• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jul 12, 2025
Messages
4
அரண்மனை பங்களாவில் போலீஸ் காரர்கள் போன பின்பு, தனபாலன் தன் ஆட்களிடம் கத்திக் கொண்டி யிருந்தான்.


என்னடா பண்ணி வச்சீங்க.


உங்களை என்ன பண்ண சொன்னேன்.


தடயம் இல்லாமல் இருவரையும் வைத்து காரோடு கொளுத்தச் சொன்னேனே.


இப்படி அடையாளம் வைத்து விட்டீர்களே. அந்த போலீஸ்காரனுக்கு சந்தேகம் வந்து இருக்கும்.


ஐயா. இருவரையும் காரோடு தள்ளி விட்டோம். என்று பொய் சொன்னார்கள்.



அதையாவது செய்தீர்களே.


செத்தான் என் அண்ணன். இனி இந்த சொத்து முழுவதுக்கும் நானே. அதிபதி.. என்று பங்களா அதிர சிரித்தான்.


தனபாலின் மனைவி வசந்தி, இந்த பாவம் நம்மை எங்கு கொண்டு போய் நிறுத்துமோ என்று இறந்தவர்களுக்காக கண்ணீர் விட்டாள்.


மளமள வென்று காட்சிகள் அரங்கேறியது.



ஊரார் முன்பு அண்ணன், அண்ணி இறந்ததற்க கண்ணீர் விட்டு கதறினான்.



சடங்குகளை சரி வர செய்தான்.


வக்கீல் வர வழைக்கப் பட்டார்.


ஜமின்தார் கார்மேகம் காலத்து குடும்ப வக்கீல். வயதானவர். அவரிடம் தான் உயில் இருந்தது.
அப்பழுக்கற்றவர். அவரின் உதவியாளர்களுடன் வந்தார்.



அவருக்கு தனபாலன்யில் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது.


தனபால் அவரை பவ்யமாக வரவேற்றான்.


வாங்க வக்கில் ஸார். . கண்கலங்க அழுதுக் கொண்டே பார்த்தீர்களா இந்த அநியாயத்தை.
அண்ணனும் , நிறை மாத கர்ப்பிணி யான அண்ணியும் போய் விட்டார்கள்
அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் பண்ணியது. இந்த உலகத்தை பார்க்காமலே போய் விட்டதே..” என்று கதறி அரற்றினான்.



இந்த எஸ்டேட் பொறுப்பு முழுவதும் என் தலையில் விடிந்ததே “” என்று போலியாக நடித்து , சரி நீங்கள் வந்த வேலையை பாருங்கள்.



“ எ ன் பெயருக்கு எல்லாவற்றையும் மாற்றும் வேலையை பாருங்கள்.
அதெல்லாம் ஒரு வாரத்தில் முடிந்து விடுமா “ என்று கேட்க


பல வருஷம் ஆனாலும் முடியாது என்றார்.


என்னது… என்று அதிர்ச்சி காண்பிக்க


ஆமாம். என்று சொல்லி, தன் இடுங்கிய கண்களால அவனை உற்று நோக்கினார்.



குற்றம் செய்த மனசு குறுகுறுக்க, பார்வையை எதிர் கொள்ள முடியாமல். தலையை தொங்க போட்டான்.



என்ன வக்கில் ஸார் சொல்றீங்க.



எத்தனை வருடங்களாக நடிப்பது.
கார்மேகம் தன் தம்பிக்கு என்று வீடும், நில புலனும் கொடுத்தார். ஆனால், அது அவனுக்கு கொசுறு மாதிரி பிச்சை யிட்டது போல் இருந்தது. செல்வனுக்கு இருக்கும் மதிப்பும், மரியாதையையும் பார்க்கும் போது அவனுக்கு பொறமை தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதற்கெல்லாம காரணம் அவனிடம் இருக்கும் செல்வம் என்றே நினைத்து தான் இவ்வளவு பெரிய துரோகம் செய்தான்.


அதற்கும் வழியில்லாமல் இருப்பதை நினைத்து வெகுண்டான்.



வக்கில் அவனிடம், “செல்வனின் தாத்தா ஈச்சனார் ஐயா அப்படித் தான் எழுதி இருக்கார்.



இந்த சொத்து முழுவதும் பேரபிள்ளை களுக்குத் தான் போகும். அதுவும் ஆண்வாரிசு களுக்கு அது போல் தான் செல்வன் தம்பிக்கும் வந்தது. என்றதும்,


தனபால் இடைமறித்து |


அப்படி யென்றால், எனக்கு மகன் பிறந்தால் வருமா.


அப்படி கிடையாது. நீங்கள் கூட பிறந்த தம்பி கிடையாது. சித்தப்பா மகன். யாரும் உறவுகள் இல்லாததால் இந்த சொத்துக்கள் உங்களுக்கு வரலாம். ஆனால் செல்வனும் மருமகளும் இறந்தற்கான அத்தாட்சி இல்லை. பாடியும் கிடைக்க வில்லை. பின்பு எப்படி மரணம் அடைந்து விட்டார்கள் என்று நினைப்பது. அவர்கள் உடல்களை கண்டுபிடித்தால் மட்டுமே , எதாவது செய்ய முற்சிக்கலாம் “ என்று சொல்லிவிட்டு தன் உதவியாளர்களுடன் போய் விட்டார்.



போனவர் அவன் அருகில் வந்து ‘’
மேலும் அவன் இறந்து விட்டார் என்று சொல்லும் பட்சத்தில் ஆட்டோமேட்டிக்கா அவர் உங்களுக்கு.அளித்த பவர் ஆப் அட்டர்னியும் செல்லுபடியாகாது.




பொருமினான். செத்தும் தொல்லை தருகிறான். இவ்வளவு பண்ணியும் சொத்து கைக்கு வரலியே என்று கோவத்தில் அங்கிருந்த பூ ஜாடியை எடுத்து உடைத்தான்.



செல்வன் ஸார் செய்த ஒரு நல்ல விஷயம், அவர் சில சொத்துகளை உங்கள் பெயரில் எழுதி இருக்கிறார்.” என்று அவனது பர்சனல் வக்கில் சொல்ல,


தனபால் முகம் பிரகாசமாக எரிந்தது.


அப்பாடா அதாவது கொடுத்து விட்டு போனானே. அனுபவிப்போம்.


ஆனாலும் சொத்து முழுவதும் கிடையாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் உடல்கள் கிடைக்க வில்லை. நாமளே தேடுவோம்.


டேய்… வாங்கடா என்று தன் ஆட்களை கூப்பிட்டான்.


மலை பள்ளத்தாக்கில் கீழறங்கி .
தேடி அவனையும், அவளையும் தூக்கிட்டு வாங்கடா என்றான்.



ஆட்கள் நடுங்கிய படியே., ‘ எஜமான் எங்களுக்கு பழக்கம் இல்லையே..”

என்று சொன்னவனை பார்த்து,


மேலிருந்து கீழே தள்ளிவிட வா . பழகிக்கிறியா “ என்று கண்கள் சிவக்க கேட்டான்.


டேய்… என்று கர்ஜித்தான்.


செத்த பொணங்களை கொண்டு வரல, நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தையே மலை உச்சியிலிருந்து தள்ளி விடுவேன்.
என்று ஈவு இரக்கமில்லாமல் சொல்ல


நடுங்கினார்கள்.



“” டேய் என்னடா பண்றது. இந்தம்மா காட்டுக்குள்ள ஓடி போச்சு. புலி அடிச்சிதோ நரி தின்னுச்சோ, தெரியாது.


ஜமீனை குத்தி போட்டுட்டோம். இரத்த வாடைக்கு புலி கூட இழுத்துட்டு போய் இருக்கலாம்.



இப்ப நாம மாட்டிக்கிட்டோம்.


சத்தமா பேசாதா . பார்த்துக் கலாம். வா என்று கிளம்பினார்கள்.



வக்கீல் சொன்னதைக் கேட்டு வசந்தி மகிழ்ச்சி அடைந்தாள். நிம்மதியாக பெருமூச்சு விட்டாள்.



இவன் ஆண்வாரிசுக்கு சொத்து வரும் என்றால், ஆண் மகன் பிறக்கும் வரை எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துக் கொள்வான்,



அவனை பார்க்கவே பிடிக்காமல்,
உள்ளே போனாள்.



❣️❣️❣️❣️❣️


பரிமளம் காரில் போகும் போதே தன் அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.


ஆ… குழந்தையா : அதன் பெற்றோர்… ?


‘“அம்மா எல்லாம் வீட்டில் வந்து சொல்கிறேன்.


யாராவது தாய்பால் கொடுக்கக்கூடிய நிலையில் இருக்கிறார்களா “ என்று கேட்டாள்.



இருக்கிறாள். நம்ப எஸ்டேட்டில் வேலை செய்யற வசுமதி இருக்கிறாள். . அவள் குழந்தையும் ஜன்னி கண்டு இறந்து போய்விட்டது.


அடடே … போன குழந்தைக்கா வருத்தப்பட்டாள்.


சரிம்மா. அவளை நம் வீட்டிற்கு வரச் சொல்.



சரிடி. வருவாள். என்று சொல்லி போனை அனைத்தாள்.


வரதனும், பரவாயில்லையே. . சமயோசிதமா யோசிச்சி செய்ய .


ஆமாம்ங்க . இந்த குழந்தை பாலுக்கு என்ன பண்ணும்.


யாரோட தாய் பாலா இருந்தால் என்ன குழந்தை பசியாறுமே.


சரி. நாமே வளர்ப்பது என்று முடிவு பண்ணிட்டியா.



ஆமாம். இது நமக்கு தெய்வமா பார்த்து கொடுத்த குழந்தை.. இதை யாரிடமும் தர மாட்டேன்.



நாமும் அம்மா வீட்டிற்கு வந்து ஒரு வருடமாகி விட்டது. இந்த குழந்தையை என் சொந்த குழந்தை என்று தான் சொல்வேன். என்று சொல்லி குழந்தைக்கு முத்தம் கொடுத்தாள்.



வீட்டிற்கு போனவுடன், அம்மா திருஷ்டி கழித்து உள்ளே அழைத்து போனார்.


ஏய்…. குழந்தை ராஜ களையாக இருக்கிறது. என்றார்.



அவனை தன்னறையில் படுக்க வைக்கும் போது, அந்த வெள்ளை துணியை உதறி போடும் போது, 10 பவுனில் டாலர் லாக்கெட் வைத்த செயின் கிடைத்தது -



அப்போது, வரதனும் இல்லை.


அந்த லாக்கெட்டை திறந்து பார்த்தாள்.



உள்ளே
சிரித்துக் கொண்டியிருந்த ஆணையும், பெண்ணையும் இவளுக்கு அடையாளம் தெரியவில்லை.




அந்த நகையை யாரிடமும் காண்பிக்காமல் தன் துணிகளுக்கு அடியில் வைத்தாள்.



குழந்தை தூக்கலிருந்து முழித்தவுடன் பசியில் அழுதது -


வதமதியை கூப்பிட்டு, நன்றாக மார்பகத்தை துடைத்து விட்டு பால் கொடு என்றாள்.


குழந்தையை அனைத்து, விம்மிக் கொண்டியிருந்த மாராப்பு துணியை விலக்க, குழந்தை மார்பில் வரும் பாலை சுவைத்தவுடன் அவளுக்கு இனம்புரியாத உணர்ச்சி பிராவகம் ஏற்பட்டு கண்ணீர் சுரந்தாள்.


குழந்தை குடித்து முடித்த பின், அவளுக்குள் ஒரு அமைதி. தன் குழந்தை இல்லை என்பதே உண்மை. ஆனால், மற்றொரு பசிக்கிற குழந்தையின் வாயில் தன் பால் வழியும் போது , அவளது தாய்மை நிறைவேறியது: .



உடனே பரிமளம் குழந்தையை வாங்கிக் கொண்டாள். ஒரு நிமிடம் கூட விடவில்லை.


இதே பாரு வசுமதி. எனக்கு டைபாயிடு வந்தது. அதனால் பால் கொடுக்க முடியவில்லை. உனக்கு பால் கொடுப்பது தான் வேலை. முடிந்த பின், உனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் போய்விட வேண்டும். உனக்கு சத்தான உணவை கொடுக்கச் சொல்கிறேன். பத்தியமாக சாப்பிட வேண்டும்.
என்று கண்டிப்புடன் கூறியதும்


அப்படியே செய்கிறேன் அம்மா “ என்று சொல்லிவிட்டு “ நெஞ்சில் இருந்த பாரம் இறங்கிய மனதிருப்தியுடன் போனாள்.


தொடரும்
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top