New member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 20
- Thread Author
- #1
பொள் ளாச்சி :
" இதான் உன் முடிவா எழில்"
ஏய் உனக்கு ஒரு முறை சொன்னால் புரியதா??
"மனுஷனுக்கு இங்க எவ்வளவு பிரச்சினை போய்ட்டு இருக்கு, அதை புரிஞ்சிக்காம "நீ புடிச்ச முயலுக்கு மூணு காலுனு அதிலே தொங்கிட்டு இருக்க"
ஏண்டி,பொழுது விடிஞ்சதில் இருந்து ரா தூங்குற வரைக்கும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உன்கிட்ட பேசிட்டு தான டி இருக்கேன்??
என்னமோ ஒரேடியாக தலை முழுகுன போல,"தாம் தூம் தைய தக்கானு" எப்போ பார்த்தாலும் குதிச்சிட்டு இருக்கா?
எனக்கு இருக்குற வெறியில் கண்டபடி எதையாவது சொல்லிட போறேன்.பிறகு ஓஓ னு ஒப்பாரி வச்சி உசுர வாங்கி தொலைவ.ஒழுங்கு மரியாதையா போனை வச்சிட்டு போய் உன் வேலைய பாருடி என்று கத்தினான்.
"கொஞ்சல் மொழிகள் மட்டுமே சரளமாய் பொழிந்த வாயோ சில நாட்களாக நெருப்பை வாறி வீசுவதை உணர்ந்தவளுக்கு மனம் சுக்கு நூறாக உடைந்து போனது"
"இவ்வளவு நேரம் தன்னவன் பேசியதெல்லாம் கேட்டு கண்ணீரோடு வாயை மூடி அமைதியாக இருந்தவளோ,கண்ணை மூடி தேங்கிய கண்ணீரை வெளியேற்றி விட்டு ஒரு முடிவோடு வாயை திறந்தாள்.
"ஓகேங்க"
அனேகமாக இது தான் உங்களிடம் நான் பேசுவது கடைசி முறையாக இருக்கும்.இனி எந்த சூழலிலும் உங்களை நான் தொந்தரவு பண்ண மாட்டேன் போதுமா என்க,
அந்த பக்கமிருந்து கேட்டவனோ,இதை சொல்லாமல் செய்து காட்டு.உனக்கு கோடி புண்ணியமாக போகும் டி என்றவாறு அழைப்பை கட் பண்ணிய எழில் வேந்தன்,ஆஆஆ என்று உள்ளுக்குள் இருக்கும் ஆத்திரத்தை ஆளில்லாத அந்த நடு ரோட்டில் கத்தி விரட்டினான்.
இவ்வளவு நேரம் நண்பன் பேசியதையெல்லாம் கேட்ட மருது, மச்சான்,எதுக்கு டா அந்த பிள்ளை கிட்ட இப்படி கத்துற??
"உனக்கே இது சரியா படுதாடா என்க,பின்ன என்னடா??ஆறு மாசமா உயிரை வாங்கி தொலையுறாள் டா".
"இந்த எழவுக்கு தான் காதல் கீதல்னு சிக்காம இருந்தேன்.என் உசுர வாங்குறதுக்குனே வந்துருக்காள் போல டா"
இங்க நமக்கு எவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு.ஒரு மனுஷன் போன் எடுக்கலைனா வேலையா இருப்பானு தெரியிறதில்லையா?
என்னத்தை படிச்சி கிழிச்சாள்னு தெரியலை,கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாளே,
காதலிச்சா 24 மணி நேரம் இவளுங்க கூட நாம இழைஞ்சுகிட்டே இருக்க முடியுமா?
மனுசன் சூழ்நிலை என்னவோனு தானா புரிஞ்சிக்கிற அறிவு கூடவா இல்ல?
"எப்போ பாரு ,உன்னை பாக்கணும், பேசணும்னு இதே பாட்டை ஓயாம பாடுறாளென்று வேந்தன் கத்தினான்".
இதுவரை வேந்தன் பேசியதையெல்லாம் கேட்டு முறைத்துப் பார்த்த மருதுவோ,நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல டா.நீயும் ஒரு நேரத்துல அந்த புள்ள பேசலன்னு இப்படித்தானே லபோ திபோனு குதிச்சிட்டு தான் டா கிடந்த,அதெல்லாம் மறந்துடுச்சோ??
"இப்ப அந்த பிள்ளைக்கும் அப்படித்தான் இருக்கும்".
காரணம் எதுவும் சொல்லாம உன் பாட்டுக்கு அவாய்ட் பண்ற போல இருந்தால்,அந்த பிள்ளை வேற என்னன்னு யோசிக்க முடியுமா?
" இரண்டரை வருஷமா உருகி உருகி காதலிச்ச தானே"
அப்பவே அந்த புள்ளை வேண்டாம் என்று ஒதுங்கி தானே போச்சு,நீ விட்டியா,அப்பலாம் உனக்கு இனிச்சிதோ என்று முறைத்தான்.
அடேய்...நீயும் என்ன டா புரிஞ்சிக்காம பேசுற?
தலைக்கு மேல வெள்ளம் போய்கிட்டு இருக்குடா.நமக்கு என்ன பிரச்சனை போயிட்டு இருக்குன்னு உனக்கு தெரியாதாடா??நான் சொல்லித்தான் உனக்கு தெரியுனுமா என்ற வேந்தனோ தனது நண்பனை கடுப்போடு முறைத்தான்.
இந்த மூஞ்ச தூக்குற வேலையெல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சிக்க டா.இங்கு பாரு மச்சி,உன்கிட்ட இப்பவும் சொல்றேன் நீ பண்றது ரொம்ப ரொம்ப தப்பு டா.
"பிரச்சனை என்னன்னு நீ இன்னும் மலர்கிட்ட சொல்லவே இல்லை".கடந்த ஆறு மாசமா நானும் உன்னை கவனித்துக்கொண்டு தான் டா இருக்கேன்.
"அந்த புள்ள போன் பண்ணாலும் அவ்வளவு சீக்கிரம் எடுக்க மாட்டேங்குற".உனக்கு வேண்டாம் என்று சொல்லி தொலைய வேண்டியது தானே,வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த புள்ள நல்லபடியா இருக்கட்டுமேயென்று மருதுவும் கோவமாக கேட்க,அதையும் சொல்லிட்டேன் டா என்ற வேந்தனோ அலுங்காமல் நண்பனின் தலையில் பெரிய அணு குண்டை தூக்கி போட்டான்.
அடப்பாவி!!
என்னடா சொல்ற என்று அதிர்ந்து போய் மருது கேட்க,எனக்கு பொய் சொல்வது புடிக்காதுனு உனக்கு நல்லா தெரியும் மாப்பி.இப்போதும் உன்னிடம் உண்மையை தான் டா சொல்லிட்டு இருக்கேன்.
"இப்போ இருக்கும் சூழலுக்கு நம்ம வேலை நமக்கு ரொம்ப முக்கியம்".
"இது கௌரவ பிரச்சனை புரியுதா"
“அவள் என்னை விட்டு எங்கேயும் போயிட மாட்டாள்.எல்லாம் நல்லபடியாக முடித்ததும் அவளை நான் சமாதானப் படுத்துகிறேன்.இப்ப வா வீட்டுக்கு போகலாம். என்ற வேந்தனோ அங்கிருந்த புல்லட்டில் ஏறி ஸ்டார்ட் பண்ணினான்.
"என்னமோ பண்ணு டா".
இது எங்க போய் முடியும்னு எனக்கு தெரியலை??
"பின்னாடி இதை நினைத்து நீ ரொம்ப வருத்தப்படுவ அது மட்டும் எனக்கு நல்லா தெரியுது".
ஒரு நண்பனா உன் கிட்ட இதை சொல்லிட்டேன்.அப்புறம் உன்னோட விருப்பம் என்ற மருதுவும் நண்பனின் வண்டியில் ஏறி உட்கார,வேந்தனோ அங்கிருந்து வீட்டை நோக்கி சென்றான்.
அரைமணி நேரத்தில் ஊருக்குள் வந்த வேந்தன் நண்பனை அவன் வீட்டில் விட்டுவிட்டு பக்கத்து தெருவில் இருக்கும் தனது வீட்டிற்கு வந்தவன் புல்லட்டை ஷெட்டில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் போக,முற்றத்தில் இருந்த மர சோபாவில் அவனின் அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து,அவர்கள் முன்னாலிருக்கும் சோபாவில் போய் உட்கார்ந்தான்.
சென்னை:
நடப்பது நிஜமா?
நான் கனவு ஏதாவது காண்கிறேனா??
தன்னோட எழில் தான் இப்படி பேசினானா என்று நம்ப முடியாமல் தூரத்து நிலவை பார்த்து கொண்டு மொட்டை மாடியில் நின்றிருந்த மலர்விழி கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
நொடிகளும் நிமிடங்களாய் கடந்திருக்க,ஊரும் சத்தமின்றி அடங்கியிருந்தது.தூரத்தில் எங்கோ நாய் குறைக்கும் சத்தம் மட்டும் இவ்வளவு துணையாக இருக்கும் போது,மலரின் செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்கவும், தன்நிலை உணர்ந்தவள் கையிலிருக்கும் போனில் பெயரை பார்த்து பெரு மூச்சு விட்டு அட்டென்ட் செய்யவும் செய்து பண்ணியவள் நான் வரேன் டி.
எனக்கும் டிக்கெட் போடுங்களென்று சொல்லி அழைப்பை துண்டித்தவள், போனை சுவிட்ச்டு ஆப் பண்ணிவிட்டு கீழே தனது ரூமை நோக்கி சென்றாள்.
"வழமை மாறாமல் வெய்யோனும் தனது பொன்னொளியை உலகிற்கு சமமாக பரப்பிக்கொண்டு கிழக்கே உதயமானான்".
வீட்டில் சுப்ரபாதம் ஒலிக்க, மலர்விழியின் அம்மா கண்ணகியோ வீடு முழுவதும் சாம்பிராணி புகையை காட்டிக் கொண்டே வந்தவர்,மீண்டும் பூஜை அறைக்கு சென்று கையிலிருந்து தூபகாலை கீழே வைத்து விட்டு,சாமியை வணங்கினார்.
பின்னர் நெற்றியில் குங்குமத்தையும் விபூதியையும் பூசிக்கொண்டு கிச்சனுக்கு போனவரோ வழக்கமான தனது வேலையை தொடர்ந்தார்.
காபிக்கு டிகாஷனை இறக்கும் போது காலடி சத்தம் கேட்க,வருவது தனது கணவர் சீவகன் என்று புரிந்து வாக்கிங் கிளம்பிட்டீங்களா என்று கிச்சனிலிருந்தே குரல் கொடுக்க,கண்ணகி நான் போயிட்டு வரேன் மா.கதவை சாற்றிக்கொள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
தனக்காக ஒரு டம்ளர் காபியை கலந்தவர் சாம்பாருக்கு தேவையான பருப்புகளை குக்கரில் போட்டு தண்ணீரை ஊற்றியவர் அதில் சில பூண்டு பல்களையும்,சிறிது மஞ்சள் தூளையும் கலந்து மூடி அடுப்பில் வைத்து விட்டு வெளியே வந்து ஷோபாவில் உட்கார்ந்து காபியை குடிக்கும் போது மகள் இன்று இரவு டூருக்கு செல்லும் விஷயம் நினைவுக்கு வந்தது.
அவளுக்கு என்னென்ன உணவு செய்து கொடுத்து அனுப்பலாம் என்று யோசிக்கும் போது மலரின் தோழிகள் சொன்ன லிஸ்ட் ஞாபகம் வர சிரித்துக்கொண்டே காபியை குடித்து முடிக்கவும் குக்கரில் விசில் சத்தம் வரவும் சரியாக இருந்தது.
காலைக்கு டிபன்,மதியம் கணவருக்கு தேவையான லஞ்சை செய்து முடிக்க,வழமை போல் எட்டு மணி சங்கு ஒலிக்கும் சத்தம் கேட்டது.
"வாக்கிங் போன சீவகனும் வீட்டிற்கு வந்தவர் ஆபீஸ் போவதற்காக தயாராக தனது அறைக்கு சென்று விட்டார்"
"மலர்விழியோ தனது ரூமில் இருந்து எழுந்து வந்தவள் அம்மா காப்பி எங்கே என்க, ஏன் டி மூஞ்சியதான் முதல்ல கழுவேண்டி"
இப்படி இருந்தா எப்படி வீடு விளங்கும்?
லட்சுமி எப்படி இந்த வீட்டுக்கு வருவாள்? எந்த மகளை முறைக்க,ஏன் மா லட்சுமிக்கு நம்ம வீட்டு அட்ரஸ் தெரியாதா?
"வேணும்னா நீ போய் கூப்பிடுவா" எனக்கும் மகளை பார்த்தவர் வாய் வாய்.எனக்கு மாமியார் இல்லாத குறையை அந்த ஆண்டவன் உன் மூலமா தீர்த்துக்கிறான்.
ஒழுங்கா பல்லு துலக்கிட்டு வந்தா தான் காப்பி.இல்லைனா பச்சை தண்ணி கூட குடுக்க மாட்டேன் என்று கரராக சொல்லிவிட்டு கணவருக்கு லஞ்சை பேக் பண்ணி அதற்குரிய பேகில் எடுத்து வைத்தார்.
"ரொம்ப தான் மா பண்ற"
ஒரு நாளைக்கு நான் இல்லன்னு கவலைப்பட்டு அழுவ.அப்பதான் என்னோட அருமை பெருமை எல்லாம் தெரியும் பாரு..
"போடி போடி"
எத்தனை பேர் இந்த டயலாக்கை சொல்லி படத்திலையும் நாடகத்திலும் கேட்டாயிற்று.நீ என்னமோ புதுசா சொல்ற போல தான் என்றவர், மகளுக்கு சூடாக காபியை கலக்கி எடுத்துட்டு வர மலர்விழியும் ரெப்ரஷாகி வந்தாள்.
"நேரமும் கடந்து சென்றது".
சீவகன் ஆபிஸிற்கு கிளம்பிட,மலர்விழியோ டூருக்கு தேவையானதை பேக்கிங் பண்ணி முடித்தவள் தோழிகளிடம் போனில் பேசுவதற்காக முதல்நாள் ஆப் பண்ணி வைத்தாள். மொபைலை ஆன் பண்ணியவள் ஏஞ்சல் குருப்பிற்கு கால் பண்ணவும்,அட்டென் பண்ணியவளுங்களோ தோழியை லெப்ட் ரைட் வாங்கி விட்டாளுங்க.
ஒரு வழியாய் தோழிகளை சமாதானப்படுத்தி விட்டு ஹாலிற்கு வர கண்ணகியோ மகளுக்கும் தனக்கும் மதிய சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.அம்மா,அவளுங்க கேட்டதெல்லாம் பேக் பண்ணிட்டியா??
"இன்னும் நேரம் இருக்கு டி மலரு,செஞ்சு தரேன் என்கவும் சரி மா என்றாள்"
பின்னர் சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் சிங்கிள் கழுவி வைத்துவிட்டு தனது லேப்டாப்பை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள்.
"லேப்டாப்பில் மெயில் செக் பண்ணிக் கொண்டிருந்தாலும் சிந்தனை முழுவதும் வேந்தனிடம் தான் இருந்தது".
"நேற்றிலிருந்து இதுவரை ஒரு கால், ஏன் ஒரு மெசேஜ் கூட அவன் பண்ணவில்லை".
அப்போ எப்போ தன்னை கழட்டி விடலாம் என்று காத்திருந்திருக்கிறான்?
இது தெரியாமல் போய் கடந்த இரண்டு வருடங்களாக உயிருக்கு உயிராக காதலித்திருக்கிறோமே என்று உள்ளுக்குள் வேதனை வர,"அதை வெளியே காட்டாமல் மறைக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்".
கண்கள் லேப்டாப்பில் இருந்தாலும் சிந்தனையோ எழில் வேந்தனை சந்தித்த நாளை நோக்கி ஓடியது...!!
சொல்வாளா...???