Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 132
- Thread Author
- #1
❤ஓவியம்.
காலையில் கண்விழித்த முல்லை தங்கள் நிலை பார்த்து வெட்கம் கொண்டாள். பின், நேரம் ஆவதை உணர்ந்து, “மாமா. கதிர் மாமா. மணி ஆகுது எழுந்துரு. மாமா நிறைய வேலை இருக்கு.” என்றாள்.
“ஏய் தூக்கம் வருதுடி. பகல்ல வேலை செஞ்சு எனக்குப் பழக்கமே இல்ல. நைட் டியூட்டி மட்டும் தான்.” என்று தூக்கத்தைத் தொடர,
“ஆமா. ஆமா மாமா. நைட்டு உன்னோட வேலையை தான் நான் பார்த்தேன்னே.” என்றாள் கிண்டலாக.
“ஏய் என்ன? காலையிலே வம்புக்கு இழுக்கிறாயா. நீ போ எனக்கு தூக்கம் வருது. நான் கொஞ்ச நேரம் படுத்துட்டு வரேன்.”
“மாமா நீ எந்திரிச்சா தான் நான் போக முடியும்.”
“என்னடி உளர்ற?”
“ம்... நீ என் மேலதா... ஹ்ம்... போ மாமா எனக்கு வெக்கமா இருக்கு.”
”ஓ அதான் என்னடா இது ரொம்ப மிருதுவா இருக்குதேன்னு பார்த்தேன்.”
“பாப்பா தான் நீ. நகரு மாமா நேரமாகுது.”
“இப்போ எங்கடி போகப் போற. அதான் உங்க அம்மா ஒரு வாரம் இல்லல்ல. பின்ன என்ன? பேசாம படு” என்றான்.
“அவங்க இல்லைனாலும் என்ன. இவ்வளவு நேரமெல்லாம் நான் தூங்கி பழக்கமே இல்ல. மணி என்ன ஆகுது தெரியுமா? எழுந்திரு மாமா.” என்றாள் முல்லை.
ஏய் வெறும் எட்டு மணி தானடி ஆகுது. நான் நைட்டு எட்டு மணி வரைக்கும் தூங்குவேன்.
“ஆமா. நீ தூங்குவ. ஆனா எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல. மரியாதையா எந்திரி நீ.” என்று சத்தம் போட்டாள்.
“இப்போ இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு என்னடி பண்ண சொல்ற?”
“மாமா. உன் கூட நான் இருக்கப்போகும் இந்த ஒரு வாரமும், நான் ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கனும். அம்மா வந்துட்டா நீ எட்டி நின்னு தானே பேசுவ. உன்னை எப்படி நான் இப்படி கட்டிப் பிடிக்கிறது.”
“உன் அம்மா வந்தா மட்டும் என்னடி. தினமும் இரவு உன்கூடதான் நான் தூங்குவேன். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றான் சாதாரணமாக.
“ஆமா ஆமா. நீ பேசறது எல்லாம் கேட்க சந்தோஷமாக தான் இருக்கு. ஆனால் இந்த கல்யாணத்த அம்மா எப்படி அக்செப்ட் பண்ணிப்பாங்கன்னே தெரியல. அதுவே பயமா இருக்கு.” என்றாள்.
“உங்க அம்மா எதுக்குடி ஒத்துக்கணும்?”
“வேற? மாமா உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா. அடுத்த வாரம் எனக்கும் அந்த அகிலனுக்கும் அம்மா இந்த வீட்டிலேயே நிச்சயதார்த்தம் ஏற்பாடு பண்ணியிருக்காங்க.” என்றாள்.
“என்னடி சொல்ற? உன் அக்கா இருக்கும்போது உனக்கு எப்படி முதல்ல முடிக்க முடியும்?” என்று சந்தேகமாகக் கேட்டான் கதிர்.
“அதுவா. அந்த வீணாப்போன அகிலனுக்கு நேரம் சரியில்லையாம்...”
“அது எனக்கு தெரியுமே. அவனுக்கு நேரம் சரியில்ல தான். எப்ப இருந்தாலும் அவனுக்கு என் கையில தாண்டி ஆப்பு” என்றான் கோவத்தில்.
“அடக் கேளு மாமா. அவனுக்கு நேரம் சரியில்லையாம். அதனால தான் அடுத்த வாரம் நிச்சயமும், அதுக்கும் அடுத்த வாரம் அவனுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும்னு அம்மா முடிவு பண்ணியிருக்காங்க.”
“என்னடி உளர்ற? உங்க அப்பா என்கிட்ட இது பத்தி சொல்லவே இல்லையே?”
“அப்பாவே நேத்து நைட் தான் இத என்கிட்ட சொன்னாரு. அதுக்காக தான் நான் சீக்கிரம் சீக்கிரமா...” என்று நிறுத்தினாள்.
“புரியல. சீக்கிரம் சீக்கிரமா... சொல்லு?” என்றான் அழுத்தமாக.
“ம்... நம்ம இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்க ஏற்பாடு பன்னேன்.”
“அது சரி. நல்ல ஆரம்பம் தான்.”
“இங்க பாரு மாமா. அவன் கையால மட்டும் எனக்கு மோதிரம் போட்டான்னு வை அப்புறம் நான்...”
“போதும் நிறுத்துடி. நான் ஒருத்தன் இருக்கும் பொழுது, அவன் விரல் கூட உன் சுண்டு விரலை தொடாது போதுமா. சரி நிச்சயம் எங்க நடக்குது?” என்று விவரம் கேட்டான்.
“இதே வீட்டில் தான்.”
“சரி நீ போய் குளிச்சிட்டு வா.”
“அது சரி. நீ என்ன பண்ணப்போற?
“ம்... நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன்டி. ரொம்ப சோம்பலா இருக்கு.”
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். வா மாமா. நம்ம சேர்ந்தே குளிக்கலாம்.”
“என்னது? சேர்ந்து குளிக்கலாமாவா? ஏய் நீ ரொம்ப கெட்டு போயிட்ட. என்ன நிறைய இங்கிலிஷ் படம் பாப்பியா? ஆளை விடு தாயே” என்றான் கதிர்.
“படம் எல்லாம் பார்க்க மாட்டேன். உன் கூட நான் எப்படி எல்லாம் வாழணும்னு எத்தனை வருஷம் நினைத்தேனோ, அதை எல்லாம் இப்போது நிஜத்துல வாழப்போறேன். எந்திரி குளிக்கலாம்.” என்று இழுத்தாள்.
“இல்லடி. இதெல்லாம் ஆம்பளைங்க தான் செய்யணும். அதனால நானே உன்னை குளிப்பாட்டுறேன்.” என்று சொன்னபடி முல்லையைத் தன் கரங்களில் கதிர் குளியலறைக்கு தூக்கிச் செல்ல, கதிரும் முல்லையும் ஒன்றாக சேர்ந்து குளித்து முடித்தனர்.
“மாமா இந்தா இந்த வேஷ்டியும், பட்டு சட்டையும் போட்டுக்கோ.”
“ஏய் எனக்கு இதெல்லாம் கட்டி பழக்கம் இல்ல. இது இடுப்பிலே நிற்காது.”
“அதனால் என்ன நான் கட்டி விடுறேன். வா மாமா.”
“ஏய் தொடாதடி. எனக்கு கூச்சமா இருக்கு.” என்று நெளிந்தான்.
“ஆமா கூச்சமா இருக்கும். ஆளை பாரு. குடு மாமா நான் கட்டி விடுறேன்.” என்று சொன்ன முல்லை கதிருக்கு வேட்டியைக் கட்டி விட, “இந்தா சட்டையைப் போடு.” என்று போட்டும் விட்டு, “ம்... மாப்பிளை மாதிரி இருக்க. உன்ன அப்படியே...”
“என்னடி கோயிலுக்கு போகலாம்னு சொல்லி மறுபடியும் கசமுசா பண்ண போறியா. அதெல்லாம் நைட் பாத்துக்கலாம். சரி விடு. உனக்கு நான் புடவை கட்டி விடவா?”
“ஹலோ மாம்ஸ்! எனக்கு கட்டத் தெரியும். நீங்க வெளிய போய் நில்லுங்க.”
“நான் ஏன் வெளியே நிக்கணும்? ஒன்றாக சேர்ந்து குளிச்சாச்சு. எனக்கு டிரஸ் நீதான் மாதத்தின. ஏன் என் எதிர்க்க புடவை கட்ட மாட்டியா?” என்றான் கேள்வியாக.
“புடவை கட்ட லேட்டாகும் மாமா. நீ போ நான் வரேன்.” என்று முல்லை சொல்ல. கதிர் வெளியே போவதற்காக கதவைத் திறக்க, பட்டு வேஷ்டி பட்டு சட்டையுடன் மணிமாறன் நின்று இருந்ததை பார்த்த கதிர் அதிர்ந்தான்.
“டேய் மச்சான்! என்னடா இது?”
“தெரியல சகல. நம்ப ஷாமிலி தான் கொடுத்து போட சொன்னாங்க. வேண்டாம் சொன்னேன். போட்டு தான் ஆகணும் சொல்லிட்டாங்க” என்றான்.
“என்ன சகலையா? என்னடா இது புதுசா?”
“ஆமான்டா அப்படித்தான் ஷாமிலி மேடம் சொல்ல சொன்னாங்க. இதுதான் சரின்னும் சொன்னாங்க” என்றான் மணிமாறன்.
“உறவு வேற மாதிரி மாறுதேடா.” என்றான் யோசனையுடன்.
“என்னடா சொல்றே? ஒன்னும் புரியலையே.” என்று தலையைச் சொறிந்தான்.
“ம்ம்ம்... ஷாமிலி உன்னை லவ் பன்றா போல.”
“அடப்பாவி என்னடா சொல்ற? ஒரு சகல என்ற வார்த்தைக்குப் பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கா?”
“ஆமாம்டா. அதுக்கு அதுதான் அர்த்தம். வேற அர்த்தம் வராது” என்றான் கதிர்.
“ஆனா, என்னால உன் மச்சினியை கல்யாணம் பண்ணா முடியாது.”
“ஏன்? அவளுக்கு என்ன?”
“நான் கட்டினா ஒரு திருடியை தான்டா கல்யாணம் பண்ணுவேன்.” என்றான் அவன்.
“என்ன சொன்னீங்க? யாரை கட்டிக்க முடியாது சொன்னீங்க?” என்று வந்தாள் ஷாமிலி.
“ஐயோ நான் ஒண்ணுமே சொல்லலங்க.”
“ம்... அந்த பயம் இருக்கட்டும். அப்புறம் கதிர் மாமா நேத்து நைட்டு எல்லாம்... ம்... சரி சரி பார்க்கும்போதே தெரியுது.” என்று கிண்டலாகப் பார்த்தாள்.
“ஏய் அது யாரு அங்க இன்னொரு ஜோடி பட்டு வேட்டி பட்டு சட்டையோட இருக்காங்க?”
“வேற யாரு. உன் ஆளோட மாமா தான்.”
“அய்யய்யோ இந்த கொடுமையெல்லாம் பார்க்கணுமா.” என்று அலறினான் கதிர்.
“இந்தக் கொடுமைக்கே இப்படியா. அப்போ அங்க பாரு. உன் பழனி சித்தப்பா பின்னாடி யாருன்னு.” என்று கைநீட்டி காண்பித்தான் மணிமாறன்.
“டேய்! சித்திடா. என்னடா இது? ஏய் கிழவி! இதென்ன பட்டுப்புடவை பொட்டு, பூ ம்... கலக்கற கீது.” என்று தன்னை வளர்த்த சித்தியை கலாய்த்தான்.
டேய் சும்மா இருங்கடா. இந்த புடவை எப்படியும் ஒரு பத்தாயிரம் ஆவது இருக்கும். அந்த பத்தாயிரம் ரூபா என்கிட்ட கொடுத்து இருந்தா எவ்வளவு சரக்கு வாங்கி குடிச்சு இருந்திருக்கலாம். அதை விட்டுட்டு...”
“ஏய் கிழவி! என் சித்தப்பா உனக்கு ஆசையாக கொடுத்திருக்கிறார். அதை போய் சரக்குகூட கம்பேர் பண்ற?”
“டேய் அதுகூட பரவாயில்லை. சரக்கு அடிக்க வேண்டிய நேரத்துல கோயிலுக்கு வர சொல்றான்டா உன் சித்தப்பன். இங்க பாரு சரக்கு அடிக்காம கையெல்லாம் கட கட கடன்னு நடுங்குது.” என்றார் கீதா.
“இந்த நடுக்கம் சரக்குக்காக இல்ல. உனக்கு வயசு ஆயிடுச்சு கிழவி. அதை ஒத்துக்கோ.”
“போதும் நிறுத்துங்க டா.” என்று அவர்களை அடக்க,
“கீது நீ இந்த புடவையில தேவலோகத்து ரம்பா மாதிரி இருக்க.” என்று கேப்பில் கடா வெட்டினார் பழனி.
“அட வெள்ளை உழுவ. கிழவி நல்லா ஜகன்மோகினி தெம்பா வந்து நிக்கிற மாதிரி இருக்குது. தேவலோகத்து ரம்பாவா நீ” என்று மணிமாறன் முறைத்தான்.
அங்கு வந்த சந்திரன், “என்ன எல்லாரும் கிளம்பிட்டீங்களா? மாப்ள, எங்க என் பொண்ணு?” என்று முல்லையின் அப்பா சந்திரன் கேக்க. முல்லை அறையில் இருந்து வெளியே வந்தாள்.
“மாப்பிளை. உங்க ரெண்டு பேரையும் இப்படி பாக்குறதுக்கு கண் கோடி தேவை. போங்க. சந்தோஷமா கோயிலுக்கு போயிட்டு வாங்க” என்று சொன்ன சந்திரன் கார் சாவியை கொடுத்தார்.
கதிர், முல்லை, ஷாமிலி, மணிமாறன், பழனி மற்றும் கீதா ஆகிய 6 பேரும் கோவிலுக்கு சென்று, ஹோட்டலில் சாப்பிட்டு அன்றைய பொழுதை நல்லபடியாக கடத்தினர்.
முல்லையின் அம்மா இந்துவும், வீனா போன அகிலனும் இந்த ஊரில் இல்லாததால், அந்த ஒரு வார காலமும் கதிரும் முல்லையும் சந்தோசாமாக தன் இல்லற சந்தோஷத்தை அனுபவித்தனர்.
கதிரும் கீதுவும் இதே வீட்டுக்குள் இருப்பது இப்போதைக்கு இந்துவுக்கும், அகிலனுக்கும் தெரிய வேண்டாம் என்று சந்திரன் சொன்னதால், இவர்கள் இருவரும் அவரவர்களின் காதலர்களுடன் தங்கி இருக்க, மாறனை மட்டும் பழனி அவர்கள் இந்த வீட்டில் வேலைக்கு சேர்த்து உள்ளேன் என்று போனில் இந்துவிடம் தெரியப்படுத்தியிருந்தார்.