Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 376
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 93
பாகம் - 93
என்ன ஆறு விரல் நீ உருவத்தை மாத்திட்டு வந்தா எனக்கு தெரியாதா? எல்லாம் சரிதான். ஆனா உன் கையில் இருக்கிற அந்த ஆறாவது விரல் அது மட்டும் தனியா தொங்கிட்டு இருக்குது.
நீ வெளிநாட்டு பேய் நான் என்று சொன்னா நம்பனும் என்ன? என்னை உன் வீட்டு வேலைக்காரன் நினைச்சுட்டியா? இல்ல உன்னால கையாள் என்று நெனச்சியா? உங்கள எல்லாம் குகையில் விட்டுட்டு வந்தது என் தப்பு ஆனால் கொஞ்சம் சந்துட்டு தான் வந்தேன்.
ஏன்னா உங்களால ஆக வேண்டியது எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்குது. அதனாலதான் என்று நிழலா சொல்லவும்.
ஏய் என்னை பத்தி நீ முழுசா தெரியாம என்ற கூட விளையாண்டு இருக்காதே நான் மிகப்பெரிய தாதா.
நீ தாதாவா தாத்தாவா அது எனக்கு தான் தெரியும் சும்மா மைக் கிடைச்சா வாக்குறுதி குடுக்குற மாதிரி எல்லாம் என்கிட்ட பேசக்கூடாது .
அப்புர சண்டிகளா இவன புடிச்சு நாம் ஒரு குழி தோண்டி வச்சிருக்கோம்ல அதுக்குள்ள கொண்டு போயி அடைச்சு வைங்க.
டேய் என்னை விட்டுடுங்கடா என்னை எல்லாம் குழியோட பொதைக்காதீங்கடா நான் யாருன்னு தெரியாம வாலாட்டாதீங்க அப்புறம் இந்த கல்லறை தோட்டத்தையே நான் இல்லாம பண்ணிருவேன்.
ஒரு நிமிஷத்துல நான் நெனச்சனா பி எம் வரைக்கும் பேசுவ அமெரிக்கா வரைக்கும் பேசுவேன்.
நீ அமெரிக்கா வரைக்கும் பேசுவியா அண்டார்டிக்கா வரைக்கும் பேசுவியோ அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை போ போய் அங்க உக்காந்துட்டு அந்த குழிக்குள் உட்கார்ந்து பேசு.
வரவர மனுசனுக்கு மரியாதையே இல்லாம போச்சு எல்லா நிழல் பேய் இதுககுதா ஆட்டம் போட்டு இருக்குது.
ஆமாண்டா மனுஷங்களா பேய்கள் மாதிரி திரிஞ்சா அப்புறம் பேய்கள் மனுஷனும் மாறிருச்சு இத்தனை நாள் ஊரை ஏமாத்தி சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்களா ஏழை கிட்டல்ல இருந்து புடுங்கி அதை எல்லாம் நான் திருப்பி அவங்கிட்ட கொடுக்கணும் அதுக்காகதாண்டா உன்னை தேடி விட்டிருக்கிற.
டேய் என்னோட கூட்டாளிகள் எல்லாம் இருக்கிறாங்க அவங்களே வெளிய விடும்.
அவங்க எல்லாம் வெளியில விட்டா உன்னை எல்லாம் கையில ஒன்னும் பிடிக்க முடியாது. அவங்க எல்லாம் மண்ணோடு மண்ணாக போறாங்க நீ மட்டும் வெளியில் வந்தது அந்த குகை மூடி இருக்கும்.
உனக்கு வேறொரு உலகத்தை காண்பிக்கிறேன். நீ அந்த அளவுக்கு பண்ணி இருக்கிற நானும் கூட உனக்கு ஒரு பையன் தான் அப்படின்னு நினைச்சேன் உனக்குத்தான் ஊரில் எல்லாம் பொண்டாட்டியாச்சு.
அதனால எத்தனை வாரிசு வச்சிருக்கறீங்க அத்தனையும் இன்னும் கொஞ்ச நாள்ல ஒவ்வொன்னா அழியப் போகுது.
என்னை விட்டு வேண்டா என்னை என்ன வேணா பண்ணிக்கோ என் பையனுக்கு மேல எல்லாம் கை வைக்காதே.
ஏன் உன்னோட பையன் உனக்கு உயிர் முக்கியமோ? மத்தவங்களதுனா உனக்கு விளையாட்டா நீ தானே குழந்தைகளை கடத்தி விட்டுட்டு இருக்க.
ஆமா இதெல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சது. நான் தான் அது பண்ணுனேங்கிறத நீ யாரு கிட்ட சொல்லி நிரூபிக்க முடியாது.
அதை நீ இப்ப சொல்லிட்டியே உன் வாயால அதை எப்படி நிரூபிச்சு உன்னை பீஸ்ஸா வெட்டி கடலில் வீசப்போகிறேன் மீனுக்கு உணவாக..
நீ போய் சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க நீயே ஒரு நிழலாப் பேய் நீ சொன்னா எப்படி நம்புவாங்க மனசனா எதைச் சொல்றாங்களோ? அதைத் தான் நம்புவாங்கோ.
கோர்ட்டுக்குல்லா போயி என நிரூபிக்கும் நான் என் மேல குற்றம் நிரூபிக்கணும்னா அங்கெல்லாம் சாட்சி வேணும்டா சாட்சி வச்சுட்டு குற்றம் செய்வதற்கு நான் என்ன முட்டாளா ?எந்த இடத்திலும் எம்மேல ஒரு தப்பு வராத மாதிரி நான் இத்தனை நாள் தொழில் நடத்திட்டு இருந்தேன்.
அதுவும் நான் ஒரு அமைச்சர் இப்பவே என்னை காணமுன்னு சொல்லிட்டு எல்லாம் தேட ஆரம்பிச்சிருப்பாங்க. நீ பெரிய இடத்தில் கை வைத்திருக்கிற உன்னால நிழலாவாக் கூட இங்க சுத்த முடியாது உன்னை நாடு கடத்திருவாங்க .
உன்னையே நான் என்ன பண்ண போறேன் பாரு இப்பவே போன் பண்ண போற எத்தனை பேர் வர போறாங்கன்னு பாரு இங்க சல்லடை போட்டு தேடுவாங்க.
உன் உருட்டு எல்லாம் கொண்டு போயி வேற யாராச்சு சொல்லு நாங்க எல்லாம் யாரு கண்ணுக்கு தெரிய மாட்டோம்.
உன்ற கண்ணுக்கு ஏன் நான் இப்ப தெரிகிறனா உனக்கு தெரியாது இத்தனை நாள் நம்மள யாரு இப்படி வாட்டி வதைக்கிறாங்க ஒவ்வொன்றையும் வதக்குராங்கோ அன்னைக்கு நடந்தது எங்க ஆப்ரேஷன் அதெல்லாம் யாருன்னு தெரியாம குழம்பிட்டு இருந்தாய்? அப்புறம் கல்யாண மண்டபத்தில் உன்னை சுழட்டி அடிச்சோமே அப்பெல்லாம் தெரியாம நீ புலம்பிட்டு இருந்தீங்களா?
எனக்கு எப்பவுமே எதிரிக்கு தெரியாம பண்றது விட உன்ன மாதிரி ஒரு போக்கிரிகேட்டெல்லாம் நான் வந்து ஒரு பேய் தான் அப்படிங்கறது காமிச்சிட்டு தான் அடுத்த வேலை செய்யனும்.
என்ன உன்ற நால தான் நான் இந்த நிலைமைக்கு ஆளாய் சுத்திட்டு இருக்கேன். நான் மட்டும் இல்ல எத்தனை பேர் உன்ற நால உயிர் துறந்து இருக்காங்கன்னு உனக்கு தெரியுமா? எத்தனை குடும்பத்தில் குழந்தைகளை கடத்தி விற்பனை பண்ணிட்டு இருக்கே.. நீ அதுல எல்லாம் காசு சம்பாரிச்சு நீ பணக்காரனாகும் என்று உனக்கு அத்தனை வெறி ஏன்டா உங்கள நம்பி ஓட்டு போட்டா மக்களை காப்பாத்துவீங்கன்னு பார்த்தா நாட்டத்தான் கொள்ளை அடிச்சுட்டு இருக்கே..அது இல்லாம மக்களே கொன்னு அவங்க உடல் உறுப்பு எடுத்து அதையும் விக்கிறீங்க?
அப்படி என்னடா நீங்க தலைக்கு கட்டிட்டு போறீங்களா? எதுவுமே நம்பவே முடியல இவனையுமே யார் எப்படிப்பட்டவங்கன்னு இரு ஒவ்வொருத்தரும் உன்னை வெச்ச எல்லாத்தையும் களை எடுக்கிறேன் பாரு என்று நிழலா தன் மனதில் இருந்து ஆதங்கத்தை பூராம் கொட்டியது. இந்த காடே அதிரும் வரை சிரித்தது.
ஏண்டா நாங்க பேயா உலாதிட்டு இங்கே நிம்மதியா இருந்தோம். ஆனா? எங்களை உங்கள மாதிரி புலம்ப வச்சிட்டீங்களே டா சுடுகாடு கூட இருக்காது போல இருக்குது மனிதன் நிம்மதியா வந்து செத்த பின்னால உறங்கற இடம்தாண்டா சுடுகாடு.
ஆனா உங்க ஆசைக்கு அளவில்லாம எல்லா இடத்திலும் கட்டடத்தை கட்டி கட்டி வைக்கிறீங்க டா பாவிகளா அது இன்னும் உங்க வீட்டை மட்டும் பளிங்கு மாதிரி கட்டிக்கிறீங்க ஏழைகளோட வீட்டுக்கு தரமான கட்டிடமா கட்டாம அவங்களோட உயிரோட விளையாடுறீங்களே?
அப்படி என்னடா பூமி உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா? எல்லாரையும் தான் ஆண்டவன் படைச்சான் ஆனா உங்கள மாதிரி அரசியல்வாதிகா என்னவோ பூமியே உங்களுக்கு தான் சொந்தம் அப்படிங்கற மாதிரி ஏழை கிட்டுருந்து அவங்களுக்குன்னு இருக்குற விவசாய நிலத்தை எல்லாம் மிரட்டி புடுங்கிக்கிறீங்க?
அது இல்லாம அவிங்கள எல்லாம் உங்க வீட்டிலேயே கொத்தடிமை வாழ்க்கை வாழ வைக்கிறீங்க உங்களுக்கு எதிராக ஒருத்தன் குரல் பேசிட்டா அவன் குடும்பத்தோட அழித்திடறீங்க இது நானும் முடிச்சு கட்றேன் டா இதுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமா நான் இத்தனை நாள் இந்த பூமியில பேய் மாதிரி நிழலா வாடா சுத்திட்டு இருந்த நான் யாருன்னு உனக்கு தெரியாதடா பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உன்ற நாள என்னோட வாழ்க்கை இழந்து நான் உயிர் அதனாலயே ஒவ்வொரு ஜென்மமா எடுத்து உங்களை பழிவாங்குவதற்கு வேண்டி காத்துட்டு இருந்தேன்.
ஒவ்வொரு தடவையுமே நீங்க தப்பிச்சு தப்பிச்சுட்டு போயிட்டு இருந்தீங்க ஆனா இதுதாண்டா கடைசி ஜனனம் நீங்க எல்லாம் தொலைஞ்சீங்க..ஏற்கனவே உன்னோட அல்ல கைகள் மூணு பேருக்குமே ஆயுசு முடிச்சிட்டேன்.
நீ ஒருத்தனை இருக்குற நீ ஒரு விஷக்காளான் என்ன நான் உன்னை அழிச்சாலும் உன்னோட பயங்கோ உன்னோட வாரிசு பின்னால வந்துட்டே இருக்கு நரகாசுரன் மாற எல்லாத்தையும் வதம் செஞ்சுட்டு தான் நான் இந்த பூமியில் இருந்து போவ என்று நிழல் அங்கிருந்த கல்லறை மேடையில் சத்தியம் செய்தது.
அங்கே இருந்த மற்ற பேய்கள் எல்லாம் நம்மளுடைய நாட்டாமை நிழலாக்குள்ள எத்தனையோ? வேதனையான விஷயம் இருக்குதா நாமளும் கூட இப்பதான் பேய்களா மாறி இருக்கிறோம்.
இத்தனைநாலா மனிதர்களா வாழ்ந்துட்டு இருந்தோம் ஆனால் இப்பதான் பேய்களா மாறி இருக்கிறோம். ஆனால் நிழலா எத்தனை ஆண்டு வருஷமா இங்க நிம்மதி இல்லாம திரிந்து இருக்கிறது.
நாம் கண்டிப்பா நிலவா ஓட ஆசைக்கு அதனோட குறிக்கோளுக்கு ஒத்தாசையாய் இருப்போம் நாம மனுஷராக இருந்து செய்ய முடியாத நிழலா இருந்து நிழலுக்கு உதவியாய் இருந்து செய்யணும்.
இந்த நாட்ட திருத்தணும் இனி ஒருத்தனும் பொது சொத்துக்களை கையகப்படுத்து நினைக்க வேண்டும். ஏழைகளோட வயிற்றில் அடிக்கிறவனுக்குமே இந்த பூமியில் இடம் இல்லை என்கிற மாதிரி நாமெல்லாம் ஒரு தீர்ப்பு வைக்கணும். என்று நிழலா பேய்கள் அனைத்தும் ஒரு முடிவு எடுத்துக் கொண்டது.
அதேபோல் ஒரு நிழலாவை காத்தவராயனின் ஊருக்கு அனுப்பி வைத்தது. அவன் செய்து வரும் இல்லீகள் தொழில் பற்றி அறிந்து வர அனுப்பியது.
நிழலா முதல்ல மத்ததெல்லாம் இப்படியே இருக்கட்டும். முதல்ல அந்த குழந்தைகளை கடத்தி வைத்திருக்கிற குடோன்ல போய் பாருங்க இத்தனை நாளா எத்தனை குழந்தைகளை அடைச்சுருக்காங்க கடத்தி வைத்து இருக்கிறார்கள் எல்லாம் நாளைக்குள்ள நீ கொண்டு வர்ற ரொம்ப நாள் இல்லை குறைவா இருக்குது.
நம்ம சீக்கிரம் இந்த பூமி விட்டு போறதுக்குள்ள அதை எல்லாம் சரி பண்ணிட்டு போகணும்.
அதேபோல் விரைவாக ஒரு நிழலா ஓடி வந்தது நாட்டாமை நிழலா நீங்கள் சொன்னது உண்மைதான் இந்த காத்தவராயன் இன்று இன்றைய கப்பலில் ஒரு கண்டெய்னர் முழுவதும் பெண் குழந்தைகளை கடத்த இருந்தான்.
உங்களது தீவிரமான வழிகாட்டல் தான் இப்போது சுங்கத்துறை அதிகாரிகள் அனைவரும் சந்தேகத்தின் பேரில் அந்த கண்டையனரை கையகப்படுத்தி உள்ளனர் இங்கே பாருங்கள் என் நெஞ்சில் இருக்கும் திரையில் அங்கு இருப்பதை படம் பிடித்து ஒரு நிழல் அனுப்பி கொண்டிருக்கிறது. என்று அதனுடைய நெஞ்சை திறந்து காண்பித்தது. பார்த்தீர்களா ?எவ்வளவு விரைவாக நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் அதனால் தான் உடனடியாக 100 பெண் குழந்தைகளை காப்பாற்ற முடிந்தது என்ன நிழலா ரொம்ப சந்தோசப்பட்டது.
கதை நீ நெனச்சிட்டு இருக்குற இது ஒன்னு தான் நினைச்சுட்டு இருக்கிறாயா? எனக்கு ஏகப்பட்ட இடத்தில் இருக்கிறது. என்று அவன் காத்தவராயன் சிரித்தான்.
சிரிக்காதடா ஒவ்வொன்னா ஒவ்வொண்ணா ? களையறோம்..நீ கடைசில பைத்தியம் பிடித்து திரிவாய் உனக்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் சாவு வராது சாவு எனக்கு வா வா என்று நீ கத்தனும் கதறனும் இருக்குது
இனிமேல்தான் உன்னோட ஆட்டம் இன்று நிழலா சொல்லியது.
தொடரும்...