா நீதான்னு தெரிஞ்ச உடனே, நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? இந்த காளையன் சல்மான் பாய் விஷயத்தை முடிச்ச உடனே, நானே உன்னை நேர்ல வந்து பார்த்து விஷயத்தைச் சொல்லி, என் காதலை தெரிவிக்கனும்ன்னு இருந்தேன். அதுக்குள்ள நீ அவசரப்பட்டு என் கழுத்துல தாலி கட்டிட்ட. சரி கடவுளா பார்த்து நமக்கு இப்படி ஒரு கள்வனை, இல்ல இல்ல கணவனை கொடுத்திருக்காருன்னு சந்தோஷப்பட்டேன். நீ என்னடானா இப்போ இப்படி பேசுற?”
“இதோ சொல்லிட்ட இல்ல. கள்வன் என்றால் திருடன் தானே. ஆமாடி. நான் திருடன் தான். உனக்கும் உன்னைப் பெத்த உன் ஆத்தாளுக்கும் நான் திருடன் தான். அதனாலதான என்னை அந்த வயசிலேயே உன் ஆத்தா சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினா. இங்க பாரு. இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க இருந்தீன்னா கூட, நான் கொலைகாரனாக மாறிடுவேன். ஒழுங்கு மரியாதையா வெளியே போ.” என்று சத்தம் போட்டான்.
“இல்ல மாமா. என்னால போகவே முடியாது. நீ என் புருஷன் நான் இங்கதான் இருப்பேன்.” என்று அடம் பிடித்தாள்.
“இங்க பாருடி. நான் கண்டிப்பா கொலைகாரனாக ஆயிடுவேன். திரும்பத் திரும்பப் பேச வைக்காத.”
“என்னால முடியவே முடியாது. நீ எனக்கு வேணும். நான் சின்ன வயசுல இருந்து உன்னை காதலிக்கிறேன். நீயும் என்னைக் காதலிச்ச. ஆனா, இப்ப என்னடானா பொய் சொல்ற. என் கண்ணை பார்த்து சொல்லு நீ என்னை விரும்பலன்னு?”
“இல்லடி. உன்னை எனக்கு அறவே பிடிக்காது.” என்று சொன்னபடி கதிர் கோபமாக முல்லையை தள்ளி விட, தடுமாறி அங்கிருக்கும் மேஜையின் ஓரத்தில் இடித்துக் கொண்டவளின் தலையில், சிறிதளவு காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தபடி மயக்கம் அடைய, இதனைப் பார்க்காத கதிர் கோபமாக அறையை விட்டு வெளியே வந்துவிட்டான்.
“டேய் மவனே! என்னடா பிரச்சனையா? ஐயையோ நான் அப்பவே நினைச்சேன்டா. ஒரு போலீஸ்காரி உன்ன கல்யாணம் பண்றானா லேசுப்பட்ட விஷயம் இல்லடா. சரி உன்னை பார்த்தா அடி வாங்குன மாதிரி தெரியலையே? என்ன மவனே உள் காயம்மா.” என்று கிண்டலாகக் கேட்டார் ஓவியகீதா.
“ஏய் கிழவி! ஷட் அப்.” என்று கத்தினான்.
“இப்போ ஏன் பீட்டர் விடுற? சொல்லு என்ன மேட்டர்?” என்றார்.
“இங்க பாரு. நான் போயிட்டு இன்னும் அரை மணி நேரம் கழிச்சு வருவேன். அ...”
“ஏன்டா மவனே! வயிறு சரியில்லையா? அப்பவே சொன்னேன் நைட்டு பாதாம் பயிறு போட்ட பால் எல்லாம் வேண்டாம்னு.” என்று அவனை முடிக்க விடாது இடையிட்டார் கீதா.
“ஏய் சுண்ணாம்பு மண்டை. கொன்னுடுவேன் உன்னை. நான் போயிட்டு இன்னும் அரை மணி நேரம் கழிச்சு வருவேன். நான் வரதுக்குள்ள அவ இந்த வீட்டுக்குள்ள இருக்கக்கூடாது.”
“டேய்! யாரடா வீட்டுக்குள்ள இருக்கக்கூடாது சொல்ற?
“அதுதான். உள்ள இருக்கிறாள் இல்ல. அவளைத் தான். அவ இந்த வீட்டிலேயே இருக்கக்கூடாது.” என்று சொன்னபடி கதிர் கோபமாக போனான்.
கீது பயந்துகொண்டே அறைக்குள் செல்ல, முல்லை மயங்கிய நிலையில் கீழே படுத்திருக்க, அவளைப் பார்த்து பயந்த்து போன கீதா, கதிருக்கு போன் செய்தார். கதிர் போன்னை வீட்டிலேயே விட்டு சென்றதால், மணிக்கு அழைக்க அவனோ பத்து நிமிடத்தில் வீட்டில் இருந்தான்.
“ஐயோ! மர்டர். பாவீங்களா இந்தப் புள்ளைய கொன்னுட்டீங்களா?” என்று அலறினான்.
“டேய்! வாயை மூடு, சும்மா இருக்கும் மணியை நீ அடிக்காத, அவள் மயக்கத்தில் தான் இருக்காள்.”
“ஏய் கிழவி! ஏன் என்ன ஆச்சு? ஒரு வேலை அவங்களுக்குள்ள அடிதடின்னு ஆகிடுச்சா? என்றான்.
“தெரியலடா. மயக்கம் வர்ற அளவுக்கு, இவ அவன அடிச்சி இருந்தா ,அவனுக்கு தானே மயக்கம் வந்து இருக்கணும். இவளுக்கு எப்படி?” என்று மணியிடமே சந்தேகம் கேட்டார் கீதா.
“அதானே” என்றான் அவனும்.
“இல்ல. இவங்களுக்குள்ள வேற ஏதோ பிரச்சனை இருக்கு. அவன் கோபத்தில் இந்த பொண்ணத் தள்ளி விட்டுட்டு போய் இருக்கான். இவ அந்த மேசையிலே இடிச்சு மயக்கத்துல விழுந்துட்டா. இப்பதான்டா நான் படுக்கவச்சேன்.
“என்ன கிழவி சொல்ற? உன் மகன் அவ்வளவு கோவக்காரன் இல்லையே. நான் நினைச்சேன் இந்த பொண்னுடைய ஸ்ட்ரக்சர்ல்ல அவன் விழுவான்னு. பார்த்தா கடைசியில இவள ஸ்ட்ரெட்சர் ஏத்திடுவான் போல.”
“டேய் மணியா! வாயை மூடுடா. அவ கண்ணு முழிக்கிறா.” என்று அமைதிப்படுத்தினார்.
முல்லை கண் விழித்ததும் அழுது கொண்டிருக்க, கீதா பயந்தபடியே, பாப்பா ஏன் அழுவுற?” எனக் கேட்டார்.
“அத்தை இங்க கிட்ட வாங்க.” என்றழைத்தாள்.
“இல்லம்மா நான் இப்படி ஓரமா நிக்கிறேன். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றார் கீதா.