• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
385
நீ உடல் நான் நிழல்
பாகம் - 98


பூவிழியை கல்லூரிக்கு அழைத்துச் செல்ல கார்முகிலன் வந்து இருந்தான். அதைக் கவனியாது பூவிழி அவளின் அம்மாவோடு பாரதி கனவு காணும் புதுமைப் பெண்களைப் காண இன்னும் காலம் கனியவில்லை என்று வீர வசனம் பேசிக் கொண்டு இருப்பதால்.

யசோதா மாப்பிள்ளை என்ற பிறகு சுயத்திற்கு வந்தவள் ஊமையாகிப் போனால். இந்த நேரத்தில் தான் தேனருவி தனது அன்னையைத் தினமும் கட்டிபிடித்து முத்தம் கொடுத்ததை செவ்வனே செய்து முடிக்க அன்னையின் அறிவுத்தலில் தன்னவனைப் பார்க்க.

இவளின் இயல்பை ரசிக்கும் சீமானே அவனாச்சு அதனால் தன் இல்லாளைப் பார்த்தவன் கண்ணடிக்க அதில் சிவந்து போனால் செவ்வானமாய்.

தேனு மாப்பிள்ளைக்கு காஃபி கொடு என்று யசோதா உலுக்கவும் தான் தனக்கும் தேவ் ஆனந்த் இருவருக்கும் காஃபியை எடுத்துக் கொண்டு அவனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு காஃபி குடித்தாள்.

கார்முகிலன் சாப்பிட்டு முடித்தவனிடமும் ஒரு கப் காஃபியை நீட்டிய யசோதா இப்போது தான் பூவிழியை கல்லூரிக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார்ங்க பெரிய மாப்பிள்ளை.. நீங்க இரண்டு பேரும் மேலே இருந்ததால் தான்
நான் உங்களைக் கலந்து ஆலோ சிக்காமல் அவருக்கு சரி என்று சொல்லி விட்டேன்.

ஏனுங்க அத்தை அதனால் என்னங்க? நீங்க சரியான முடிவு தான் எடுத்து இருக்கிறீங்க.

ஆமாங்க மாப்பிள்ளை பூவு நான் ஸ்கூட்டியில் போகிறேன் என்று பாட்டுப் பாடுகிறாள். ஆனால் நீங்கள் இவுங்க இரண்டு பேருக்கும் ஸ்கூட்டி கொடுக்காதீங்க அவ்வளவு பாதுகாப்பு இல்லை என்று சொன்னதிலிருந்து நான் இரண்டு பேரையும் பேருந்தில் தான் கல்லூரிக்கு அனுப்பினேன். இரண்டு பேர் இருந்ததால் பயமில்லாமல் இருந்தேன்.

இப்போது இவளுக்கு திருமணம் ஆனதோடு பூவிழிக்கு நிச்சயம் முடிந்து விட்டது. எல்லோர் கண்ணும் நம்ம குடும்பத்து மேலே தான் அது தான் சின்ன மாப்பிள்ளை கேட்டதும் சரி என்று சொல்லி விட்டேன்.

அடுத்த அடுத்த நாட்களில் பொண்ணு மாப்பிள்ளை குலதெய்வம் கோவிலுக்கும். திருமணம் முடிந்ததும் எப்போதும் பழனிமலைக்கு சென்று வருவது பழக்கம் அதனால் அதே போல் சென்று வந்தனர்.

அவ்வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை கறிவிருந்து தேனருவி வீட்டில் அனைத்து சொந்தங்களும் அழைக்கப் பட்டு வெகு விமரிசையாக நடந்தேறியது.

தேவ் ஆனந்த் கல்லூரி செல்ல ஆரம்பித்தான். தேனருவியை தவறாக சித்தரிக்க நினைத்த மீரா மிஸ்ஸை தனது கல்லூரியில் இருந்து நீக்கி விட்டான்.

கார்முகிலன் பூவிழி இருவருக்கு மான திருமண வேலைகள் நடந்து கொண்டு இருந்தது.

நிழலா தனது கூட்டாளி நிழல் பேய்களோடு சேர்ந்து அனைத்து இடங்களிலும் மறைவாக செயல்பட்டு வந்த காத்தவராயன் செய்த அட்டூழியங்கள் அனைத்தும் கண்டுபிடிக்க பெரும் உதவியாக இருந்தது.

உண்மையில் ஒரு சி. பி. ஐ. ஆபீசருக்கு ஆச்சரியத்தக்க விடயமாக தனக்கு ஒரு சக்தி உதவுகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவருக்கு நிறைய தடைகள் வந்தது. உயிர்க்கே ஆபத்தாய் அமைந்த நேரத்தில் தனக்கு தீங்கு செய்ய நினைத்தவர்கள் அவர்களின் உடலிலேயே கத்தியால் குத்திக் கொண்டும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும் இறப்பதைப் பார்த்தார்.

இந்த மிகப்பெரிய ஆப்ரேஷன் பல வெளிநாட்டு சதிகார்களோடு தொடர்புடைய அத்தனை போதைப் பொருட்களையும் தீயிட்டு அழித்தார். அவருக்கு அன்று பாராட்டு விழா நடந்தது. இந்த சுதந்திர தின நாளில் குடியரசுத் தலைவர் அவார்டு அவருக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தவறு செய்பவர்கள் அரசியல்வாதியாக இருந்தாலுமீ நீதிக்கு முன்னால் சமானிய மக்கள் எவ்வாறு நிலை நிறுத்த படுகிறார்களோ? அப்படித்தான்
அனைவரும் என்று காத்தவராயன் இறந்து உருத்தெரியாமல் போய் இருந்தாலும். மற்ற ஊழல்வாதிகள் அரசியல் முதலைகள் அனைவருக்கும் தண்டனை வாங்கிகீ கொடுத்தது.

குறுகிய காலத்தில் இத்தனையும் வெளிச்சத்துக் கொண்டு வந்தவர் என்று நாளிதழ்களும் செய்திச் சேனல்களும் அவரைப் புகழ்ந்து தள்ளின.

அவர் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தவர் நான் மட்டும் அல்லாமல் ஒரு மிகப்பெரிய டீம் கடந்த இரண்டு வருடங்களாக இந்த ஆப்ரேஷன் செய்து கொண்டு வந்தோம். இது வெளியே தெரிந்தால் தவறு செய்பவர்கள் தங்களது மூகமூடியை போட்டுக் கொள்வார்கள். அதனால் தான் அவர்களுக்கே தெரியாமல் அவர்களை கண்காணித்துக் கொண்டு இருந்தோம்.

அத்தோடு எனக்கு வரும் ஆபத்துகளை அனைத்தும் ஒரு கண்ணுக்குப் புலப்படாத சக்தி தான் எங்கள் குழுவிற்கு பெரும் பாதுகாப்பாக இருந்தது. கண்ணுக்குப் புலப்படாத சக்தி என்றால் அது கடவுள் தான் நாம் அப்படித் தானே நம்புகிறோம் என்று தனது உரையை முடித்து இருந்தார்.

வனிதாவை விசாரித்ததில் அவளுக்கும் காத்தவராயன் கோஸ்ட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அவருடைய பெண் அவள் தான் எனவும். அவளை சிறுவயதிலேயே தவிக்க விட்டு வேறு திருமணம் செய்து விட்ட பெற்றோரால் தவித்து நின்று இருந்தவளை இத்தனை காலம் காப்பாற்றி வந்தவர்களின் வாழ்காகையிலே தன் தவறான எண்ணத்தால் இவர்களும் இவளை ஒதுக்கி வைத்து விட்டனர்.

கோர்ட் அவளை விடுதலை செய்து விட்டது. தனது தகப்பன் காத்தவராயன் இத்தனை கெட்டவன் அதனால் அவனது சொத்து என்று இவளிடம் ஒப்படைக்கப்பட்டதை தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு. இந்த கேடுகெட்டவனுக்கு மகளாக இருப்பதைக் காட்டிலும் நான் அநாதையாக இருந்து கொள்கிறேன்.

பெற்றவர்கள் சரியில்லாத குழந்தைகள் வாழ்க்கை கேள்விகீ குறி தான். ஆனாலும் எனக்கு வளர்ப்பு தாய் தந்தை அக்கா என்ற நல்ல குடும்பத்தில் நான் வளர்ந்து வந்த போதும் என் தவறான ஆசையால் அந்த அழகிய குடும்பத்தை இழந்து விட்டேன்.

"என் மேல் பாசம் வைத்தவர்களை விஷமான வார்த்தால் நல்ல குடும்பத்தை சொந்தங்களை இழந்து விட்டேன். இரண்டாவது தடவையாக எனக்கு நல்ல குடும்பத்தைகீ கொடுத்தும். நான் இழந்து இப்போது முழுமையாக அனாதையாக இருக்கிறேன்" என்று ஒரு செய்தி சேனலில் பேட்டி கொடுத்தாள்.

மேடம் என்ன தான் நீங்கள் அவரை அப்பா இல்லை என்று சொன்னாலும்? அவர் உங்களுக்காக சேர்த்து வைத்த சொத்துக்களை வைத்து நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாமே.

எனக்கு அவர் அப்பாவே இல்லை. என்னை வளர்த்த தந்தை தான் என் அப்பா.. அதே போல் அந்த கேடுகெட்ட அரசியல் வாதி ஊழல் செய்து சம்பாதித்த சொத்து எனக்கு வேண்டாம். அவன் பெண்களை விற்று சேர்த்த சொத்து எல்லாம் பாவக் கணக்கு.

நல்லவேளை அவனோடு இருந்து இருந்தால் பெத்த பொண்ணைக் கூட வித்து இருப்பான் என்று கூறிவிட்டு என்னை விட்டு விடுங்கள் நான் இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொள்வேன்.

என்னை வளர்த்தவர்கள் எனக்கு நல்ல கல்வியைக் கொடுத்து இருக்கிறார்கள். அது என் வாழ்க்கைக்கு உதவும்.

வனிதா பேட்டி கொடுத்ததைப் பார்த்து கண்ணீர் விட்ட வளர்ப்பு தாய் தந்தை இருவரும் கிருஷ்ணவேணி அவர்களிடம் தொடர்பு கொண்டு.

எங்களை மன்னித்து விடுங்கள் சம்பந்தி உங்களுக்கு கொடுத்த வாக்கை நாங்கள் மீறுகிறோம். எங்களால் வானதி பலன் மட்டும் பார்க்க முடியாது. வனிதாவை நாங்கள் எப்போதும் வளர்ப்பு பெண்ணாக பார்க்க வில்லை. எங்கள் பெண்ணாகத் தான் பார்த்தோம். நாங்கள் அவளையே எங்கோ அநாதை மாதிரி விட முடியாது. நாங்கள் தாய் தந்தை இருவரும் இருக்கும் போது அவள் எப்படி அநாதை ஆக முடியும்.

என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் வானதி பெயருக்கு மாற்றி விட்டோம். நாங்களும் அவளோட போகிறோம். ஏதாவது கிராமத்தில் வேலை செய்து சக்தி இருக்கும் வரை எங்கள் மகளோடு வாழ்ந்து கொள்கிறோம்.

என்னங்க சம்பந்தி என்னைத் தவறாக நினைத்து விட்டீர்களே. எனக்கே இப்போது அவளின் பேட்டியைப் பார்த்து மனசு கனத்து விட்டது.

என்ன இருந்தாலும் உங்களுக்கு வளர்த்த பாசம் இருக்கும். வீட்டில் ஒரு பூனை வளர்த்தாலே நாம் அதுக்கு ஏதாவது ஆகி விட்டால் தவிக்கிறோமே இத்தனை நாட்கள் கண்ணுக்குள் வைத்து காப்பாற்றிய பொண்ணு வாயிலாகவே நான் அநாதை என்று கேட்கும் போது வருத்தமாக இருக்கும். நான் ஒன்றும் கல்நெஞ்சம் படைத்தவள் இல்லை.

எனக்கும் பையன்கள் இருக்கிறாங்க பேரன் பேத்தி இருக்கிறாங்க, நீங்களே அழைக்கவில்லை என்றால் நான் இப்போது அழைத்து இருப்பேன்.

சிவக்குமார் ரவிக்குமார் இருவரும் அவளை அழைத்து வரத்தான் சென்று உள்ளனர்.

அவள் பேட்டி கொடுத்த சேனல் நம் தேவ் ஆனந்த் சகலை கார்முகிலன் தம்பி சேனல் தான் அதனால் நீங்கள் கவலைப்பட்டு ஏதாவது தவறான முடிவு எடுத்து விடாதீர்கள். இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் நாங்களும் வானதியோடு அங்கே சேனல் செல்கிறோம் நீங்களும் வாங்க என்று நெற்றிக்கண் சேனலுக்கு அனைவரும் விரைந்தனர்.

தேவ் ஆனந்த் தேனருவி இருவரும் ஹனிமூன் சென்று விட்டனர். அவர்கள் இன்னும் இரண்டு நாளில் வந்து விடுவார்கள்.

நெற்றிக்கண் சேனலில் பேட்டி முடித்து விட்டு தன் மனதில் இருந்த ரணம் எல்லாம் கொட்டியவள் சோர்வோடு வெளியே வந்தவள் அதிர்ந்து நின்றாள்.

அங்கே நின்று இருந்தவர்கள் முகத்தில் எப்படி முழிப்பது என்று கூனிக் குறுகி நிற்க அவர்களைப் கடந்து செல்லவே தயக்கமாக இருந்தது.

எப்படியோ? இங்கே இருந்து சென்று தானே ஆக வேண்டும் என்று குனிந்த தலையை நிமிராமல் அவர்களைக் கடந்து செல்ல முயன்றவளை வனிதா
கண்ணு என்று பாசமாக தந்தை அழைக்கவும். அந்தப் பாசமான குரலால் கட்டுண்டு நின்றவள், தனக்கு தகுதி இல்லையே இத்தனை நல்ல தாய் தந்தை வளர்த்தும் கூட வந்த கேடு கெட்ட புத்தியால் அனைத்தும் இழந்து அநாதையாக தெருவில் நிற்கும் போது தான் இழந்த சொந்தங்கள் எவ்வளவு பெரிய இழப்பு என்பது தெரிகிறது.

காலம் கடந்து தெரிந்து அதனால் என்ன பிரயோசனம் என்று உணர்ந்தவள். அடுத்த அடியை எடுத்து வைக்கும் போது.

அவ்வளவு தானாமா? இந்த அப்பாவை மன்னிக்க மாட்டாயா? இத்தனை நாட்கள் உன்னை வந்து பார்க்கவில்லை என்று கோபமா? உன் அப்பா நான் உயிரோடு இருந்தும். உன் வாயில் அநாதை என்று சொல்லும் போது உன் மனசு என்ன துடி துடித்து இருக்கும்.

நான் பாவி மா என் பெண்ணைப் பற்றி எனக்குத் தெரிய வேண்டும் தானே இத்தனை நாட்கள் வளர்த்த பிள்ளை சந்தேகத்தில் சிக்கி சிறையில் இருக்கும் போது நான் உன்னை மறந்து இருந்து விட்டேனே.. இதற்கு நான் அன்றே தெருவில் விட்டு இருக்கலாமே மா.

அது எதுவும் அறியாத வயதில் பாசத்தைக் கொட்டி வளர்த்து விட்டு எல்லாம் தெரிந்த வயதில் உன்னை அநாதை என்று சொல்லி கை விட்டு விட்டேனே நான் பாவி மா இந்த அப்பாவை மன்னித்து வந்து விடுமா என்னை விட்டு போகாதே ம்மா.

அவள் சிறிது நேரம் நின்று இருந்தவள், பிறகு அடுத்த அடி எடுத்து வைக்க அவளது காலைக் கட்டிக் கொண்டனர். அதிரா ஆதிரா இருவரும் சித்தி எங்களை விட்டு போகாதே என்று..

இப்போது என்ன செய்வாளோ? என்று அனைவரும் பார்த்து இருந்தனர்.



தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top