Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 370
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 88
பாகம் - 88
என்ன தம்பி நானே போட்டோ சூட் முடித்து வந்து விட்டேன். நீ இப்போது தான் டூயட் முடிந்து வருகிறாயா?
போங்க தலை உங்களுக்கு என்ன நாளைக்கு காலையிலே எங்க அண்ணி கையைப் பிடித்து விடுவீங்க நானெல்லாம் இன்னும் மூன்று மாசம் தொன்னூறு நாட்கள் காத்திருக்க வேண்டும். ஒரே ஒரு முத்தம் தான் கேட்டேன். அதற்கு எப்புடி அடிச்சுப்போட்டோ தெரியுங்களா?
அது தான் தெரியுதே?
பார்த்தீங்களா? உங்களுக்கே தெரிந்து இருக்கிறது. என்ன இருந்தாலும் நீங்கள் அவளோட வாத்தியார் தானே!!
வாத்தியாரா இருந்தா? இது எல்லாம் நாங்க கல்லூரியில் சொல்லித் தருவதில்லை. ஆனால் உன்னைப் பார்த்தால் சேதாரம் அதிகமோ?
ஆமாங்க ப்ரோ இராட்சசி எத்தனை கெஞ்சி காலில் விழுந்து ஒரே ஒரு முத்தம் தான் கொடுத்தா? அதுவும் வெச்சமாயம் தெரியவில்லை உடனே எடுத்துட்டா?
ஓகோ நீ சொல்வதை நான் நம்பவேண்டுமா? சரி வா இங்கே பாரு ப்ரோ..
ஏன் ப்ரோ என்னைக் கண்ணாடி முன்னாடி நிற்க வைக்கிறீங்க? நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா?
அது என்ன என்று நீங்களே பார்த்துச் சொல்லுங்க ப்ரோ செம கில்லாடி நீங்க தான்.
அப்போது தான் தன் முகத்தை பார்த்தான். அவளது லிப்ஸ்டிக் அப்படியே சாரோட இதழில் ஒட்டி இருக்க, நெஞ்சில் சட்டை மேல் இதழ் ஒற்றிகை அச்சாக இருக்க..
அண்ணா சும்மா கொஞ்சமா ட்ரையல் தான் பார்த்தேன். என்று சொல்ல நான் நம்பிட்டேன் ப்ரோ..
நிஜம் தான் ப்ரோ இது செமயா முதுகில் டின் கட்டிய பிறகு தான் கிடைத்த கிப்ட் என்று தன் முதுகை தேய்த்து விட்டுக் கொண்டே சொல்லவும்..
நீ செய்தி சேகரிக்கும் ஆள் எப்படி போட்டு எப்படி வாங்கும் டெக்னிக் தெரியும் ராஜா என்று தேவ் ஆனந்த் சிரிக்கவும்.
இந்த டெக்னிக் எல்லாம் அவள்கிட்ட வேலையாகாது ப்ரோ எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி இல்லை.
எப்படி டிசைன் டிசைனா? யோசிக்கிறாங்க எந்த பால் அடித்து விட்டாலும் சிக்ஸ் பவுண்ட்ரி அடிக்கிறாங்க ப்ரோ.!!
தேவ் ஆனந்த் சிரித்தான்.
என்ன? ப்ரோ நான் என்ன? கதையா சொல்கிறேன்.
சகலை உனக்கு ஒன்னு தெரியுமா?
வாத்தியாரே இங்கேயும் லெசனா?
லிசன் ப்ரோ என் ஆளு எல்லாம் பூவிழி அளவுக்கு விவரம் இல்லை. ஒரு விஷயம் சொல்வதற்கு சுத்திச் சுத்தி க்ளூ சொல்லுவா?
என்னங்க ப்ரோ வெரி இன்ட்ஸ்டிரிங்.. சொல்லுங்க என்று வாகாக அமர்ந்து கொண்டான்.
ஹலோ நான் என்ன? கதையா? சொல்கிறேன். என்று அன்று முதன்முதலில் பெயரென்ன என்று கேட்டதிற்கு சொன்னாலே காட்டில் மரத்தில் தொங்கும்..
நான் கூட காட்டில் மரத்தில் குரங்கு தானே தொங்கும் என்று கேட்டேன். கொஞ்சம் கூட கோபமே வரவில்லை.
உடனே அடுத்த க்ளூ பூக்களில் இருக்குமே அதை உறிஞ்சி கொண்டு போய் சேகரிக்குமே அதற்கு என்ன பெயர்? அப்படிங்கிறா..
சரி தேன்மொழியா என்று கேட்கிறேன். அதில் பாதி இன்னொரு க்ளூ கொடுக்கிறேன் கண்டு பிடியுங்கள் என்று சொல்கிறா?
சரி சொல்லு நான் கண்டுபிடிக்கிறேன். என்று சொன்னதும்..
மலைக்கு நடுவில் பாய்ந்து வருமே அது தான் என்று சொல்கிறாள்.
ஓ நீர்வீழ்ச்சியா?
இல்லை அதை வேறு மாதிரி சொல்வோமே என்று சொல்கிறாள்.
அருவியா?
ஆமாம் இப்போ முதல் பாதியும் இப்பக் கண்டுபிடித்த பதிலையும் சேர்த்துச் சொல்லுங்க அது தான் என் பெயர்.
தேனருவி இதுவா உன் பெயர்?
ஆமாங்க சார் இது தான் என் பெயர். ஆமா உங்க பெயர் என்ன?
என்ன நீங்க யார் என்று தெரியாமலே இத்தனை டயலாக்கா.. நீங்க என்ன சும்மா கை பட்டு ராங்க் நம்பர் போய் விட்டதா?
இல்லையே அவள் என் ஸ்டூடண்ட் தான் நான் தான் அவுங்க நம்பர் வாங்கினேன். ஆனால் இந்தப் பக்கி அவள் அம்மா நெம்பர் கொடுத்தா இவள் செய்த தில்லுமுல்லு வெளியே தெரிந்து விடும் என்று அவளோட நெம்பர் எனக்கு கொடுத்து இருக்கிறாள்.
நான் போன் செய்யவும் யாரோ? ராங்க் நம்பர் என்று தான் அத்தனை விளக்கம்.
அப்புறம் நீங்க யார் என்று சொன்னீங்களா?
அதையேன் கேட்கிறீங்க நான் அப்பவே அவளிடம் ப்ளாட் ஆகிட்டேன்.
இருந்தாலும் அவளிடம் பேச்சு வளர்க்க ஆசைப்பட்டு நான் உன் வகுப்பு ஆசிரியர் என்று சொன்னதும் தான் தாமதம்..
வாத்தி சார் என்று அப்படியே பேச்சில் அத்தனை மரியாதை கூடிப் போச்சு..
இது தான் உங்கள் அம்மா நெம்பரா என்று கேட்டதிற்கு என் அம்மாவிடம் போன் இல்லை என்று சொல்லி விட்டாள்.
அப்படியே பேசிப் பேசி அப்புறம் வீட்டில் என் அண்ணா விடம் சொல்லி அரேஞ்சுடு மேரேஜ் மாதிரி ஆகி விட்டது.
செம சூப்பர் போங்க உங்களுக்கு திருமணத்திற்கு முன்பு இத்தனை ஸ்வீட் மெமரீஸ் இருக்கிறது. ஆனால் எனக்குத் தான் எதுவுமே இல்லை.
உன் ஆளு இலேசுபட்டவள் இல்லை, தம்பி என் ஆளு கூட வம்பிழுத்துக் கொண்டு பயப்பட வைத்துக் கொண்டு இருப்பாள்.
அது தான் உனக்கு உன் ஆளு கூட முதல் மீட்டிங்கிலே தெரிந்து இருக்குமே..
நீங்க ஏங்க ப்ரோ வில்லன் சார் என்று தான் கூப்பிட்டா.. ஆனால் அண்ணி செம ரகளை செய்தாங்க ஆனால் நீங்க தான் என்று தெரிந்த பிறகு இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா? என்று இருந்தாங்க.
நான் கூட அவுங்க பயந்ததைப் பார்த்து நீங்கள் ஏதோ போலீஸோ என்று நமக்கு இன்றைக்கு டின் தான் என்று பயந்தேன்.
நல்லவேளை தலை நீங்கள் வந்து என்னைக் காப்பாற்றுனீர்கள் ஆனாலும் குருட்டு தையரித்தில் வாயாலேயே மிரட்டல் விடுவாங்க உங்க ஆளு. செம ப்ரோ.
சரி தூங்கலாம் ப்ரோ நாளைக்கு இரவு நீங்கள் எப்படி இருந்தாலும் கண் விழிக்க வேண்டும் அதனால் இப்போதே நல்லா தூங்கி எழுந்து கொள்ளுங்கள்.
நாளைக்கு தூங்குவதற்கு என்ன?
வாத்தியாரே நடிக்காதீங்க உங்களுக்கு ஒன்றுமே தெரியாது நான் நம்பிவிட்டேன். வாழ்நாளில் மறக்கக்கூடிய நாளா? அது சரி குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ். என்று கூறிவிட்டு இருவரும் தூங்கினார்கள்.
வனிதாவை மறுபடியும் அரண்மனையில் அவளது அறையில் பெட்டில் படுக்க வைத்து விட்டு நிழலா அவளுக்கு நாளைக்கு காலையில் எழுந்து கொள்ளும் வரை ஆழ்ந்த நித்திரைக்கு ஒரு பொடியை அவளின் மூக்கின் அருகில் வைத்து விட அவளும் தூக்கக் கலகத்தில் அதை உறிஞ்சி விட அப்படியே சொக்கிப் போனால்.
அவ்வளவு தான் பார்ட்டி டமால் தான் நாளைக்கு திருமணம் முடித்து வரும் வரைக்கும் எழுந்து கொள்ளவே மாட்டாள். என்று கூறிவிட்டு இப்போது தான் நிம்மதியாக வெளியே வந்தது.
ஆறுவிரல் அலறுதுகள் எல்லாரும் குகைக்குள் சென்றது.
தலைவரே இங்கே எதுக்குங்க தலைவரே வந்து இருக்கிறோம்.
நமக்கு கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் அதிகமாகி விட்டனர். அதனால் நாமும் இதோ இங்கு இருக்கும் காளியை வேண்டி தவம் இருப்போம் என்று ஆறுவிரல் சொல்லி விட.
என்னாத் தலைவா? தமாசு கிறாயா? அது எப்படி இந்த இடத்தில் ஒரு வசதிகூட இல்லை. காலையில் பில்டர் காஃபி குடிப்பதில் ஆரம்பித்து இரவு தூங்கும் வரை எப்படி உங்களால் சமாளிக்க முடியும்.
அதற்கு தான் நீங்கள் இருக்கிறீர்களே நீங்கள் எல்லாரும் சேர்ந்து என்னைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
இல்லைங்க தலைவரே எனக்கு வீசிங் இருக்குது. இங்கே இவ்வளவு சில்லுனு இருக்கிறது. என்னால் முடியாது. நீங்கள் வேண்டும் என்றால் இங்கே தவம் இருந்து வரம் வாங்கிட்டு வாங்க.
அல்லக்கைகளே நீங்கள் எங்கே போவீங்க.. நீங்க வரும் வரைக்கும் உங்கள் பதவியில் இருந்து கொள்கிறேன் நான் என்று ஒருத்தனும், உங்கள் மனைவி ஏங்கிப் போவாங்க அதனால் நான் அவுங்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்று ஒருத்தனும்.. தலைவா உன் சொத்து எல்லாம் பராமரிப்பு செய்து கொள்ள வேண்டும் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூற.
நிழலா இவர்கள் குகையில் உள்ளே செல்வதைப் பார்த்து விட்டு வந்து இப்போது சிரித்தது. அங்கே நிறைய நிழல் பேய்கள் இருந்தது. நிழலா வந்ததை அறிந்த நிழல்கள் மார்ச்பாஸ்ட் நடத்தியது.
ஆறுவிரல்களுக்கு வெறு சத்தம் மட்டுமே கேட்டது. அவர்களுக்கு எதுவும் புரியவில்லை.
டேய் இங்கே ஏதோ நாட்டிற்கு எதிரான தீவிரவாதிகள் தங்கி இருந்து சதி வேலை செய்கிறார்கள் போல் இருக்கிறது.
ஆமாம் தலைவா நாம் கண்டுபிடித்து அவர்களிடம் துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும்.
எதுக்குடா தலைவா அது தான் நாம் சினிமாவில் எல்லாம் பார்க்கிறோமே சும்மா பயர் மாதிரி வந்துட்டே இருக்கும்.
கூமூட்டை மாதிரி பேசாமல் வாங்கடா அவர்களோடு நாம் கூட்டணி வைத்துக் கொண்டாள் நாமும் பல சொத்துக்கு அதிபதி ஆகலாம் அவர்களை வைத்தே நாம் ஆசைப்பட்ட சொத்துக்களை எல்லாம் வாங்கி விடலாம்.
(அட பிக்காரப் பயலுகளே அது பூராவும் பேய்கள்டா அதுவும் இத்தனை நாட்கள் உங்களால் உயிர் விட்டவர்கள் அவர்களின் பலி வாங்கும் படலம் ஆரம்பிக்கிறது. அது தெரியாமல் தீவிரவாதிகள் என்று பிக்கால் விடுதுங்க நிழலா எங்கே இருக்கிறாய்.? வந்து இவுனுங்க ஆட்டத்தை முடித்து வை.)
சத்தம் போடாமல் மெதுவா வாங்க நம்மகிட்ட கையில் இருக்கும் கயிறு மட்டும் தான் ஆனால் அவர்கள் துப்பாக்கி வைத்து இருப்பார்கள்.
தலைவா அங்கே பாருங்கள் ஒரு மண்டைஓடு மட்டும் சிரித்துக் கொண்டு இருக்கிறது.
டேய் அது உனக்கு விசயமே புரியவில்லை அது நம்மூர் சிசிடிவி மாதிரி வெளிநாட்டு சிசிடிவி என்று ஒருத்தன் சொல்ல கூமுட்டைகளா? உங்களை எல்லாம் வைத்துக் கொண்டு ஒரு வேலையும் உருப்படியா? செய்ய முடியாது.
சரிங்க தலைவரே நாங்க பேசவில்லை என்று கூறிக் கொண்டு டேய் அங்கே பாரு நிறைய எலும்புக்கூடு நம்மளை நோக்கி வருகிறது.
டேய் எலும்புக்கூடு இல்லை அவுங்க எல்லாம் ஏலியன்ஸ் அப்படித்தான் இருப்பாங்க.
நம்ம தலைவர் தாண்டா ஏலியன்ஸ் கூட கூட்டணி வைத்து அங்கேயும் நம்ம கட்சிக் கொடியை கட்டி விடுவோம்.
அங்கே வந்த எலும்புக்கூடு ஆறுவிரல் அலறுகிற குரூப்ஸை சுற்றி வளைத்தது.
டேய் மாப்பிள்ளை யாருக்குமே இது வரைக்கும் எலும்புக்கூடு எஸ்கார்ட் கிடைத்தது இல்லை. நமக்கு தான் ஸ்பெஷல் நான் கூட இந்த ஆறாவது விரலால் நமக்கு எந்தப் பயனும் இல்லை என்று தான் இருந்தேன். ஆனால் இப்போது தான் எல்லா நடக்கிறதைப் பார்த்தால் அப்படியே ஜிவ்வுனு இருக்கிறது.
தொடரும்..