• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
126
🔱யின்
❤காதல் ஓவியம்❤

❤ஓவியம். 12.1

கதிரும் முல்லையும் ஒன்றாக ஒரே அறையில் இருக்கும் சமயம் யாரோ கதவை தட்ட, “மாமா யாரோ கதவை தட்டுறாங்க” என்றாள்.
“இருடி நான் போய் கட்டில் கீழ் ஒழிஞ்சிக்கிறேன். உன் அக்காவை கூப்பிட்டு கதவைத் திறக்கச் சொல்லு.” என்று சொன்னான்.
“யார் இந்த நேரத்தில்?” என்று சொன்னபடி ஷாமிலி கதவைத் திறக்க மணிமாறனும், கதிரும், முல்லையின் கட்டிலின் கீழ் ஒழிந்து இருக்க, அறையின் கதவை தட்டியது முல்லையின் தந்தை சந்திரனும். இந்துவின் தம்பி பழனியும்.🌹
“என்னம்மா ஏன் கதவ திறக்க இவ்வளவு நேரம்?”
“அது ஒன்னும் இல்லப்பா. முல்லை பாத்ரூம்ல இருந்தா. அவளை கூட்டிட்டு வந்து விட்டுட்டு திறக்க நேரம் ஆகிடுச்சி.”
“சரி சரி. கதவ சாத்திட்டு வா” என்று சின்ன மகளிடம் சென்று, “என்னமா முல்லை. வலி இப்ப எப்படி இருக்கு? இப்பப் பரவாயில்லையா?” எனக் கேட்டார்.
“முல்லை என்னடா ஆச்சு? சந்திரன் மாமா வேற என்னென்னமோ சொல்றாரு. யாரு உன்னை அடிச்சது? சொல்லுமா நம்ம எம்எல்ஏ கிட்ட சொல்லி அவனுக்கு ஆப்பு வெச்சுடலாம்.” என்றார் பழனி.
“இல்ல மாமா. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.”
“சரி ஏன் என்கிட்ட பொய் சொன்ன? இவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சு இருக்க?” என்று தந்தை கேட்டதும்,
“அப்பா என்ன சொல்றீங்க? எ...எதை மறைச்சேன்?” என்றாள் திணறி.
“உனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு?” என்று கேட்க,
“அப்பா என்ன சொல்றீங்க? எனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு? அப்படில்லாம் கிடையாது.” என்றாள் வேகமாக.
“பொய் சொல்லாதம்மா. உன் கழுத்துல தாலி இருத்தததை நான் பார்த்தேன்.”
“அப்பா அது வந்து...” தடுமாறினாள் முல்லை.
“யாருமா என் மாப்பிள்ளை? அந்த டிரைவர் பையனா. அவன் தானே உனக்கு தாலி கட்டியது?”
“மாமா என்ன சொல்றிங்க? நிஜமா முல்லைக்கு கல்யாணம் ஆகிருச்சா?” என்று பழனி இடைநுழைய,
“டேய் கொஞ்ச நேரம் சும்மா இருடா. நீ சொல்லு முல்லை அவர் தான்னே உனக்கு தாலி கட்டினது?” என்றார் சந்திரன்.
“அப்பா அது வந்து...”
“சரிவிடு. அனேகமா நீ அவர் கையால தாலி கட்டிக்கிட்டதால, ஒன்னு அவரை நீ காதலிச்சு இருக்கணும். இல்லையா அந்த பையன் கண்டிப்பா நம்ம லக்ஷ்மியுடைய பையனாய் இருந்திருக்கணும். சொல்லு யார் அந்த பையன்?” என்று சந்திரன் கேட்க,
அவர் சொல்வதைக் கேட்டு, கட்டில் கீழிருந்து ஸ்டைலாக எழுந்த கதிர், “யு ஆர் ஆல்வேஸ் ரைட் மாமா. நான் உங்க சிஸ்டர் லட்சுமியின் மகன் கதிர் தான்” என்றான்.
அவன் சொன்ன மறுநொடி அவனை கட்டி அணைத்த சந்திரன் கதிரின் நெற்றியில் முத்தமிட்ட சந்திரன், “மாப்பிள்ள எப்படி இருக்க? உன்ன பார்த்த உடனேயே நான் கண்டுபிடிச்சிட்டேன். என் தங்கச்சி லட்சுமி உடைய முகம் அப்படியே இருக்கு உனக்கு. எப்படிப்பா இருக்க?” என்றார் அன்பாக.
“நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்று கூட தெரிஞ்சுக்காத, என் தாய் மாமன் நீங்க இருக்கும் போது, நான் நல்லா தானே இருப்பேன்.” என்று முகம் இறுக சொன்னான்.
“ஏன் மாப்பிள்ள இப்படி எல்லாம் பேசுற? எனக்கு என் தங்கச்சி லட்சுமியையும் கீதாவையும் ரொம்ப பிடிக்கும். என்னை என்ன பண்ண சொல்ற? நான் ஒரு சூழ்நிலை கைதி.” என்றார் வருத்தமாக.
“பரவாயில்ல மாமா. ஆரம்பத்திலிருந்தே நீங்க அப்படித்தானே. உங்க மனைவி ஆடுற ஆட்டத்துக்கு நீங்க தாளம் போடுறீங்க. இல்லையா அமைதியா இருந்துடுவீங்க. இதில் எங்க இருந்து எனக்கு சப்போர்ட் செய்ய.”
“அப்படிடயே பழகிடுச்சு மாப்பிள்ளை. மாத்த முடியாத தூரம் போயிட்டேன்” என்றார் சந்திரன்.
“மாமா இந்த பையன்?” என்று பழனி கேள்வியாய் பார்க்க,
“என் பெரிய தங்கச்சி லட்சுமி உடைய பையன்டா. ஏய் உனக்கு தெரியல? என் சின்ன தங்கச்சி கீதா, கதிர் மட்டும் போதும் என்று சொல்லிட்டு, இவனுக்காக தன் வாழ்க்கையையே இழந்துட்டு, இன்னைக்கு எங்க இருக்கோம்னு தெரியாம இருக்கிறாளே. அவள் தூக்கி வளர்த்த பையன்டா.”
“டேய் மவனே கதிர் எப்படிடா இருக்குற?” என்று பழனி சந்தோஷத்தில் கேட்க,
“நான் நல்லா இருக்கேன் சித்து. நீ என்ன கல்யாணம் எல்லாம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கிங்க போல. என் சித்தியை ஏமாத்திட்டு. நீங்க உங்க பேருக்கேத்த மாதிரி, வள்ளி தெய்வானையை கரெக்ட் பண்ணி இருப்பிங்களே.”
“டேய் மவனே! ஏன்டா அப்படி பேசுற? உன் சித்திக்க்காக நான் எடுத்து வைத்து இருக்கும் பஞ்சாமிர்தத்தை வேற யாருக்கும் கொடுக்க மாட்டேன்டா” என்றார் பழனி.
“புரியலையே. என்ன சொல்ற?” என்றான் கதிர்.
“கதிர் மாமா. என் அம்மாவின் தம்பி பழனி மாமாவுக்கு, இன்னும் கல்யாணம் எல்லாம் ஆகலை. அவர் இன்னமும் கீதா அத்தையை தான் நினைச்சுக்கிட்டு இருக்காரு.” என்றாள் முல்லை.
“என்னடி சொல்ற? நிஜமாவா? நம்ப முடியலையே?”
“அட ஆமா மாமா. உண்மையைத் தான் சொல்லுறேன்.”
“ஐயோ அப்படியா? அப்ப கீதாவை பழனி கரெக்ட் பண்ணிடுவாரா?” என்று பட்டென கேட்ட மணிமாறன் கட்டிலுக்குக் கீழ் இருந்து எழுந்து வந்தான்.
“டேய் நீ யாருடா? காட்டிலுக்கு கீழ இன்னும் யாரெல்லாம் இருக்கீங்க?” என்று பழனி கேட்க,
“இல்ல நாங்க ரெண்டு பேரு தான் வந்தோம். முல்லையை பாக்காம என்னால இருக்க முடியாது. சரி முல்லை வா நம்ம வீட்டுக்கு போகலாம்.” என்றான் கதிர்.
“என்னப்பா விளையாடுறியா. நீ இந்த ஊர்ல இருக்கிறது தெரிஞ்சாலே அந்த அகிலன் உன்னை பிளான் பண்ணி உள்ள தூக்கி வைக்க பார்ப்பான். இப்போ நீ வேற முல்லை கழுத்துல தாலி கட்டிட்ட. இப்ப என்ன செய்வானோ தெரியலையே” என்று புலம்பினார் சந்திரன்.
“நீ எப்படி முல்லை கழுத்துல தாலி கட்டின?” சந்தேகம் கேட்டார் பழனி.
ஷாமிலி இதுவரை நடந்த எல்லா கதைகளையும் சொல்ல,
“மகனே நீ என்னை விட சின்ன பையனா இருந்தாலும், எனக்கு இல்லாத தைரியம் உனக்கு இருக்குடா” என்றார் பழனி.
“என்ன சொல்ற சித்து?”
“ஆமா. உன் சித்தி கழுத்தில் தாலிகட்ட எனக்கு தான்டா தைரியம் இல்ல. ஆனா, நீ நடு ரோட்டுல நிக்க வைச்சு என் அக்கா மகள் கழுத்திலே தாலி கட்டி இருக்கிற பாரு. நீ கிரேட்டுடா.”
“எனக்கு ரொம்ப சந்தோஷம் கதிர். என் மகளுக்கு எங்க அந்த அகிலன் கூட கல்யாணம் ஆயிடுமோன்னு நான் பயத்தில் இருந்தேன். என் தங்கச்சி லட்சுமியின் ஆசைப்படி, உனக்கு என் மகள் கூட கல்யாணம் ஆனதுக்கு எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.” தன் மகிழ்வை சொன்னார் சந்திரன்.
“சரி உங்க கதை எல்லாம் பேசிட்டு இருக்கீங்களே. என் கீது குட்டி எப்படி இருக்கா?”
‘என்ன கீது குட்டியா? கிழவி இந்நேரம் நேற்று ராவா சரக்கு அடிச்சதுக்கும் அதுக்கும், எங்க வீட்டு நாய் குட்டி பக்கத்துல படுத்து தூங்கிட்டு இருக்கும். இந்த கிழவன் என்னடானா கிழவியை கீது குட்டி. கங்காரு குட்டின்னு கொஞ்சுறாரே.’ மனதுக்குள் நினைத்து சிரித்தான் மணிமாறன்.
“சித்து. எங்க சித்திக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு.”
“டேய் என்னடா சொல்ற? நான் நம்ப மாட்டேன். என் கீது என்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ண மாட்டா.”
“இல்ல இல்ல உண்மையா தான் சொல்றேன். என் சித்திக்கு கல்யாணம் ஆயிடுச்சு.”
“நான் நம்பவே மாட்டேன்.” என்றார் பழனி திரும்பவும்.
“ஐயோ மாமா அவரு சும்மா சொல்றாரு. கீதா அத்தைக்கு கல்யாணம் ஆகல. ஆனா அத்தை முன்னாடி மாதிரி இல்ல. இப்ப அவங்க வேற லெவல்” என்றாள் முல்லை.
“வேற லெவல்னா என்ன? பெரிய இடத்தில் எங்கேயாவது வேலைக்கு போறாளா?”
“ஆமா ஆமா. அத்த கை வைக்கிற இடமெல்லாம் பெரிய இடம்தான்” என்றாள் கிண்டலாக.
“ஆமா இப்போ அவங்க பஞ்சாமிர்தம் நக்கி சாப்பிடும் கீது இல்ல. குவாட்டரையும் கோழி பிரியாணியையும் அப்படியே சாப்பிடும் கில்லி கீது" என்றான் மணிமாறன்.
“புரியலையே?” என்றார் பழனி.
“அதெல்லாம் இப்போ நீங்க புரிஞ்சுக்க தேவையில்ல சித்து. சரி முல்லை நாங்க கிளம்புறோம். நேரம் ஆகுது.”
“மாமா. இதோ அப்பாவும், பழனி மாமாவும் இங்கே தானே இருக்காஙக. இவங்க எதிர்க்க இந்தத் தாலியை இந்த செயின்ல கோர்த்து என் கழுத்துல போடேன். கயிறை யாராவது பார்த்தா பிரச்சனை ஆகிடும்.” என்றாள் முல்லை.
“ஆமா மாப்பிள்ளை. என் கண்ணுல பட்ட மாதிரி இந்துக்கோ அகிலனுக்கோ தெரிந்தால் அவ்வளவு தான்.”
“இல்ல முல்லை. இந்தச் தாலிய நீயே வேணும்னா அந்த செயின்ல கோர்த்து உன் கழுத்துல போட்டுக்கோ. ஆனால், எண்ணி ரெண்டு மாசத்துல நீங்க எல்லாம் யாருக்கு பயப்படுறிங்களோ, அதே இந்து கையால் தாலி எடுத்துக்கொடுத்து அவங்க ஆசிர்வாதத்துடன் உன் கழுத்துல நான் தாலி கட்டுறேன்.”
“மாமா நடக்கிற கதையைப் பேசுங்க. எங்க அம்மாவாவது மனசு மாருறதாவது.”
“நான் எப்பயும் கதைய பேசிட்டு தான், நடக்கப் போவதை முடிவு பண்ணுவேன். வெயிட் அண்ட் வாட்ச் பேபி.” என்று சொன்ன கதிர், வந்த வழியே வெளியே போக முயல,
அவனின் கையை பிடித்து தடுத்த முல்லை, “மாமா அப்போ நீ இனிமே என்னை பாக்க வரமாட்டியா?” என்று ஏக்கமாகக் கேட்டாள்.
“ஏய் அதான் இவர டிரைவர் என்று சொல்லியாச்சு இல்ல. அந்த சாக்குல கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வருவாரு.” என்று ஷாமிலி சொன்னாள்.
“வேலையில் இருக்கும் டிரைவர் எப்படி வீட்டுக்கு வர முடியும்? கொஞ்சமாவது உங்களுக்கு மூளை இருக்கா?” என்று ஷாமிலியை கேட்க,
“ஹலோ என்ன நக்கலா?”
“இல்ல. அப்படின்னு உங்க அம்மா கேட்பாங்க. அவங்களுக்கு என்ன பதில் சொல்லுவீங்க?”
“இல்ல இல்ல அதுக்கு நான் ஒரு ஐடியா பண்றேன். பேசாம நம்ம இந்த ஊருக்கு புதுசா மாற்றலாகி வந்து இருக்கிறோம். இந்த வீட்டு பாதுகாப்புக்கு ஆள் வேண்டும்னு சொல்லி நம்ம MLA வை கேட்டு. இந்த ரெண்டு பேரையும் நம்ம வீட்டுக்கு வேலைக்கு சேர்த்த மாதிரி சேர்த்துக்கலாம்” என்று ஐடியா சொன்னார் பழனி.
“என்ன? என் மாமா இந்த வீட்டு வேலைக்காரனா? என்னால ஒத்துக்க முடியாது. அவர் என்னுடைய வீட்டுக்காரன்” என்று வேகமாக சொன்னாள் முல்லை.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top