Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
“அப்போ என் அழகிக்கு கண்ணு தெரியுமா?” என்று கதிர் ஆச்சரியத்தோடு கேட்க, அதே சமயம் மணியின் செல்போனுக்கு கதிரின் சித்தி ஓவியக்கீதாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ சொல்லு கிழவி?”
“டேய்! நான் வீடியோவ பாத்துட்டேன்டா.” என்றார் கீதா.
“அறிவில்ல உனக்கு. இந்த வயசுல பலான வீடியோவ பாத்துட்டு, அத மகன் வயசுல இருக்குற என்கிட்டயே சொல்லுவியா” என்று திட்டினான்.
“அடிங்கொய்யால. நான் சொன்னது அந்த பத்திரத்தை யார் திருடியது என்கிற வீடியோவை பார்த்தேன்னு. நீ என்ன சொன்னடா வெண்ணை.”
“ஆங்... சொல்றத ஒழுங்கா சொல்லு கிழவி. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டா எனக்கு எப்படி தெரியும்” என்றான் மணி.
“டேய் பாவிகளா! அந்த பத்திரத்தை திருடினது வேற யாரும் இல்லடா” என்று ஓவியா சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் முல்லை செல்போனுக்கு கால் வந்தது.
போன் எங்கே அடிக்கிறது என்று கதிரும், மணியும் தேட, முல்லை சோபாவிலிருந்து திமிராக எழுந்தவள், “ஏய் டோபர் மண்டையா. அறிவில்ல உனக்கு ஒரு வயசுப்பொண்ணு எதிர்க்க இப்படியா பேன்ட்டை கழட்டுவ?” என்று திட்டினாள்.
கதிர் அவளின் அழகை ரசித்து கொண்டே நின்று இருக்க
“மேடம் உங்களுக்கு தான் கண்ணு தெரியாதே” என்று மணி கேட்க,
“கண்ணு தெரியலனா இப்படி தான் எல்லாத்தையும் அவுத்து போட்டுட்டு பிறந்த மேனிக்கு நிர்பீன்களா” என்று பல்லைக்கடித்தாள் முல்லை.
“அய்யோ! என் மச்சி எதையும் கழட்டலங்க.”
“உன் மச்சி எதை கழட்டவும் லாயக்கில்லை என்று எனக்கு கோயிலிலேயே தெரிஞ்சிருச்சு. அடச்சீ இந்த போன்ல வேற யாருன்னு தெரியல” என்று எரிச்சல்பட்டாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ மேடம். ரொம்ப நேரமா போன் அடிக்குது .ஆனால் சத்தம் எங்கிருந்து வருதுன்னு தான் தெரியல. உங்க போன் எங்க இருக்கு?” என்றான் மணி.
“அதெல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கு.” என்று அலட்சியமாகப் பதில் சொன்னாள்.
“டேய் அறிவுகெட்ட பசங்களா. நான் என்ன பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க யாருகிட்ட பேசுறீங்க. கதிர் எங்கடா. முதல் போனை லவுட் ஸ்பீக்கரில் போடுடா” ஓவிய கீதா அதட்டல் போடா,
“இரு கிழவி நான் போடுறேன்.” என்று முல்லையின் அழகை மேலும் ரசித்துக் கொண்டு இருந்தவனைப் பார்த்து, “டேய் கதிர்! இங்கே பாரு இந்த கிழவி ஏதோ சொல்லிக்கிட்டு இருக்கு. டேய் உன்ன தான்டா இங்க பாரு கிழவி போன்ல கத்துது” என்று தோழனின் ரசனையைக் கலைத்தான் மணி.
கதிரோ முல்லையை பார்த்து, “ஹாய் பியூட்டி” என்றான்.
“நான் பியூட்டி தான் அது இந்த உலகத்துக்கே தெரிந்த உண்மை” என்றார் ஓவியகீதா.
“ஏய் கிழவி! உன்னை யார் சொன்னது? நான் என் எதிர்க்க இருக்கிற தேவதையை சொன்னேன்.” என்று வழிந்தான் கதிர்.
“டேய் மவனே! அவள் தேவதை இல்லடா. அவ தான் நம்ப ஆட்டையை போட இருந்த பத்திரத்தைத் திருடின திருடி” என்றார்.
“என்ன கிழவி சொல்ற? அப்போ இவளும் நம் இனத்தை சேர்ந்தவளா?”
“ஏய்! என்ன லூசு மாதிரி பேசிட்டு இருக்க. கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு இருக்கியா. எனக்கு போன் வருது” என்றாள் முல்லை.
“டேய் மணி! அவன் அவ அழகுல மயங்கி நின்னுகிட்டு இருக்கான்னு நினைக்கிறேன். அவன் மூஞ்சில தண்ணீர் தெளித்து, அதன் பின் அந்த பொண்ணுகிட்ட இருக்குற பத்திரத்தை புடுங்குற வழியே பாருங்கடா.”
“மச்சான் முதல்ல அந்த பொண்ணு கழுத்துல கத்திய வச்சு, பத்திரம் எங்கன்னு கேளு” என்றான் மணி.
“ஏய்! டுபாக்கூருங்களா. என்ன என் கழுத்துல நீ கத்தியை வைப்பியா? என் கழுத்தில் கத்தி வைக்க ஒருத்தவன் பொறந்து வரணும்” என்று எகிறினாள்.
“பொறந்துட்டான். என் மச்சான் இவன் தான் அது. இப்போ பாரு உன் கழுத்தில் கத்தி வைக்க போறான். மச்சான் கழுத்தில் கத்தியை வைத்து பத்திரம் எங்கன்னு கேளுடா” என்றான்.
“ஏய் நீ சொன்னா, இந்த தாடிக்குள்ள மூஞ்சிய வைத்து இருக்கும் ஹீரோ என் கழுத்துல் கத்தி வச்சிடுவானா? தைரியம் இருந்தா வைக்கச் சொல்லு பார்க்கலாம்.”
“மச்சான் நான் சொன்னா நீ அவ கழுத்தில் கத்தி வைப்ப தானேடா?”
“ஆமா அவ கழுத்துல நான் தாலி கட்டிய தீருவேன்.” என்றான் வேகமாக.
“அட லூசு பயலே. டேய்! உன் சித்தி இங்கே வாலுவால்லுன்னு கத்துகிட்டு இருக்கேன். நீ என்னடா அங்க அவளுக்கு வாழ்க்கை கொடுக்கிறது பத்தி பேசிகிட்டு இருக்க. நாளைக்கு சல்மான் பாய் வந்து சங்கு மேல மிதிக்க போறான். அவக்கிட்ட பத்திரம் எங்கன்னு கேளுங்கடா” என்றார் கீதா.
“ஏய் முதல்ல வாயை மூடுங்க. எனக்கு முக்கியமான போன் வருது. அக்கா சொல்லு” என்று அவர்களை அமைதிப்படுத்தி அக்காவிடம் பேசினாள்.
“ஓவியா எங்க இருக்க?
“அதுவா, இங்க ஒரு சின்ன ஆக்சிடன்ட். ஒரு கார் மோதிருச்சு எப்படின்னு தெரியல. நான் ரெண்டு லூசுகிட்ட மாட்டிக்கிட்டேன். சரி நீ எங்க இருக்க?
“நான் உன்னுடைய வாட்ச்சில இருக்கிற ஜிபிஎஸ் கனெக்சன் வச்சு, நீ இருக்கிற இடத்து பக்கத்துல தான் இருக்கேன். ஆனா சரியா கனெக்சன் கிடைக்க மாட்டேங்குது” என்று கேட்டாள் ஷாமிலி.
“ஏய்! இது ஏதோ ஒரு ஓட்ட வீடு மாதிரி தான் இருக்கு. சரி சரி இங்க இரண்டு பேர் தான் இருக்கிறானுங்க. இவனுங்கள போட்டுத் தள்ளிட்டு நானே வரேன். நீ அங்கேயே வெயிட் பண்ணு” என்றாள் அக்காவிடம்.
“ஹலோ யாரை போட்டுத்தள்ள போறீங்க? நீங்க என் மேல கூட கையை வைத்துடலாம். ஆனால், என் மச்சான் மேல கையை வைத்துட்டு நீங்க தப்பிக்கவே முடியாது.”
“டேய் உன் மேல கால வைக்கிறன். உன் மச்சான் மேல இதோ பார் கையை வைக்கிறேன்”என்று சொன்ன முல்லை, தன்னிடமிருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து மணியின் கண்ணில் அடித்தவள் கதிரைப் பார்த்து, “ஏய் நீ என்ன பிரம்ம புடிச்ச மாதிரி நிக்கிற” என்று கேட்டாள்.
“கண்ணே கண்மணியே...” கதிர் ஆரம்பிக்க,
“அடப்பாவி பெப்பர் ஸ்ப்ரே எடுத்து என் கண்ணுல அடிச்சி ,என் கண்ணை கபடி ஆட வச்சிட்டா. நீ என்னடானா அவள கண்ணு மண்ணுன்னு சொல்ற? இது சரியில்லடா.”
“ஏய் வாயை மூடு” என்றாள் முல்லை.
“ஹாய் பட்டுக்குட்டி. நீ... இல்ல இல்ல நீங்க திருடியா?”
“ஆமாம்மா நான் திருடி தான். இவர் மட்டும் பெரிய வெள்ளாள கண்டன்.”
“ஐ... நீயும் திருடி. நானும் திருடன். நம்ப ரெண்டு பேரும் திருடனும் திருடியுமா? ஆகா! என்ன ஒரு அருமையான பொருத்தம்.”
“நீ என்ன லூசா. உன்னால ஒரு பத்திரத்தை கூட ஒழுங்கா அடிக்க தெரியல. உன்னை எல்லாம் நான் காதலிப்பேன்னு கனவுல கூட நினைக்காத. ஓடிப் போயிடு. இல்ல முகத்துல ஸ்ப்ரே அடிச்சிப்புடுவேன்.
“நீ என்ன அடித்தாலும் பரவாயில்ல.. நான் உன்னைக் காதலிக்கிறது தான் உண்மை.”
“உனக்கு இந்த பெப்பர் ஸ்பிரே எல்லாம் வேஸ்ட். உனக்கு வேற ட்ரீட்மென்ட் இருக்கு” என்று சொன்னபடி முல்லை, கதிரின் அருகில் சென்றவள் அவனின் இதழ்களை பார்த்து, “ஏய்! திருடா. உனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுக்கவா?” என்றாள்.
சந்தோசத்திற்கு கேட்கவும் வேண்டுமா அங்கே. வேகமாக, “ம்... எஸ் எஸ்” என்றான்.
அவளோ, நான் முத்தம் கொடுத்தால் நீ பிளாட் ஆயிடுவ. அதனால இந்தா”என்று சொன்னபடி அவன் நெற்றியில் தன் நெற்றியால் ஒரே ஒரு இடி இடிக்க, கதிர், முல்லையின் அழகில் மயங்கி விழ... அவள் அங்கிருந்து எஸ்கேப் ஆனாள்.
மறுநாள் காலை 8 மணிக்கு ஓவியக்கீதா கோபமாக சோபாவில் வந்து அமர்ந்து இருக்க, இவர்கள் இருவரும் மயக்கத்திலிருந்து எழுந்து வந்தார்கள்.
“ஐயோ! எனக்கு கண்ணு தெரியலையே. அந்த பாழா போன பொண்ணு என் கண்ணுல அடித்துட்டாலே” என்று கத்தினான் மணி.