Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 371
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 89
பாகம் - 89
உலகத்துல யாருக்குமே இது மாற ஒரு எஸ் கார்டு கெடச்சி இருக்காது.
எதை வைத்து தலைவர் அப்படி சொல்றீங்க?
பின்ன என்னடா எலும்புக்கூடு நம்மள சுத்தி ரவுண்டு கட்டிடுச்சு பாத்தியா இது மாதிரி ஒரு எஸ்கார்ட் யாருக்கு கிடைச்சிருக்கு பாதுகாப்பு என்றால் பாதுகாப்பு தான் நம்ம வெட்ட துணிய யாருமே நெருங்க முடியாது.
முதல்ல நம்மளுக்கு உயிர் இருக்கு தானு பார்க்கலாம்டா. அப்புறம் தான் நம்ம கிட்ட யாரு நெருங்க முடியுதா இல்லையான்னு தெரியும்!!.
அதெல்லாம் ஒன்னும் இல்ல தலைவரே நானும் கூட இத்தனை நாள் ஆறு விரலில் நம்மளுக்கு எந்த அதிர்ஷ்டமும் இல்லை நினைச்சேன். ஆனா இப்போ ஒன்னும் உறுதியா தெரிஞ்சிட்டேன்.
அப்படி என்னடா தெரிஞ்சுட்ட?!!
இந்த ஆறு விரல் அதிர்ஷ்டம் தாங்க தலைவரே நம்மளுக்கு எலும்பு கூடு பிசாசு சாத்தான எல்லாமே துணை நிற்கிறது .
நாம் எப்பவுமே ஜெயிக்கப் போறேன் இந்த உலகத்தையே என்ற கைக்குள்ள கொண்டு வந்துருவேன்.
அதை எப்படி எங்க தலைவரே கடல்ல அத்தனை தண்ணி இருக்குது உங்க கைக்குள் அடக்க முடியுமா?
டேய் ஏன்டா இப்படி புரியாம பேசுறீங்க ஒரு பேச்சுக்கு சொல்றத உடனே குறுக்கு கேள்வி கேட்கிறாய்.
கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம போச்சுடா!!?வரவர என்று கூறி காத்தவராயன் வாங்கடா இன்னும் உள்ள போய் பார்க்கலாம் என்று உள்ள சென்றனர்.
அங்கே நிழலா உள்ள போறீங்களா? போங்கடா... நீங்க வெளியிலேயே வர முடியாத அளவுக்கு இந்த குகை நான் அடைச்சு போடுறேன் நீ எல்லாம் இங்கேயே இருந்து சாகும் இங்க இருக்கிற எலும்பு கூடு பேய் எல்லாமே உங்களால பாதிக்கப்பட்டவங்க இந்தாண்டா இன்னையோட உங்களுக்கு கருமாதி என்று சத்தமாக சொல்லியது.
அப்போது உள்ளே சென்றவர்கள் என்னங்க தலைவரா நாம பேசறது நம்மளுக்கு எக்கோடிக்கிது.
ஏன்டா டேய் நம்ம மைக்ல பேசினாலே அதே எக்கோ அடிக்கிற பீல் கேட்டு கேட்டு உனக்கு இங்க வந்து உனக்கு அப்படித்தான் கேக்குது.
தலைவா எப்படியோ நீங்களும் நிறைய தவமாய் இருந்து எப்படியோ நீங்களே பிரதமராக இருங்கள் அப்புறம் எல்லாத்தையுமே நீங்க ஆளலாம் நீங்கதான் ராஜா இல்லை.
ஆமா இவனுக்கு பெரிய கூஜா கூட ஆக முடியாது இதுல ராஜா வாமா இவங்க பண்ற அலப்பறைக்கு இவனுங்கள இவ்வளவு பெரிய குகைக்குள்ள விட்டதுக்கு பதிலா ஒரு கூஜா குள்ள விட்டு அடச்சி வெச்சிருக்கணும்.
பூதம் இருக்குதே அது மாற அடஞ்சு கிடப்பானது என்று கூறிவிட்டு நிழலா அந்த குகையை வெளியில் இருந்து அடைத்து விட்டது.
இவனுங்கள பாத்துட்டு இருந்தா என்னோட தேனருவி திருமணத்தை பார்க்க முடியாது, என்று மண்டபத்துக்கு விரைந்தது அப்போது அனைவரும் எழுந்திருந்தனர் .
மாப்பிள்ளையை விநாயகர் கோயிலிருந்து அழைத்துச்சுட்டு வாங்க என்று சொல்லி தாட்டினார்கள்.
பூவிழி நீ போய் மாப்பிள்ளைக்கு கால் கழுவி விடு..
அங்கே தேவ் ஆனந்த் வந்ததும் வாசலிலே நிற்க வைத்து கால் அழகா கழுவி விட.
மாமா பணம் கொடுங்கள் என்று தட்டம் நீட்டிக் கொண்டு இருந்தால்.
தேவ ஆனந்த் மணவறையில் அமர்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தான்.
திருமண வைபோகம் ஆரம்பித்திருந்தது இப்போது மணப்பெண்ணை அழைத்து வரச் சொன்னார்கள்.
தேனருவி தேவதை போல் இருந்தால் தங்க நிற புடவையில் அத்தனை அழகாக இருந்தால்.
தன்னவளை விழியகளாது பார்த்துக் கொண்டிருந்தான். ஆனந்த் அடி மேல அடிவைத்து பட்டுப்பாதம் மெட்டு போட பாத கொலுசுகள் கீதம் இசைக்க நடந்து வந்தால் நாயகி நாயகனின் பக்கம் அமர்ந்து, அவளும் வந்தபின் இருவருக்கும் தெற்ப புல்லில் கையில் மோதிரம் போட்டுவிட்டால் ஐயர்.
இருவரையும் மந்திரங்களை ஓத சொல்லி பூஜையில் பொருட்களை கொடுத்தார் அக்கினி குண்டத்தில் போடச் சொல்லி இருவரும் அதே போல் செய்தனர் பிறகு திருமாங்கல்ய தட்டை எடுத்து பூவிழி இடம் கொடுத்து அட்சதை மஞ்சள் அரிசி அட்சதையோடு அவளும் அதை வாங்கிச் சென்று அனைவரிடமும் பொன் தாலியை ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வந்தால்.
நிழலா அங்கே தான் இருந்தது கண் குளிர இக்காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தது. தோழிகள் அனைவரும் இந்த நாளுக்காக தான் காத்திருந்தார்கள்.
அதேபோல் பூவிழியை வைத்த கண் வாங்காமல் கார்முகிலன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆசிர்வாதம் வாங்கிய பொன் தாலியை ஐயரிடம் கொடுத்ததும் அவரும் வாங்கி சாமியை தூக்கும் பிட்டு தேவானந்த் கையில் கொடுத்தார்.
அவனும் மனதெல்லாம் மகிழ்ச்சியாய் என்றென்றும் என்னோடு இறுதி மூச்சு வரை உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்று உறுதிமொழியோடு தன்னவளின் சங்கு கழுத்தில் பொன் தாலியை மாட்டி அதில் கோர்த்து இருந்த மஞ்சள் சரடை மூன்று முடிச்சு தான் அப்போது வேகமாக ஓடி வந்த ஆதிரா அண்ணா ஒரு முடிச்சு நாந்தம் போடுவேன் என்று கடைசி முடிச்சு போடும்போது மாப்பிள்ளையின் தங்கை என்ற ஸ்தானம் எடுத்து கடைசி முடி போட்டாள்.
ஐயர் சொன்னது போல் மஞ்சள் குங்குமம் வைத்தான் பொன் தாலிக்கு அதேபோல் பொண்டாட்டி நெற்றி வயிற்றில் தலையைச் சுற்றி குங்குமம் வைத்தான்.
இருவரும் எழுந்து கொள்ளச் சொல்லி மாலை மாற்ற வைத்தனர் இப்போது தான் விளையாட்டாக இருந்தது.
தேன் அருவி எளிதாக மாலை போட முடியவில்லை. தேவானந்த் வளர்ந்திருந்ததால் அவளால் எட்டி எட்டி போட முயற்சித்தால் தேவானந்த் குனிந்து, குனிந்து விடக்கூடாது என்று அவனின் தங்கைகள் சொல்லிவிட இப்போது தேனருவி தனக்கு எட்டாததால் என்ன செய்வது என்று விழித்திருக்க!
தேனருவியை நித்தியா சபரி நாதன் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் தூக்கி விட அவளும் தேவ் ஆனந்த் கழுத்தில் மாலையிட்டால் மூன்று முறை அதேபோல் மாலை மாற்றி விட்டு இப்போது இருவரின் சுண்டு விரலையும் கை கோர்வை துணியால் கட்டி மன வறையை மூன்று தடவை சுற்றிவர செய்தனர்.
அதன் பிறகு பெண்ணின் சகோதரனை அரிசி தாம்பூலத்தில் மாப்பிள்ளை கைகோர்வை செய்ய வைத்து மங்கள வாழ்த்து பொழிந்தார் மங்கள வாழ்த்து சொல்பவர்.
அது ஒரு மணி நேரம் நடந்தது அதை அனைத்தும் கூர்மையாக கேட்டவர்கள் அது முடிந்ததும் அனைவரும் இப்போது உணவருந்த சென்றனர்.
உணவருந்தும் போது மாப்பிள்ளை பெண்ணுக்கு ஊட்டி விடச் சொல்லி கிண்டல் செய்து கொண்டே இருந்தனர்.
வெட்கமாக இருந்தாலும் அதை செய்து தான் ஆக வேண்டும் அதேபோல் அனைத்தும் முடிந்தது நல்ல நேரம் முடிவதற்குள் மாப்பிள்ளை வீடு சென்று வர வேண்டும்.
அப்படியே பெண் வீட்டுக்கும் சென்று வர வேண்டும் அதனால் சீக்கிரமாக சென்றனர்.
கிருஷ்ணவேணி அம்மா சொன்னாங்க முதலில் பொண்ணுங்க எல்லாம் போய் அங்கே ஆராத்தி கரைச்சு வைங்க என்று கூறியவர் இருமா முதலில் விநாயகர் கோவிலுக்குத் தான் போக வேண்டும்.
சிவ கோவிலில் பூசாரிக்கு போன் செய்து சொல்லுப்பா எல்லாம் ரெடியாக வைத்து இருக்கச் சொல்லி முதலில் நேராக பெண்ணும் மாப்பிள்ளை இருவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று விட்டு பிறகு நம் வீட்டிற்கு போங்க என்று கூறியவர்.
கவிமகிழினி இங்கே வாமா இதில் சாமிக்கு மாலை வேட்டி துண்டு பூஜை சாமனங்கள் இருக்கிறது.
தேவிமா நீங்களும் வாங்க நாம் எல்லாரும் மாப்பிள்ளை வீட்டிற்கு போய் வரலாம்.
வானதி நீ முதலில் நம் வீட்டிற்கு போய் பூஜை அறையில் விளக்கேற்ற தேவையானதை செய்து வைத்து விட்டு அப்படியே சமையல் அறையில் உப்பு புளி அதில் எல்லாம் நீ பார்த்துக் கொள் வருகிறவங்களுக்கு இனிப்பு காரம் எல்லாம் உன் தலைமையில் பார்த்துக் கொள் என்று அனுப்பி வைத்தார்.
சரிங்க அத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். என்று கூறிய வானதி இப்போது விஜயலதாவை தான் பாவமாகப் பார்த்தால் அக்கா நீங்க போங்க நான் இங்கேயே இருந்து கொள்கிறேன் என்று விஜயலதா கூறிவிட்டாள்.
இரண்டு வீட்டிற்கும் போய் வந்த பிறகு தான் மறுசரடு போட முடியும் என்று சொல்லி அனுப்பினார்.
பொண்ணு மாப்பிள்ளை காரில் வர பிரதிலிபி தோழமைகள் அனைவரும் ஒரு மினி பேருந்தில் தான் சென்றனர்.
கிண்டலும் கேலியுமாக தேவி அக்கா தேவி அம்மா என்று பல குரல்கள் எப்படியோ? செம ஜாலியா இரண்டு நாளாக என்று சொல்ல, அம்மா இரண்டு நாட்கள் இல்லை மூன்று நாட்கள் என்று மெஹந்தி நாளையும் சேர்த்து சொல்லிக் கொண்டு இதுவரை நாங்கள் அனைவரும் எந்த ஒரு திருமணத்திலும் இத்தனை மகிழ்ச்சியாக ஒரே இடத்தில் தோழிகள் அனைவரும் கலந்து கொண்டதே இல்லை.
ஆமாங்க இது எதோ கனவு போல் தான் தோன்றுகிறது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊரில் இருக்கிறோம். கொஞ்சம் கூட நினைத்தே பார்க்கவில்லை. அனைவரும் இப்படி ஜாலியாக எழுத்தையும் மறந்துட்டு ச்சே வாழ்நாளில் மறக்கவே முடியாது.
ஆமாங்க நாங்க எல்லாம் நிழலா பார்த்துப் பேசினோம். நிழலா எங்கள் கோரிக்கை ஏற்று எங்களிடம் சகஜமாக பழகியது மகிழ்ச்சி அளிக்கிறது மா.
தேவிமா எதுக்கு கண்கலங்குகிறீங்க.. நாங்க இத்தனை பேரும் உங்களுக்கு மகளாக இருக்கிறோம். நீங்கள் சநாதோசமாக இருக்க வேண்டிய நேரத்தில் அழுகிறீங்க.
நான் கவலையில் அழுகலமா சந்தோசத்தில் தான் அழுகிறேன். நான் உங்களை எல்லாம் கதைக்குள் கொண்டு வந்துட்டேன். ஆரம்பத்தில் சும்மா தான் விளையாட்டு போல் செய்தேன்.
அப்புறம் நீங்கள் எல்லாரும் கேரக்டர் ஆகவே மாறிவிட்டீங்க. அது தான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது மா.
அதெல்லாம் பார்த்துக்கலாம் என்று அனைவரும் தோலில் தட்டிக் கொடுத்தனர்.
தேவகோட்டை ஊருக்குள் நுழைந்ததும் விநாயகர் கோவில் ஊரின் மத்தியில் அழகாக அமைந்து இருந்தது.
அங்கே கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
தான் வாழவந்த வீடு ஏதாவது தன் வீடு போல் இருக்கும் என்று நினைத்து இருக்க ஏதோ பேலஸ் முன் நிற்க தேனருவிக்கு பயம், அவளும் பயத்தோடு தேவ் ஆனந்த் பின்புறம் ஒளிந்து கொள்ள. அவளைத் தன் தோளோடு அனைத்தவன் அவளைத் தன் தேவதை என்ற நோக்கில் அவளைத் தனது அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான்.
கொஞ்சம் நில்லுங்கள் அண்ணா ஆராத்தி சுத்திய பிறகு போகலாம்.
ஆராத்தி சுத்திய பிறகு வலதுகாலை எடுத்து வைத்து என்று சொல்லி விட்டு இப்போது தேனருவி நேராக பூஜை அறைக்குள் அழைத்துச் சென்றாங்க வானதி.
தொடரும்...