• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிறைவுப்பகுதி - 31

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
31


“ஹேய் ரதி! ரிசப்ஷன் முன்னாடி உன்னை தனியா திருட்டுத்தனமா பார்க்கணுமே. என்ன பண்ணலாம்?”

“வீடியோ காலிங் போடுறேன். நல்லா பார்த்துக்கோங்க.”

“ம்கூம். உன்னை லைவ்லதான் பார்க்கணும். முழுசா” என்று வார்த்தையை அழுத்தி, “அதான் இப்ப ஆடியோ காலிங் மட்டும் போட்டேன்” என்றான் விஷமத்துடன்.

“எல்லாருமே பக்கத்துல இருக்காங்க. எப்படி வர்றது? நீங்க எப்படி வருவீங்க? சிக்ஸ் தர்ட்டிக்கு ரிசப்ஷன். இப்ப சிக்ஸ் ஆகிருச்சிங்க.”

“ரதி! ப்ளீஸ் எனக்காக!”

“சரி எதுக்கு ப்ளீஸ்லாம். எங்க வரணும் சொல்லுங்க?” என்றதும் கணவன் மொட்டைமாடிக்கு வரச்சொல்ல, “அங்கயா ஆள் இருப்பாங்கங்க?”

“அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். அதைவிட ஆப்டான இடம் கிடையாது அம்மு.”

“ஹ்ம்... வர்றேன்” என்று வெளியே வர,

“எங்க மேடம் கிளம்பிட்டீங்க?” என்ற குரலில் அப்படியே நின்றாள்.

“ஹேய் தர்ணி! ஒரு பைவ் மினிட்ஸ்யா. இதோ வந்திருறேனே!”

“அதெல்லாம் முடியாது. பங்ஷன் முடியுறது வரை உங்களை மீட் பண்ணக்கூடாது சொல்லியிருக்காங்க.”

“தர்ணி சாரி அண்ணி. ஒரு டென் மினிட்ஸ் ப்ளீஸ்” என்றவள் குறும்பைக் கண்டுகொண்டவள், “ஹேய் இப்பத்தான பைவ் மினிட்ஸ் சொன்ன. இதென்ன டென் மினிட்ஸாகிருச்சி?”

“இன்னும் நீ பேசப்பேச டைம் கூடுமே தவிர, குறையாது செல்லம்.”

“ஹான்! இதெல்லாம் டுபாக்கூர் ஆட்டம்.”

“தண்ணி என்ன வாக்குவாதம் நடக்குது?” என சிந்து வர,

“அக்கா இவ அண்ணாவை மீட் பண்ணப்போறேன்றா. கேட்டா டைம் இன்க்ரீஸ் பண்ணிட்டே போறா.”

“ஏன் பாகீ இன்னும் ஒன் ஹவர்தான. அதுக்குள்ள என்ன சந்திப்பு?”

“அதுல தான் ஒரு கிக் இருக்கு. ஆனா, அண்ணீஸ் உங்களுக்கு வாய்ச்ச எங்கண்ணனுங்க சரியில்ல. இப்படியா உங்களை தனியாவிட்டு என்னை டிஸ்டர்ப் பண்ணுவாங்க. பொண்டாட்டி பின்னாடியே சுத்த வேண்டாமோ!” என பாவனையாக சொன்னாள்.

அவளுக்கு இரண்டு அடிகள் போட்டு, “உன்னோட திருட்டுத்தனத்துக்கு இப்படி ஒரு சப்பைக்கட்டா.”

“ஹி...ஹி அண்ணீஸ் எங்காளு வெய்ட்டிங். ஒரு பிப்டீன் மினிட்ஸ்தான் பிளீஜ்ஜ்” என இழுத்தவளை தாரிணி முறைத்து, “ப்ளீச்சிங் பவுடர் விளம்பரத்துக்கு கண்டிப்பா உன்னையே ரெகமண்ட் பண்றேன். டென் பிப்டீனாகிருச்சா. யூ சீட்டர் கேர்ள்” என்று சிரித்தாள்.

“ஹி...ஹி... எஸ் மை கேர்ள். இனி பேசிட்டிருந்தா டைமாகிரும்” என நிற்காமல் நகர்ந்தவள், யார் கண்ணிலும் படாமல் அந்த நான்காவது மொட்டைமாடி சென்றாள்.

மழை நேரமென்பதால் சீக்கிரமே இருட்டிவிட, சுவற்றின் வெளிப்புறங்களில் சீரியல் பல்புகளின் கலவையான ஒளியில் மின்னிக்கொண்டிருக்க, நிலா வெளிச்சமும் நட்சத்திரங்களும் செயற்கையுடன் போட்டிபோட, ‘உங்களுக்கெல்லாம் போட்டியாய் நானும் இருக்கிறேன்’ என்று மாடியேறி வந்த தன் முறைப்பெண்ணை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் ஸ்ரீனிவாசன்.

நீலநிறத்தில் எம்ப்ராய்டரி, கல் வேலைப்பாடுகள் செய்த பட்டுப்புடவையில் அதுவும் மனைவிக்காக தனித்துவமாக தயாரித்த புடவையில் காணக்காண பரவசமே.

பாகீரதியின் கண்களும் கணவனைக் காண, அவளின் சேலைக்கு பொருத்தமாக ஸ்கைப்ளு பேண்ட் கோட், ஸ்கைப்ளு சர்ட் போட்டு நின்றிருந்தான். இருவரின் பார்வையும் ஒருவரையொருவர் விட்டுவிலகாமல் ரசித்திருக்க, “வா” என்றழைத்தவனின் கைவிரல்களுள் தன் விரல்களைக் கோர்த்ததும், அதில் அழுத்தம் கொடுத்தான் ‘உனை எப்பொழுதும் கைவிடேன் என்று.’ அதை உணர்ந்தவளுமே உடல் சிலிர்க்க மௌனமாக உடன் சென்றாள்.

மறைவாக ஓரிடத்தில் அவளை நிறுத்தி, “அப்படி உன்னை என்ன பண்ணிருவேன்னு நம்மளை பிரிச்சி வச்சிருக்காங்க. மீறி பேசணும்னா பகல்ல மட்டும் பர்மிஷன். அதுக்கு ஒரு வானரப்படையே உனக்கு காவல் வேற. ஏன் பகல்ல உன்னை எதுவும் பண்ணமுடியாதா என்ன?” என்றான்.

“ஸ்ஸ்...” என அவன் வாய்மூடி, “தப்புத்தப்பா பேசுறீங்க.”

சட்டென்று அவள் முன் முட்டியிட்டவன், ஒரு பூங்கொத்தை கையில் கொடுத்தபடி, “வில் யூ மேரீ மீ!” என்றான் ஆவலாய் கண்களில் காதலுடன்.

அதே அளவு காதலையே எதிரொலித்தன அவளின் கண்கள். அவனின் தலைகலைத்து, “ஹேய் முறைப்பையா! நமக்கு மேரேஜானது மறந்திருச்சா என்ன?”

“ஹி...ஹி” என அசடு வழிந்தவன், “சாரி. வில் யூ லவ் மீ” என்றான் திரும்பவும்.

“அச்சோ சீனு! ஆல்ரெடி அதைத்தான் நாம பண்ணிட்டிருக்கோம். வேற வேற ட்ரை பண்ணுங்க!” என்று புன்னகைத்தாள்.

சற்று யோசித்தவன் திரும்பவும் பூங்கொத்தை நீட்டி, “வில் யூ ஹக் மீ!” என்றதும் பாகீ விழிக்க, “ஓ... கம்மியா கேட்டுட்டேனோ! சரிவிடு. வில் யூ கிஸ் மீ! என்ன இதுவும் கம்மியா. அப்ப ரதிமா வில் யூ ரேப் மீ!” என்று கண்ணடித்தான்.

“ஏய் உன்னை...” என்று அவனை அடிக்க விரட்டினாள்.

“ஓ... திரும்பவும் தப்பா சொல்லிட்டேனா? அப்ப ரேப் யூன்னு சொல்லியிருக்கணுமோ!” என்றான் தீவிரமாய்.

“ஹேய்! நில்லுங்க. உங்களுக்கென்ன வில்லன்னு நினைப்பா? நீங்க ஹீரோவும் இல்லை. வில்லனும் இல்லை. சரியான வில்லங்கம் பிடிச்சவன்.”

“அப்ப ஆன்டி ஹீரோன்றியாடா ரதி?”

“ஹ்க்கும்... பொண்டாட்டிகிட்ட ரேப் பண்ண பர்மிஷன் கேட்கிறவன் ஆன்டி ஹீரோவா?”

“அப்ப கேட்க வேணாம்ன்றியா?”

“எல்லா நேரத்துலயும் கேட்கணும்னு அவசியமில்லை!” என்றதும் அவளருகில் வந்து “ரதீ” என்றான்.

“எஸ் மைடியர் முறைப்பையா! பொண்டாட்டிகிட்ட மட்டும் கொஞ்சம் வில்லனாகவும் இருக்கலாம்” என்றவள் குரல் ஹஸ்கியாக ஒலிக்க, உதடோ அவன் கன்னத்தைத் தீண்டியது.

“ஊய்ய்...” என சத்தமிட்டபடி அவளைத் தூக்கிச் சுற்றி இறக்கிவிட, “நீங்க என்கிட்ட இதுவரை அதை சொல்லவேயில்லை?” என்றாள் சடைப்பாக.

“எதைமா?” தெரிந்தும் தெரியாததுபோல் கேட்டு, “சொன்னால்தான் தெரியுமா?” என்ற அந்தக்குரலே சொன்னது ஆயிரமாயிரம் ஐ லவ் யூக்கள்!

“தேங்க்ஸ்ங்க” என்றாள் மிதமிஞ்சிய சந்தோஷத்துடன்.

“ஹா...ஹா எதுக்கு? நான் எதுவும் சொல்லலையே?”

“திருப்பதியில ஜெகன் அண்ணா பேசினதைக் கேட்டப்ப, அந்த மாதிரி நல்ல குணமுள்ள, என்னை... என் சூழ்நிலையை புரிஞ்சிக்கிட்ட, என்னைக் கொண்டாடுற, எனக்கே எனக்கான ஹஸ்பண்ட் கிடைக்கணும்னு வேண்டிகிட்டேன். அந்த ஏழுமலையான் ஸ்ரீனிவாசனும் என்னைக் கைவிடலை. இந்த ஸ்ரீனிவாசனும் என்னைக் கைவிடலை” என்று கணவன்புறம் கைநீட்டினாள்.

மனைவியின் அளவிட முடியாத நம்பிக்கையில் தன்னைத் தொலைத்தவன், மென்மையாக நெற்றியில் முத்தமிட்டு, ஜெகனை தனது உதவியாளராக செய்து, அவர்களுக்கென்று ஒரு சின்ன ப்ளாட் வாங்கிக்கொடுத்து திருப்பூரில் நிரந்தரமாக குடியிருக்க வைத்திருப்பதாக சொன்னான்.

கணவனைக் கட்டியணைத்து, “எனக்குத் தெரியும் நீங்க அவங்க லைஃபை மாத்திருவீங்கன்னு. அதான் நானா எதுவும் உங்ககிட்ட சொல்லல” என்றவளின் குரலில் கணவனைப் பற்றிய பெருமையே இருந்தது. அப்படியே எவ்வளவு நேரம் இருந்திருப்பார்களோ!

“போதும். நாங்களும் எவ்வளவு நேரம்தான் காவல் இருந்து எல்லாரையும் தடுக்கிறது. டைமாகிருச்சி கீழ வாங்க” என்ற தர்ஷன், நவீனின் குரலில் தங்களை மீட்டு புன்னகையுடன் மேடைக்கு வந்தார்கள்.

வரவேற்பு மிக பிரம்மாண்டாகவும், மற்றவர்கள் பார்த்து வியக்கும் வண்ணம் இருந்தது. அதையெல்லாம் மிஞ்சுமளவிற்கு மணமக்கள் இருந்தார்கள். கிட்டத்தட்ட இரவு பதினோரு மணிவரையிலுமே ஒருசிலராக வந்த வண்ணமிருக்க, நேரமாக ஆக மணமக்கள் இருவரும் வாட்சைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

மணி பதினொன்றரையாக அதற்குமேல் பொறுக்க முடியாமல், அப்பா அம்மாவிடம் சொல்லி தங்களின் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்டான்.

“என்ன மாப்பிள்ளை சார் ரொம்ப அவசரமோ?” என்ற சுதர்ஷனின் கேலி புரியாமல், “ஆமாடா பனிரெண்டு மணிக்கெல்லாம் ரெண்டுபேருக்கும் இம்பார்டண்ட் வேலையிருக்குடா” என்றான் வேகமாக.

“அடப்பாவி! இப்படியா ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுப்ப?”

“என்னடா உளர்ற?” என எரிச்சலாக கேட்டவனிடம்,

“ஹான் உளர்றாங்க. நீ பேசியதைச் சொன்னேன்” என்றதும்தான் தான் பேசியதை நினைவுபடுத்த தலையிலடித்து, “ச்சீ... போடா” என்றான்.

ஏற்கனவே வாங்கிய வீட்டை விற்பனை செய்து, மத்திய சென்னையில் வீடு கட்டியிருந்தான். இப்பொழுது வரவேற்பு நடக்கும் இடத்திற்கும், வீட்டிற்கும் பத்து நிமிடங்கள் பயண நேரம் அதனாலயே இந்த அவசரம்.

“ம்கூம் இதுக்கு மேல டைம் கிடையாது” என்று மனைவியின் கைபிடிக்க, என்னவென்று பார்த்தவளிடம் “ஓடிப்போலாமா!” என்று கண்ணடித்தான்.

“நான் ரெடி மச்சான். வாங்க போகலாம்” என வேகமாக வெளியேறி அலங்காரம் செய்திருந்த காரை எடுத்தபடி நேரம் பார்க்க, பனிரெண்டாக பதினைந்து நிமிடங்களே இருந்தது. தன் வேகத்தை விவேகமாக காரிடம் காண்பித்து, காரை விட்டு இறங்கி, மனைவியை அழைத்து வர பதிமூன்று நிமிடங்கள் முடிந்திருந்தது. அவன் வந்த வேகத்தில் வீட்டின் வெளியே என்ன இருக்கிறதென்று கூட பார்க்க நேரமில்லை.

கதவைத் திறந்து ஓரிடத்தில் அவளை நிறுத்தி, “இரு லைட் போடுறேன் “என்று நகர்ந்தபடி மதனுக்குத் தகவல் அனுப்ப, மறுபுறம் ‘டன்’ என்று பதில் வந்தது. அதை எதையும் கவனிக்காமல் மனதை சமன்படுத்தியபடி வாட்சையே பார்த்துக் கொண்டிருந்தாள் பாகீரதி. வரவேற்புக்குப் பத்திரிக்கை அடிக்கும் பொழுதுதான் மேனகா அந்த விஷயத்தை சொல்லியிருந்தார். அவளுக்கும் ஆச்சர்யமே! எப்படி இப்படி ஒரு ஒற்றுமை என்று. அதற்காகவே இந்த நேரக் குறிப்பு.

9, 8, 7, 6, 5 என்று நம்பர் கௌண்ட் குறைந்து 4, 3, 2, 1, 0 வர, “ஹேப்பி பர்த்டே! அன்ட் ஐ லவ் யூ ரதி! சீனு!” என்ற வார்த்தைகள் துள்ளலோடும், அதீத மகிழ்ச்சியோடும் இருவரிடம் இருந்தும் ஒரே நேரத்தில் வர, அதே நேரம் வீடு பளிச்சென்று மின்ன, அங்கே ஐஸ்க்ரீம் கேக் ஒன்று அழகாக மாடல் செய்து இருவரின் பெயரையும் தாங்கியிருந்தது. கேக்கைச் சுற்றி கேண்டில் லைட்களும், அதே நேரம் பளிச்சென்று மின்னிய புகைப்படங்களும். ஆனால், உள்ளே அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. அனைத்தையும் மதனை வைத்து நேரம் செட் செய்திருந்தான்.


அவளின் பின்புறம் வந்து இருவர் கையையும் ஒன்றாக இணைத்து கத்தியை பாகீரதி பிடித்திருக்க, வெட்டும்போது காதினருகில் “ஐ லவ் யூ ரதி!” என்றான் அவளுக்கேயான குரலில்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
அந்த வார்த்தை கொடுத்த ஜாலத்தில் வெட்டிய கேக்கை கணவனுக்குக் கொடுக்கத் திரும்பியவளை முன்புறமாக அணைக்க, அந்த அணைப்பினூடே கேக்கை வாயில் கொடுத்து, “ஐ லவ் யூ அத்தான்!” என்றவள் கண்களில் கண்ட காதல் அழியா ஓவியமாய் அவனின் மனமெங்கும் வியாபித்தது. பதிலுக்கு அவனும் ஊட்ட, ஏனோ அந்த நொடிகள் அப்படியே நின்றுவிடாதா! என்றே தோன்றியது இருவருக்கும்.

‘ஹேய் பாக்ஸ்! சூப்பர்டி சூப்பர் கலக்குற!’ மனம் பாராட்டியது முதல்முறையாக.

சில நிமிடங்களில் தந்தையிடம் இருந்து அழைப்பு வர, எடுத்ததும் ஸ்பீக்கரில் போடச்சொல்லி, “ஹேப்பி பர்த்டே சீனு. அம்மு. ஹேப்பி மேரீட் லைஃப்!” என்ற கோரஸ் குரல்கள் வாழ்த்துக்களாக அந்த நேரத்தில் ஆனந்தமாக வந்தது. அதை ஏற்று நன்றி தெரிவித்த பின் ஒரு கவரை மனைவியிடம் கொடுத்தான்.

என்னவென்று பிரித்துப் பார்த்தவள் கண்களில் அளவிட முடியாத ஆச்சர்யம் மட்டுமே! இந்திய அளவில் பிரபலமான ஃபேஷன் ஷோ ஆடை வடிவமைப்பாளரிடம் உதவியாளராக சேருவதற்கான உத்தரவுப் படிவம்தான் அது.

அன்றொரு நாள் தனிமை கிடைத்த பொழுது உன்னோட குறிக்கோள் என்னவென்று கணவன் கேட்டதற்கு, “ஃபேஷன் டிசைனிங்ல எனக்குன்னு ஒரு தனி இடம் பிடிக்கணும். மாடலிங் எனக்குப் பிடிக்காது. அந்த மாடலிங்கை மாடலா காண்பிக்கிற காஸ்ட்யூம், என்னோடதா இருக்கணும்! கொஞ்ச வருஷம்தான் என் நேமை ஸ்டாண்ட் பண்ணிட்டு, நான் என் குடும்பம்னு இருப்பேன். இல்லன்னா என் புருஷன் கார்மெண்ட்ஸ்கு ட்ரஸ் மாடல் பண்ணுவேன். அதுவும் இல்லன்னா அப்பாவோட கலாரதியை மேனேஜ்மெண்ட் பண்ணிப்பேன். எங்க போனாலும் எனக்குன்னு ஒரு இடம். என்னை அடையாளம் காட்டுற மாதிரி பண்ணனும்” என்று கணவனிடம் கண்களில் ஒருவித கனவுடன் சொன்னவை அவை.

அதை நிஜமாக்கிய கணவன் மேலுள்ள காதல் பலமடங்கு உயர, அதைக் கண்டவன் கண்களும் அதையே பிரதிபலிக்க, “இது என்னோட பர்த்டே கிஃப்ட்” என்று ஒரு சாவியைக் கொடுத்து ஜன்னல்புறம் அழைத்துச் சென்று காட்டினாள். பார்த்தவன் கண்கள் அதிலேயே ஒட்டியது. அங்கிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தைப் பார்த்து. விலையே பல லட்சங்கள் இருக்கும் என்பது பார்த்ததும் புரிந்தது.

கணவன் பின்புறமாக கட்டியணைத்து, “எனக்கு உங்க பின்னாடி பைக்ல உட்கார்ந்து வரணும்னு ஆசை. எப்பவும் நாம தனியா போனா பைக்தான். கார் நாட் இன்ட்ரஸ்டட்!” என்றாள்.

“எப்படி சொல்றது தெரியல ரதி. எனக்கு பைக்னா ரொம்ப பிடிக்கும். இவ்வளவு சம்பாதிச்சும் பைக் வாங்கினதில்லை. ப்ளஸ் டூ முடிச்சதும் அப்பாகிட்ட கேட்கணும்னு நினைச்சேன். பழனி அண்ணா மெக்கானிக் செட்ல வர்ற பைக்கை ட்ரையல் பார்க்கிறேன்னு எல்லாத்தையும் ஓட்டிப் பார்த்திருக்கேன். ஆசை இருந்தாலும் வாங்கத்தான் தோணலை. உனக்கெப்படி தெரியும்?” என்றவன் குரலில் தன்னை எப்படி புரிந்திருக்கிறாள் என்ற ஆச்சர்யமே!

“ஒவ்வொரு பைக் க்ராஸ் பண்ணும்போதும் ஒரு பார்வை பார்ப்பீங்களே. அந்த பார்வை சொல்லிச்சி. உன் புருஷனுக்கு பைக்னா ரொம்ப பிடிக்கும்டினு.”

“தேங்க்ஸ் ரதி!” என்றான் உள்ளார்ந்த குரலில்.

“இருக்கட்டும். இருக்கட்டும். என்னை ட்ரைவ் கூட்டிட்டுப் போக மாட்டீங்களா?” குரலில் ஆர்வத்தைக் காட்டினாள்.

“ஹேய் டைம் பனிரெண்டு அரைமா.”

“சோ வாட் மச்சான்?”

“சரி ட்ரஸ் சேஞ்ச் பண்ணு போகலாம்.”

“ட்ரஸ்ஸா!” என்று யோசிக்க,

அவனோ, “இன்னைக்கு நைட்குன்னு தனியா ட்ரஸ் எடுத்து வச்சிருக்காங்க” என்று கண்ணடித்தான். அது கொடுத்த கற்பனையில் முகம் மலர்ந்து வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள, அறைக்குள் வேகமாக சென்றவள், அங்கிருந்த லைட் க்ரீன் ஜார்ஜட் புடவை அணிந்து வர, அவளின் மெல்லிய உடலை அப்படியே காட்டியது அந்தப் புடவை.

அவள் வெளியே வர, “வாவ்! சூப்பர் செலக்ஷன். எனக்காகவே பண்ணியிருக்காங்க போல!” என்று கன்னம் தொட்ட கைகள் அதன் மென்மையில் அதைவிட்டு இறங்காமல் தடங்கல் செய்ய, “உன்னோட ஸ்கின்ல ஒரு கிஸ் பண்ணிக்கிறேன்” என்று கிறங்கல் குரலில் சொல்லி கன்னத்தில் முத்தமிட்டு, “இங்கேயே இருந்துருவோமா ரதி?” என்று உருகினான்.

கணவனின் காதைத் திருகி, “ஒழுங்கா ட்ரஸ் மாத்திட்டு கிளம்புங்க. டென் மினிட்ஸ்தான். திரும்ப வந்து இங்கேயே இருக்கலாம்” என்று முத்தமிட்ட கன்னம் தொட்டு வெட்கத்துடன் உரைக்க, விசிலடித்தபடி இரண்டு நிமிடத்தில் ஜீன்ஸ் டிசர்ட்டில் வந்தவனைப் பார்த்தவளுக்கு, கணவன் அவளிடம் கேட்ட, ‘இங்கேயே இருந்திருவோமாவை கேட்கலாமா!’ என்று தோன்ற, தலையை அசைத்துத் தன்னைச் சமன்படுத்தினாள்.

கதவைப் பூட்டி அந்த இருசக்கர வாகனத்தைத் தடவிக்கொடுத்தபடி உட்கார்ந்து சிறிது தூரம் சென்று திரும்பியவனுக்கு அதன் தன்மை பிடிபட, மனைவியை பின்னே அமரவைத்து, “ரொம்ப வருஷமாகிருச்சில்ல. முதல்லயே உன்னை உட்காரவச்சி ஸ்லிப்பாகிரக்கூடாது பாரு. அதான் ஒரு ட்ரையல்” என்றவன் கண்களில் இருந்த பைக்கின் மேலிருந்த ஆசையும், தன்மேல் இருந்த அக்கறையும் எப்பொழுதும்போல் தித்தித்தது.

சற்று தூரம் மெல்ல சென்று பின் வேகமெடுக்க, கணவனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அந்த வேகத்தை அந்த இரவுப்பொழுதில் ரசித்தாலும், தோளில் சிறு அழுத்தம் கொடுத்து வேகத்தடை விதிக்கவும் மறக்கவில்லை. அரை மணிநேரம் கழித்து வண்டியை நிறுத்தி வீட்டிற்குள் வந்து படுக்கையறையில் கையைக் காலை விரித்தபடி படுத்தவன் மனமும் உடலும் லேசாகி இருந்தது.

அங்கிருந்த ப்ளாஸ்கில் இருந்த பாலை கணவனுக்கு ஊற்றிக் கொடுத்து, தானும் குடித்து முடிக்க, அவளை தன்னருகே அமரவைத்து இரு கைகளாலும் அவளின் முகம் நிமிர்த்தி, “ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன் ரதி. மனசு எந்த சுமையும், சஞ்சலமும், இல்லாம தெளிவாயிருக்கு. அதுல நீ மட்டும்தான் குடியிருக்க!” என்ற கணவனையே கண்ணெடுக்காமல் பார்த்தாள்.

“என்னடி பார்வை இது? அப்படியே மனுஷனை முழுங்குற மாதிரி பார்க்கிற?” சொன்னவன் குரல் மென்மையாக கிசுகிசுப்பாக வர, அவளோ பார்வையை மாற்றவேயில்லை.

“ஹேய் ரதிமா! வேண்டாம் எதாவது டேமேஜ் ஆகிருச்சின்னா என்னைக் கேட்கக்கூடாது சொல்லிட்டேன்.”

“வில் யூ ரேப் மீ!” என்றாள் பட்டென்று.

“அடிப்பாவி! நான் ஹீரோடி. வில்லனாகச் சொல்ற?” அதிர்ந்தாற்போல் நடித்து சிரித்தபடி சொன்னாலும், கைகளும், இதழ்களும் வில்லன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தது.

“ஒருசில நேரம் வில்லனா இருந்தால் கூட தப்பில்லை மச்சான்!” என்று கண்ணடித்துக் கூறினாள்.

அவள் சொன்னதை ஆமோதித்து, “கண்டிப்பா நான் உனக்கு வில்லன்தான்டி” என்று தன்னை நிரூபிக்கும் வேலையைத் தொடங்கினான்.

இரவின் முடிவில் கணவன் நெற்றியில் முத்தமிட்டு, “என்னோட ஹீரோவும் நீதான்! வில்லனும் நீதான்! என் தேவனும் நீதான்!” என்ற குரல் அவளின் ஆழ் மனதிலிருந்து வந்து கணவனின் காதோரம் கிசுகிசுத்தது.

ஸ்ரீனிவாசனின் தேவதை பாகீரதியை அவன் ஆராதிக்க, தொடரட்டும் அவர்கள் நல்வாழ்வு!



நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top