Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 126
- Thread Author
- #1
12.2
“இல்லமா பழனி சொல்றது தான் சரி. அவரு முதல்ல இந்த வீட்டுக்குள்ள வரட்டும். அவர் வந்தா தான் இந்த அகிலன் உடைய ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.”
“ஆமா மாமா. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே நான் கட்டில் கீழே இருக்கும் போது அந்த அகில், என் பொண்டாட்டிய பேசின பேச்சுக்கு அவன் இன்னொரு கையையும் சேர்த்து வெட்டியிருப்பேன். ஏதோ என்னால ஒரு கையை இழந்தவன் ஆச்சேன்னு போனா போதுன்னு விட்டுடேன். பட் அடுத்த தடவை என் பொண்டாட்டிகிட்ட அவன் வாய் பேசினால் அடித்து வாயை உடைத்துடுவேன்.” என்றான் கோபமாக.
“என்னடி முல்லை. கதிர் மாமா கோவமா பேசுறாரு. அதைப் பார்த்து நீ சிரிக்கிற?” என்று தங்கையிடம் கேட்டாள்.
“இல்ல அக்கா. என் மாமா பேச்சுக்கு பேச்சு என்னை அவர் என் பொண்டாட்டின்னு சொல்லும்போது, எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. அந்தக் கோபமும் எனக்காக. அதான் சந்தோஷத்தில் சிரிக்கிறேன்.”
“ஐயோ இவன் தான் கதிருன்னு உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா, கடைசியில எங்களுக்கு சாப்பிட ஒரு போண்டா டீ கூட கிடைக்காது போல. இவன் குடும்பம் ஒன்னு சேர நம் மணியை இழக்கணுமா” என்று அலறினான் மணிமாறன்.
“ஹலோ நீங்க மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசுறிங்க.”
“இல்லங்க ஷாமிலி. நான் சத்தமா தான் பேசறேன்.எனக்கு மைண்டே இல்ல. அப்புறம் எங்க இருந்து மைன்ட் வாய்ஸ் வர.”
“சரி மச்சான் கிளம்பலாம் வாடா” என்றான் கதிர்.
“கதிர் உன்னோட போன் நம்பர்” என்று கேட்டார் பழனி.
“மாமா என்கிட்ட இருக்கு. நான் தர்றேன்” என்றாள் முல்லை.
“சரி கீதாவை கேட்டேன்னு சொல்லு.”
“உங்களை நாங்க பார்த்தது கீதாக்கு தெரிந்தால், கீதா எங்களை அசிங்க அசிங்கமா கேக்கும்.” என்றான் மணிமாறன்.
“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நான் நாளைக்கு கீதாவைப் பார்க்க வரேன். அதே மாதிரி இந்த வீட்டுக்கு நீங்க வேலைக்கு சேருவதற்கு கூடிய எல்லா ஏற்பாட்டையும் நான் பண்றேன்” என்று இந்துவின் ஒரு தம்பியான பழனி, அதாவது கதிரின் சித்தி.கீதாவை காதலித்த பழனி அவர்கள் சொல்ல, கதிரும் மணிமாறன்னும் கிளம்பி அவர்களின் வீட்டிற்கு சென்றனர்.
முல்லை தன்னவனை பார்த்த சந்தோஷத்தில் பூரித்துப் போய் இருக்க, மறுபக்கம் கதிரின் வீட்டில் கதிரை தலையில் கட்டுடன் பார்த்த கீதா, “டேய் மகனே! என்னடா ஆச்சு? என்னடா தலையில இவ்வளவு பெரிய கட்டு?” என்று பதறினார்.
“ஒன்னுமில்ல கிழவி. லேசா அடிபட்டுருச்சி.”
“டேய் மாறா. எங்கடா போனீங்க? ஏன் இந்த முல்லையை வேற ஆள காணோம். ரெண்டு நாளா உங்க யாரையும் இங்க காணல. என்னாச்சுனு சொல்லுங்க” என்றார் ஓவியகீத்து.
“ஒன்னும் இல்ல கீது. ஒரு சின்ன ஆக்சிடன்ட். முல்லைக்கு வர வேண்டிய ஆபத்தை கதிர் போயி தடுத்ததால்., கதிர் தலையில அடி பட்டுருச்சு. அப்போ அந்த வழியாக வந்த இந்து அவர்கள் இவனை பார்த்து.
என்று மணிமாறன் அங்கு நடந்த கதைகளை எல்லாம் சொன்னான்.
“என்னடா மவனே! அப்போ அவங்க எல்லாம் வந்துட்டாங்களா. நீ அந்த வீட்டுக்கு போயிட்டு வந்துட்டியா?”
“ம்... வந்துட்டாங்க. நான் அந்த வீட்டுக்கு போயிட்டும் வந்துட்டேன். கூடிய சீக்கிரம் பழனி சித்தப்பா அதே வீட்ல எனக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறேன் சொல்லியிருக்கிறார்.” என்றான் கதிர்.
“நம்ம எதுக்குடா அந்த வீட்டுல வேலைக்கு போகணும்? அந்த சொத்துக்கு நீயும் ஒரு பங்கு சொந்தக்காரன்டா.”
“அது தெரியும் கிழவி. நம்ம போட்ட திட்டத்துக்கு நான் முதல்ல அந்த வீட்டுக்குள்ள போகணும். அதுக்கு இந்த வேலை தான் சரியா இருக்கும். அதனால தான் சம்மதம் சொல்லிட்டு வந்தேன்.”
“டேய் அப்படி என்னடா பிளான்? நீங்க ரெண்டு பேரும் யாருடா? இப்பவரை நீங்க என்ன திட்டத்துல இருக்கீங்கன்னு சொல்லவே மாட்டேன்றீங்க.” என்று புரியாது கேட்டான் மணிமாறன்.
“நீ சின்ன பையன். உனக்கு விவரம் பத்தாது. இந்த நாளுக்காக தான் நான் இத்தனை வருடம் வெயிட் பண்னேன். நான் அவங்க வீட்டுக்கு வேலைக்காரன் ஆகவே உள்ளே புகுந்து, கூடிய சீக்கிரம் சொந்தக்காரனாக மாறுகிறேன்” என்று கதிர் சொன்னான்.
மறுநாள் காலை பொழுது கதிரின் வீட்டின் வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு கீதா போய் கதவை திறக்க, கீதா கதவைத் திறந்தவுடன் பழனி கீதாவை கட்டிப்பிடித்து, “கீதா டார்லிங். எப்படி இருக்க? உன்ன பாத்து எவ்வளவு நாளாச்சு?” என்றார்.
“அடிங்கொய்யால யாரு மேல கையை வைக்குற. உன் மூஞ்சில என் லெப்ட் கைய வைக்க. நான் யார் தெரியுமா?” என்றார் கீதா.
“என்ன கீதா? உன் காதலன் நான். என்னை தெரியலயா?”
“என்ன காதலனா? அடேய் டோங்கிரி மண்டையா. உன்னுடைய சினிமா வசனம் எல்லாம் என்கிட்ட பேசாத. என்னைக்கு உன் அக்கா பேசும்போது நல்லா வெள்ளை உளுந்து மூட்டை மாதிரி நீ வாய மூடிக்கிட்டு இருந்தியோ, அன்னைக்கே உனக்கும் எனக்கும் இருந்த எல்லா கனக்சனும் முடிஞ்சு போச்சு.”
“அப்படிச் சொல்லாத கீது. இன்னவரைக்கும் நான் உன்னைதான் காதலிக்கிறேன். உன்னை மட்டுமே காதலிக்கிறேன்” என்றார் பழனி.
“நீ காதலிக்கலாம். பட் ஐ அம் நாட் இன்ட்ரெஸ்ட்ட். உன்னை யார் முதலில் இங்க வர சொன்னது முதல வெளியே போ”
என்று கதவை சாத்த முயல,
“ஐயோ சித்தி. ஏன் இப்படி அவசரப்படுற? கொஞ்சம் பொறுமையா இரு” என்று வந்தான் கதிர்.
“டேய் மகனே இந்த செவன்டீஸ் கமலஹாசன் இங்கே எதுக்காக வந்தான்?”
“நீ சும்மா இரு கிழவி. முதல்ல உள்ள வா.”
“என்ன கதிரு? இது என் கீதுவா? என்ன இது இப்படி குத்துறா.?” என்று பழனி கேட்டார்.
“சித்தப்பா. எங்க சித்தியை நீங்க கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டா, சொம்புல அடி வாங்க கூட தயாரா இருக்கனும்.” என்று சொன்னபடி கதிர் பழனியை உள்ளே அழைத்து வந்தவன், கீதுவுடன் தனியாக பேச அழைத்துச் சென்றான்.
“டேய் கதிர் இங்கே என்ன நடக்குது?” என்றார் கீதா.
“ஏய் கிழவி இங்கே பாரு. இந்த உளுந்து மூட்டைய வச்சு தான் நம்ம அந்த வீட்டுக்குள்ள போக முடியும்.”
“ஆமாடா. இந்த ஆளை பார்த்தால் நல்ல பணம் காசு வச்சிருக்குற மாதிரி இருக்குது.” என்று இடையிட்டான் மணிமாறன்.
“ஆமா சித்தி. மணிமாறன் சொல்றது உண்மைதான். சித்தப்பாவை வைத்து தான் நம்முடைய திட்டத்தை நம்ம நிறைவேற்ற முடியும். அதுவரை நீ கொஞ்சம் அமைதியா இரு.”
“டேய் மவனே! இப்ப என்னை என்னடா பண்ண சொல்ற?”
“நான் சொல்றதை கேளு. நீ எப்படியாவது சித்தப்பாவை உன் வலையில் விழ வைத்துவிடு போதும்.”
“டேய் அந்த வெள்ளை எலி ஏற்கனவே என் வலையில் விழுந்து தான்டா இருக்கு.”
“சரி அப்போ உன் வலையிலே வளச்சு போடு. வலையை கொஞ்சம் ஸ்ட்ராங்கா போடு” என்றான் கதிர்.
“டேய் நான் உனக்கு சித்திடா.”
“பரவாயில்லை நீ எனக்கு சித்தியா இருக்கிறது முக்கியம் இல்ல. அந்த இந்துவுக்கு தலையில அடிக்கும் சுத்தியா நம்ப மாறனும் புரியுதா?” என்று கதிர் ஒரு திட்டத்தை சொல்ல. கீதாவும். பழனி அவர்களை ஏற்றுக் கொண்டது போல நடிக்க முடிவு செய்தார்.
“கீதா அப்போ நீ என்னை அக்செப்ட் பண்ணிட்டியா?” என்றார் சந்தோசமாக.
“ம்... ஆமாம். என் மகன் சொன்னதுக்காக. ஆனால், ஒரு கண்டிஷன் இருக்கு” என்றார்.
“என்ன கண்டிஷன் கீது? உனக்காக நான் என் உயிரையே கொடுப்பேன்.” என்று வசனம் பேசினார்.
“அந்த மய்...“ என்று ஆரம்பிக்க,
“கீதா...” என்று விழித்தார் பழனி.
“இல்ல இல்ல அந்த மாங்காயை வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது. எனக்கு உங்க உயிர் எல்லாம் வேண்டாம். எனக்காக நீங்க இந்த உதவியை மட்டும் பண்ணுங்க” என்று கீதா ஒரு உதவி கேட்க, பழனியும் அதை செய்கிறேன் என்று ஒத்துக்கொண்டார்.
மறுநாள் காலை அகிலன் தொடங்கப் போகும் புதிய பிசினஸ்சிற்காக இந்துவும், அகிலனின் அப்பாவும் சேர்ந்து ஒரு வார காலம் சிங்கப்பூருக்கு சென்றிருக்க, முல்லை வீட்டில் யாரும் இல்லாததால், சந்திரனும் பழனியும் சேர்ந்து கதிரையும் மணிமாறன், கீதாவையும். முல்லையின் வீட்டிற்கு வரச் சொல்லினர்.
“அம்மாடி கீதா எப்படிமா இருக்க? உன்னை பார்த்து எத்தனை வருஷமாச்சு?” என்று பாசத்தைக் கொட்டினார் சந்திரன்.
“நான் நல்லா இருக்கேன் அண்ணா. நீதான் என்னை மறந்துட்ட.”
“இல்லமா. என்ன மன்னிச்சிடு.”
“சரி சரி. இந்த கதையெல்லாம் இப்ப பேச நேரமில்லை. உன் பொண்டாட்டி வந்துரப் போறாங்க. நாங்க கிளம்புறோம்.” என்றார் கீதா.
“இல்லமா அவ ஒரு வாரத்துக்கு வரமாட்டா. நீங்க இந்த ஒரு வாரம் இங்கேயே இருங்க.”
“என்னால எல்லாம் இந்த வீட்டுல ஒரு நிமிஷம் கூட தங்க முடியாது அண்ணா.”
“ஏய் கிழவி! ஒரு வாரம் இங்க இருந்து மாறன் கூட சேர்ந்து, நான் சொன்ன இடத்தில் எல்லாம் கேமராவை செட் பண்ணு. புரியுதா? ரொம்ப பில்டப் கொடுக்காத” என்று காதில் இரகசியமாக சொன்னான் கதிர்.
“டேய் நம்ப இங்கே ஒரு வாரம் தங்கினா, இந்த பழனி தொல்லை எனக்கு தாங்காதுடா. லவ் டார்ச்சர் பண்ணிடுவான்.”
“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ கிழவி. அப்படியே அவங்களுக்கு மெசேஜ் அனுப்பிடு. எண்ணி ஒரு வாரத்துல நம்ப அவங்க சொன்ன வேலையை முடிக்கிறோம்னு.” என்று கதிர் சொல்ல, “சரி” என்றார் கீதா.
அன்றைய இரவு
“ஆல் தி பெஸ்ட் கதிர் மாமா” என்றாள் ஷாமிலி.
“ஹலோ எங்களுக்கு சொல்ல மாட்டீங்களா?” மணிமாறன் கேட்க,
“உங்களுக்கு எதுக்கு சொல்லணும்?” என்றாள் புரியாது.
“அப்ப அவனுக்கு ஏன் சொன்னீங்க?”
“அவருக்கு சொல்ல ஒரு அர்த்தம் இருக்கு. அதான் சொன்னேன்.”
“என்ன அர்த்தம்?”
“எப்பயும் முதலிரவு தாய் வீட்டில் தான் நடக்கணும்.”
“அப்படியா? அதை ஏன் எங்கிட்ட சொல்றீங்க. ஐ ஆம் சாரி. ஐ அம் நாட் இன்டர்ஸ்டட்” என்றான் மணிமாறன்.
“வாய ஒடச்சிடுவேன். இன்னைக்கு என் தங்கச்சிக்கும், கதிர் மாமாவுக்கும் முதலிரவு.” என்று முறைத்தாள்.
“என்ன சொல்றீங்க? அய்யோ என் மச்சான் அதுக்கெல்லாம் ஆளில்லையே.” என்று அலற,
“அதை எல்லாம் அவரு பார்த்துப்பாரு. அவர் உங்களுக்கு மச்சான் இல்ல சகலை புரியுதா?” என்றாள் ஷாமிலி.
“அவன் எனக்கு சகலையான்னு தெரியல. ஆனா இப்போ இந்து வந்தா இங்க ஆகப்போது ரகளைன்னு மட்டும் புரியுது.” என்று மாறன் புலம்பினான்.