Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 385
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 97
பாகம் - 97
வனிதாவை போலீஸ் கைது செய்து அழைத்துச் சென்றனர். வானதியின் அப்பா அம்மா இருவரும் என்ன செய்வது? என்று குழம்பி இருக்கும் போது இங்கே பாருங்க சம்பந்தி அவளை நீங்கள் ஜாமீனில் எல்லாம் எடுத்தா உங்கள் சொந்த பெண் வானதியை இத்தோடு மறந்து விடுங்கள்.
என்னங்க சம்பந்தி அம்மா இப்படி சொல்லுகிறீங்க? நாங்க என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. வனிதா ஏதோ புத்தி கெட்டுப் போய் அப்படி பேசுகிறாள்.
நடந்ததை நீங்களும் பார்த்தீர்கள் தானே!! ஏதோ நாங்கள் உங்கள் பெண் மேல் பழி போட்டது போல் பேசுகிறீங்க..
விஜயலதா வை அவள் எனக்கு சொல்லத் தயக்கமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்லாமல் தெரியாது அல்லவா? அவள் சேலையை உருவி இருக்கிறாள். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு லெஸ்பியன் மாதிரி இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறாள்.
இவளை எல்லாம் எப்படி நல்லவள் என்று சொல்வது. அவள் பேசியதை நீங்களும் கேட்டீர்கள் தானே அவளை என் மகன் சீரழித்து விட்டான், இது எல்லாம் நல்ல வார்த்தைகளா?
அவள் உங்கள் வளர்ப்பு மகள் தானே அதற்கு ஏன் இந்த பாசம் அது தான் புரியவில்லை. நாம் அனைவரும் மண்டபத்தில் தான் இருந்தோம். நம்மிடம் அவள் வந்து பேசவே இல்லை. மாறாக அவள் அந்த அமைச்சர் காத்தவராயனோடு பேசினால் நான் கூடப் பார்த்தேன். என்று கண்ணப்பன் சொல்லவும்.
சரி வாங்க நீங்கள் வீட்டிற்குள் என்று அனைவரும் இப்போது செய்தி சேனலைப் போட்டுப் பார்க்க அமைச்சர் காத்தவராயன் தன் சகாக்களோடு சாலையில் செல்லும் போது டேங்கர் லாரியில் மோதிய விபத்தில் உயிரிழந்தார் என்று ப்ளாஸ் நியூஸ் ஓடிக் கொண்டு இருந்தது.
அதைத் தொடர்ந்து அமைச்சர் காத்தவராயன் நிறைய இல்லீகல் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது நிறைய பெண் குழந்தைகளை கடத்தி வெளிநாடுகளில் விற்பனை செய்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு பக்கம் ஓடிக் கொண்டு இருந்தது.
அவர் தான் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் தலைவன் என்பதும்.. அதற்கு பிறகு தான் அவர் யார்?
அவரின் வாழ்க்கை வரலாறு அனைத்தும் அலசி ஆராயப்பட்டது. அவருடைய முதல் மனைவி வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதால்,
அவரும் வேறு ஒரு பெண்ணை மணந்தார். கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தனக்கு எதிராக இருந்தவர்களை கொன்று குவித்து அவர் ஆட்சியில் அமர்ந்தார். என்று ஒளிபரப்பியது.
அடுத்து சிறிது நேரத்திலேயே வந்த செய்தி தான் அனைவரையும் திகைப்படைய வைத்தது. ஆம் வனிதா காத்தவராயனின் முதல் மனைவியின் பெண் என்றும். இப்போது சமீபத்தில் தான் அவளைச் சந்தித்து உள்ளார். மகளும் அப்பாவும் ஏதோ இரகசியம் பேசியதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுவது யாதெனில் அவருடைய இரகசியங்கள் ஏதாவது தனது மகளிடம் சொல்லி இருப்பரா என்று அவரது மகளை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். என்று வனிதாவைக் கைது செய்து அழைத்துச் செல்வதே திரும்பத் திரும்ப ஒளிப்பரப்பாக.. பாருங்க சம்மதி இதற்கு மேல் அவளை நாங்கள் தான் வளர்ப்பு பெண்ணாக வளர்த்தோம் என்று சொல்லி நீங்கள் போலீசார் சந்தேக வட்டாரத்தில் சிக்கப் போகிறீர்களா?
இல்லைங்க சம்பந்தி அம்மா இத்தனை தூரம் தெரிந்த பிறகு நான் எப்படி அவளுக்கு சொந்தம் என்று போய் நிற்க முடியும். அது தான் அவளோட அப்பா காத்தவராயன் என்று எங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை இப்போது உலகத்திற்கே தெரிந்து விட்டதே!!!
தேவ் ஆனந்த் நெஞ்சில் புதைந்து உறங்கிக் கொண்டு இருந்தாள். அருவிக் கரையில் அந்தக் கனவு தான் இப்போது அருவிக்கு வந்தது. ஆனால் இப்போது அவளின் மன்னவன் அவனின் நெஞ்சாங்கூட்டில் வெதுவெதுப்பாக துயில் கொண்டு இருந்தவள் இப்போது சிரித்தாள்.
அதிகாலை எழும் பழக்கமுள்ள தேவ் ஆனந்த் எழுந்து விட்டான். ஆனால் அவள் தானே அவளின் கனவுலகத்தில் இருப்பதால் அவளின் முகத்தில் தோன்றும் மாற்றங்களை இரசித்துப் பார்த்தவன்.
அவளின் செவியோரம் தனது மீசை முடிகளை உரசினான். அதில் கொஞ்சம் தெளிந்தவள் உங்கள் மீசை தான் எனக்கு ரொம்ப பிடித்தது என்று அங்கே முத்தம் வைக்க வந்தவளைப் பார்த்து அப்படியே அவ்விதழ்களை அவனும் கவிபாடி இசை மீட்டிட இருவருக்கும் தாபமும் மோகமும் ஆட்கொள்ள அதிகாலையில் ஒரு கூடல் அவனது மென்மையான ஆளுமையில் தேனருவி சுகமான முனகல்கள் தான்..
நீண்ட நேரம் ஆகியும் இருவரும் புனையலோடு இருந்தனர். அதற்கு ஏற்றது போல் அதிகாலை குளிரும் மழையும் அவர்கள் தேகம் கதகதப்பைத் தேடி கூடலின் பின்னர் கசகசப்பாக தன் தேவதை அவளை நெற்றி முதல் பாதம் வரை முத்ததால் குளிப்பாட்டியவன் அப்படியே படுத்திருக்க.
ஹனி நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் டி.. ஆரம்பத்தில் உன் லூட்டி தனத்திலும் நான் கவரப்பட்டு பிறகு குறும்புகளாலும் பேச்சாலும் என்னை மனசுக்குள் ஆட்டி படைத்தவள் டி நீ..
நீ என் மனசுக்குள் வந்ததும் எனக்கு முதலில் நீ என் மாணவி
நான் அந்தக் கண்ணோட்டத்தில் மனைவி என்ற இடத்தில் வைத்து பார்ப்பது தவறோ? என்று தான் தோன்றியது.
எப்போ உன் போன் நம்பர் கொடுத்து விட்டு உன் அம்மாவுடையது என்று பீலா விட்டாயோ? அபாபோதே நான் கண்டு கொண்டேன்.
எப்படிங்க?
அதுங்களா? என்று அவளின் நுனி மூக்கை கிள்ளியவன் டூலர் காலர் போட்டுப் பார்த்தால் யாருடைய நம்பர் என்று தெரிந்து விடுமே டார்லிங்.
அட ஆமாம் ல என்று சொன்னவள். நான் தான் என்று தெரிந்து கொண்டு தான் நீங்கள் போன் செய்தீர்களா?
ஆமாண்டி என் ஹனிபால்ஸ் அப்போது தாண்டி உன்னை மிஸ் செய்யவே கூடாது என்று உறுதியாக என் அண்ணாவிடம் சொன்னேன் என்று இப்போது அவளது அதரத்தில் தேன் உறிஞ்சும் வண்டானான்.
காலையில் எழுந்த பூவிழிக்கு இன்று கல்லூரி இருப்பதால் கிளம்பி இருந்தால். முதலில் தேனருவி வருவா இப்போது நான் மட்டும் தான் தனியாகப் போக வேண்டும் என்று கிளம்பி வந்தால்.
வாடி பரவாயில்லை கல்லூரிக்கு கிளம்பி விட்டாயா? நான் கூட நீ கட் அடித்து விடுவாயோ? என்று நினைத்தேன் என்று கூறியவர் அவளுக்கு சாப்பிட டிபன் எடுத்து வைத்தார்.
அம்மா நான் மட்டும் தானே போகிறேன். அதனால் ஸ்கூட்டி எடுத்துப் போகிறேன் என்று கேட்டவளை யசோதா முறைத்தார்.
யசோ நீ இப்போது எதுக்கு இப்படி பாசமா பார்க்கிறாய்? நான் அப்படி என்ன கேட்டு விட்டேன். வண்டியிலே போகத் தான் கேட்டேன். இந்த சுதந்திர நாட்டிலே பெண்களுக்கு பேசக் கூட சுதந்திரம் இல்லை. வண்டியில் போகச் சுதந்திரம் இல்லை. அயகோ பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்களைக் காண இன்னும் வெகு காலம் பயணப்பட வேண்டும் என்று அவள் வாயிலே கப்பல் ஓட்டிக் கொண்டு இருக்க.
என்னடி சீரியல் வசனம் எல்லாம் பேசுகிறாய்? உன்னைத் தனியாக எல்லாம் வெளியே விட முடியாது.
உனக்கும் நிச்சயம் முடிந்து விட்டது.
அதுக்கு? நான் எங்கேயும் போகமால் உன் முந்தானை பிடித்துக் கொண்டு சுத்த வேண்டுமா?
அடிக் கழுதை நான் என்ன சொல்ல வருகிறேன். அதைச் சொல்ல விடுகிறாளா? பாருங்கள் மாப்பிள்ளை என்று யசோதா சொல்லவும் தான்.
இது என்ன? மாப்பிள்ளையா? தேனருவி அதற்குள் எழுந்து விட்டாளா? அதுக்கு வாய்ப்பே இல்லை. பிறகு எப்படி வாத்தி மட்டும் கீழே வந்து விட்டாரா? என்று ஸ்லோமோசனில் தலையைத் திருப்பி பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.
கார்முகிலன் தான் அங்கே சோபாவில் அமர்ந்து இருந்தான். அவனையே நினைத்துக் கொண்டு இருப்பதால் தான் நம் கண்ணுக்கு இப்படி தெரிகிறதோ? என்று நன்றாகத் கண்ணைத் தேய்த்து விட்டு பார்த்தால் அவன் தான் சிரித்துக் கொண்டு இருந்தான்.
அச்சோ போச்சா நாம் வசனம் பேசியது அனைத்தையும் கேட்டு இருப்பானா? இவன் அமர்ந்து இருப்பதை நான் பார்க்கவே இல்லை.
இந்த யசோ தான் சொல்லி இருக்கலாம்ல ஒரு வேளை மாமியாரும் மருமகனும் கூட்டணி போட்டு விட்டாங்களா? இது நல்லது இல்லையே!!..
நம் சுதந்திரம் பறிபோகிற மாதிரி பீலாகுதே இவர் எதுக்கு இங்கே வந்து இருக்கிறார். என்று பல யேசனையோடு அவள் நிற்கவும் தான் யசோதா? அவளின் மண்டையில் தட்டி ஏண்டி இப்படி பார்க்கிறாய்? போய் மாப்பிள்ளையை சாப்பிட கூப்பிடு என்று திட்டி விட்டு இப்போது அவரே தம்பி வாங்க சாப்பிடலாம் என்று அழைக்க அவனும் டையினிங் டேபிளில் வந்து அமர்ந்து கொண்டான்.
பூவிழி யையே பார்த்துக் கொண்டு இருந்தவன். அவள் வாயில் வைத்து இருந்த பனியாரத்தை யசேதா சமையல் அறைக்குள் சென்ற நேரத்தில் அவனின் இதழோடு அதை களவாண்டு விட்டான்.
மின்னல் தாக்கப்பட்டது போல் உணர்ந்தவள் அவனைப் பார்க்க அவனின் புருவத் தூக்கலில் அவனிடம் சொக்கி விட்டாள்.
அவளுக்கு இன்னமும் கனவு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாள்.
(அக்காளும் தங்கச்சியும் நல்லா கனவு காண்கிறாளுங்க.. அப்பா
மை மைண்ட் வாய்ஸ்.. கதைக்கு நடுவில் உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்டு எங்களுக்கு புளித்துப் போச்சு என்று நீங்க புலம்புவது
எனக்கு கேட்கிறது தங்கம்ஸ் இருந்தாலும் பச்சைப் புள்ள மாதிரி முகத்தை வைத்துக் கொள்கிறாங்களே அது தான் என் மைண்ட் வாய்ஸ் தொப்புக்கட்டீரானு வந்து கதையில் உட்கார்ந்து கொண்டது. கோவிதாதுக் கொள்ளாதீங்க பா.. எனக்கு எல்லாம்.. சரி எஸ்ஸாகி விடுகிறேன்.)
பூவு சாப்பிடு நேரமாகுது கல்லூரிக்குப் போவதற்கு என்று யசோதா சொல்லவும் தான் சுயத்திற்கு வந்தவள். அடுத்து யசோதா சொன்னதில் மீண்டும் அதிர்ச்சி அடைந்த விட்டாள்.
மாப்பிள்ளை தான் உன்னை தினமும் அழைத்துச் செல்வார்.
இன்று கல்லூரிக்கு அவர் வந்து மாற்றல் வாங்க பிரின்ஸ் பால் பார்த்துப் பேச வருகிறார். என்று சொல்லவும்.
ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும். ஒரு பக்கம் படபடப்பாக இருந்தது. அருகில் அமர்ந்து கொண்டு செல்லும் போது எப்படி நேற்று இந்த ஒரு வாரத்தில் இருவரும் முத்தப் போர் செய்து கொண்டு இருக்கின்றனர். மறுபடியும் ஏதாவது எல்லை மீறி விடுவோமா? என்று அவளுக்கு அவள் மேலேயே பயம் வந்தது.
அப்போது தான் தேவ் ஆனந்த் தேனருவி இருவரும் குளித்து விட்டு புதுமணத் தம்பதிகளாக கீழே இறங்கி வந்தனர்.
தேனருவி முகமே காட்டி கொடுத்தது. அவர்களுக்குள் தாம்பத்தியம் தொடங்கி விட்டது என்பது. யசோதாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
தேனருவி கீழே வந்தவள் கார்முகிலனிடம் தலையாட்டி விட்டு நேரடியாக சென்று தனது தாய் யசோதாவைக் கட்டிக் கொண்டாள்.
இது அவளுக்கு இருக்கும் ஒரு பழக்கம் காலையில் தன் அம்மாவை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் வைப்பது. அதனால் அதே நினைவில் மாப்பிள்ளை இருவரும் இருக்கிறார்கள் என்று கூச்சம் படாமல் தனது தாய்க்கு முத்தம் வைத்தாள்.
வைத்தவள் பூவிழியைப் பார்த்து கணக்கான காமிக்கவும் மறக்கவில்லை.
அப்போது தான் பூவிழி நான் மட்டும் இன்றைக்கு யசோதா விற்கு முத்தம் கொடுக்க மறந்து விட்டேனே..
அடியே ஏண்டி மாப்பிள்ளை முன்னால் இப்படி செய்கிறாய்? போ அவர் கோவித்துக் கொள்ளப் போகிறார் என்று சொன்னதும் தான் தேனருவி திரும்பி தேவ் ஆனந்த் பார்த்தாள்.
அவனுக்கு அவளை அவள் இயல்பு தானே கவர்ந்தது. அதனால் அவளைப் பார்த்து கண்ணடித்தான். அதில் தேனருவி குங்குமமாய்ச் சிவந்தாள்..
தொடரும்...