• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
132
13.2

அன்றைய இரவு சிங்கப்பூரில் இருந்து திரும்பி அகிலனும் அவனின் தந்தையும், இந்துவும் நடு வீட்டில் அமரந்தது கொண்டு தீவிரமாக எதையோ பேசிக்கொண்டு இருந்தனர்.

“அகில் எனக்கு என்னமோ இதெல்லாம் சரி படல.” என்றார் இந்து.

“அத்த வீட்ல புதுசா ஒருவன் வேலைக்கு சேர்ந்து இருக்கான். நம்ம இங்கயிருந்து எதையும் பேச வேண்டாம். வாங்க என் ரூமுக்கு போகலாம்” என்று சொல்லி அகிலனின் ரூமுக்கு இந்துவை அவனும், அவனின் அப்பா சேதுவும் அழைத்துச் சென்றனர்.

“என்ன அத்தை? என்ன பிரச்சனை உங்களுக்கு?”

“இல்ல மாப்பிள்ளை. இந்த பிசினஸ் நமக்கு சரிவராதுன்னு தோணுது.” என்று ஒரு எச்சரிக்கை உணர்வுடன் சொன்னார் இந்து.

“ஏன் இப்படி பயப்படுறீங்க அத்தை?”

“இல்ல இது ஏதோ தப்பான பிசினஸ் மாதிரி இருக்கு. நான் வேற இதுல உன்னை மட்டுமே நம்பி கோடி கணக்குல இன்வஸ்ட் பண்ணி இருக்கேன்.”

“இல்ல அத்த. பயப்படாதிங்க. எல்லாம் நல்லபடியாக முடியும்.”

“ஆமாமா. என் மருமக, அதான் உன் மகள் முல்லை வரும் நேரம் அகிலுக்கு எல்லாம் நன்மையும் நிகழும்.” என்றார் சேது.

“ம்... சரி எல்லாம் நல்லதா முடியட்டும். வர வெள்ளிக்கிழமை உனக்கும் முல்லைக்கும் நிச்சயதார்த்தம் உன்னுடைய பிரண்ட்ஸ்கு சொல்லிடு.” என்று சொன்னபடி இந்து வெளியே போக, அகிலனுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ஹாய் டார்லிங் எப்படி இருக்க?” என்று கொஞ்சலாகக் கேட்டான் அகிலன்.

“நான் நல்லா இருக்கேன். என்ன உனக்கு நிச்சயதார்த்தம் போல கேள்விப்பட்டேன்” எனக் கேட்டாள் மாலினி.

“ஏய் மாலினி டார்லிங். நான் தான் சொன்னேனே. நிச்சயம் கல்யாணம் இது இரண்டும் முல்லை கூட நடக்கும். எதுக்குன்னா எல்லா சொத்தையும் என் பேர்ல மாத்த. ஆனால் மற்றபடி எனக்கு பொண்டாட்டி என்ற உரிமை உனக்கு தான் இருக்கு. ஞாபகம் இருக்கட்டும்.”

“ம்... உனக்கும் நியாபகம் இருக்கட்டும். உனக்கும் எனக்கும் நடந்த கல்யாணப் பதிவு எல்லாம் என்கிட்ட இருக்கு. என்னை ஏமாத்த நினைச்சா அவ்வளவுதான்.”

“இங்க பாரு மாலு. இந்த ஜென்மத்தில் எனக்கு பொண்டாட்டி நீ தான். நான் அந்த முல்லையை கல்யாணம் பண்ண காரணம் அவளை பழி வாங்க தான்.” என்று சொல்லி அகிலன் போனை வைத்தான்.

அங்கு வந்த அகிலனின் அப்பா சேது, “என்னடா என்ன பிரச்சனை?” எனக் கேட்டார்.

“உன் அக்கா மகள் மாலினிப்பா.”

“ஏய் என் மருமகள் மாலினிகிட்ட சொல்லிட்டியா. நம்ம இந்த சொத்துக்காக தான் இந்த குடும்பத்தை சுத்திகிட்டு இருக்கோம். மற்றபடி என்னுடைய அக்கா பொண்ணு தான் உனக்கு மனைவி. அவள் தான் மருமகள்னு.”

“அதெல்லாம் நான் சொல்லிட்டேன் பா. என் வாழ்க்கையில் மாலினி மட்டும்தான். இந்த முல்லையை நான் கல்யாணம் பண்ணி. நான் அவளை கொடுமைப்படுத்தி தான் என்னுடைய ஆதங்கத்தை தீர்த்துக்கொள்வேன். சின்ன வயசுல அந்த கதிர் பையன் கூட சேர்ந்து என்னை எவ்வளவு எல்லாம் அசிங்கப்படுத்தி இருக்கா தெரியுமா. இதற்கெல்லாம் சேர்த்து இந்த குடும்பத்தை நான் என்ன பாடு படுத்துறேன் பாருங்க.” என்று அகிலனும் அவனின் தந்தையும் பேசிக்கொண்டு இருக்கும் காட்சிகள் அனைத்தும் கதிர் மூலியமாக கீதாவும் மணிமாறன்னும் செட் பண்ண கேமராவில் ரெக்கார்ட் ஆகி கொண்டிருந்தது.

அதைப் பார்க்காத அகிலன், இந்து குடும்பத்தை பழி வாங்குவதை பற்றி தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தான்.

“சரிப்பா நம்ம சிங்கப்பூரில் இருந்து அப்படியே பாம்பே போனோம் இல்ல. அப்ப இந்த முல்லைக்கு ஐஸ் வைக்க ஒன்னு வாங்கிட்டு வந்தேன். இருங்க நான் போய் அத குடுத்திட்டு வரேன்.” என்று சொல்லி அகிலன் முல்லையின் அறைக்குள் போவதற்காக அவளின் அறை கதவை தட்டினான்.

“முல்லை. ஏய் நான் தான் கதவைத் திற. என்ன பண்ற?”

“ஐயோ மாமா. அந்த வீனா போனவன் கதவை தட்டுறான். நீ போய் மறைஞ்சிக்கோ.” என்று முல்லை சொல்ல, கதிர் கட்டிலின் கீழ் ஒழிந்து கொண்டான்.

கதவை திறந்த முல்லையை பார்த்த அகில், “என்னடி கதவை திறக்க ஏன் இவ்ளோ நேரம்? அப்படி என்ன பண்ணிட்டிருக்க உள்ள?” என்றான்.

“இங்க பாரு. வாடி போடின்னு கூப்பிட்ட வாயை உடைத்து விடுவேன். மரியாதையா பேசு” என்று எச்சரிக்கை செய்தாள்.

“என்ன உன் முகத்தில் ஒரு பொலிவு. உன் பேச்சில் ஒரு திமிரு. என்ன இதல்லாம்? எப்போதுல இருந்து இந்த வீரம்?”

“வீரமெல்லாம் கூடவேதான் பொறந்து இருக்கு. என்ன விஷயம் எதுக்கு வந்த? அதைச் சொல்லிட்டு கிளம்பு.”

“உனக்கு மும்பையில் இருந்து குல்பி... இல்ல இல்ல ஜிலேபி வாங்கிட்டு வந்தேன் இந்தா பிடி” என்று கொடுத்தான்.

“நான் எதுவும் கேட்கலையே. எனக்கு ஒன்னும் தேவை இல்ல. நீ வெளில போ” என்றாள் அவள்.

“அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. சாப்பிடு.” என்று கட்டாயப்படுத்த,

“ஏய்! வேண்டாம்னு சொல்றேன் இல்ல. ஒழுங்கு மரியாதையா போறியா?” என்று அந்த ஜிலேபி டப்பாவை முல்லை வெளியே தூக்கிப் போட, அந்த டப்பா பழனியின் கையில் விழுந்தது.

“ஆகா இந்த ஜிலேபி யாருது. ம்... யாருதா இருந்தால் நமக்கென்ன. நம்மளும் கீதுவுக்கு எத்தனை தடவைதான் பஞ்சாமிர்தம் கொடுக்கிறது. இன்னைக்கு இந்த ஜிலேபியை கொடுக்கலாம்” என்று சொல்லி கீதாவிற்கு பழனி ஜீலேபியை எடுத்துக்கொண்டு போயி, “கீதா இந்தா ஜிலேபி சாப்பாடு” என்றார்.

“யோவ் ஜிலேபியும் வேணாம் ஒண்ணும் வேணாம். இது நான் ஜிலேபி சாப்பிடுற நேரமில்லை. ஜில்லுனு சரக்கு அடிக்குற நேரம்.” என்று கோபப்பட்டு கீது ஜிலேபி டப்பாவை தூக்கி போட, அந்த டப்பா சந்திரன் அவர்களின் கைகளில் போய் விழுந்தது.

“அய் ஜிலேபி. இந்த டப்பாவை யார் தூக்கி போட்டது?” என்று அவர் மேலே பார்க்க, பால்கனியில் அவரின் மனைவி இந்து நின்று இருக்க, அவரைப் பார்த்த சந்திரன், “என்ன இது இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இவளுக்கு ஜிலேபி சாப்பிட ஆசை வந்து இருக்கா” என்று சந்திரன் தனக்குள் பேசியபடி நின்று இருந்தார்.
அவரை பார்த்த மணிமாறன், “என்ன சார்? என்ன ஒரே யோசனை?” எனக் கேட்டான்.

“இல்லபா ஜிலேபி.”

“என்ன ஜிலேபி சாப்பிட போறீங்களா?”

“ஆச தான். ஆனால் எனக்கு சக்கரை நோய் இருக்கே. என்ன பண்ணுறது?” என்றார் சோகமாக,

“இருக்கட்டும் சார். வாய்ப்பு கிடைக்கும்போது ஜிலேபியை வாயில வச்சிடுங்க. சர்க்கரை நோய் இருந்தால் என்ன, மருந்து போட்டுக்கலாம். காசு குடுத்து வாங்கிட்டு வந்த ஜீலேபியை வீணாக்காதீங்க.” என்றான்.

“இது நான் வாங்கல. இந்து வாங்கிட்டு வந்து இருக்கா நினைக்கிறேன்.”

“ஐயோ.உங்களுக்கு அவங்களளே ஜீலேபி கொடுக்கிறாங்களா.
அப்போ ஏதோ கசமுசா நடக்க போதுன்னு நினைக்கிறேன். கிளம்புங்க கிளம்புங்க.” என்று மாறன் சொல்ல, சந்திரன் அவர்கள் பல வருடத்திற்கு பிறகு.தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மாடிக்குச் சென்று, “இ... இந்து. இந்திரா.” என்றழைத்தார்.
“என்னது? என்ன அது கையில?”

“அது ஜிலேபிமா. ஜிலேபி.”

“என்ன ஜிலேபியா. ஏது உங்களுக்கு?”

“ஐயோ இத அப்போ நீ கொடுக்கலையா?”

“என்ன நான் கொடுத்தேனா. எனக்கு வேற வேலை இல்லையா?”

“அப்ப இந்த ஜிலேபி. இது எதுன்னு தெரியலையே” என்று புரியாது நின்றார்.

“என்ன, நீங்களே வாங்கிட்டு வந்து பொய் சொல்றீங்களா? இந்த வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்.”

“இல்லமா இந்து. நான் ஜிலேபியை என் வாழ்க்கையில மறந்தே போயிட்டேன்.” என்றார் பாவமாக.

“ஏன்?”

“எனக்கு தான் சர்க்கரை நோய் இருக்கே.”

“சர்க்கரை நோய் இருந்தா என்ன. மாத்திரை போட்டுக்க வேண்டியது தானே.” என்றார் சாதாரணமாக.

“நீ என்ன சொல்ற?”

“ம்... சுரைக்காயில் உப்பு இல்ல. ஜீலேபியில் சர்க்கரை இல்லைனு சொல்றேன். ஆளாப்பாரு. ஜிலேபி சாப்பிட ஆசை இருந்தா சாப்பிட வேண்டியதுதானே.”

“இந்து யூ மீன்” என்றார் ஆசையாக.

“ஐ மீன் ஜிலேபியை எடுத்துக்கிட்டு கதவை சாத்திக்கிட்டு வாங்கன்னு சொல்றேன்.” என்று அறைக்குள் சென்றார்.

“இந்த இந்து ஜிலேபி சாப்பிட ரெடியா தான் இருந்திருக்காங்க. பாவம் இந்த சந்திரன் சார் தான் ஜிலேபியை கொடுக்க மாட்டாரு போல. எது எப்படியோ எல்லாரும் குடும்பமா ஜிலேபி சாப்பிடுங்க. ஆனா, நம்ம மச்சான் இந்நேரம் கொத்து பரோட்டாவை போட்டு இருப்பானா.” என்று யோசனையில் ஆழ்ந்தான்.

“உங்க சகலை கொத்து பரோட்டா போடுவது இருக்கட்டும். நீங்க எந்த பரோட்டாவும் போட லாயக்கில்லை போல.” என்று கேலி செய்தபடி வந்து நின்றாள் ஷாமிலி.

“ஹலோ நீங்க என்ன என்கிட்ட எப்பப்பாரு வம்பு பண்ணிக்கிட்டு இருக்கறீங்க. ம்... நீங்க ஏதோ ஒரு முடிவோடுதான் இருக்கீங்க போல. பட் உங்க ஆசை நிறைவேறாது.”

“ஏன் நிறைவேறாது?”
“ஏன்னா நான் ஒரு பொண்ண காதலிச்சசேன். அந்த பொண்ண தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.” என்றான் அவன்.

“இது என்ன புதுக்கதை. எந்த பொண்ண காதலிச்சிங்க?”

“போன ஜென்மத்தில் உம்மான்னு ஒரு பொண்ண காதலிச்சசேன். இந்த ஜென்மத்தில் அவ கிருபாகரனை கட்டிக்கிட்டு 2 குழந்தைக்கு அம்மாவாக இருந்தாலும், என்னால் அவளை மறக்க முடியல.” என்று சோக கீதம் வாசித்தான்.

“சரி சரி. அதுக்கு என்ன பண்ண முடியும்? பழைய காதல மறந்துதானே ஆகனும். அதுக்குன்னு நீ உம்மாவை நினைச்சு, இப்படி சும்மா இருப்பதை விட...”

“உங்கள அம்மாவாக்க சொல்றீங்களா?” என்றான் வேகமாக.

“வாய ஒடச்சிடுவேன். உள்ளே போய் இழுத்து போத்திகிட்டு படுன்னு சொன்னேன்.” என்று சொன்னபடி ஷாமிலி உள்ளே போனாள்.

முல்லையின் அறையில், “இப்ப எதுக்குடி அழுதுட்டு இருக்க? எனக் கேட்டான்.

“மாமா வர வெள்ளிக்கிழமை எனக்கு மட்டும் அவன் கையால மோதிரம் போட வேண்டும் என்ற சூழ்நிலை வந்துச்சுன்னா நான்...”

“உஷ்... நான் இருக்கிறேன்டி. உன் கழுத்துல நான் கட்டிய தாலி இருக்கு. நீ என் பொண்டாட்டி.” என்று அவளை இறுக்கி அணைத்தான்.

“ஐயோ பொறுமை” என்றாள் அவனின் வேகம் தாளாது.

“ஒ... நான் ரொம்ப இறுக்கி கட்டி பிடிச்சிட்டேனோ. வலிக்குதா? சாரிடி.”

“அது இல்ல மாமா. பொறுமையா பேசுன்னு சொன்னேன் மாமா.”

“அப்போ நான் கட்டி பிடிச்சதுக்கு சொல்லலையா?”

“நான் எப்படி சொல்லுவேன். நீ கட்டி அணைக்க தான் உன் மாமன் பொண்ணு நான் இருக்கேன்.”

“சரி அப்ப வா.” என்றான் கதிர்.

“எங்க மாமா? ஏன் காட்டிலுக்கு கீழ கூட்டிட்டு போற?” என்று பதறினாள் முல்லை.

“மேல படுத்தா கட்டில் சத்தம் போடும். அதான்...”

“அதான்.?”

“ம்... அதான். நான் கட்டிலின் கீழ படுக்கிறேன். நீ என் மேல படு.” என்று சொன்ன கதிர் தன் ஆசை மனைவியை கட்டி அணைத்து கொண்டவன். கொத்து பரோட்டா சாப்பிட ஆரம்பித்தான்.

🙏நான் அதுக்கு முட்டை சால்னாவுடன் உங்களை சந்திக்கிறேன். உங்கள் நான் சக்தி 🔱
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top