Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 376
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 90
பாகம் - 90
தேவகோட்டை விநாயகர் கோவிலில் சாமி அலங்காரம் செய்து தயாராக இருந்தது.
மணமக்கள் இருவரும் கீழே இறங்கியவுடன் திருமணத்திற்கு வராதவர்கள் அழகு தேவதையா இருக்கிறாங்க பொண்ணு என்று பேசிக் கொண்டனர்.
நம்ம ஊரு ராசாவைக் கட்டிக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டனர்.
மணமக்கள் இருவரும் அரசமரத்து விநாயகரை தரிசித்து விட்டு ஆலயத்திற்குள் சென்றனர்.
அவர்களுக்கு முன்தாகவே மினி பேருந்தில் வந்தவர்கள் பூசைப் பொருட்களை கொடுத்து இருந்தனர். அதனால் தான் அகங்காரம் ஆகி இருக்க இப்போது பூசை ஆரம்பித்து.தீபாதரனை காண்பித்து விட்டு
தேவ் ஆனந்த் தேனருவி இருவரின் பெயருக்கும் அர்ச்சனை செய்து மறுபடியும்
தீபாராதனை காண்பித்து விட்டு விபூதி கொடுத்து தேங்காய் பழம்
மாலை அடங்கிய பிரசாத கூடையைப் பெற்றுக் கொண்டு.,
இப்போது தேவகோட்டை அரண்மனை நோக்கி அனைவரும் சென்றனர்.
அண்ணி ஆராத்தி ரெடியா என்று கேட்டுக் கொண்டே கவிமகிழினி,
ஜெஜெ இருவரும் வீட்டிற்குள் சென்றனர்.
மணமக்கள் வாசலில் நின்று இருக்க இருவரும் ஆராத்தி எடுத்ததும். ஒரே மாதிரி இருவரும் வலது கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் சென்றனர்.
பூசை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கு ஏற்ற வைத்து விட்டு பிறகு சமையல் அறையில் உப்பு , புளி, ஆகியவற்றில் மருமகள் கை வைக்கச் சொல்லி விட்டு. ,அடுத்த வேலையாக ஒரு வெள்ளிக் குடத்தில் இரண்டு மோதிரங்களைப் போட்டு எடுக்கச் சொல்ல.. நேரம் கடந்தது ஆனால் இருவரும் எடுத்த மாதிரி தெரியவில்லை.
அண்ணா ,அண்ணி நீங்க இரண்டு பேரும் சேரந்து தங்கத்தையும் வெள்ளியையும் கையாலே கரைத்து விட்டீர்களா? அது தான் குடத்தில் இருக்கும் தண்ணீர் கலர் மாறி விட்டது என்று எமி கிண்டலாகச் சொல்லவும். அதில் தான் அதிர்ச்சியாகி இருவரும் ஆளுக்கொரு மோதிரத்தை எடுத்து இருந்தனர்.
இதே போல் மூன்று தடவை எடுக்க வேண்டும் என்று அங்கு இருந்த முதிய பெண்மணி சொல்ல?!!
என்ன? மூன்று தடவையா? அப்படீனா இந்த போட்டி இரவு வரைக்கும் பாட்டி என்று எமி சொல்ல..
ஏன் அப்படி சொல்கிறீங்க என்று தேனருவி கேட்க.
அண்ணி நீங்க தான் குடத்து தண்ணீரில் மீன் பிடிக்க புதுசா வலைபோட்டு பழகிறீங்களே அது தான் அவ அப்படிச் சொல்கிறாள் என்று விமலா சொல்லவும் தான் தேனருவிக்கு அவுங்க நம்மளை கிண்டல் அடிக்கிறாங்க என்று புரிந்து கொண்டு இது தெரியாமல் அவர்களிடமே கேள்வி கேட்டு இருக்கிறோமே என்று தான் நினைத்து தலையைக் குனிந்து கொண்டாள்.
ஆனால் தேவ் ஆனந்த் தான் அவளது கையை மேலே எடுக்கவிடிமல் உள்ளே விளையாடிக் கொண்டு இருந்தான்.
ஆனால் அடுத்த இரண்டு தடவையும் சீக்கிரம் எடுத்து விட்டனர்.
அடுத்ததாக மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்கப் பட்டது.
ங்கைக்கு சர்க்கரையையும் வாழைப்பழம் இரண்டையும் தலைவாழை இலையில் பிசைந்து மூன்று வாய்கள் தங்கைக்கு கொடுக்க.. அதே போல் தேனருவியும் தனது அண்ணனுக்கு மூன்று வாய் கொடுக்க அத்தோடு மாப்பிள்ளை வீட்டில் செய்யும் சீர் முடிந்தது.
அதற்குள் வந்தவர்கள் அனைவருக்கும் இனிப்பும் காரம் கொடுக்கப்பட்டது. பிறகு அனைவருக்கும் காஃபி கொடுத்தனர்.
அதற்குள் அனைவரும் வீட்டைச் சுற்றிப் பார்த்து வந்தனர்.
தேவ் ஆனந்த் தேனருவி யை அவனது அறைக்குள் அழைத்துச் சென்றான். உள்ளே சென்றதும் வேகமாக கதவைத் தாள்போட்டவன்.. அவளை தன்னோடு இறுக்கி அனைத்தான். ஹேய் பொண்டாட்டி நம் அறைக்கு உன்னை வரவேற்கிறேன் என்று கூறினான்.
மாமா சேரி எல்லாம் கசங்கி விட்டது. இப்போது உங்கள் தங்கச்சிங்க பார்த்தா கிண்டல் அடிப்பாங்க என்று சொல்லவும் அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டாங்க வா போகலாம் என்று அவன் அவளை அழைத்து வந்தான்.
என்னங்க மாப்பிள்ளை அதற்குள் பொண்ணை கடத்தி விட்டீங்க என்று ஒரு பெண்மணி கேட்க.
ஆதிரா தான் பாட்டி நீங்க சொல்வது மாதிரி இத்தனை நாள் அவுங்க பொண்ணா இருந்தாங்க இப்போது அவுங்க மனைவி ஆகிட்டாங்க அதனால் அவருக்கு தான் அவுங்க ரொம்ப உரிமை இருக்கிறது.
சரி நேரமாகுது பொண்ணு வீட்டிற்குப் போய் விட்டு பனிரெண்டு மணிக்குள் மறுசரடு போடவேண்டும் எல்லாரும் கிளம்புங்க எப்படி இருந்தாலும் பொண்ணு மாப்பிள்ளை அழைப்பு இருக்கிறது. அதனால் இன்னும் ஒரு தடவை இங்கே வந்து தான் ஆக வேண்டும் என்று அனைவரும் அழைத்துக் கொண்டு இப்போது பூவரசங்கோட்டை விரைந்தனர்.
தேனருவியின் தோழிகள் சில்பா மலர்க்கொடி இருவரும் திருமணத்திற்கு வரமுடியாத காரணத்தால் பூவரசங்கோட்டைதேனருவி வீட்டிற்கு வந்து இருந்தனர்.
அங்கே நித்யா அவர்களும் மங்கை அவர்களும் ஆராத்தி எடுக்க அதன் பிறகு அங்கேயும் பாலும் பழமும் கொடுக்கப் பட்டது.
தேனருவி இப்போது தனது தோழிகள் இருவரையும் நல்லா தலையில் கொட்டி விட்டு ஏண்டி இது தான் நீங்கள் இரண்டு பேரும் திருமணத்திற்கு வரும் நேரமா? போங்கடி உங்களை எத்தனை எதிர்பார்த்துக் காத்து இருந்தேன் தெரியுமா?
இதை நாங்கள் நம்ப வேண்டுமா? போடி கிளாஸ் ரூம்ல அதுவும் சார் பாடம் நடத்தும் போதே நாங்க உன் கண்ணுக்குத் தெரிய மாட்டோம். இதில் சார் கூட மணமேடையில் நிற்கும் போது நீ எங்களைத் தேடுவாய்? இதை நாங்கள் நம்ப வேண்டுமா?
அதெல்லாம் அண்ணிங்க அக்காங்க நாங்கள் வந்ததும் சொல்லி விட்டாங்க செமயா இருந்ததாம் எல்லா நிகழ்ச்சியும் நாங்க தான் மிஸ் செய்து விட்டோம். என்ன? செய்வது!! கடைசி நேரத்தில் டிரெயின் கேன்சல் ஆகி விட்டது என்று கூறி வருத்தத்தை தெரிவித்தனர்.
ஏன் பாப்பா நீங்கள் எல்லாரும் வெளியூரா?
இல்லைங்க அம்மாத்தா நாங்கள் பக்கத்து ஊர் தான் வேலையில் இருக்கிறோம் வெளியூரில் அது தான் எங்களால் வரமுடியவில்லை.
சரி இப்போது எல்லோரும் மண்டபத்திற்கு தான் போறாங்க அங்கே போய் ஆசை தீர போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் சரியா?
என்ன நித்யா வானதி கிளம்பலாமா? என்று அனைவரும் திரும்பவும் மண்டபம் சென்றனர்.
அங்கே சென்று போட்டோ மறுபடியும் குடும்பம் குடும்பமாக குரூப் போட்டோ எடுத்தனர்.
பிரதிலிபி சொந்தங்கள் அனைவரும் மேடையில் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
பூவிழிக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்கிறது. இவர் தான் மாப்பிள்ளை இன்னும் மூன்று மாதத்தில் அவளுக்கு கல்யாணம்.
மாப்பிள்ளை செம ஸ்மார்ட் ஆக இருக்கிறார். பூவிழி இன்னும் படிப்பு முடிக்கவில்லை எப்புடி அதற்குள் திருமணம் படிப்பு தடைபடாதா??
ஏய் லூசு மாதிரி பேசாதேடி மாப்பிள்ளை காதில் விழுந்து விடப் போகிறது என்று மலர்விழி ஹஸ்கி வாய்ஸில் சொல்லவும்.
உங்களுக்கு அந்த டவுட்டே வேண்டாம். எங்கள் வீட்டில் இருந்து அங்கே எங்கள் கல்லூரியில் ஜாயிண்ட் செய்து கொள்வாங்க பூவிழி என்று சொல்லவும்.
நீங்களும் கல்லூரி வைத்து இருக்கிறீர்களா? என்று இப்போது ஆச்சரியப்பட்டனர். யசோதாவின் சொந்தக்காரர்கள். அதுவும் தேனருவியைக் கட்டியது தேவகோட்டை ஜமீன்தார் பேரன் என்று தெரிந்ததும் நிறையப் பேருக்கு பொறாமையில் வெந்தனர்.
இப்போது இரண்டாவது பொண்ணுக்கும் நேற்று நிச்சயம் நடந்து விட்டது என்று பொறுமிக் கொண்டு இருந்தனர். இதில் அவர்களும் பணக்காரங்க அதுவும் மதுரையில் என்று தெரிந்ததும் கொஞ்சம் பொறாமை இருந்தது. இப்போது அவர்களும் கல்லூரி எல்லாம் வைத்து இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் அதிகமாக அவர்கள் முகத்தில் அப்பட்டமாக பொறாமை தெரிந்தது.
அதுக்கு நீங்கள் ஏன்? இவ்வளவு சாக் ஆகுகிறீங்க?
இல்லை அதெல்லாம் அதிர்ச்சி ஆகவில்லை. பரவாயில்லை யசோதா புருசன் செத்து இருந்தாலும் பெண்ணுகள் இரண்டு பேருக்கும் வசதியான மாப்பிள்ளை பார்த்து விட்டாள்.
கமலா தான் நீங்க இப்போது மகிழ்ச்சியாக சொல்கிறீர்களா? இல்லை நல்லா வயத்தெறுச்சல் கொள்கிறீர்களா??
அய்யோ கமலா நீ என்னைப் பார்த்து பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது. நீயே ஒரு மலடி என்று சொல்ல, கமலாவிற்கு அழுகையே வந்து விட்டது.
அம்மா என்று அத்தனை பெண்களும், நாங்க இருக்கிறோம். நீங்கள் எதுக்கு அழுகிறீங்க நீங்கள் பெற்று இருந்தால் உங்கள் வயிற்றில் ஒரு பெண் மீறிப் போனால் இரண்டு பேர் தான் மகளாக கிடைத்து இருப்பார்கள்.
உங்களுக்கு இப்போது நாங்கள் எல்லோரும் மகள்கள் தான் என்று அனைவரும் வந்து அனைத்துக் கொள்ள.. கமலா அம்மாவிற்கு அத்தனை மகிழ்ச்சி.
இங்கே பாருங்க ஆண்ட்டி நீங்க யாருங்க அவுங்க மனசைக் காயப்படுத்த என்று இப்போது அனைவரும் சண்டைக்கு போக.
என்ன? கமலா இவுங்க நாளைக்குப் போய் விடுவாங்க. ஆனால் நான் தான் உன் பக்கத்தில் எல்லா விசேஷத்திலும் இருப்பேன்.
எதுக்குங்க ஆண்ட்டி இப்படி குத்திக் காண்பிக்கவா? என்று அனைவரும் அவரை ரவுண்ட் கட்ட. இது என்ன எல்லோரும் என்னைத் திட்டுகிறாங்க யசோதா? வேடிக்கை பார்க்கிறாயா? உன்ற வூட்டுக்கு கூப்பிட்டு விட்டு அவமானப் படுத்துகிறாயா? என்று மற்றொரு சண்டையை ஆரம்பிக்கவும்.
அப்பா சுத்தமா முடியல இப்படி கூடவா பெண்கள் இருப்பாங்க என்று தோழிகள் பேசிக் கொள்ள யசோதா தான் கிராமம்கிறதாலா இப்படி தான் மா இருக்கும்.
அதை எல்லாம் கண்டும் காணாமல் போய் விடுவோம். நாங்க திரும்ப திரும்ப மறுபடியும் வேற விசேஷம் நல்லதுகெட்டது எல்லாம் கலந்து தான் ஆகவேண்டும் மா அது மனசில் எதுவும் காரம் இருக்காது.
இது அத்தனையும் பொண்ணு மாப்பிள்ளை போட்டோ சூட் எடுக்கும் வரை நடந்தவைகள் விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்தாச்சு பொண்ணு மாப்பிள்ளை அழைத்து வாங்க மறுசரடு போட்டு விட்டு வந்துவிடலாம் என்று அனைவரும் இப்போது மண்டபத்தில் இருக்கும் விநாயகர் கோவில் சென்றனர்.
சாமி முன்பு வைத்த மஞ்சள் சரடு எடுத்து இப்போது மாப்பிள்ளை கையில் கொடுக்க மறுபடியும் தேனருவி கழுத்தில் மறுசரடு கட்டினான்.
இது என்ன காலையில் ஒரு தடவை தாலி கட்டி விட்டு இப்போது மதியம் ஒரு தடவை தாலி கட்டுகிறார் மாப்பிள்ளை.
இது மறுசரடு மா எங்கள் ஊரில் இது தான் தாலி மாதிரி கொஞ்ச நாள் போனால் தாலி யைக் கொடியில் கோர்த்து போட்டு விட்டு மறுசரடு எப்போது கழுத்தில் இருக்கும்மா என்று ஒரு அப்பத்தா கூற.
தேவ் ஆனந்த் தேனருவி கழுத்தில் கட்டி முடித்து விட்டு அனைவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
அனைவரும் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டு விட்டு இப்போது மதியம் சம்மந்தி
விருந்து சாப்பிடச் சென்றனர்.
தொடரும்...