Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 369
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 87
பாகம் - 87
தேவ் ஆனந்த் தேனருவி இருவரும் சாப்பிட வந்தனர். அவர்களோடவே பூவிழி கார்முகிலன் இருவரும் வந்தனர்.
போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தனர். அண்ணிகள் எல்லாம் வந்து விட்டனர்.
அண்ணா இன்று மட்டும் தான் உங்கள் இஷ்டத்திற்கு சாப்பிட முடியும். நிலையில் இருந்து எங்கள் அண்ணி என்ன சொல்கிறாங்களோ? அதைத் தான் சாப்பிட முடியும்.
பூவிழி நீங்கள் எல்லாரும் தவறாகச் சொல்லி விட்டீர்கள். எங்க அக்கா மிச்சம் வைத்தால் தான் மாமா சாப்பிடவே இருக்கும்.
தேனருவி அப்படியா? அப்ப நல்லா சமைப்பாயா?
ச்சேச்சா உங்களுக்கு ஆனாலும் இம்புட்டு பேராசை ஆகாதுங்க அண்ணிஸ் ஒன்வே மட்டும் தான் தேனு அக்கா.
புரியலை..
அதாவது சமையல் எல்லாம் தெரியாது. நல்லா சாப்பிட மட்டும் தான் தெரியும் சொன்னேன் என்று பூவிழி சொல்லவும்.
சரி உனக்கு சமைக்கத் தெரியுமா? பூவிழி என்று இப்போது பால் அவளிடம் திரும்ப
நான் இன்னும் பழகவில்லை ஆனால் இன்னும் மூன்று மாதித்தில் பழகிக் கொள்வேன் என்று பதில் சொல்லவும்.
ஆமா நாங்க எல்லாரும் நம்பிட்டோம் பாப்பா.. என்று விளையாட்டு பேசிக் கொண்டே அனைவரும் சாப்பிட்டு முடிக்க அடுத்தது பொண்ணு மாப்பிள்ளை போட்டோ சூட் எடுக்கச் சென்று விட்டனர்.
கார்முகிலன் பூவிழி யை தனியாக இழுத்துச் சென்று விட்டான். அவளுக்கோ பயமாக இருந்தது. மண்டபம் முழுவதும் சொந்தங்கள் நிரம்பி இருக்க
காலையில் தான் நிச்சயம் முடிந்து இருக்கிறது. யாராவது இந்த நேரத்தில் பார்த்தால் தவறாகி விடும் என்று அவனிடம் இருந்து தப்பித்துச் செல்லவே
காத்திருந்தாள்.
ஹேய் இருடி இது போல் ஒரு சான்ஸ் மறுபடியும் கிடைக்காது. இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரைக்கும் தாங்குவது போல் ஒரு முத்தம் மட்டும் நான் வேறு எதுவும் கேட்க மாட்டேன்.
ம்ஹூம் நான் மாட்டேன் மாமா யாராவது வந்து விடுவார்கள். என்று அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ளவே பார்த்தால் பூவிழி.
அவனுக்கோ கோபம் வந்து விட்டது. ஏண்டி நிச்சயம் ஆனாலே நீ எனக்குப் பாதி பொண்டாட்டி என்னையவே நம்ப மாட்டீங்கிறாய்? நான் என்ன வழியில் போகிறவளைப் பார்த்தா கையைப் பிடித்து முத்தம் கேட்க முடியும். உன்னிடம் தானே என் ஆசையைத் தீர்த்துக் கொள்ள முடியும். அதற்கு உனக்குப் பயம் எங்கே இவன் நம்மைக் கை விட்டுவிடுவானோ? அது தான் நொண்டிச் சாக்காய் மற்றவர்கள் யாரோ வந்து விடுவார்கள் என்று தப்பிக்கப் பார்க்கிறாய்? போடி போ சரியான பட்டிக்காடு.
என்ன சொன்னீங்க வேற எவளாவது கையைப் பிடித்து விடுவீர்களா? என்று மூக்கு விடைக்க கோபத்தோடு பேசினால்.
ஆமா உன்னிடம் கிடைக்கவில்லை என்றால் வேறு இடம் பார்க்கவேண்டியது தான். இதே இட்லி பிடிக்கவில்லை என்றால் தோசை சாப்பிடுவதில்லையா? என்று வேண்டும் என்றே அவளின் கோபத்தை தூண்டினான்.
அடிங்க என்னைப் பார்த்தா கேனக் கிறுக்கச்சி மாதிரி இருக்கிறதா? தொலைச்சுப் புடுவேன். நான் கூட என் ஆசை மாமா இத்தனை தூரம் கெஞ்சுகிறாங்களே சின்னதா ஒரு முத்தம் கொடுத்து விடலாம் என்று தான் நினைத்து இருந்தேன். ஆனால் என் முன்னாலே வேறு ஆள் பார்ப்பேன் சொன்னீங்களோ? இனி நீங்க ஆசைப்பட்டு கேட்டாலும் நான் கொடுக்க மாட்டேன் என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு அவனுக்குப் பதில் அளித்தால்.
ஏய் என்னடி இப்படிச் சொல்கிறாய்? உன் மாமா பாவம்டி என்று தெண்டையைப் பிடித்துக் கொண்டு இப்போது சாரி கேட்டான்.
அது நான் பயந்தால் நீங்கள் என்ன சொல்ல வேண்டும் நீ பயக்கும் அளவு ஒன்றுமில்லை என்று எனக்குத் தைரியம் கொடுத்து இருக்க வேண்டும். அதை விடுத்து வேறு ஆள் பார்க்கவேண்டும் என்கிறீங்க என்னைப் பட்டிக் காடு என்று சொல்கிறீங்க.?! ஏன் ? அது இப்போது தான் தெரிந்ததா? காலையில் கையைப் பிடித்து முத்தம் கொடுக்கும் போது தெரியவில்லையா?
கொஞ்சம் மூச்சுவிட்டு பேசுங்க பொண்டாட்டி.. அப்புறம் மாமா இதழோடு இதழ் வைத்து உனக்கு உயிர் மூச்சு கொடுக்க வேண்டி வரும் என்று காதலோடு சொல்ல.
பூவிழி உங்களை என்று அவனை அடிக்க வர ..
இந்தாடி எவ்வளவு வேண்டுமோ அடித்துக்கோ என்று அவளின் உயரத்திற்கு குனிந்து நின்று சொல்ல, அவன் விரித்த வலையில் அவளாக சென்று சிக்கிக் கொண்டாள்.
ஆசைதீர அடித்து விட்டாயா? எனக்கு எதையும் இருப்பு வைத்துப் பழக்கமில்லை அதனால் நானும் உனக்குத் திருப்பி தருகிறேன் என்று அவளைத் தன் உயரத்திற்கு தூக்கினான்.
இதழோடு இதழ் வைத்து அவளைப் பார்த்து கண்களால் சிரித்தான். இதழ் தேனை உறிஞ்சினான். ஆசை தீரும் அளவு.. ஆனால் அவனுக்கோ அவள் இதழில் வற்றாத தேனூற்றாய் தான் இருந்தது.
போதும் பயந்து விடுவாள் என்று அவளின் மருண்ட விழிகளைப் பார்த்து விட்டான்.
அவன் விட்டதும் அவனது நெஞ்சோடு தன் முகத்தை வைத்து புதைந்தாள். அவளை இறுக்க தன்னோடு அனைத்தான்.
கொஞ்ச நேரத்தில் அவளை விலக்கி தேங்ஸ்டி நான் கூட உன்னிடம் ஒரு முத்தம் வாங்க ரொம்ப பேச வேண்டியதா போச்சு!! நான் உன்னை முதல் நாள் பார்த்த அன்றே முடிவு செய்து விட்டேன். நீ தான் என் வாழ்வோடு இனைபவள் என்று
அவளை மேலும் தன்நெஞ்சோடு இறுக்கி அனைத்தான். அவளின் மென்மைகள் அவனுள் புதையும் அளவுக்கு.. இங்கே பாரு விழி நீ என் விழிப்பாவை உன்னை விட்டு வேறு ஒருத்தியை பார்த்து விடுமா??
அப்படி நேர்ந்தால் என் உயிர் என்னை விட்டு போய் விடும்.
மாமா இது போல் பேசாதீர்கள் என்று சொன்னவள் அவளது அதரத்தை அவனின் அதரத்தோடு பொருத்தி ஒரு நீண்ட முத்தயுத்தம் செய்து தான் விடுவித்தாள்.
கார்முகிலனுக்கு ஆச்சரியம் இவள் தான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு நம்மை கெஞ்ச வைத்தாள். இப்போது கொஞ்சித் தீர்க்கிறாள். என்னங்க நீங்க உங்க மனதிலிருந்தது சொல்லவில்லை என்பது எனக்கும் தெரியும். உங்களைப் பற்றி முழுதும் தெரியாமலா? இந்த நேரத்தில் வந்து உங்களோடு பேசிக் கொண்டு இருப்பேன்.
ஏய் வாண்டு தெரிந்து கொண்டு தான் என்னிடம் என்னமா? நடித்தீங்களா? மேடம் என்று மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
மச்சான் என்ன இருந்தாலும் முதல்முத்தம் அதற்கு ஒரு ஸ்டோரி வேண்டும் தானே அது தானுங்க கொஞ்சம் உங்கள் கூட விளையாண்டு பார்த்தேன்.
கொஞ்ச நேரத்தில் பயத்தைப் போட்டுவிட்டு என்னமா? இப்படி பண்ணுகிறீங்களே என்று பீலா செய்து விட்டாய் என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காண்பிக்க.
அங்கே செல்லமாய் ஒரு கடி வைத்து விட்டு ஓடப்பார்த்தாள்.
அவளின் கையை எட்டிப் பிடித்தவன் ஏய் என்னைத் தீண்டிய இடத்தில் நான் உன்னைத் தீண்டி விடுவேன் ஆனால் வேண்டாம் அதற்கு ஆசைப்பட்டால் என்னை என்னால் கண்ட்ரோல் செய்ய முடியாது ஆனா நல்லா இறுக்கமா ஒரு கட்டிப்புடி வைத்தியம் மட்டும்டி.
அவளோ? அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே வெட்கப்பட்டுக் கொண்டு தலையைக் குனிந்து இருந்தாள்.
அவளின் நாடியைப் பிடித்து நிமிர்த்தியவன் என்னம்மா? இங்கே வா என்று அவளின் நெற்றியில் ஒரு ஒற்றை முத்தம் பதித்து விட்டு அவளைப் பார்க்க
செஞ்சாந்தாய் சிவந்த இரு கன்னகதுப்புகளை வருடி சரிப் போ என்று சொல்லி விட்டான்.
அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள். அதனால் அவளின் முன்னால் மாடிப்படியைக் கவனிக்க மறந்தாள். அவளைப் பார்த்தவன்
ஹேய் என்றே கத்திக் கொண்டு வர அதற்குள் இவள் கால் எடுத்து சாதாரணமாக நிலம் என்று வைக்கப் போனவளை ஓடிவந்து இடுப்பில் கை வைத்துகையிலேந்தி இருந்தான்.
நல்லவேளை கீழே விழுகவில்லை என்று இப்போது தான் அந்தரத்தில் பறக்கிறோம் என்று நினைத்து இருந்தால் அப்போது தான் கார்முகிலன் கையில் ஏந்திக் கொண்டு அவளையே பார்த்தான்.
என்னிடம் இருந்து தப்பித்து ஓட உனக்கு அத்தனை அவசரமா இந்நேரம் கொஞ்சம் கால் இடறி இருந்தால் என்ன ஆகி இருக்கும்.
என்ன ஆகி இருக்கும்?.
எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்.
ஓஹோ அதனால் என்ன? நான் தான் உங்கள் பாதிப் பொண்டாட்டி தானே என்று சொல்லவும்.
லூசு அடித்தேனா? நீ தாண்டி முழுப் பொண்டாட்டி என்று அவளின் தலையில் தட்டியவன் இப்போது படியின் முடிவில் ஒரு ஓரமாய் மறைவில் அவளை சுவற்றோடு நிறுத்தி மொத்தமாய் தன் உடலை அவள் மேல் அழுத்தி அவளைப் பார்த்து ப்ளீஸ்டி ஒரே ஒரு முத்தம் என்று கெஞ்சினான்.
அவளோ மாட்டேன் என்று இப்போது தனது வாயை தன் கைகள் வைத்து மூடினாள்.
ஏண்டா இப்படி மனுசனை சோதிக்கிறாய்?
எதுக்கு இப்பவே லேசா புண் ஆகி விட்டது. அப்புறம் எல்லாரிடமும் நான் என்ன பதில் சொல்வது. என்று கூறிவிட்டு இனி திருமணம் முடித்த பிறகு தான் அதுவரை எதுவுமில்லை என்று கூறிவிட்டு இப்போது மான்குட்டி போல் துள்ளி ஓடிவிட்டாள்.
கார்முகிலனும் அவள் பின்னாலே தன் தலையைக் கோதிக் கொண்டே சென்று விட்டான்.
பூவிழி இத்தனை நேரம் எங்கே சென்றாய்? என்று ஒரு உறவுப் பெண் கேட்கவும் அவள் என்ன பதில் சொல்வாள். தயங்கி நிற்கும் போது ஆதிரா அவ்விடம் வந்து அவள் நானும் மாடியில் இருந்தோம்.
வழுசப் புள்ளைகளுக்கு இந்நேரத்திற்கு அங்கே என்ன வேலை? உன் சேலை எல்லாம் கசங்கி இருக்கிறது என்று தான் சந்தேகமாய் கேட்டேன் என்று சொல்லி விட்டு அவர் நகர்ந்தார்.
பூவிழி நீ அவுங்க கேள்வி கேட்டால் இப்படி தயங்கி நின்று கொண்டு இருந்தாள் அவுங்களுக்கு சந்தேகம் வரும். குழந்தைகளை வைத்து இருந்தேன் அதனால் ஆடை கசங்கி விட்டது என்று சமாளிக்க வேண்டும். இல்லை என்றால் காது மூக்கு வைத்து வெள்ளைக் காக்காய் பறக்கிறது என்று சொல்லி விடும் கூட்டம் என்று கூறியவர் சென்று விட.
இதுக்குத் தான் சொன்னேன் என்று முகிலனைப் பார்த்து அவள் கண்டால் சேதி சொல்ல அவனோ? அவன் நெஞ்சைத் தொட்டுக் காண்பித்து தன் கண்ணைத் துடைத்தான்.
அதில் குபுக்கென்று சிரித்தவள் அவனிடம் கண்ணாலே விடைபெற்று சென்று விட்டாள்.
கார்முகிலனும் மணமகன் அறைக்குள் செல்ல..
என்ன? தம்பி செம பிஸி போல் இருக்குதே எனக்கே சந்தேகமா இருக்கிறது. திருமணம் எனக்கா இல்லை உனக்கா.. நான் கூட
போட்டோ சூட் முடித்து வந்து விட்டேன். ஆனால் உன் காதலி கூட இப்போது தான் டூயட் முடிந்து நீ வருகிறாயா?
தொடரும்..