• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
378
நீ உடல் நான் நிழல்
பாகம் - 95


வனிதா இங்கு என்ன பண்ணிட்டு இருக்கிற நடு ராத்திரி எந்திரிச்சு வந்து என்னடி பண்ணிட்டு
இருக்கிறாய்?

என்னது? நடு ராத்திரியா? நீங்க எல்லாம் என்னை விட்டு போட்டு கல்யாணத்துக்கு போயிட்டீங்க இல்ல ஏன் என்னை கல்யாணத்துக்கு கூப்பிட்டு போகல.

சரி காலையில முகூர்த்தத்துக்கு என்னை மறக்காம கூப்பிட்டு போங்க அக்கா .

என்னடி பைத்தியம் புடிச்சு மாதிரி விளையாட்டு உளர அதுதான் நீ வந்து இருந்தே கல்யாணத்திற்கு.

நான் வந்திருந்தன நான் வந்து இருந்தா நான் உங்க கூடத்தான் இருந்திருப்பேன். இப்பொழுது தானே ரூமில் இருந்து எந்திரிச்சு வர்றேன்..

நீ என்ன நீதான் பைத்தியம் புடிச்ச விளையாட்டு பேசுறே அக்கா.

என்னடி வாய் நீளுது தங்கச்சின்னு பார்க்க மாட்டேன் ரொம்ப ஓவரா போற போ போய் தூங்கு போ.

இந்நேரத்துக்கு தூங்கினா காலையில முகூர்த்தத்துக்கு போகணும் இல்ல எல்லா ரெடியாகாமல் தூங்கிட்டு இருக்கீங்க.

அதெல்லாம் முகூர்த்தம் எல்லாம் முடிஞ்சாச்சு.

என்ன முகூர்த்த முடிஞ்சிடுச்சா அப்புறம் பொண்ணு மாப்பிள்ளை இங்க வீட்டுக்கு வந்துட்டாங்களா? அது எப்படி எனக்கு தெரியாம முகூர்த்த முடிஞ்சது .

ஏன் நீ இதை கல்யாணத்துக்கு தாலி எடுத்து கொடுக்கிறவளா?

நான் எதுக்கு தாலி எடுத்துக் கொடுக்கணும். அந்த தாலி என் கழுத்துல தான் ஏறனும்.

கனவு கண்டுட்டு இருக்காம போய் தூங்கு போ அதெல்லாம் கல்யாணம் முடிஞ்சு தேன் அருவி வீட்டுக்கு போயிட்டாங்க காலையில உனக்கு இருக்குது நீ பண்ணி வச்ச வேலைக்கு ,அம்மா அப்பா வருவாங்க உன்னை கூப்பிட்டு போவாங்க.

நான் எல்லா இந்த வீட்டை விட்டு போக மாட்டேன். நான் இந்த வீட்டுக்கு தான் மருமகளா வரணும் இது என்னோட நீண்ட கால ஆசை சரி எனக்கு உதவிக்கு நீ தான் முன் வரவே இல்லை. ஆனால் விஜயலதா அக்கா எனக்காக உதவி செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறாங்க.

ஆமாம்மா விஜய் லதா அக்காக்கு இடுப்பு உடைந்து கிடக்குது.

என்னது இடுப்புடைந்து சிடுச்சா என்ன ஆச்சு?

என்னாச்சுனு என்னை கேக்குற மருதாணி வைக்கிறேன் சொல்லி அந்த ரூமுக்குள்ள போய் என்னடி பண்ணி வச்ச அங்கதான் அவங்களுக்கு இடுப்பு உடைந்தது உன் மேல கம்ப்ளைன்ட் இருக்குது காலைல பெரிய மாமா உன்னை விசாரிப்பாங்க பைத்தியம் மாதிரி பண்ணிட்டு இருக்க உன்னை கொண்டு போயி ஏர்வாடியில் தான் விட்டுட்டு வரணும்.

அக்கா பார்த்து பேசு நானும் பேச ஆரம்பிச்சிடுவேன். தெரிஞ்சுக்கோ?

ஆமா ஆமா உன்னை எல்லாம் நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு என்ற வாழ்க்கைக்கு சேர்ந்து நீ உலை வைக்காம போக மாட்டே.

நல்லா தெரியுது நான் எதுக்கு உன் வீட்டு உன் புருஷனை வா கல்யாணம் பண்ணிக்க போற இல்லையே அதனால் நீ கம்முனு வேடிக்கை மட்டும் பாரு .

நீ இன்றோடு பேசி என்னால சமாளிக்க முடியாது தயவு செய்து ரூமுக்குள்ள போ நடுராத்திரியில வாய புடுங்கி வெளியில முடிக்கி விட்ற அந்த பாவத்தை நான் என்னைக்கு செய்யக்கூடாது என்று நினைக்கிறேன் என்று கத்திக்கொண்டு போனால் வானதி.

இப்போது தனது அறைக்குள் சென்று விட்டாள் வனிதா உள்ளே வந்தவள் எனக்கு தெரியாம திருமணமே நடந்து முடிஞ்சிருச்சா ஆமா எனக்கு என்ன ஆச்சு அன்னைக்கு மருதாணி வைத்த அன்றைக்கு தூங்குனது இன்னைக்கு தான் எந்திரிக்கிறனா? அப்போ இடையில ரெண்டு நாள் என்ன ஆச்சு ஒண்ணுமே தெரியலையே!!!!

என்று தனது தன்னை சுற்றி சுற்றி பார்க்கிறாள் நான் நல்லாத்தான் இருக்கிறேன். அம்மா என் கையில் எல்லாம் ஏன் இவ்வளவு வெட்டுக்காயம் இருக்குது கையெல்லாம் கரேனு இருக்குது என்ன ஆச்சுன்னு தெரியலையே!!நான் எங்க போன அக்கா சொல்றா நானும் கல்யாண மண்டபத்தில் வந்திருந்தேன் .ஆனா போனதாவே எனக்கு நினைவில்லையே ?

என்ன இருக்கு தேன் அருவி நீ திருமணம் பண்ணி இருக்கலாம் ஆனா இங்கதான வருவே உன்னை எப்படி ஓட விரட்டி விடுறேன். பாரு அப்படி உன்னை விரட்ட முடியலன்னா உன்னை கொன்று போட்டு நானும் தேவ் ஆனந்துக்கு இரண்டாவது மனைவியா இருந்துக்குவேன். என்று பிதற்றிக் கொண்டு இருந்தால் நாளைக்கு காலையில் அவளுக்கு நடக்க போவதை அறியாமல் விடிய விடிய அறைக்குள் தூங்காமல் இருந்த வனிதாவை இப்போது வானதி வந்து கீழே அழைத்துச் சென்றாள்.

வா உன் மேல இருக்குது பா என்று கீழே அழைத்துச் சென்றாள்.

அக்கா என்னை எதுக்கு இப்போ கீழ புடிச்சு இழுத்துட்டு போறே..

நான் இந்த வீட்ட விட்டு போக மாட்டேன். நான் இந்த வீட்டில் இருப்பேன். நான் தேவன் மாமாவத்தை கல்யாணம் பண்ணிக்குவேன் நானும் யாருக்காகவும் அவரை விட்டுக் கொடுக்க மாட்டேன் அவர் எனக்காக பிறந்தவர் என்று உளறிக் கொண்டே இருந்தால்.

என்ன வனிதா என்ன பெரிய இவளா?நீயி நீ எல்லாம் இந்த ஊட்டுக்குள்ள உன்னை எல்லாம் விட்டது என் தப்பு முதல் பாசம் இருக்க வேண்டிய நீ என்ற ஊட்டுக்குள்ள இருந்துட்டு எம் பையனுக்கு என் மருமகளுக்கு எதிராக சதி செஞ்சிட்டு இருக்கீக நீ என்னடி பண்ணுன விஜய் லதா இடுப்பு உடைச்சு விட்டுருக்கிறே.

நான் எல்லாம் ஒன்னும் பண்ணல அவங்கள.

என்ன ஒன்னும் பண்ணல ரொம்ப அசிங்கமா நடந்துட்டியம்மா நீ ஒரு பொண்ணானே எனக்கு இப்ப சந்தேகமா இருக்குது. பேய் பிசாசு உள்ள இருக்குது என்னவோ? வானதி உனக்காகத்த பாக்க வேண்டியதா இருக்குது. இவளை என்ன பண்ணலாம் சொல்லு.

அத்தை நீங்க என்ன வேணா பண்ணிக்கங்க நான் இவ விசயத்தில் தலையிடுறதாவே இல்ல. நான் எப்பவோ இவ்ளோ வீட்டை விட்டு போக சொல்லலாம்னு இருந்தேன்.

நீங்கதான் சொன்னீங்க சரி இருந்தது இருந்தால் கல்யாணம் முடிச்சுட்டு போகட்டும்.

நான் கண்டனா இவ்வளவு பெரிய பிரச்சனை நம்ம குடும்பத்துக்குள் இழுத்து விடுவாள் மருதாணி வைக்கிறேன்னு ரவி என்னுங்குறான் அவளை வேண்டாம் அவளையும் சேர்ந்து தல முழுகி வரேன்னு சொல்றான்.

ஏன் கொஞ்ச நாளாவது நிம்மதியா இருக்கலாம் ஆனா விடவே மாட்டிங்களா ?இல்ல ரெண்டு நாளா கல்யாணத்துல தான் நிம்மதியா இருந்தது .இந்த வீட்டில் இருக்கிற கவலைகள் எல்லாம் மறந்து நிம்மதியாக இருந்தேன். மறுபடியும் இன்னைக்கு காலையில உங்க தங்கச்சி ஆரம்பிக்கிறா...

நீங்க இவ்வளவு என் தங்கச்சின்னு வச்ச எல்லாம் நீங்க பார்க்க வேண்டாம். எங்க அப்பா அம்மாவும் வருவாங்க.

யார் என்ன சொன்னாலும் நான் இந்த வீட்டில் இருந்து போக மாட்டேன் என இங்கிருந்து போக சொன்னீங்கன்னா என்னோட சாவுக்கு நீங்க தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு செத்துருவேன். என்று சொல்லவும்.

இத்தனை நேரம் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த சிவக்குமார் வந்து சப் என்று கன்னத்தில் அறைந்தான் சின்ன புள்ள அப்படின்னு பார்த்தா ரொம்ப துள்ற நீ என்ன சாவறது இருக்கிற இடத்திலேயே பொசுக்கி போட்டு விடுவேன் தெரிஞ்சுக்கோ. ரொம்ப ஆடுற அது என்ன எங்கம்மாவை எதிர்த்து பேசுற அளவுக்கு எல்லாம் உனக்கு அவ்வளவு பெரிய ஆளா அது சின்ன புள்ள பாத்தா கூட ஏறிட்டு இருக்குற நீ யாருடி இந்த வீட்டுக்கு மருமகளா வர்றக்கு முதல் நீ வானதிக்கு தங்கச்சியே இல்ல தெரியுமா?

ஏங்க சொல்ல வேண்டாம்..

எதுக்கு சொல்ல வேண்டாம்னு சொல்ற கண்ட கழுதை எல்லாம் எங்க வீட்டுல ஏலம் போட்டு கொண்டு இருப்பா என் தம்பியோட வாழ்க்கையில இவளெல்லாம் எதுக்கு எடம் போடணும்.

ஏனென்றால் பொறந்த இடம் அப்படி இல்ல அப்படி தான் இருக்கு.

என்ன பேசுறீங்க எங்க அக்கா முன்னாலேயே என்னைய யாரோன்னு சொல்றீங்க அதுக்கு உங்களுக்கு முதல் ரைட்ஸ் இருக்கிறதா?

இப்போது வானதி அவளின் கன்னத்தில் அறைந்துவிட்டு ஏன் யாரடி எதிர்த்து பேசுற போனா போச்சது என்று சொல்லி உங்க அப்பா அம்மா உன்னை விட்டுட்டு ஓடி போயிட்டாங்க வேற வேற கல்யாணம் பண்ணிட்டு அதனால எங்க அப்பா அம்மா உன்னை எடுத்து வளர்த்தாங்க ஆனா அதையே தெருவில் நின்னுட்டு இருந்தவளே அப்படி உனக்கு அடைக்கலம் கொடுத்ததனால இன்னைக்கு நீ என்னையும் எங்க வீட்டுல இருக்குறவங்களையும் கேவலமா? பேசுகிறாய்?

நான் முதல் தப்பு பண்ணிட்டேன் உன்னை வந்து இந்த வீட்டுக்குள்ள விட்டேன் பாத்தியா? என்ற மேல தப்பு அதனால தான் இன்னைக்கு இவ்வளவு பெரிய பிரச்சினை என்ற வாழ்க்கை இவ கேள்விக்குறி மாதிரி ஆக்கி இருக்கிறா?

எனக்காக தான் இத்தனை நாள் பொறுத்து இருந்தாங்க இப்போ தெரிஞ்சுதா நீங்க என்னோட கூட பிறந்த தங்கச்சி இல்ல நானும் இந்த விஷயத்தை சொன்னா நீ மனசு உடைஞ்சு போயிருவ அப்படின்னு சொல்லித்தான் சொல்லாம இருந்தேன்.

ஆனா உங்க அம்மா புத்தி தான உனக்கு வந்து இருக்குது .உங்க அம்மா தான் அடுத்தவ புருஷனை கூப்பிட்டு ஓடிப்போயிட்டா உனக்கும் அந்த எண்ணம் தானே மனசுல இருக்கு சும்மாவா சொன்னாங்க தாய் போல பிள்ளை நூலப் போல சேலைன்னு அதையேன் சொன்னாங்கன்னு இப்ப புரியுதுடி.

உங்க அம்மா செஞ்ச தப்ப நீ இன்னைக்கு செய்யணும்னு துடிக்கிறே.

நீங்க நிஜமாத்தே சொல்றீங்களா? என்னோட உன் கூட பிறந்த அக்கா இல்லையா? நீங்க என்னோட அப்பா அம்மா இல்லையா? என்னோட அம்மா எங்கே எங்கம்மா யார கூப்பிட்டு போனாங்க நான் அனாதையா? நீங்க இதெல்லாம் பொய்தான சொல்றீங்க? இங்கிருந்து அனுப்புவதற்கு வேண்டித்தான் பொய் சொல்றீங்க?

உங்க கிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு எப்பவுமே இல்லை. நாங்க உன்னைய எடுத்து வளர்த்தாம இருந்தா நீ அனாதையா ஆசிரமத்தில் இருந்திருப்பே வளர்த்த பாசம் இல்லாம நாங்க எடுத்து உன்னை வளர்த்துனதுக்கு எங்க பொண்ணோட வாழ்க்கையில் நீ விளையாடிட்ட.

புள்ளையோட பேரு வானதியின் இருந்த சரி தங்கச்சி பேரு வனிதா என்று மாற்றி வச்சமே இதுக்குத்தானா உனக்கு பாலும் நெயுமா ஊட்டி வளர்த்தேன்.

உன்னை வளர்த்துனதுக்கு ஒரு நாயாயைவளத்தி இருந்தா கூட அது நன்றியோட வாலாட்டி எங்க பின்னால இருந்திருக்கும்..

ஆனா நீ உங்க அம்மாவோட புத்தி தான் படிச்சிருக்க தயவு செய்து உன்னையும்வளர்த்தன பாவத்துக்கு நான் உன்னை வச்சு காப்பாத்திக்கிறோம். வேற மாப்பிள்ளை பார்த்து கட்டிக்கொடுக்கிறோம் .இதுக்கு மேல உன்னை இங்கு விட்டு இருந்தா அது என் பொண்ணு வாழ்க்கையே கேள்வி குறியா மாத்திரும் வாம்மா..என்று இத்தனை நாளாக அவளது அம்மா அப்பா என்று நினைத்தவர்கள் தன்னுடைய அப்பா அம்மா இல்லை நான் வானதி அக்கா கூட பிறக்கவில்லை என்று அறிந்தும் கூட அவள் அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தாள்.

நீங்களா என்கிட்ட பொய்தே சொல்றீங்க நீங்க சொல்றது யாரையுமே நான் நம்ப மாட்டேன்.

நீ நம்பு நம்பாம போம்மா அது எங்களுக்கு பிரச்சனை இல்ல நீ இதுக்கு மேல இங்க ஏதாவது பண்ணிட்டு இருந்தாங்கன்னா நாங்க போலீசுக்கு போன் பண்ணுவோம் எங்க வீட்டுக்குள் வந்து இத்தனை நாள் பண்ணிட்டு இருந்தது பூரா சிசிடி கேமராவில் இருக்குது பதிவா இருக்குது அதை காமிச்சோம்னாலே போதும் நீ ஜெயில் சிக்குவ எப்படி வசதி ஜெயிலுக்கு போறியா கம்பி எண்ணி களி திங்கிறியா இல்ல வளர்த்துன பாவத்துக்கு அவங்களே கூப்பிட்டு போறேன்னு சொல்றாங்க உன் முடிவு தான் இது இதுக்கு மேல விஷத்தை கொண்டு வந்து வீட்டுக்குள்ள வச்சுட்டு டெய்லியும் பாம்பு எப்போ நேரம் பார்த்து கொத்தும்னு காவல் காத்திட்டு இருக்க முடியாது தயவுசெய்து இங்கிருந்து போயிருமா.

நாங்க யாரையுமே இதுவரைக்கும் வீட்டை விட்டுவிட்டு வெளியில் போனா கட்டாயப்படுத்தல அந்த எண்ணமே எங்களுக்கு இருந்ததில்லை.

ஆனா இன்னைக்கு இப்படி சொல்றோம்னா அதுக்கு காரணம் நீ அவ்ளோ கேவலமாக நடந்து இருக்கிறே. போதும் இங்கிருந்து போயிருமா எங்கள மேல பாவி ஆக்காத என்று கிருஷ்ணவேணி அம்மா கையெடுத்து கும்பிட்டார்.

அம்மா நீ எதுக்குமா இவகிட்ட போய் கையெழுத்து கும்பிட்டு இருக்கிற விடுமா. இவளை நான் பார்த்துக்கிறேன்.

தம்பி வேண்டாம் என்ன இருந்தாலும் அவள் ஒரு பொண்ணு ஒரு பொண்ணு மேல நம்ம கை வைக்க கூடாது.

இவள் எல்லாம் பொண்ணே இல்லை பேய்மா..


தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top