• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jul 12, 2025
Messages
23
5 வருடங்களுக்குப் பிறகு



பரிமளம் அதிவீரா என்று தன் மகனை கூப்பிட்டாள்.



“” நான் வரமாட்டேன் போ “ என்று தன் தந்தை வரதனின் பின்னால் ஒளிந்துக் கொண்டான்.




“ நீ வர வேண்டாம். நீங்க வாங்க என்று கணவனை அழைத்தாள்.



“நானும் வரமாட்டேன். நீ எண்ணெய் தேய்த்து விடுவ”….



ஏங்க .. குழந்தை மாதிரி அடம் பிடிக்காதீங்க என்று பேசிக் கொண்டே இருவர் தலையிலும் ஒரு கிண்ணம் நிறைய எண்ணெயை கொட்டி நன்றாக தேய்த்து விட்டாள்.




சுடு நீர் விலாவி விட்டு, அதிவீரனை குளிக்க வைத்தாள்.
வரதனும் அடம் பிடிக்கவே அவனையும் குளிக்க வைத்தாள்.



வாரவாரம் எண்ணெய் குளியலுக்கு படாத பாடு பட வேண்டி இருக்கு. என்று தலையை துவட்டி விட்டுக் கொண்டே செல்லமாக அலுத்துக் கொண்டாள்.



“ஏங்க… நம்ப புள்ளய பள்ளிக்கூடம் அனுப்பாமல் வீட்லேயே படிக்க வைக்கலாமா.” என்று கேட்க



“அப்படி எதற்கு. அவன் நாலு பிள்ளைகளுடன் பழக வேண்டாமா. வெளியே அனுப்பினால் தானே உலகத்தை புரிந்து கொள்வான் “என்று சொல்லி மறுத்து விட்டார்.

.
வெளியே அனுப்பினால் அவனை யாராவது உரிமை கொண்டாட வந்து விடுவார்களோ என்று பயந்தாள்.



“பயப்படாதா. பேசாமல் இரு . நீயே காட்டி கொடுத்து விடுவாய் போல இருக்கு..”



ஏங்க…….


சொல்லுமா என்று அவள் மடியில் படுத்துக் கொண்டு சொல்ல , அதிவீரன் ஓடோடி வந்து அவனை தன் பிஞ்சுகரங்களால் தள்ளி விட்டான்.


மழலை மொழியில் என் அம்மா என்று அவள் மடியில் படுத்துக் கொண்டான்.



“நல்லா வேணும்” என்றாள்.


“ஏதேது…. எனக்கு உரிமை இல்லாமல் போய் விடும் போல இருக்கு “ .



“ஆமாம். இனிமேல் என் குட்டி செல்லத்திற்கு தான் இந்த பரிமளம்” - என்று சொல்லி அவனுக்கு முத்தம் கொடுத்தாள்.



“சரிமா. எஸ்டேட் போறேன். “


இவனுக்கு இப்போதிலிருந்தே குதிரை ஏற்றம் பயிற்சி கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.”



‘குதிரை ஏற்றம் பயிற்சியா.....?



“ஆமாம். இவனுக்கு குதிரை மேல் பெருங்காதலா இருக்கு.. எத்தனை குதிரைகள் பொம்மை வைத்து இருக்கான் பாரு. .”



“எஸ்டேட் வந்தால் குதிரையிடம் போக, கை காண்பிக்கிறான் அதை பயமில்லாமல் தொடுகிறான். அதை பார்த்து தான் அவனுக்கு முதலில் அந்த பயிற்சியை கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.”



“நம்ப எஸ்டேட் மைதானத்திலே சொல்லிக் கொடுக்க ஒருவரை வரச் சொல்லி இருக்கிறேன்.”



நீயும் வர்றியா.


நான் வரல . இவன் ஸ்கூலில் சேர்க்க வேண்டுமே.. நிறைய வாங்க வேண்டும். கோயம்புத்தூர் வரை போக வேண்டும்.


சரி. டிரைவரோடு போ . நீ வண்டி ஓட்டதா.. என்று சொல்லிவிட்டு

போதும்டா. அம்மா மடியில் சொகுசா படுத்துக் கிடந்தது. வா . ஹார்ஸ் ரைடிங் போகலாம் என்றவுடன்,
உடனே அம்மாவுக்கு டாட்டா. காண்பித்து விட்டான்..


இதே பார்ரா… குதிரையா அம்மாவா என்றால், இவன் குதிரை பக்கம் போய் விடுவான் போல இருக்கே..



“உன் பேச்சி கா’ என்றாள்.


உடனே ஓடி போய் கட்டிக் கொண்டான்.


சரி. பழம் என்று சொல்லி அவனை வரதனுடன் அனுப்பி வைத்தாள்.



தன் அம்மாவுடன், கோயமுத்தூருக்கு காரில் கிளம்பினாள்.



போகும் போது டிரைவர் குணாவிடம் அந்த காட்டின் வழியாக போகச் சொன்னாள்.



“அது சுற்று வழி மேடம். இப்ப நேரிடையாகவே கோயமுத்தூர் போகலாம். 5, 6, கி.மீ நடத்து சேவ் ஆகும்.”


சொன்னதை செய்பா…



சரிங்க மேடம். ‘“ என்றான்.


அம்மா அவள் கையை அழுத்தி, அவள் முகத்தை பார்க்க கண்களை மூடி , திறந்து ,தலையை . அசைத்தாள்.



கிட்டே போனதும், ஒரு நிமிடம் நிறுத்தச் சொன்னாள்.


மெல்ல கார் ஓரமாக நின்றவுடன் இறங்கி பார்த்தாள்.



காடு முன்பு இருந்த அடர்த்தி இல்லை. மனிதனின் பேராசையால் நிறைய மரங்கள் வெட்டப்பட்டு இருந்தது.

சூரியனின் வெளிச்சம் பொட்டு பொட்டாக தரையில் விழுந்து இருந்தது மின்னிக் கொண்டு இருந்து..



பரிமளத்திற்கு காட்டின் உள்ள போய் அங்குள்ளவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஆர்வம் மட்டும் தீரவில்லை


அங்கிருந்த ஒருத்தியின் குழந்தைதான் அதிவீரன் என்று நம்பினாள்.


அந்த லாக்கெட் மட்டும் இடித்தது. அந்த போட்டோக்களை பார்த்தால் வனவாசியாகவே அல்லது மலை மக்கள் மாதிரி என்று தெரியாவில்லை.


பெரிய இடத்துக்காரர்கள் போல் இருந்தார்கள்


அவர்களிடமிருந்து யாராவது குழந்தை திருடி இங்கே போட்டு இருப்பார்களா..


அவளாகவே தேற்றிக் கொண்டாள்.


இருக்காது. திருடுபவர்கள் 10 பவுனை விட்டா செல்வார்கள்.


அம்மா அப்பா கணவன் இப்படி யாரிடமும் அந்த லாக்கெட்டை காண்பிக்க பயம்.
அவர்களுக்கு அவர்களை தெரிந்து இருந்தால், கண்டிப்பாக குழந்தையை ஒப்படைத்து விடுவார்கள்.


ஐயோ………. ……...அவளால் அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.



இங்கு வருவதற்கு கூட காரணம்.
அவர்களைப் போல் யாராவது ‘இருந்தால், அவர்களின் நிலை என்ன என்று தெரிந்துக் கொள்ளலாம். மேலும், அந்த மக்களுக்கு தன்னால் எதாவது உதவி செய்ய வேண்டும் என்று வந்துஇருககிறாள்.


ஐந்து வருடங்களாக குழந்தை வளர்ப்பதிலே நேரம் போயிற்று. வரதனுக்கு எஸ்டேட்டை மேலே கொண்டு வர வேண்டும் என்பதில் காலம் போனது.


டிரைவர் குணாவும் ‘“நீங்கள் தனியாக போக வேண்டாம்... நானும் வருகிறேன். காரை இன்னும் மேலேற்றி விட்டு வருகிறேன்.” என்று சொல்லி போய்ட்டு வந்தான்.


அம்மா கேட்டாள்.


“ஏம்பா குணா .. . இங்க புலி சிங்கம் இருக்காதே.


என்னிக்கும் இங்க வந்தது இல்லமா அடர்த்தியாக இருந்ததால் மக்களாக நினைத்துக் கொண்டு போகாமல் இருந்தார்கள். இந்த வழியாக போனால், இதற்கு அடுத்த பக்கம் சின்னமனூர் கிராமம் வந்துவிடும். இத பாருங்க மக்கள் போன பாதை. என்று அந்த பாதையை காண்பித்து. அதில் அழைத்துச் சென்றான்.


கிட்டத்தட்ட 3,4 கி.மீ உள்ளே நடந்து நடந்து போனார்கள்.


அம்மா வேறு புலம்பிக் கொண்டே வந்தார்.

எதாவது பாம்பு, தேள் .இருக்குமோ. பயமா இருக்குடி.


“என்னை ஏண்டி நடக்க விடற. உன் புருஷனை கூட்டிட்டு வர வேண்டியதுதானே “.


“பேசாமல் வாம்மா “.



முன்னேறி நடந்தார்கள்.



அங்கே போனால் அதிர்ச்சியாக நின்றாள்.



சின்ன வீடாக இருந்தாலும் , 20, 25 வீடுகள் அங்கு இருக்கும். மரங்களும் பூத்துக் குலுங்கி சோலைவனமாக இருந்தது
.


குணாவை பார்த்ததும் அங்கே ஒருவர் என்ன குணா யார் இவர்கள் என்று.கேட்டார்.


“ எங்கள் எஜமானி அம்மா வந்திருக்கிறார்கள் .”



“யாரை பார்க்க வேண்டும்”.
..


“உங்கள் எல்லோரையும் தான் பார்க்க வேண்டும்” என்றார்கள் .




அம்மா பரிமளம் காதில் ‘“மலை ஜாதியினர் என்றதும் நான் வேறு மாதிரி நினைத்துக் கொண்டேன் .
இவர்கள் நம்மைப் போல் தான் இருக்கிறார்கள் “என்றாள்.



“உஷ் பேசாமல் இரு” என்றாள்.


அவர்களின் தலைவன் போலும் வந்தார்.


அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு தன்னைப் பற்றி சொன்னாள்.



அவரைப் பார்த்தும் உடனே புரிந்துக் கொண்டாள்.


இவர்களுக்கு ‘நம் உதவி தேவைப்படாது. மிளகு விளைச்சல் அபாரமாக விளைந்து இருந்தது.. ஒரு பக்கம் வாழைத்தோட்டம். பச்சை பசேல் என்று காய்கறித் தோட்டம்.



தலைவரே தொடர்ந்தார்.



எங்கள் விற்பனை பொருட்களை நாங்களே சந்தை படுத்திக் கொள்கிறோம்.


அப்போது, துருதுரு வென்று ஒரு 5 வயது குழந்தை ஓடி வந்தான்.


குட்டிம்மா …



என்று கூப்பிட்டுக் கொண்டே ஒரு பெண் வந்தாள்.



பௌணர்மி நிலவு போன்ற அந்த
மாசுமறுவற்ற முகத்தை ஒரு நொடியே பார்த்தாள்.


பார்த்ததும், உள்ளமெல்லாம் நொருங்க, திக்பிரமை பிடித்தது போல் அப்படியே உட்கார்ந்தாள்.



தலைவர் சைகை காண்பித்ததும், அந்தப் பெண் உள்ளே ஓடினாள்.



அந்த தலைவரிடம் ,எதாவது உதவி செய்ய காத்து இருக்கிறேன்.. என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று தன் அதிர்ச்சியை மறைத்து, அவரிடம் சொல்ல விட்டு கிளம்பினாள்.


போகும் போது, தயங்கி திரும்பி வந்து, இப்போது ஒரு அழகான பெண் வந்தாரே. யார் அவர்…? என்று கேட்க,


தலைவர் ஒருநிமிடம் அவளின் முகத்தை ஆழமாக பார்த்து,, ‘“அவள் பெயர் மைத்ரி. என் மகள். இவன் என் பேரன்” என்று சொன்னதும் .,


குழப்பமாக தலையாட்டி விட்டு சென்றாள்.


அதற்குள் அம்மாவும் ,குணாவும் முன்னேசென்று கொண்டியிருந்தனர்.



விடுவிடுவென்று நடந்தாள்.


அவள் போவதையே தலைவர் பார்த்துக் கொண்டிருந்தார்.


சித்தரை நினைத்து தலைக்குமேல் கையை உயர்த்தி கும்பிட்டார்.



காரில் ஏறி அமர்ந்ததும் அக்கா கோயம்புத்தூருக்கு விடவா என்று கேட்க,


படபடப்பில் இருந்ததால் வேண்டாம் வீட்டுக்கு போ என்றாள்.


அம்மாவின் தோள் மீது சாய்ந்தபடியே வந்தாள்.



வீட்டிற்கு போனார்கள்.


அம்மாவும் கேட்டுக் கொண்டே இருந்தால் ஏன் என்னாச்சு நல்லா தானே இருந்த சொல்லி தொலைடி என்றாள்



ஒன்றுமில்லை அம்மா என்னை கொஞ்சம் தனியா விடு.



தனியே அமர்ந்து புலம்பிக் கொண்டு இருந்தாள் .


சிவனே என்று வேலியில் போற ஓணானை எடுத்து மடியில் விட்டுக் கொண்ட கதை மாதிரி ஆகிவிட்டது .



ஆனால் அவள் வேறொரு குழந்தை
அவளை அம்மா என்றது அந்த குழந்தைக்கு நம்ம அதிவீரன் வயது தானே இருக்கும் என்று யோசித்து
நல்லவேளை நாம் பெயரை மட்டும் சொன்னோம் ஊரை சொல்லவில்லை என்று ஆறுதல் படுத்திக் கொண்டாள் .



தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top