• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
376
நீ உடல் நான் நிழல்
பாகம் - 91


மறுசரடு போட்டு முடித்ததும் அனைவரும் மதிய விருந்து சாப்பிடச் சென்றனர். அதற்கு முன்பு சம்மந்திகள் எதிர் எதிர் திசையில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஆண்களுக்கு ஆண்களும் பெண்களுக்கு பெண்களும் திருநீறு சந்தனம் குங்குமம் வைத்து மாலை போட்டு மரியாதை செய்தனர்.

இது என்ன புதுசா இருக்கிறதுங்க எங்கள் ஊர் திருமணத்திற்கு இதுக்கும் இவ்வளவு வித்தியாசமா? இருக்கிறது.

இந்த திருமணத்தில் சீர் குறைவு ஒவ்வொரு திருமணத்தில் விடிய விடிய சீர் இருக்கும் ப்பா சரி வாங்க எல்லாரும் சம்மந்தி விருந்து சாப்பிடலாம் என்று அனைவரும் சாப்பிட்டு விட்டு இப்போது பிரதிலிபி தோழமைகள் அனைவரும் நாங்க கிளம்புகிறோம் என்று சொல்ல.

கிருஷ்ண வேணி அம்மா இருங்க எல்லாரும் அதுக்குள்ள எதுக்கு போகனும் நிற்கிறீங்க இன்னமும் பொண்ணு மாப்பிள்ளை அழைப்பு இருக்கிறது.

குலதெய்வம் போய் பொங்கல் வைக்க வேண்டும். கறி விருந்து இருக்கிறது எல்லாம் முடித்து விட்டு ஒரு வாரம் கழித்து போகலாம்.

அம்மா உங்கள் அன்பு எங்களுக்கு புரிகிறது. இருந்தாலும் நாங்கள் வந்து மூன்று நாட்கள் ஆகி விட்டது. எல்லா வேலையும் போட்டது போட்டபடி இருக்கும். நாங்கள் சென்று தான் ஆகவேண்டும் என்று அனைவரும் விடைபெற,

சரி ஒரு பத்து நிமிடம் இருங்கள் என்று சமையலறைக்குச் சென்றவர். ஏனப்பா முந்திரி கேக் மிக்ஸர் எல்லாம் நாங்கள் சொன்ன மாதிரி பேக் செய்து விட்டீர்களா?

ஆச்சுங்கமா என்று பேக் செய்து இருந்த பொருட்களை காண்பிக்க வானதி பழங்கள் கொண்டு வந்து விட்டார்களா?

எல்லாம் ரெடிங்க அத்தை..

ரவிக்குமார் நான் சொன்னது போல் பட்டுப்புடவை வேட்டி சர்ட் எல்லாம் வாங்கியாச்சா?

சிவா நகைக் கடைக்குச் சென்று நான் சொன்னது போல் காய்ன்ஸ் வாங்கியாச்சா?

அம்மா நீங்கள் சொன்னது போல் அனைத்தும் ரெடியாக உள்ளது.

சரி அப்பாவை வரச் சொல் என்று கூறியவர் இப்போது என் பொண்ணுங்க மருமகள் எல்லாரும் இங்கே வாங்கமா..

ஒரு வெள்ளித் தாம்பூழத் தட்டில் பட்டுப்புடவை, வேட்டி சர்ட் அடங்கிய பெட்டி இனிப்பு காரம் பழவகைகள் வாழைப்பழம் ஒரு சீப் வெத்தலை பாக்கு வளையல் பூ ஒரு பவுன் வைத்து அவருகளுக்கு தம்பதிகளாய் ஆசிர்வதித்து கொடுக்க இங்கே பெண்கள் அனைவருக்கும் கண்ணில் தண்ணியே வந்துட்டது.

அம்மா என்னம்மா எங்களுக்கு எதுக்கு இத்தனை சீர் செய்கிறீங்க ஏற்கனவே திருமணச் செலவு அதில் எங்களுக்கு இத்தனை பேருக்கும் செய்தால் கூடுதல் சுமை தானே.

நீங்கள் எல்லாரும் என்னை அம்மா என்று அழைக்கும் போது நான் தாய் வீட்டுச் சீர் கொடுக்கிறேன். ஏதாவது பேசுனீர்கள் அடி தான் கிடைக்கும்.

நீங்கள் எல்லாரும் இந்தக் கல்யாணத்தை எத்தனை சந்தோசமா பாட்டுப் பாடி கிண்டலோடு நடத்தி முடித்து இருக்கிறீர்கள். அத்தனை மகிழ்ச்சி கொடுத்த உங்களுக்கு இது வெரும் சிறு காணிக்கை தான் மா.

நீங்கள் எல்லாரும் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாக இதே பாசத்தோடு வந்து போகவேண்டும். அதே போல் உங்கள் வீட்டு விசேஷத்திலும் நாங்கள் இருப்போம்.

அனைவரும் மகிழ்ச்சியாக விடை பெற்றுச் சென்றனர். அட மண்டமே வெறுச்சோடி கிடக்கிறது.

தேவ் ஆனந்த் குடும்பம் கார்முகிலன் குடும்பம் தேனருவியின் குடும்பம் மட்டுமே மண்டபத்தில் இருக்க முதலில் நித்யா சபரிநாதன் மணமக்களை பொண்ணு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்து வானதி சிவக்குமார் கார்முகிலன் குடும்பம் இப்போது மணமக்களை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

பொண்ணு மாப்பிள்ளை அழைப்பில் பொண்ணு வீட்டிலிருந்து ஏதாவது ஒரு பொருளை மாப்பிள்ளை வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஒரு பொருளை பொண்ணு வீட்டாரும் எடுத்துச் செல்வர் யாருக்கும் தெரியாமல் இது முதலில் இருந்தே ஒரு விளையாட்டாக இருக்கிறது கொங்கு மண்டலத்தில்.

அதே போல் மணமக்களை மாப்பிள்ளை வீட்டில் இருந்து இப்போது பொண்ணு வீட்டிற்கு மறுபடியும் அழைத்து வந்து விட்டனர்.

இன்று முதலிரவு சடங்கு இருப்பதால் நித்யா சபரி இருவரும் இருந்து விட்டனர்.

கார்முகிலன் குடும்பமும் இப்போது பூவிழி வீட்டில் தான் இருந்தனர். ஏற்கனவே பேசி வைத்து இருப்பதால் இந்த வாரத்தில் பத்திரிகை அடிக்க கொடுத்தது வந்து விடும். அதனால் இப்போது தான் தேனருவி திருமணத்திற்கு நிறையப் பேர் அழைத்ததால் யசோதா நான் நெருங்கின சொந்தம் மட்டும் அழைத்துக் கொள்கிறேன்.

சம்மந்தி அது ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் எல்லோரையும் அழைத்து விடுங்கள். எங்களுக்கு ஒரே பையன் அதனால் நல்லா பெரிய மண்டபம் புடித்து இருக்கிறோமே என்று ஜவுளி எடுப்பது போன்றவைகளைப் பேசிக் கொண்டு இருந்தனர்.

பூவிழியை கார்முகிலன் மொட்டை மாடிற்குத் தான் அழைத்துச் சென்று இருந்தான்.

இளசுகள் இரண்டும் என்று அனைவரும் கொஞ்சம் கண்டும் காணாமல் தான் இருந்தனர்.

விழி மூன்று நாட்களாக நன்றாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பிரிய வேண்டும் என்று நினைத்தால் மனசுக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது.

ஹலோ அது தான் தினமும் போனில் பேசுகிறோம். அப்புறம் என்ன?

போடி மனுசனோட பீலிங்கே புரிய மாட்டீங்குது. எனக்கு தினமும் தேன்மிட்டாய் சாப்பிட ஆசையாக இருக்கிறது.

ஆசையாக இருந்தால் கடையில் வாங்கிச் சாப்பிடுங்கள் என்று சொன்னவளை வெட்டவா? கொட்டவா? என்று பார்த்தான் முகிலன்.

இந்த தேன் மிட்டாய் கடையில் எல்லாம் கிடைக்காது. உன்னிடம் தான் இருக்கிறது.

என்னிடம் ஆலாமிட்டாய் கூட இல்லை. இதில் தேன்மிட்டாய் எங்கே இருக்கிறது நீங்களே பாருங்கள் என்று கையை விரித்துக் காண்பித்தாள்.

வாடி என் பக்கத்தில் என்று அவளின் கன்னமிரண்டில் கை வைத்து அவளது அதரங்களை கொய்து இருந்தான். தேன் உறிஞ்சும் வண்டானான் பூவிழிக்கு முதலில் அதிர்ச்சி ஆனாலும் அவனது ஆழமான இதழ் கொய்தலில் பூவிழி சொக்கிப் போனாள்.

அவரின் பின்னந்தலையில் கையை வைத்து கோதிக் கொண்டு இருக்க அவனோ வாகாக இங்கிலீசு முத்தம் கொடுத்து அவள் மூச்சிற்கு எங்கும் போது தான் விட்டான்.

இப்போது புரிந்ததா தேன்மிட்டாய் எது என்று பூவிழியைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை தூக்கி இறக்கியவனின் செயலில் கிறங்கியவளை ஏய் உன் அறைக்குப் போகலாம் டி என்று அவளது அறைக்குள் அவளை நகர்த்திச் சென்று அவளது நெஞ்சில் சிறிது நேரம் தஞ்சம் அடைந்து விட்டு மறுபடியும் ஒரு இதழ் கொய்தலை முடித்து விட்டு பேசாமல் நாமும் இன்றே திருமணம் செய்து இருக்கலாம்.

ஏங்க அப்படிச் சொல்கிறீங்க ?

உன்னை இப்போது விட்டுச் செல்ல வேண்டும். ஆனால் திருமணம் முடிந்து இருந்தால் உன்னோடே நான் இங்கே இங்கே இப்படி தொட்டால் கூட யாரைக் கண்டும் பயப்பட வேண்டியதில்லை.

இப்போது மட்டும் என்ன பயந்து கொண்டு எதுவுமே செய்ய வில்லையா?

நான் என்னடி செய்தேன். இங்கே தொட்டேனா? என்று அனைத்து இடங்களிலும் கை கொண்டு லீலைகள் செய்தான்.

அது தான் எல்லா இடங்களிலும் விளையாடுகிறீங்களே போதும் இன்னும் மூன்று மாதம் தானே இப்போது எழுந்து கொள்ளுங்கள் என்று அவனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துச் சென்றாள்.

பூவிழி கார்முகிலன் இருவரையும் பார்த்து இத்தனை நேரம் இரண்டு பேரும் எங்கே போனீங்க என்று கேட்க என்ன பதில் சொல்வாங்க.. அவர்கள் திருத்திரு என்று விழிக்க.. உடனே சுதாரித்தவள் பூவிழி தான் நம் வீட்டைச் சுற்றி
பார்தாதோம். என்னங்க அப்படி தானே என்று அவனின் காலில் ஒரு மிதி வைத்தவள். ஏனுங்க ஏதாவது வேலை இருக்கிறதா?

ஆமா தேனருவி அறையில் இந்தப் பூக்களை வைத்து அலங்காரம் செய்து விடுகிறீர்களா? இரண்டு பேரும் என்று சொல்ல இப்போது கார்முகிலனுக்குத் தான் கொண்டாட்டம் ஆனது..

அத்தை நீங்க கவலையே படாதீங்க நான் சூப்பரா டெக்ரேசன் செய்வேன் என்று கூறியவன் இப்போது பூவிழியின் கையைப் பிடித்து இழுத்து கொண்டு சென்றான்.

கண்ணா லட்டு திங்க ஆசையா? அதுவும் இரண்டு லட்டு திங்க ஆசையா என்று மனதில் தில்லானா பாடிக் கொண்டு சென்றான்.

கையை விடுங்க அதெல்லாம் எனக்கும் எங்கள் அக்கா அறை எங்கே இருக்கிறது என்று தெரியும் என்று சொன்னவளைப் பார்த்து.. நீ எஸ்கேப் ஆகி விட்டால் என்ன செய்வது? அது தான் இப்போது கையோடு கைசேர்த்து இழுத்துட்டுப் போகிறேன்.

ஹலோ அவுங்களுக்குத் தான் போஸ்ட் நைட் நமக்கு இல்லை.

ஏன் நாமும் கொண்டாடுவோம் என்று சொன்னவன் அவளின் முறைப்பில் இப்போது இல்லைடி செல்லம் அது தான் நடுவில் தொன்னூறு நாட்கள் இருக்கிறதே. ரொம்பக் கவலையோ?

பின்னர் இருக்காதா? லட்டு மாதிரி பொண்ணு பக்கத்தில் இருக்கும் போது அதை ஆசைதீர கண்ணில் மட்டும் பாரு கையில் தொடாதே என்றால் இந்தக் கன்னிப்பையன் மனசு தாங்குமா? துடிக்கும்ல என்று தனது நெஞ்சைப் பிடித்துகீ கொண்டு இல்லாத கண்ணீரைத் துடைத்தான்.

இரண்டு பேரும் கிண்டலும் கேலியும் பேசிக் கொண்டு அந்த அறையை அலங்கரித்தனர். தனது செல்போனை எடுத்து ஒரு செல்ப்பி எடுத்துக் கொண்டான்.

சரி வாங்க நாம கீழே போகலாம் இங்கே இருந்தால் இதற்கு மேல் சரிப்பட்டு வராது என்று நகர்ந்தவளை இழுத்து சுவற்றோடு சாய்த்தவன் அவனது உடலின் எடையை மொத்தமாக அவளின் மென்மைகள் அவனுள் புதையும் அளவிற்கு இறுக்கி அனைத்தவன் இப்போது மென்மையாக ஒரு இதழ் தீண்டலோடு அவளது நாபிக் கமழத்தில் தன் விரல் கொண்டு விளையாட பெண்ணவளால்
உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் விட்ட இதழ் ஒற்றிகையை அவள் திருப்பிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

இப்போது தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்தியவர்கள் உடைகளை சரிபடுத்திக் கொண்டு வெளியே வந்தனர்.

முதலில் பூவிழி கீழே சென்ற பத்து நிமிடம் கழித்து கார்முகிலன் கீழே வந்தான்.

கீழே வந்ததும் தன் அப்பா அம்மாவை பார்த்து இனிக் கிளம்பலாம் என்று கூறினான். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாலும் தன் மனது தன் சொன்னபடி கேட்காது என்பதை உணர்ந்து தான் இப்போது அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

சாப்பிட்டு போகலாம் ல என்று யசோதா சொல்ல இல்லைங்க அவசர வேலை வந்து விட்டது. நான் போக வேண்டும் என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.

பூவிழிக்குத் தான் அவன் சென்றதும் தனது அறைக்குள் சென்று ஏன் உடனே கிளம்பி போய் விட்டார். ஒருவேளை நானாக முத்தம் கொடுத்ததால் தான் என்னைத் தவறாக நினைத்து விட்டாரோ? என்று கலங்கித் தவித்து விட்டாள்.

கார்முகிலனின் செல்லுக்கு அழைப்பு விடுத்தாள். அவனும் அவள் அழைப்பதைப் பார்த்து சிரித்து விட்டு பயந்து விட்டாளா? ராட்சசி இருடி செல்லம் வீட்டிற்கு போய் அழைக்கிறேன் என்று வந்த போனை அட்டண் செய்ய வில்லை..



தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top