• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
🔱யின்
❤காதல் ஓவியம் ❤.. 4️⃣
❤”வெயிட்” என்று சொன்னபடி கதிர் அங்கிருந்த கோவிலில் இருந்து எடுத்து வந்த தாலிக்கயிற்றை, முல்லையின் கழுத்தில் கட்ட, ஓவியகீதாவும், மணியும் கதிரை பதற்றத்துடன் பார்த்தனர். ❤
“ஏய்! ஏன் இப்படி பண்ண?” முல்லையோவியம் அதிர்ந்து கேட்க,
“ம்... ஏன்னா ஐ லவ் யூடி மை பொண்டாட்டி” என்றான்.
“டேய் கதிர்! என்ன காரியம் பண்ணிருக்க?”
மணி கேட்பதை கண்டுகொள்ளாது, “ஏய் அறிவிருக்கா உனக்கு. இதெல்லாம் விளையாட்டா இருக்கா? என்ன காரியம் பண்ணிருக்க... யாரை கேட்டு நீ இதெல்லாம் பண்ற நீ? உன்னை.” ❤என்று சொல்லி முல்லை கையை ஓங்க, கதிர் அவள் கையை தடுத்து நிறுத்தினான் ❤
“ஏய் திருடி. புருஷன கையை நீட்டி எல்லாம் அடிக்கக்கூடாது. நீதான சொன்ன உனக்கு வாழ்க்கை கொடுக்கணும், வாழைக்காய் பஜ்ஜி போடணும்னு. எனக்கு வாழைக்காய் பஜ்ஜி எல்லாம் போட தெரியாது ஆனால், என் வாழ்க்கையை உன் கூட வாழனும்ன்னு முடிவு பண்ணிட்டேன். வா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றான்.
“ஏய்! லூசா நீ. இதெல்லாம் என்ன விளையாட்டு காரியமா? நான் யாருன்னு தெரியுமா உனக்கு?”
“நீ யாரா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல. நீதான சொன்ன என்ன தாலி கட்டச் சொல்லி. அதனாலதான் கட்டினேன்” என்று அலட்சியமாகப் பதிலளித்தான் கதிர்.
“டேய்! மவனே என்ன வேலைடா பண்ணி வச்சிருக்க? இதெல்லாம் சரியில்லைடா” என்றார் கீதா.
“நான் செய்தா எல்லாம் சரிதான்” என்றான்.
“ஏய்! என் குடும்பத்திற்கு தெரிஞ்சா, உன்னை மாறுகை மாறுகால் வாங்கிடுவாங்க இடியட்” என்றாள் ஓவியா.
யார் எதை வாங்கினாலும் சரி. இந்த மாமன் உனக்காக காத்துகிட்டு இருக்கேன். வாடி செல்லம் போகலாம்” ❤ என்று கதிர் காதல் வசனம் பேசிக்கொண்டு இருந்தான்.
முல்லையின் அண்ணன் நவீன், கதிரின் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வாயில் பல்லு குச்சியுடன் வந்தவன், “என்ன பாப்பா? என்ன இங்க பிரச்சனை?” என்று கேட்டான்.
முல்லை கதிர் கட்டிய தாலிக் கயிற்றை எடுத்து சுடிதாருக்குள் போட்டுக்கொண்டு❤ “ஒன்னும் இல்ல அண்ணா. ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றாள் வேகமாக.
“யாரு இவங்க?” என்றான் புரியாது.
“மச்சான். நான் தான் உன்...”
“இந்த பையனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே அம்மு. இப்பப் புரியுது. இந்த சைக்கிள் இவனோடது தான். அத கேக்க தான் வந்து இருக்கான்.” என்று நவீன் சொல்ல,
“ஏய்! இது என்னோட சைக்கிள் குடு. எங்க மணியை காணோம்?” என்று மணி கேட்டான்.
“என்ன?” நவீன் அதிர்ந்து பார்க்க,
“அட சைக்கிள்ல மணி இருந்துச்சே எங்க காணோம். குடு என் சைக்கிளை?”

“இந்தா உன் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடு. எப்பயும் நாங்க திருடின பொருளை அவங்க கண்டுபிடித்தால், நாங்க அவர்கள் கையிலேயே அதைத் திருப்பிக் கொடுத்துடுவோம்.”
“ஆமா கொள்கை விளக்கம் போல.” என்றார் கீதா.
“ஏய் கிழவி! வாயை மூடு. நீ வா ஏஞ்சல் நம்ம போகலாம்.”
“ஏய் எங்க போக சொல்ற? நீ எதுக்கு என் தங்கச்சியை கூப்பிடுற?”
“அது அது ஒன்னும் இல்ல அண்ணா. இவன் ஒரு லூசு. நீ கண்டுக்காத” என்றாள் முல்லை.
“என்னது இவனா? இப்ப தானே சொன்னேன், கட்டின புருஷன அவன் இவன் எல்லாம் சொல்லக்கூடாதுன்னு” என்று மிரட்ட,
“என்ன கட்டின புருஷனா? யாரு யார கட்டிக்கிட்டது?
“அது ஒன்னும் இல்ல அண்ணா. நான் தான் சொன்னேனே இவன் ஒரு லூசு” என்றவள் பொறுமையாக கதிரை பார்த்து, “நீ செஞ்ச வேலையால் என்னென்ன பிரச்சனை வரப் போகுதுன்னு பார்” என்று சத்தமில்லாது திட்டினாள்.
“டேய் மணி! முதல்ல இவனை சைக்கிளில் ஏற்றி அழைச்சுட்டு போடா.”
“இல்ல இல்ல நான் வரமாட்டேன். என்னுடைய ஏஞ்சல் இல்லாம என்னால எங்கயும் வரமுடியாது” என்றான் கதிர்.
“டேய்! அறிவு கெட்டவனே. ஏன்டா இப்படி உயிரை எடுக்குற? அவங்க அண்ணன் வேற நல்ல பயில்வான் பக்கிரிசாமி மாதிரி இருக்கான். அவன் ஓங்கி ஒரு உதை விட்டா நம்மால் நாஸ்த்தா கூட சாப்பிட முடியாது. வாடா போகலாம்.”
“இல்ல இல்ல. நான் என் தேவதை இல்லாமல் எங்கேயும் வரமாட்டேன்.”
“டேய் மவனே! வான்னு சொல்றேன்ல”🌹என்று சொன்னபடி கீதாவும் மணியும் கதிரை அழைத்துக் கொண்டு போக, முல்லை சற்றும் எதிர்பார்க்காமல் கதிர் தனக்கு கட்டிய தாலியை சுமந்தபடி தன் அண்ணன் நவீன் உடன் சென்றாள்.
இரண்டு நாட்கள் கடந்த நிலையில். கதிர், முல்லையை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ற கவலையில் வீட்டில் கவலையாக அமர்ந்து இருந்தான்.
“டேய்! என்னடா ஏன்டா சோகமா இருக்க?”
“ஏய் கிழவி! எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு நாளாச்சு. என் பொண்டாட்டிய காணோம் என்ற கவலை ஏதாவது உனக்கு இருக்கா. நீ என்னடானா உட்கார்ந்துகிட்டு சரக்கு அடிச்சுகிட்டு இருக்க?” என்று சித்தியைத் திட்டினான்.
“கல்யாண வயதை தாண்டியும் இன்னும் நான் உங்களுக்காக கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறேனே. எனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் என்ற கவலை. உங்க ரெண்டு பேருக்கும் இருக்கா?”
“இதோடா. காடு வா வாங்குது. வீடு போ போங்குது. உனக்கு இப்போ கல்யாணம் தேவையா? ஏன் கல்யாணம் பண்ணி இன்னொருத்தனுடைய வாழ்க்கையை நீ அழிக்க போறியா?” என்று மணி வந்தான்.
“ஏன்டா சொல்ல மாட்டீங்க. உங்களையெல்லாம் கண்ணும் கருத்துமா வளர்த்தேன் இல்ல. சொல்லுவிங்கடா சொல்லிவிங்க.”
“நீ வளக்கலன்னா நாங்க வளர்ந்து இருக்க மாட்டோமா. யார் வளர்த்தாலும் வளக்காட்டியும் நாங்க வளர்ந்து தான் இருப்போம். நீ வளவலன்னு பேசாம உன் வியாக்கியானத்தை நிறுத்திட்டு கிளம்பு.”
“எங்கடா கதிர் கிளம்ப சொல்ற?”
“ம்... வா ஆளுக்கு ஒரு மூலையில் போய் இந்த வீட்டு மருமகள், என் தேவதையே தேடுவோம”🌹என்று கதிர் வம்பு பண்ணி. கீதாவையும் மணியையும் அழைத்துக்கொண்டு போனான்.🌹
“மச்சான் அங்க பாருடா உன் தேவதை. ஆளு என்னடா சிஐடி சகுந்தலா மாதிரி ட்ரெஸ் போட்டுக்கிட்டு நிற்குறா. ஆனா கண்ணு தெரியாத மாதிரி கையில குச்சு வச்சிக்கிட்டு இருக்கா” ❤என்று மணி சொல்ல,
கதிர், முல்லையை பார்த்தவுடன் ஓடிப் போய் அவளிடம் பேசப் போக, இவனை பார்த்ததும் கண்ணு தெரியாத பெண்ணை போல நடித்து கொண்டு இருந்த முல்லை, இவனை கண்டுகொள்ளாமல் தன் நடிப்பைத் தொடர்ந்தாள்.
“ஏய் செல்லக்குட்டி. எங்க போன நீ? உன் புருஷன் நான், லூசு மாதிரி உன்ன நினைத்து இங்க ஏங்கிட்டு இருக்கேன்.”
“என்ன புருஷனா. நீ தாலி கட்டினதால் எல்லாம் நான் உனக்கு மனைவியாக மாட்டேன்.”
“நீ என்ன பேசுற? உன்னை தொட்டு தாலி கட்டினவன் நான். என்கிட்ட இப்படிப் பேசலாமா?”
“ஏய் லூசா நீ. என் தங்கச்சியோட சம்மதம் இல்லாமல் நீ தாலி கட்டிட்டா அவ உனக்கு பொண்டாட்டியா ஆய்டுவாளா?” என்றாள் ஷாமிலி.
“ஏய்! மச்சினிச்சி வாய மூடிட்டு சும்மா இரு. நான் இவளுக்கு தாலி கட்டிட்டேன். இவ இனிமேல் என் பொண்டாட்டி. வா ஏஞ்சல் நாம் நம்ம வீட்டுக்கு போகலாம். இரண்டு நாள் உன்ன பிரிஞ்சி என்னால நிம்மதியா இருக்கவே முடியல தெரியுமா?” என்றான் கதிர்.
“நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா. நான் ஒரு முக்கியமான விஷயமா வந்திருக்கேன். இந்த இடத்தில் வந்து புருஷன் அரசன்னு ஃபிலிம் காட்டிகிட்டு இருக்காத. முதல்ல கிளம்பி போ. இல்ல பிரச்சனையாயிடும்” என்று எச்சரித்தாள் முல்லை.
“அப்படி என்னடி பிரச்சனை ஆயிடும். நாங்க எல்லாம் பிரச்னையை பாக்கட்டில் போட்டுக்கிட்டு வாழுறவுங்க. நாங்க பாக்காத பிரச்சினையா? என் மவன் தான் கூப்பிடுறான் இல்ல. வருவியா... சும்மா வாயில வத்தல் சுட்டுக்கிட்டு இருக்க” என்றார் கீதா.
“ஏய்! பத்து ரூபாய் நூடுல்ஸ் மண்டை. ஒழுங்கா உன் மவனை கூட்டிகிட்டு அப்பால போயிடு. இல்ல சீன் ஆகிடும்.”
“நானெல்லாம் சீன்கே சில்பான்ஸ் கொடுக்குறவ. உன் உதாறு எல்லாம் என்கிட்ட வச்சுக்காத. ஆயிரம் இருந்தாலும் நான் உன் ஆன்ட்டி.”
“என்ன ஆன்ட்டியா. நல்லா ஆப்பாக்கார அலமேலு மாதிரி இருந்துகிட்டு, இவங்கள திருட சொல்லி ஊரை சுத்துற நீ எனக்கு ஆன்ட்டியா?”
“ஏய் வேணாம்.”
“இப்ப என்ன குடுத்தாங்க வேண்டாம்ன்னு சொல்ற நூடுல்ஸ் மண்டை.”
“ஐயோ உங்க மாமியார் மருமகள் சண்டையை நிறுத்துங்க. ஏய் செல்லக்குட்டி என்னதான் என் சித்தி பழைய பெருசாச்சாளி போல இருந்தாலும், எங்கள் குடும்பக் குத்து விளக்கு அவங்க. அதனால் வா நம்ம ரெண்டு பேரும் அவுங்க ஆசீர்வாதம் வாங்கிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்” என்றான் கதிர்.
“ஏய் முல்லை! அதோ வந்துட்டான் பாரு அவன் தான்” என்று ஒருத்தனை நோக்கி கைநீட்டினாள் ஷாமிலி.
“என்ன பிசினஸ் போல இருக்கு...” என்றான் மணி.
“ஏய் வா போகலாம்னு சொல்றேன் இல்ல. இனி நீ இந்த வேலையெலாம் செய்ய வேண்டாம். இன்னும் பத்து வீடு எக்ஸ்ட்ராவா திருடியாவது நான் உனக்கு பீசா பர்கர் வாங்கித் தரேன்” என்று அவளை விடாது தொல்லை செய்தான் கதிர்.
“ஏய் லூசு! அந்த பக்கம் போன்னு சொல்றேன்ல”என்று சொன்னபடி முல்லை, கதிரிடம் பேசிக்கொண்டிருக்க, அங்கிருந்து ஓடி வந்த ஒருவன், முல்லையை கத்தியால் குத்த வந்தான்.

முல்லை அவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, அந்த நபரிடம் சண்டை போட்டதை பார்த்துவிட்டுப் ஓவியக்கீதா பின்னங் கால் பிடரியில் படும்படி ஓடி விட, முல்லை கதிரின் கையை பிடித்து இழுத்து ஒரு சந்துகுள் அழைத்து போனாள்.
“ஏய் உனக்கு எதுவும் அடிப்படல இல்ல.” என்று கதிரிடம் கேட்டாள்.
“ஏய்! யார் நீ? உன்னை எதுக்காக இவங்க குத்த வராங்க?”
“அதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம். ஒழுங்கு மரியாதையா வீடு போய் சேரு.”
“இல்ல இல்ல நீ வராம நான் போகமாட்டேன்.”
 
Joined
Feb 6, 2025
Messages
111
“ஏய் என்னால எங்கேயும் வரமுடியாது. ஒழுங்கு மரியாதையா போயிடு. இல்லைனா இங்க நீ இருந்தா இவனுங்க உன்னை போட்டு தள்ளுவார்கள். அப்புறம் அதுக்கு நான் பொறுப்பு இல்ல.” என்றாள் முல்லை.
“ஏய் மச்சான் வாடா போகலாம். இது ஏதோ பெரிய விவகாரம் போல. இவளுக வைக்கக் கூடாத இடத்தில் கைய வச்சுட்டாளுங்க போல. அதனால்தான் இவளை போட்டு தள்ள பாக்குறாங்க. வா மச்சான் நம்ம போகலாம்”🌹என்று வலுக்கட்டாயமாக கதிரை மணி அழைத்துச் செல்ல.
முல்லையை விட்டு பிரிய மனமில்லாமல் கதிர் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.
பெரிய காரில் வந்த முல்லையின் அண்ணன் என்று அழைக்கப்படும் நவீன், முல்லையை பார்த்து, “மேடம் ஆர் யூ ஒகே?” என்று கேட்டான்.
“எஸ். பட் அவனுங்க எஸ்கேப் ஆகிட்டாங்க. ஷாமிலி எங்க?”
“அவங்க அந்த காளையனை தூரத்திக்கிட்டு போய் இருக்காங்க.”
“ம்... சரி நீங்க மூவ் பண்ணுங்க நான் டிரைவ் பண்றேன். இன்னைக்கு நைட்குள்ள, சிட்டி டோட்டல் கிளீன் ஆகணும்.”🌹என்று சொன்னபடி முல்லை வீரமாக காரை எடுக்க, மின்னல் வேகத்தில் முல்லையின் கார் மறைந்தது.
‘இங்கு என்ன நடக்கிறது?’ என்ற குழப்பதோடு கதிரும், மணியும் தன் வீட்டிற்கு வர, கீதா பாத்ரூம்க்கும் ஹாலுக்கும் ஓடிப் போயிட்டு ஓடிப் போயிட்டு வந்தவரைப் பார்த்த மணி 🌹 “ஏய் கிழவி ரெண்டு பேர வளர்த்தேன் வளர்த்தேன் என்று சொன்னியே. இப்படியா நடுரோட்டில் விட்டுட்டு வருவ” என்று கேட்டான்.
“டேய் அறிவுகெட்ட மணி. ஒண்ணா சேர்ந்து வாழலாம் ஒன்னா சேர்ந்து சாக முடியுமா? அதுவும் இல்லாமல் இவன் பத்து நிமிஷம் தாலிகட்டிய ஒரு தவறுக்காக இன்னும் நூறு வருஷம் வாழ வேண்டிய என் வாழ்க்கையை, நான் இழக்கணும். போடா வெண்ணை...”
“டேய் கதிர்! நீ என்னடா எதுவும் பேசாம பேய் அறைஞ்ச மாதிரி இருக்க?”
“ஏன்டா அந்த பொண்ணு இவன் மூஞ்சிலேயே அரைந்து விட்டாளா?” என நக்கலாகக் கேட்டார் கீதா.
“கிழவி! நம்ம எல்லாம் நினைக்கிறது மாதிரி இல்ல. அந்தப் பொண்ணு பெரிய அப்பாடக்கரா இருக்கா. அன்னைக்கு கண்ணு தெரியாமல் இருந்தா. இன்னொரு நாள் அவங்க அக்கா தொழில் செய்கிற மாதிரி நின்னுக்கிட்டு இருந்தா. இன்னைக்கு அவங்க அண்ணன் பெரிய பணக்கார தோரணையில் ஒரு காரை எடுத்துக்கிட்டு வந்து, அந்த பொண்ண அழைச்சுக்கிட்டுப் போறான். அவள் என்னடானா இங்கிலீஷில தாட்டு பூட்டுன்னு பேசி காரை என்னமோ ஒரு ரேஸ்ல ஓட்டற மாதிரி ஓட்டிக்கிட்டு போனா.” என்றான் கதிர்.
“என்னடா சொல்ற? நான் தான் அப்பவே சொன்னேனே. நமக்கு இந்த கல்யாணம் காட்சி எல்லாம் ஒத்து வராதுன்னு. டேய் கதிர்! ஆனது ஆச்சு எல்லாத்தையும் கனவா நினைச்சு மறந்துட்டு ஆக வேண்டிய வேலையை பாரு. சித்தி உனக்கு ஏற்ற ஒரு ரோஜா மலரை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.”
|எத்தனை மலர் வந்தாலும், எனக்கு என் திருடி தான் தேவை. அவ யாராக இருந்தாலும் சரி. நான் அவளை தான் இந்த வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வருவேன்.”
“இல்லடா மணி. இவன் வேலைக்கு ஆக மாட்டான். நான் பேசாம அந்த சல்மான் பாய் வீட்டிலேயே போய் வேலைக்கு சேர போறேன். அவன் சங்கு மேல என்னை மிதித்தாலும், ஒருவாய் சால்னா ஊத்துவான், இவனை நம்பினால் கத்தி குத்துப்பட்டு தான் நான் சாகனும் போல” என்றார் கீதா.
“ஏய் வாய மூடிக்கிட்டு சும்மா இரு. நானே என் தேவதைய சுத்தி என்ன நடக்குது என்ற கவலையில் இருக்கேன். சும்மா நீ சந்துல சிந்து பாடிக்கிட்டு இருக்காத. உண்மையாவே உன்னை சங்குலேயே மிதித்திடுவோம்” என்றான் கதிர்.
“ஆமாடா. உன் வாய் எல்லாம் என்கிட்ட தான். அவ உன் கண்ணெதிரில் இருக்கும் பொழுது, அவள் வாய் மேலேயே ஒன்னு வச்சு, நான் தான் உனக்கு தாலி கட்டின புருஷன் வீட்டுக்கு வாடி என்று சொல்ல தைரியம் இல்லாதவன், என்கிட்ட வந்து கதை பேசுற. ஆயிரம் தான் இருந்தாலும் நான் உன்னை வளர்த்தவள் தானே. என் மேல உனக்கு எங்க பாசம் இருக்கப்போகுது.”
“சரி எதுக்கு இப்ப நீ இப்படி சோககீதம் பாடுற. இதை சாக்கா வச்சு எங்ககிட்ட சரக்கு கேட்ப அவ்வளவுதானே?” மணி கேட்க,
“நீங்க எதுக்கு எனக்கு சரக்கு வாங்கி கொடுக்கணும். அவள் செய்த அலப்பறையில் எனக்கு சரக்கு அடிச்சா தான் நான் பயமில்லாமல் தூங்குவேன். அதான் வரும் போது நானே சரக்கை வாங்கிட்டு வந்துட்டேன்.”
“ஏய்! என்ன காசு கொடுத்து வாங்குனியா. ஆச்சரியமா இருக்கு. நீ காசு கொடுத்து எதையும் வாங்க மாட்டியே?”
“அப்படி இல்லடா மணி. சரக்கு மட்டும் காசு கொடுத்து வாங்கினால் தான்டா கிக்கு ஏறுது. திருடுனா அதுல போதையே இல்லடா.”
“ஏய் தாய் கிழவி. நீ வாய மூடு. என் வாழ்க்கையே இங்கே கேள்விக்குறியா இருக்கு. உனக்கு போதை ஏறலன்னு தான் இப்ப கவலையா. ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிடு. டேய் மணி கிழவி வாயில் சரக்கை ஊத்தி ஓரமா படுக்க வைடா.”
“சரி சரி மச்சான் நீ ரொம்ப டென்ஷனா இருக்க. இரு அமைதியா இந்த பாட்டைக் கேளு. நான் டிவியில் பாட்டு போடுகிறேன்”🌹என்று சொன்னபடி மணி டிவியில் பாட்டு ஓடும் சேனலை போட நினைக்கையில் ஒரு செய்திச் சேனலில் ஒரு பிளாஷ் நியூஸ்சை பார்த்தவன், “டேய் டேய் மச்சான் இங்க பாருடா உன்னோட ஆளு” என்றான் மணி.🌹
கதிர் டிவியை பார்க்க, டிவியில் ஒரு ரிப்போர்ட்டர்🌹”ஹலோ மேடம்! நீங்க எப்ப இந்த சிட்டியில சார்ஜ் எடுத்தீங்க? எப்படி இதெல்லாம் வித்தின் ஒன் வீக்ல பினிஷ் பண்ணீங்க? உங்களை நினைச்சுப் பார்க்க பார்க்க எனக்கு ஆச்சரியமா இருக்கு. என்னால நம்பவே முடியல. நீங்க வந்த ஒரே வாரத்துல சிட்டி டோட்டல் கிளீன். இப்போ பெண்களை வைத்து தொழில் செய்யும் இடம் ஒன்று கூட இல்லை. சல்மான் பாய் என்ற ஒருத்தன் இந்த ஊரில் கொடிகட்டிப் பறந்து கொண்டு இருந்தான். அவனையும் தூக்கிட்டிங்க. அதே மாதிரி தொழிலில் இருந்த பெண்களை எல்லாம் மறுவாழ்வு கிடைக்க ஏற்ப்பாடு செஞ்சு கொடுத்து இருக்கிறிங்க. இன்னும் இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம். இது எல்லாத்தையும் விட பெரிய விஷயம், அந்த அரசியல் பிரமுகர் காளையனை கட்டம் கட்டித் தூக்கி இருக்கிறீங்க. இது எவ்வளவு பெரிய விஷயம்? உங்களால எப்படி இது முடிந்தது? என்று அந்த ரிப்போட்டர் பேட்டி எடுக்க,
அந்த பேட்டிக்கு பதில் சொன்னது அசிஸ்டன்ட் கமிஷனர் "முல்லையோவியம் என்ற முல்லை" என்பதைப் பார்த்த கதிரும், கீதுவும், மணியும் ஆச்சரியத்தில் கண்களை விரித்து பார்த்தனர்.🌹
“வணக்கம். முதல்ல நான் அண்டர் கவர் ஆபரேஷன் பண்ண போகிறேன் என்று சொன்னதும், எனக்கு பர்மிஷன் கொடுத்த ஓவியஇந்துவுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். தென் என்ன கேட்டீங்க? எப்படியா? செஞ்சி தானே ஆகணும். நம்ம ஒரு இடத்துல போய் காலை வைக்கிறோம் என்றால் நம்ம வரோம்னு தெரியும் போதே எதிரிகளுக்கு அல்லு விடனும். அந்த பயம் எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன வயசில் இருந்தே நான் அதை சாதித்து காட்டி இருக்கேன். இந்த வெறும் வாயில வெத்தலை போடுறதெல்லாம் எனக்கு பிடிக்காது. களத்துல இறங்கிட்டா எதிர்க்க இருக்கிறவங்கள அடித்து துவம்சம் பண்ணி போய்க்கிட்டே இருக்கணும். நான் முதல் முதல்ல டெல்லியில் இருந்து இந்த ஊருக்கு வந்து சார்ஜ் எடுத்த உடனே இரண்டு பேர்தான் என்னுடைய டார்கெட்..
ஒன்று சல்மான் பாய். இரண்டாவது அந்த காளையன்.”
“சல்மான் பாய்க்கு பத்திரத்தை வைத்து பந்தயம் கட்டி தூக்கினேன். ஆனா, இந்த காளையன் பெண்களை பல தொழில் செய்ய வற்புறுத்தி அவங்கள வெச்சு சம்பாதிக்கிற ஒரு அரசியல் பிரமுகர். அதனால தான் அவனுக்காக என் கூட பிறந்த அக்காவை அந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்ணாக நடிக்க வச்சு அவனுக்கும் நாங்கள் கட்டம் கட்டினோம். அப்படி இருந்தும் அவன் மட்டும் தப்பித்து ஓடினான். பட், அவனையும் நாங்கள் இன்னைக்கு ஈவினிங் பிடிச்சாச்சு. சோ, இந்த சிட்டி இப்போ டோட்டல் கிளீன். ஐ அம் வெரி ஹாப்பி” என்றாள் முல்லையோவியம்.
“இருந்தாலும் ஒரு பெண்ணாய் இருந்துக்கிட்டு, நீங்க இதை செய்தது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்று கேட்டாள் ரிப்போர்ட்டர்.
“ஹலோ! அது என்ன ஒரு பெண்ணா இருந்துகிட்டு, ஏன் பெண்கள் எல்லாம் செய்யக் கூடாதா? பெண்களா ஆண்களா என்பது முக்கியம் இல்ல. செய்யணும்னு முடிவு பண்ணிட்டா சும்மா வச்சு செஞ்சுட்டு போய்க்கிட்டே இருக்கணும். ஓகேவா? தேங்க்யூ அன்ட் ஸீ யூ லேட்டர்.”
“மேடம் ஒரு நிமிஷம். நாங்க இப்ப தான் உங்களுடைய ஃபேஸ்புக் ஸ்டேடஸ் செக் பண்னினோம். முன்னாடி எல்லாம் நீங்கள் சிங்கிள்னு போட்டு இருந்தது. ஆனா, இப்ப கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி மேரீட்னு போட்டு இருக்கு. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? என்று ரிப்போர்ட்டர் பெண் கேட்டாள்.
🌹கதிர். முல்லையின் பதிலுக்காக தன் காதை தீட்டி வைத்திருக்க, முல்லை கேமராவை பார்த்து, எஸ். ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் எனக்கு கல்யாணம் ஆச்சு” என்றாள்.
“உங்களுடைய ஹஸ்பண்ட் பெரிய பொறுப்பில் தான் இருப்பாரு. சொல்லுங்க மேடம். உங்க ஹஸ்பன்ட் கலெக்டரா? இல்ல கமிஷனரா?”
முல்லை சிரித்துக்கொண்டே, “ம்... என் புருஷன் ஒரு திருடன்” ❤❤என்று சொல்ல, அனைவரும் முல்லையை ஆச்சரியமாக பார்க்க, கதிர் கையில் இருந்து துண்டை தலையில் போட்டுக் கொண்டபடி தரையில் அமரந்தான்.❤❤
“அய்யய்யோ இவ போலீசா? போலீசா... போலீசா... அடிச்ச சரக்கு எல்லாம் இறங்கிடுதுடா மவனே” என்றாள் கீதா.
“அப்ப இனிமே நமக்கெல்லாம் டப்பா டான்ஸ் ஆட போகுதா?” மணி பயத்தில் கேட்க,
“நீ கள்ளி இல்லையா. காவல் அதிகாரியா? மச்சான் சாச்சி புட்டாடா” 😂😂😂என்று சொன்னான்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top