Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
❤ஓவியம் 10
“ஏய் என்னடா இவ? இப்படிப் பேசிட்டு இருக்கா?” என்றான் கதிர்.
“அதானே மச்சான். இவுங்க என்ன நம்மை வேலைக்கு எல்லாம் போக சொல்ராங்க. ரொம்பத் தப்பு” என்றான் மணிமாறன்.
“அதானேடா” என்றான் கதிர்.
“டேய் மவனே! நம்ம ரத்தத்துலயே உழைத்து சாப்பிடணும் என்ற எண்ணம் இல்லடா. அப்புறம் எப்படிடா வேலைக்கு போறது?” என்றார் கீதா.
“மச்சான் இப்ப என்னடா பண்றது?” எனக் கேட்டான் கதிர்.
“எனக்கும் ஒன்னும் புரியல. பேசாம நீ வேலைக்கு போயி...” அவன் முடிக்கும் முன், “டேய் நம்ம கொள்கை என்ன ஆகறது?” என்று எகிறினார் கீதா.
“கிழவி வாய மூடு. அவளை போலீஸ் யூனிஃபார்மில் பார்த்த உடனே உனக்கு அள்ளு விடுது. இப்போ அவ போய்ட்ட உடனே டயலாக் பேசுறியா?”
“அது உண்மைதான் மவனே. போலீஸ் யூனிஃபார்மை பார்த்தாலே நமக்கு காண்டு ஆகுது.”
“சரி அத விடு மச்சான். எனக்கு ஒரு டவுட்?” என்றான் மணிமாறன்.
“என்னடா?”
“அந்த போலீஸ்காரர் பொண்ணு தான் உன் மாமா பொண்ணு முல்லைன்னு தெரிஞ்சா, நீ அவங்க கழுத்துல தாலி கட்டின?”
“இப்ப உனக்கு எதுக்கு அந்த டவுட்டு?”
“சரி அத கூட விடு மச்சான். என்னமோ கண்டிஷன் போட்டியே அது என்ன கண்டிஷன்?”
“அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது. சரி நைட் எல்லாம் தூக்கம் இல்ல நான் போய் படுக்கிறன்.”
“ஏய் என்ன மச்சான் உன் பொண்டாட்டி சாப்பிடாமல் பட்டினியா போய் இருக்கா. நீ என்னடா நான் போய் தூங்குறேன் என்று சொல்லற?”
“அவ சும்மா சொல்லுறாடா. வேலை செய்யற இடத்துல ஏதாவது சாப்பிட்டு இருப்பா.”
“டேய் மவனே அப்புறம் அந்த முக்கியமான விஷயத்தை மறந்துடாதே.” என்று நியாபகப்படுத்தினார்.
“என்ன?” என்றான் அவன்.
“அதான் உன் மாமியார் வராளே.”
“அதுக்கு தான் நான் போய் இப்ப படுத்தால் தான் எனக்கு என்ன பண்ணுவது என்று யோசனை வரும். சரி நான் போய் தூங்குறேன்
முல்லை வேலைக்கு சென்றாலும் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் அன்றைய இரவு கதிரின் வீட்டுக்கு போலீஸ் காரில் வந்து கொண்டு இருக்கும் சமயம்
“ஏய் என்னடி காலையிலிருந்து பச்சைத் தண்ணி பல்லுல படாம இருக்கிற. வா நம்ம ஹோட்டல் போகலாம்.” என்று அழைத்தால் ஷாமிலி.
“அக்கா நான் என்ன பொய் சொல்றேன்னு நினைச்சியா? மாமா திருடன் ஆவதற்க்கு காரணம் நான் தான். கொஞ்சம் கொஞ்சமா அவர அந்த தொழிலில் இருந்து நான் வெளியே அழைச்சிட்டு வரணும்னா, கண்டிப்பா நான் இந்த மாதிரி எல்லாம் செய்து தான் ஆகணும்.” என்றாள் திடமாக.
“அதுக்குனு இப்படியா? நீ பசி தாங்க மாட்டடி.”
“இருக்கட்டும் அக்கா. என்னால வாழ்க்கையை இழந்தவர் என் மாமா. இனிமேலும் அவரு அசிங்க பட கூடாது. சரி நாளைக்கு காலையில பார்ப்போம்”
“அம்மாடி ஓவியா. முதல்ல போய் அந்த யூனிபார்மை கழட்டி வைச்சிட்டு வாம்மா.” என்று கீதா பவ்யமாய் சொல்ல,
“ம்... இருங்க இதோ வரேன்”
“சூப்பர்மா. இந்தா பிரியாணி சாப்பிட்டு” என்று கொடுத்தார்.
“பிரியாணியா? உங்க புள்ள வேலைக்கு போய் வாங்கிட்டு வந்தாரா?”
“அட நீ வேறமா. அவன் நீ போனதிலிருந்து தூங்கிகிட்டு தான் இருக்கான்” என்றான் மணிமாறன்.
“பகல் எல்லாமா தூங்குவாங்க?”
“ஆமாமா எங்களுக்கு வேலை நைட்ல தானே. அதனாலே நாங்க பகலில் தான் தூங்குவோம். இன்னும் அவன் ஒரு மணி நேரம் கழிச்சு எந்திரிச்ச பின் தான் நாங்க எங்க தொழிலுக்கு போகனும்.”
“’வேணாம்டா மணி. இன்னிக்கு முதல் முதல் என் மருமக வந்து இருக்கு இல்ல. அதனால ஒரு வாரத்துக்கு தொழில் தள்ளிப் போட்டுடுவோம். சரி சரி ஓவியா இந்தா பிரியாணி சாப்பிடு” என்றார் கீதா.
“இல்ல அத்தை. எனக்கு வேண்டாம்.”
“ஏன்மா? நாட்டு கோழி பிரியாணி நல்லா இருக்கும். வந்து சாப்பிடு.”
“இல்ல வேணாம். நான் தான் சொன்னேனே அவர் சம்பாதிச்சு கொடுக்கட்டும் நான் சாப்பிடுறேன். அதுவரை நான் சாப்பிடாமலே இருந்துக்கறேன்” என்றாள் முல்லையோவியா.
“விளையாடாத ஓவியா. நீ சின்னதுல இருந்தே பசி தாங்க மாட்ட. சாப்பிடுமா.”
“இல்ல எனக்கு வேணாம் அத்தை. மாமா சாப்பிட்டாரா?” எனக் கேட்டாள்.
“மதியானம் எந்திரிச்சான். உங்க அத்தை என்னத்தயோ கிண்டி வைத்து இருந்தது அத சாப்பிட்டுட்டு படுத்தவன் தான் இன்னும் நைட்டுக்கு சாப்பிடல நீ வந்ததுக்கு அப்புறம் சாப்பிடுவேன் என்று சொல்லி இருக்கான்.”
“சரி மாமா எந்திரிச்சா அவர் சாப்பிடட்டும். நான் போய்ப் படுத்துக்குறேன். நாளைக்கு சீக்கிரம் போகணும் பெரிய இடத்தில் இருந்து ஆளுங்க வராங்க” என்று சொன்ன முல்லை தன் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்திருந்த கதிரின் அருகில் அமர்ந்தாள்.
அவளின் கோவமான முகத்தில் அங்கங்கே சிறு வியர்வை துளிகள் பூத்து இருப்பதை தன் முந்தனையால் துடைத்தவள் அவன் தலையைக் கோதியபடி
“ம்...” என்றவனிடம், “பசிக்கலையா? மணி என்னாச்சு? எந்திரிச்சு சாப்பிட வேண்டியது தானே?” எனக் கேட்டாள்.
“ஏய் நீயா? வாடி மணி என்ன ஆகுது? இவ்வளவு நேரமா வேலை பார்ப்ப? என்னை பாத்தியா நான் நெனச்சா தான் வேலைக்கு போவேன். முடியலையா வீட்ல இருந்துடுவேன். ஸெல்ப் எம்ப்ளாய்மெண்ட். நீ பேசாம உன் வேலையை விட்டுட்டு என் கூடயே இரு.”
“அது சரி. உன் கூடவே நான் இருக்கிறேன். ஆனால் நீ செய்யும் வேலையில் கிடைக்கும் பணத்தில் எல்லாம் என்னால சாப்பிட்டு உயிர் வாழ முடியாது.” கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னாள்.
“ஏய்...” என்று அவன் கத்த,
“கத்தாத மாமா. சரி சரி நீ போய் சாப்பிடு” என்றாள்.
“நான் உனக்காக தான் காத்துக்கிட்டு இருக்கேன். வா போய் சாப்பிடலாம்.”
“இல்ல நான் சாப்பிட மாட்டேன். நீ சம்பாதிச்சு கொடு நான் சாப்பிடுறேன்.”
“அடி வாங்க போற முல்லை. நான் நேத்தே சொல்லிட்டேன் உன் விஷயத்தில் நானும், என் விஷயத்தில் நீயும் தலையிடக் கூடாதுன்னு. புரியுதா? வா போய் சாப்பிடலாம்” என்றான் கதிர்.
“இல்ல மாமா. உண்மையா தான் சொல்றேன். நான் அந்த சாப்பாட்டை சாப்பிட்டால் எனக்கு கண்டிப்பா தூக்கமே வராது. நீ போய் சாப்பிடு.”
“சரி நீ எக்கேடோ போ. நான் போய் சாப்பிடுறேன்”
“மச்சான் இன்னிக்கு உனக்கு தான்டா சான்சே. இங்க பாரு லெக் பீஸ் வந்திருக்கு சாப்பிடு மச்சான்” என்றான் மணிமாறன்.
“ம்... குடுடா”
“என்ன மச்சான், அப்போ உனக்கு வேண்டாமா? நான் எடுத்துக்கவா?”
“டேய் யாருடா இவன். அது என் மகனுடைய லெக் பீஸ். வாரிசு படி நான் தான் அதுக்கு உரிமை குடு” என்று கேட்டார் ஓவியகீதா.
“அடக்கடவுளே ஒரு கோழி பிரியாணிக்கு கூட, இது வாரிசு கதை எல்லாம் பேசுது பாரு. இந்தா இதை நீயே சாப்பிடு” என்று அவர் கையில் திணித்தான்.
“டேய் மவனே! உனக்கு தான் பிரியாணி பிடிக்குமே. ஏன் சாப்பிடல?”
“ம்... நீங்களே கொட்டிக்கோங்க”
“மாமா எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு பசிக்கல.”
“ஏய் பசிக்கலன்னு பொய் சொல்லாத. நீ காலையில இருந்து அப்ப எதுவும் சாப்பிடலையா?”
“காலையிலிருந்து இல்ல. நேத்து நைட்ல இருந்து நான் எதுவுமே சாப்பிடலன்னு உனக்கு தெரியாதா? தெரியாத மாதிரி இருக்கியா?” என்றாள் முல்லை.
“ஏன்டி என் உயிரை வாங்குற.”
“நான் தான் சொல்லிட்டு போனேனே. நீ சம்பாரிச்சு எடுத்துட்டு வர காசுல தான் நான் சாப்பிடுவேன். அதுவரை பட்டினியா இருப்பேன்னு.
“முல்லை சொல்றதை கேளு. வந்து சாப்பிடு.” என்றான் கதிர்.
“என்னால முடியாது மாமா. மாமா எனக்கு... எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு.” என்றாள் தலையைப் பிடித்தபடி.
“ஏய் என்னடி? இரு இரு தண்ணி... இந்தா தண்ணி குடி” என்று எடுத்து வந்து கொடுத்தான்.
“எனக்கு வேணாம். இந்த வீட்ல நான் எதுவும் சாப்பிடமாட்டேன்.” அந்நிலையிலும் அடமாக நின்றாள்.
“அடித்து பல்லை உடைச்சிடுவேன். குடிடி” என்று அதட்ட,
“மாமா நீ என்னைக் கொன்னாலும் சரி. நான் சாப்பிட மாட்டேன்”
“ஐயோ சித்தி இங்க பாரு. ஏய் கிழவி இங்க வந்து பாரு இவளை” என்று கத்தினான்.