• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
🌹ஓவியம் - 2

அன்றைய இரவு பதினோரு மணி அளவில் வீட்டில் கைலி கட்டிக்கொண்டு, கதிர் கையில பைலை வைத்துக்கொண்டு கோவமாக அமர்ந்திருந்தான். அவன் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவை திறக்க, வாசலில் நின்று இருந்தது அந்த பணக்கார தோரணையில் கோவிலில் வம்பிழுத்த அந்த வயதான பெண்மணி ஓவியகீதா.
“ஏய்! என்ன... கோயில்ல கொஞ்சம் கூட உன்னோட பர்பாமன்ஸ் சரி இல்லையே. உனக்கு எங்கேயாவது அறிவு இருக்கா. நான் எப்படி நடிக்க சொல்லிக் கொடுத்தேன். நீ எப்படி நடிக்கிற? உன்ன பாத்தா வாய் பேச தெரியாதவன் என்று யாரேனும் நம்புவாங்களா?” என்று ஓவியகீதா கதிரை திட்ட. கதிர் அவளை முறைத்துக் கொண்டு இருந்தான்.
நேரம் சரியாக 11.45 மணிக்கு மீண்டும் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறக்க, வெளியே நின்று இருந்தது இவர்களின் நண்பன் மணி
“ஹாய் ஓவியா! என்ன அமைதியா இருக்கிற? யாரு உன் அமைதிக்கு காரணம்?”
“ஏய்! வாய மூடு. இவன கோயிலில் பர்பாமன்ஸ் பண்ணச் சொன்னா, உம்மனா சாமி மாதிரி நின்னுக்கிட்டு இருக்கான்.”
“ஆமா ஊமை உம்முன்னு நிக்காம வேற என்ன பண்ணும்?” என்றான் மணி.
“டேய்! அவங்க எல்லாம் திறமையானவர்கள். ஆனா, இவன் அப்படி இல்ல. இவன் வேஸ்ட்.”
“ஆயா நீ பேசறத எல்லாம் இப்பவே பேசிடு. இன்னும் உனக்கு பத்து நிமிஷம் தான் டைம்.”
“என்னடா சொல்ற? என்ன பத்து நிமிஷம்?” என்ற ஓவியகீதா புரியாது கேட்க,
“ஏய்! மணியைப் பாரு” என்றான் மணி.
“அய்யய்யோ! இத நான் மறந்துட்டேன். இல்லடா நான் பேச வந்ததை பேசிட்டு கிளம்பிடுறேன்” என்று ஓவியகீதா சொல்ல,
“சீக்கிரம் ஐந்து நிமிஷத்துல சொல்றத சொல்லிட்டு ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிடு. ஐயோ இன்னும் மூணு நிமிஷம் தான் இருக்கு” என்றான்.
“டேய்! நான் உன்கிட்ட அடுத்த வாரம் சனிக்கிழமை பேசுறேன். பை” என்று பேசியபடி ஓவியகீதா அந்த இடத்தில் இருந்து ஓடிப்போக,
அவளின் கையை பிடித்து நிறுத்திய கதிர், “அடிங்கொய்யால கிழவி. நேரம் நைட் பனிரெண்டு ஆயிடுச்சு இல்ல. இனிமே சனிக்கிழமை இல்ல. ஆனா, உனக்கு இன்னைக்கு ஏழரை ஆகிப்போகுது பாரு.” என்றான்.
“டேய் டேய் விட்டுடுடா” என்று ஓவியகீத்து கெஞ்ச,
“ம்... வேலைக்கே ஆகாது. ஞாயிற்றுக்கிழமை என் மௌன விரதத்திற்கு என்ட் கார்டு போட்டாச்சு. என்ன சொன்ன உம்மனாசாமி மாதிரி இருக்கேனா, ஏன் கிழவி, நீ எல்லாம் ஒரு சித்திகாரியா. எங்க அப்பன் உன்கிட்ட என்னை ஒப்படைக்கும் போது என்ன சொன்னான்? என்னை படிக்க வைத்து ஒரு பெரிய ஆளா ஆக்க சொன்னான். ஆனா நீ, என்னை ஒரு திருட்டுப் பயலா ஆக்கி வச்சியிருக்க.”
“டேய்! ஏன்டா தம்பி அப்படி சொல்ற? திருட்டு நம்மளுடைய குலத்தொழில்டா. உன் அப்பன் என் அக்கா மனச திருடினான். உன் அம்மா செத்ததும் உன் அப்பன் மனச நான் திருடினேன். ஆனா, என்கூட வாழ உன் அப்பனுக்கு குடுத்து வைக்கல. என்ன கல்யாணம் பண்ணிப்பார்ன்னு நினைச்சா அல்பாயுசில் போய் சேர்ந்துட்டான்” என்று பழங்கதைகள் பேச,
“ஏய்! வெத்தலை வாயி. உன்ன ரெண்டாவதா கல்யாணம் பண்ணிட்டு கொஞ்சம் கொஞ்சமா என் அப்பன் சாவறதுக்குப் பதில், ஒரேடியா அப்பவே போய் சேர்ந்துட்டாரு.”
“சரி சரி. ஃபிளாஷ்பேக் எல்லாம் இப்ப தேவை இல்ல. நம்மள நம்பி ஒரு பத்து பேர் இருக்கிறாங்க. அவங்களுக்காக நம்ப இந்த திருட்டுத்தனம் பண்ணி தான் ஆகணும்பா.” என்றார்
“அது எப்படி கிழவி. திருடுற எல்லாருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கு” என்றான் மணி.
“அட ஆமாடா. எப்ப என்ன தப்பு தவறு எது நடந்தாலும் சரி. காரணத்தை நமக்கு ஏத்தமாதிரி மாற்றிக் கொண்டால் தான் நம்மால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்.”
“நீ எந்த கட்டத்துக்கும் போக வேண்டாம். சரி கோயிலில் அடிச்ச பணம், நகைக்கு எங்களோட பங்கு எங்கே? என்று கேட்டான் கதிர்.
“டேய் அங்க ஒன்னும் வேலைக்கு ஆகல. கூட்டம் கம்மியா தான் இருந்தது. அதுவும் இல்லாமல் நம்ப ஒன்னும் இந்த தடவை நகை பணம்னு திருடுவதற்கு போகலயே டாக்குமென்ட் அடிக்க தான் போனோம்.
“ஆனா, அந்த டாகுமென்ட்டை நமக்கு முன்னாடி யாரு தூக்கி இருப்பாங்க?” என்று சந்தேகம் கேட்டான் கதிர்.
“டேய் ஓவியம்! என்றழைத்தார் ஓவியகீதா.
“ஏய் கிழவி. கதிருன்னு சொல்லு. இல்ல சங்கை கடிச்சுடுவேன்” என்று கோவப்பட்டான்.
“சரி சரி கதிரு. நான் தான் உன்னை கோவிலுக்குள்ளே வச்சு அந்த டாக்குமண்டை அடிக்க சொன்னேன் இல்ல. நீ ஏன் அத பண்ணல?”
“அது ஒண்ணுமில்ல கிழவி. கோவில்ல ஒரு தேவதையை பார்த்தேன்.”
“தேவதை உன்னை பார்த்தங்களா?” என்று மணி கேட்டான்.
“இல்ல. நான் பார்த்த தேவதை என்னை மட்டுமில்ல வேற யாரையும் பாக்கமாட்டா” என்றான்.
“ஏன் தேவதைக்கு கண்ணு தெரியாதோ?” நக்கலாகவே கேட்க,
“ஆமாடா தெரியாது. ஆனா, அழகுனா அழகு அவள் அப்படி ஓரு அழகு.
“ஏய் கதிரு இந்த உலகத்திலேயே நான் தான் அழகுன்னு சொல்லுவ. இப்ப என்ன மாத்திப் பேசுற?”
“அடக் கிழவி நான் எப்ப சொன்னேன்? நீ அழகு இல்ல. சரியான அழுக்கு.” என்றான் கதிர்.
“பயபுள்ளைய சின்னதிலேயே கள்ளிப் பாலைக் குடுத்து சோழியை முடிச்சு இருக்கணும். அதை செய்யாததால தான் இப்படிலாம் பேசிட்டு இருக்க.”
“டேய் மணி! கிழவி கிடக்குது. நான் சொல்றத கேளு.”
“ம்ம்ம்... சொல்லித் தொலையும்” என்றான் மணி.
“நீ காலையில கேட்ட தெரியுமா ஓரு ஓவியம். அந்த ஓவியத்துக்கு ஏத்த கண்ணுக்கு சொந்தக்காரி தான் அந்தப் பொண்ணு.”
“கவிதை கவிதை.”
மணியின் வார்த்தைக்கு, “கழுதை மேப்பது எல்லாம் கவிதையை ரசிக்குது.” என்றார் ஓவியகீதா.
“ஏய் கிழவி யாரை சொன்ன?”
“நான் மணியை சொன்னேன்பா. சரி இப்ப என்ன பண்றது அந்த சல்மான் பாய் வேற காலையில வந்து டாக்குமெண்ட் கேப்பானே.”
“அவன் கேட்டா நீதான் பதில்லை சொல்லணும். நாங்க என்ன செய்ய?”
“டேய் கதிர்! நான் பாவம் இல்ல. நான் வேற அந்த ஆளு தந்த அட்வான்ஸ் காசை செலவு பண்ணிட்டேன்டா.”
“அடக் கிழவி நான் கேட்டதுக்கு அவன் இன்னும் பணமே தரலன்னு சொன்ன. எவ்வளவு பணம் வாங்கின? என்ன செலவு பண்ண? என்று கதிர் கேட்டான்.
“அ...அது அவன் அட்வான்ஸ் பணம் இருபது ஆயிரம் தந்தானா அதுல நான் ஓரு செல்போன் வாங்கிகினேன்.”
“போன வாரம் தானே கிழவி, பீச் ரோட்ல ஓரு வெள்ளைக்காரன்கிட்ட ஓரு செல் போனை ஆட்டையை போட்டு தந்தேன். இப்ப எதுக்கு இன்னுமொரு போன் வாங்கின?”
“அது ஒண்ணுமில்ல மவனே. அந்த போன்ல சித்தி செல்பி எடுத்தா பிக்சர் ஒழுங்கா கிடைக்கல அதான்.”
“ஸெல்ப் எடுக்காத உனக்கு செல்பி கேக்குதா. சரி சரி முதல்ல இடத்தை காலி பண்ணு. எனக்கு தூக்கம் வருது” என்றான்.
“டேய்! என்னடா. அப்ப அந்த டாக்குமெண்ட்?”
“என்னைக் கேட்டா. நீ தானே அட்வான்ஸ் வாங்கின. நீயே அனுபவி. நாளைக்கு அந்த பாய் வந்து சங்கு மேல மிதிப்பான் வாங்கிக்கோ.”
“அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா மவனே. சித்திக்காக கொஞ்சம் அந்த டாக்குமெண்ட் எங்கன்னு பாருடா” என்றார் கெஞ்சலாக.
“டேய் பாவம்டா. சீக்கிரம் எதாவது பிளான் பண்ணு.” மணியும் அவருக்கு சப்போர்ட் வந்தான்.
“இல்லடா. நான் கோவிலுக்குள் போகும்போது அந்த சேட்டு பொம்பளைக்கிட்ட டாக்குமெண்ட் இருந்துச்சு. அப்புறம் அந்த பொம்பள நான் சொன்ன தேவதைகிட்ட சண்டை போட்டா. அப்புறம் தான் இந்த கிழவியை வச்சு என் சைக்கிள்ல காரை மோதி, நம்ம அங்க ஒரு ட்ராமா போட்டு. அந்த பூக்கார பாட்டியை வச்சு, அந்த சேட்டு பொம்பளை காரில் இருக்கும் டாக்குமண்டை எடுக்க சொன்னோம். ஆனா, அந்த பூக்கார பாட்டி குடுத்த பைல்ல பேப்பெர்ஸ் இல்லை” என்றான்.
 
Joined
Feb 6, 2025
Messages
111
.
“என்னடா சொல்ற? கோவிலுக்குள் சாமிகிட்ட வச்சி ஆசீர்வாதம் வாங்க தான் அந்த சேட்டு பொம்பளை பைலை எடுத்துட்டு போச்சு. பின்ன எப்படி திரும்பி வரும் போது அந்த பைல்ல இருக்கும் பேப்பெர்ஸ் மிஸ் ஆகியிருக்கும்?”
“சரி ஒன்னு பண்ணுவோம் இரு. நம்ம மூன்னு பேரும் போய் கோவில்ல இருக்கும் அந்த சிசிடிவி கேமராவை பார்ப்போம். அப்ப தெரியும் யாரு அந்த டாக்குமண்டை ஆட்டையை போட்டு இருக்காங்கன்னு.”
“ஆனா கோவிலுக்குள் போய் கேமராவை தொடும் அளவுக்கு நமக்கு யாரடா தெரியும்?” என்று மணி கேட்டான்.
“அதான் அந்த பூக்கார பாட்டியுடைய பேரன் சரண் இருக்கிறானே. பைபுள்ள அதுவும் திருட்டு மாங்கொட்டை தான். அவனுக்கு இரண்டு டீயும் பன்னும் வாங்கிக் கொடுத்தா போதும். கோயில்ல இருக்குற வீடியோவை எடுத்துட்டு வந்து கொடுப்பான்.”
“சரி சரி அப்ப நேரம் கடத்தாமல் வாங்கடா போகலாம்.” என்றார் ஓவியகீதா.
“கதிர் டைம் நைட் ஒன்னுடா. இப்ப எங்க இருந்துடா போறது?”
“டேய் மணி. மணி எல்லாம் பார்க்காதீங்கடா. காலையில அந்த சல்மான் பாய் வந்து என் கழுத்தில் கத்தியை வைத்துருவான்டா. அந்த டாக்குமெண்ட் இப்ப ரொம்ப முக்கியம்டா” என்று கதிரை வளர்த்த சித்தி சொல்ல. ஓவியகீதாவும், கதிரின் நண்பன் மணியும், கதிர் மூவரும் மீண்டும் அந்த பூக்கார பாட்டியைப் பார்க்க அனுமன் கோயிலுக்குப் போனார்கள்.

இங்கு என்ன நடக்கிறது என்று உங்களுக்கு சந்தேகம் இருக்கும் நிலைமையில், நான் விவரிக்கிறேன். அதாவது கதிரின் அப்பா, தன் மனைவி இறந்த பிறகு ஓவியகீதாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணியிருக்க. அவரும் ஒரு விபத்தில் இறந்துவிட, கதிரை ஓவியகீதாவே வளர்க்க வேண்டியதாக நேரிட்டது. கீதாவும் கதிரும் சேர்ந்து தன்னை சார்ந்த பத்து பேரை காப்பாற்ற. திருட்டுத் தொழிலை கையில் எடுத்தார்கள் இன்று கதிர் கோவிலுக்குச் சென்று, அங்கு வரும் ஓரு பெண்ணின் கையில் இருக்கும் டாக்குமென்ட்டை அடிப்பதற்க்காக பிளான் போட்டு அவன் கோவிலுக்கு செல்ல, கதிர் அந்த பத்திரத்தை எடுப்பதற்குள் வேறு யாரோ எடுத்து விட, அது யார் என்று கண்டுபிடிக்க இவர்கள் மூன்று பேரும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள்.
“மச்சான் என்ன ஒரே யோசனையா இருக்குற?”
“இல்லடா இன்னைக்கு கோயில்ல அந்த பொண்ண பார்த்தேன் இல்ல. அவ நியாபகமாவே இருக்கு. அவ கண்ணு. எப்பா அவ கண்ணுல ஒரு காந்தம் இருந்துச்சு. ஆனா, என்ன ஒண்ணு அந்த கண்ணுக்கு தான் கண்ணு தெரியல” என்றான் வருத்தமாக.
“டேய்! என்னடா கண்ணு மண்ணு பொண்ணுன்னு இருக்கிறீங்க முதல்ல போய் டாக்குமெண்டை எடுப்போம்.”
“எடுப்போம் எடுப்போம். நீ முதல்ல ரோட்டைப் பார்த்து ஓட்டு” என்று சொல்லிக் கொண்டே இருக்கும் நேரத்தில், ஓவியகீதா காரை நேராக கொண்டு போய் ஒருவரின் மீது மோதினார்.
“ஐயையோ கிழவி. ஆக்சிடென்ட் பண்ணிட்டியா? போச்சி போ” என்று அலறினான் மணி.
“பவர் கிளாஸ் போட வேண்டிய வயசுல, கூலிங் கிளாஸ் போட்டால் இப்படி தான்.”
“முதல்ல டேய் யாருக்கு என்னாச்சுன்னு பார்ப்போம்.”
என்று பயந்து போய் இவர்கள் மூவரும் கீழே இறங்க,காரில் அடிபட்டு இருந்தது நம் கதாநாயகி முல்லையோவியம்
“ஐயையோ! ஏய் இந்த பொண்ண தான் நான் பார்த்தேன். அடிப்பாவி கிழவி கண்ணு தெரியாத பொண்ணு வாழ்க்கையில் இப்படி மண்ணை போட்டுட்டியே. ஐயோ என் தேவதை” என்று பதறினான்.
“இருடா நான் தூக்குறேன்” என்று மணி இறங்க,
“டேய்! ஸ்டாப் இட். இவ எனக்காகப் பிறந்தவ. இவளை நான் தான் தூக்கனும். இரு இவளை நம்ம வீட்டுக்கு தூக்கிடுவோம்.”
“டேய்! கோயிலுக்குப் போகலாம் வாடா.” என்றார் தன் தலைக்கு வந்த ஆபத்தை நினைவுபடுத்தி.
“இல்ல இல்ல நானும் இவனும் வீட்டுக்குப் போறோம். அந்த சரண் உன் ஆளு தானே. அந்த பொடி பையலை வச்சு கோயில்ல போயி வீடியோவை எடுத்து என்ன நடந்ததுன்னு பாரு. நான் இவளை வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்.”
“டேய் மவனே! இவளை நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு தூக்கிட்டு போய் என்ன பண்ணப் போறீங்க?”
“உனக்கு அறிவு இருக்கா? உனக்கு தான் எதை பண்ணவும் லாயக்கு இல்லையே. மச்சான் நீ வா நாம கிளம்பலாம்” என்று சொல்லி இவர்கள் மூவரும் கதிரின் வீட்டிற்கு கிளம்ப, ஓவியகீதா பொடி நடையாக நடந்து அனுமன் கோவிலுக்கு செல்ல, கதிரின் வீட்டில் முல்லை, மணி மற்றும் கதிர்
“மச்சான் இந்த பொண்ணு இவ்வளவு அழகா இருக்கு இல்ல. பாவம்டா கடவுள் இவளுக்கு எதுக்குடா இந்த பிரச்சனையை கொடுக்கணும்.”
“தெரியலடா கதிர். சரி முகத்தில் தண்ணீர் தெளிப்போமா? மயக்கம் தெளியும் இல்ல.”
“இல்லடா. என் தேவதைக்கு மயக்கம் தெளிஞ்சா என்னை விட்டு கிளம்பிடுவா. இவ மயக்கத்திலேயே இருக்கட்டும். நான் அவள் அழகை ரசித்துக் கொண்டே இருக்கேன்.”
“என்ன மச்சான் நீ இப்படி பேசுற?”
“ஆமாடா. காதலுக்கு கண்ணில்லை என்று சொல்லுவாங்க. அதான் இது” என்றான் கதிர்.
“அது சரிதான். ஆனா, நீ காதலிக்கிற பொண்ணுக்கு கண்ணே இல்லயே. அப்புறம் எப்படிடா?”
“பரவால்லடா. நம்ம இன்னும் நல்லா திருடி காசு சேர்த்து, ஆபரேஷன் பண்ணி இவளுக்கு பார்வை வர வச்சிடுவோம்.”
“ம்... அவங்கவங்க என்னென்னமோ வர வைக்கிறாங்க. நம்ம ஏன் கண் பார்வையை வைக்க கூடாது. பண்ணுவோம் பண்ணுவோம்” என்று ஜால்ரா தட்டினான் மணி.
“டேய் டேய் இருடா இருடா கத்தாத. என் செல்லக்குட்டி கண் விழிக்கிற மாதிர இருக்கு” என்று கதிர் சொன்ன அந்த நொடியே கண் விழித்த முல்லை தட்டுத் தடுமாறி எழுந்தாள்.
“நா...நான் எங்கே இருக்கிறேன். என்னை சுற்றி யார் இருக்கிறிங்க?” என்று கேட்க,
கதிரோ, “பாப்பா உனக்கு ஒன்னும் இல்ல. நீ மயக்கத்தில் இருந்த நாங்கதான் உன்னை இங்க காப்பாற்றி அழைத்து வந்தோம். எதாவது சாப்பிடுறியா” என்றான்.
“இல்ல இல்ல. நான் கிளம்புறேன். நேரம் ஆகுது. நான் கிளம்பனும்.”
“சரி சரி கவலைப்படாத. இரு நாங்களே உன்னை கொண்டு போய் வீட்ல விட்டுடுறோம். கதிரு வாடா போய் இந்த பாப்பாவை விட்டுட்டு வந்துடுவோம். டேய் உன்னை தான்டா. அடபாவி இந்த பொண்ணு அழகுல இப்படியா மயங்கி நிப்ப. இரு வரேன்.”
என்று சொன்ன மணி, பக்கத்தில் இருந்த தண்ணியை தூக்கி கதிர் மேல் ஊத்தினான்.
“டேய் ஏன்டா?”
“பின்ன என்ன மணி ஆகுது பாரு. நீ என்னனா இந்த பெண்ணின் அழகில் மதி மயங்கி நிக்குற. வா போகலாம்.“
“ட்ரெஸ்லாம் ஈரமாச்சு மச்சான் இரு நான் டிரஸ மாத்திக்கிட்டு வரேன்.”
“என்னடா பண்ணுற? டேய்! இங்க ஏன்டா பேண்ட்டை கழட்டுற” என்று கத்தினான் மணி.
“ஏய் இவளுக்கு தான் கண்ணு தெரியாது இல்ல. இருடா இங்கேயே ட்ரெஸ்ஸ மாத்திக்கிறேன்”
என்று சொல்லி கதிர் பேன்ட்டை கழட்ட போக
“ஏய்! நோ. நோ நோ நோ, இங்கெல்லாம் டிரெஸ்ஸ கழட்டாதே” என்று கத்தியப்படி முல்லை கண்களை மூடிக்கொண்டாள்.
அதே நேரம் ஓவியகீதா, மணியை கைபேசி மூலம் அழைத்து அந்த டாக்குமன்ட்டை திருடியது யார் என்று சொல்ல், அதிர்ந்து எதிரில் இருந்தவளைப் பார்த்தான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top