Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 368
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 86
பாகம் - 86
என்னடா இப்ப நல்லாத்தான் பேசுற என்னமோ குரல் வரல அப்படின்னா எல்லாம் நடிப்பு என்று பெண்கள் பேசவும்.
அம்மா சத்தியமா சொல்றேன் மா எனக்கு இத்தனை நேரம் பேச்சு வரல்லம்மா அதனாலதான் அங்க இருக்குற தண்ணி எடுத்து கொடுக்க சொல்லான்னு பக்கத்துல இருக்குற அவங்களை கையில தொட்டமா அதுக்கு உடனே அவங்க எங்களை தப்பா நினைச்சுட்டாங்க அம்மா.
ஏன்யா அந்தக் கை நல்லா தான் இருக்குது பேச்சு நல்லா வரலைன்னா கையில் போய் எடுத்து குடிக்க வேண்டியது தானே?
அது என்னடா பொம்பளைகளை பார்த்தா மட்டும் சொரண்டுவது.
என்னம்மா ரொம்ப துள்ளற ஒரு அமைச்சர் அப்படி என்கிற மரியாதையே இல்லாம என்னமோ பொம்பள பொறுக்கி கூட பேசுற மாதிரி பேசுறீங்க
பொறுக்கியா இருந்தீங்க தான்டா நீங்க எல்லாம் கள்ள ஓட்டு போட்டு ஜெயிச்சு வந்துட்டா உங்கள கண்டு எல்லாரும் பயந்துட்டு இருக்கோனுமா அதுக்கு வேற ஆளா பாருங்க?
என்னம்மா சும்மா நொய் நொய்யின்னுட்டு இருக்கே. இப்ப நான் என்ன உங்கள எல்லாம் கெடுத்தா போட்ட என்னவோ கற்ப சூறையாடின மாதிரி பேசுறீங்க .
ஏன் பப்ளிக்ல நின்னுட்டு இப்படி பேசிட்டு இருக்கே நீ எல்லாம் மனுசனா?
அந்த சந்தேகமே உனக்கு வருது அம்மா நானும் பொறுமையா பதில் சொல்லிட்டு இருந்தா நீ என்னென்னமோ பேசுற உன்னால என்ன பண்ண முடியும்?
நான் பாத்துக்குறேன் நானா நீ பார்த்ததில்லை வயசுக்கு தான் இத்தனை நேரம் மரியாதை கொடுத்துவிட்டு இருந்தேன்.
அந்த மரியாதை நீங்க இழந்துட்டீங்க நீங்க பேசிட்டு இல்ல கை நல்லாத்தான் இருக்குது போய் வாட்டர் பாட்டில் எடுத்து குடிங்க அதுக்காக பெண்கள் ஜாக்கெட்ல சொரண்டுவீங்க இடுப்புல கை வைப்பீங்க நீங்க எல்லாம் பெரிய சட்டத்தை கையில் வைத்திருக்கிற அமைச்சர் என்று நாங்க எல்லாம் எதுவும் பேசாம வாய மூடிட்டு போகணுமா? அதெல்லாம் அந்த காலம் உடனே இப்ப எல்லாம் செய்தி எல்லா பக்கம் பரவுகிறது உங்களுக்கு உடனே தண்டனை கிடைக்கும்.
இல்லையா இந்த அமைச்சருங்கற பதவி வச்சிட்டு தான் இத்தனை ஆட்டம் போடுற அதை முதல்ல ஆட்டம் காண வைக்கிறேன்.
நானும் கல்யாணத்துல பிரச்சனை வரக்கூடாது அப்படின்னு ஒதுங்கி போன சும்மா இருக்க மாட்டேங்கிறீங்க எனக்கு என்ன இவன் கல்யாணம் நடந்தால் என்ன நடக்காட்டி என்ன இப்பவே என்னோட ஆளுகளை வரச் சொல்றேன் இந்த மண்டபத்தில் தட்டி நிரவப் போறேன்.
பாரு உனக்கு அந்த அளவுக்கு எல்லாம் தைரியம் இருக்குதா உன்னால இங்கிருந்து ஒரு எட்டு எடுத்து வைக்க முடியாது. நீ ஒரு ஆம்பளையா இருந்தா இங்க இருந்து நகர்ந்து போய் பாரு.
என்னம்மா என்னை யாருன்னு நினைச்ச என்னை கண்டா தமிழ்நாடே பயப்படும்.
இல்ல நீ யார் கண்ட பயப்பட போறேன்னு ஒன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும்.
என்ன சித்து வேலைக்கு காமிக்கப் போறியா?
அதெல்லாம் என் கிட்ட நிறைய மந்திரவாதிகள் இருக்கிறார்கள். இங்கே பார்த்தாயா? என் கையில் எத்தனை மந்திரிச்ச கயிறுகள் கட்டி இருக்கிறேன்.
அப்படியா? இன்னும் கொஞ்ச நேரத்துல நடக்கும் பார் அப்ப யாரு பெரிய ஆளுன்னு தெரிஞ்சிரு என்று பேசி பெண்கள் கூட்டம் இப்போது நிழலா அப்படின்னு ஒரு சவுண்ட் விட்டாங்க.
உடனே என்னது நிழலா வா நிழலா என்னோட காதலி அவளை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?
என்னது உன்னோட காதலியா அப்பனா உன்னோட காதலி போட்டோ எங்ககிட்ட காமி நாங்க நம்புகிறோம்.
அவளுக்கு போட்டோ இல்ல இல்ல ஏன் அவ உன்னை ஒட்டுக்க போட்டு தள்ளிட்டாளா?
என்னம்மா என்னென்னமோ பேசுறீங்க சாரி நாங்க எல்லாம் உன் கிட்ட பேசுறோம் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே நிழலாஅங்கே வந்தது இவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால் நாம் பார்த்துக்கொள்கிறேன். என்கிற மாதிரி சொல்லுச்சு உடனே ஆறு விரல் அமைச்சர் தனது கையில் இருந்த பிளேட்டில் குட்டி குட்டியா பாம்புகள் இருந்தது நூடுல்ஸ் எல்லாம் பாம்பா மாறிடுச்சு.
ஏம்மா வாயில் பேசிட்டு இருக்கும்போதே நீங்க எல்லாம் என்ன மாய மந்திரம் போட்டீங்க பாருங்க சாப்பிடுவது பூரா பாம்பா இருக்குது.
தலைவா இங்க பாரு என்றதுல பூரா தவக்காய இருக்குது, இன்னொருத்தன் சொன்னான் என்றது பூரா மண்புழுவா இருக்கு, இன்னொருத்தன் சொன்னான் என்றதுல கரப்பான்பூச்சியா இருக்குது, எப்படிங்க தலைவரே நாம சாப்பிடறது என்று இப்போது அதை கீழே வைப்பதற்கு முயற்சித்தனர்.
ஆனால் அதில் தட்டத்தில் இருந்த பூச்சிகள் எல்லாம் அவைகள் உடம்பில் ஏற ஆரம்பித்துவிட்டது. ஆறு விரல் காத்தவராயன் குரூப்ஸ் இப்போது நின்ற இடத்திலேயே குதிக்க ஆரம்பித்து விட்டனர்.
டயலாக் பேசிட்டு இருந்தான் இங்க பாருங்கடி இத்தனை நேரம் இப்ப என்னம்மா குதிக்கிறான்னு பாரு அது தாண்டி யாருகிட்ட இவனோட வில்லத்தனமெல்லாம் இவன் எல்லாம் இப்படியே கொண்டு போய் எண்ணெய் காய்ச்சல் கொப்பரைல கொண்டு போய் போட வேண்டும்.
ஆமாண்டா அப்படித்தான் பண்ணனும் நம்ம நிழலா ஓட எதிரி தான் இவன் அந்த காலத்துல எந்த வசதியும் இல்லாம இந்த நாய் இவங்க கிட்ட நம்ம நிழலா எத்தனை துன்பத்தை அனுபவிச்சு உயிரை விட்டு இருக்கு எத்தனை ஆண்டு கழிச்சு வந்தாலும் அவங்கள பழி வாங்கணும்னு இத்தன்நாள் காத்துட்டு இருந்தது.
இன்னைக்கு தேனருவி திருமணத்தில் இவங்களுக்கு சமாதியாக போகுது.
அந்த வழியாக இப்போது வனிதா வந்தால் இவ வேற வந்துட்டு இருக்கா வா நாம போய் ஏதாவது வம்பு இழுக்கலாம்.
ஒரு பேட் ஸ்மெல் வருது உங்ககிட்ட என்ன நாய் மலம் வாசமடிக்குது.
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லைங்க நானும் இத்தனை நேரம் சந்தனத்துல குளிச்சிட்டு வந்தேன்.
என்ன சாக்கடையில் குளிச்சிட்டு இருந்தியா? அது பன்னிகள் தான் சாக்கடைக்குள்ள இருக்கும் ஒ நீ ஒரு பன்னி தானா அதனால தான் சாக்கடைக்குள் இருந்து எந்திரிச்சு வரியா? போ அங்க உன்னோட கூட்டங்கள் அலறிட்டு இருக்குது நீ அவிங்களோட சேர்ந்து அலறு என்று கூறினர்.
இவிங்க கிட்ட நானு யாருன்னு நிரூபிக்கிறேன். என்று வனிதா இப்பொழுது நீங்கள் என்னை என்ன நினைச்சுட்டீங்க என்ற கையில் எவ்வளவு சக்தி இருக்குது தெரியுமா?
நான் அரை மணி நேரத்துல அத்தனை சாமானத்தை விளக்கி கழுவுன அத்தான வெங்காய காய்கறி எல்லாம் கட் பண்ணி கொடுத்துட்டு வந்து இருக்கிறேன். என்ற கைல பவர் இருக்குது.
அப்படியா எங்க நீட்டு பார்க்கலாம் என்ற கையில் எவ்வளவு பவர் இருக்குது எங்க இருக்குது . சாணிமாதிரி தான் அப்படி கிடக்குது.
போங்கப்பா உங்களுக்கு தான் எல்லாத்துக்கும் தெரியல நான் என்னோட பவர் காமிக்கிறேன் பாருங்க எப்படி இதிலிருந்து ஸ்பைடர் மேன் மாதிரி நூல் நூலா வரும் என்று ஸ்பைடர் மேன் பண்ணுவதைப் போல் பண்ணனாள்.
அப்போது அமைச்சர்கள் ஆறு விரல் அல்லக் கைகள் இங்கே பாருடா நம்மளுக்கு இந்த பொண்ண கடத்திட்டு போயிட்டம்னா நிறைய மேஜிக் எல்லாம் தெரியுது நம்ம இவர்கள் எல்லாம் கண்ணை விட்டு விளையாட்டு காமிக்கலாம்.
தூக்குங்கடா இந்த பொண்ணு என்று வனிதாவை தூக்கினார்.
டேய் யாருடா அது என்னை தூக்குறது விடுங்கடா நாய்களா.
என்னம்மா வாய் நீளுது நீ என்கிட்ட வா நாங்க உன் நாங்க அஞ்சு பேரும் உன்னை நல்லா பாத்துக்குவோம் . நீ எங்களுக்கு அதுக்கு பொதுவா ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணு எங்களுக்கு எதிரா பேசுறவங்களுக்கு எல்லாம் ஒன்ற கையில மேஜிக் வச்சிருக்க இல்ல அதை வச்சு அவங்க அடுச்சு கட்டிக் கொண்டு போய் தூரமா வீசிடலாம்.
என்னைய காமெடி பண்ணிட்டு இருக்கீங்க எனக்கு நீங்க கோட்டையெல்லாம் கொடுக்க வேண்டாம் நாளைக்கு அந்த மாப்பிள்ளை தான் எனக்கு வேணும் நீங்க செய்வீங்களா நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று வனிதா சொல்லவும்.
என்ன மாப்பிள்ளை வேணுமா? அப்ப எங்கள எல்லாம் பார்த்தா உனக்கு மாப்பிள்ளை மாதிரி தெரியலையா?
ஏன் கிழவனுங்களா இருக்கீங்க நீங்க எப்படி டா எனக்கு மாப்பிள்ளையா வீங்க. நான் ஒருத்தனத்தை கல்யாணம் பண்ணுவேன்.
சரி ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க எங்களை பூரா வச்சுக்கோ.
அப்போதுதான் வனிதா உணர்ந்தால் இவர்கள் பேசினதை மாதிரி இவ்வளவு கெட்டவங்களா இருக்காங்களே இப்ப இவன்கிட்ட இருந்து நாம் எப்படி தப்பிக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
நம்மகிட்ட பவருக்கு இதுல இந்த பவரை வச்ச போட்டு நாம என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவளிடம் ஒன்றும் இல்லை நல்லா உள்ளே இருந்து அவளை வேலை வாங்கியதால் அவள் நினைத்து விட்டால் அவளுக்குத்தான் நேற்று இரவு லிருந்து ஏதோ பவர் கிடைத்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
அவள் அறியாத விஷயம் இப்போது மிகப்பெரிய கேடு கும்பலிடம் தான் சிக்கி உள்ளோம் என்பதை இப்போது நம்மை காப்பாவும் நிழலா வந்தால் மட்டும் தான் முடியும் என்பது தெரியவில்லை. கொஞ்ச நேரம் இவளும் படட்டும் என்று நிழலா ஒதுங்கி நின்று கொண்டது.
அங்கே இருந்த தோழிகள் தான் நிழலா என்ன இருந்தாலும் அவ தேவானந்த் சொந்தக்கார பொம்பள அவள இந்த பொறுக்கி கிட்ட இருந்து காப்பாத்து அவள் ஒரு பொண்ணு தானே அறியாமையால செஞ்சிட்டு இருக்கிறாள். அவளை நல்வழிப்படுத்தனும் இல்ல ரெண்டு வில்லி இருந்தாங்க விஜயலதாவ திருத்தின மாதிரி இவளையும் திருத்திரலாம்.
அதுக்காக நம்ம கண் எதிரிலையே ஒரு பொண்ணோட மானம் கேள்விக்குறியாகும் போது நாமெல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டாம்.
என்னதான் கெட்டவளா இருந்தாலும் அவளும் ஒரு பொண்ணு நீ போய் நிழல் அவளை காப்பாற்றி கூப்பிட்டு வந்து இத்தனை நேரம் இங்கு ஒரு ரூம்ல அடைச்சு வச்சிருந்தீங்களா அங்கேயே அடச்சுவை இல்லாட்டி கொண்டு போய் அரண்மனையில் அவளை விட்டுட்டு வந்துரு ஒரு பழி சொல்லு வந்துருச்சுன்னா அதிலிருந்து மீள்வது ரொம்ப கஷ்டம் வேண்டாம் நம்மளுக்கு கெட்டதே நினைச்சாலும் நம் நல்லதை நினைப்போம் என்று தோழிகள் கூறினார்.
ஆமா நீங்க சொல்றது சரி இவளைக் கொண்டு போய் நான் மறுபடியும் அரண்மனையிலேயே விட்டுட்டு வந்து விடுகிறேன்.
தலைவா நம்மளுக்கு தெரியாம ஒரு சக்தி இவங்க வச்சிருக்காங்க இந்த கூட்டத்தை வே நம்ம கடத்திப் போனோம்னா நாம் இன்னும் நிறைய பதவிகளை நம்ம கைவசம் வச்சுக்க முடியும்.
என்னடா சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல.
தலைவா மேல பிரதமர் போஸ்ட்க்கு கூட நீங்க அப்ளை பண்ணலாம்.
அப்ளை பண்ணலாம்னு சொல்றீங்க ஓட்டு போட்டு ஜெயிக்க வேண்டாம் தமிழ்நாடா நாம பணத்தை கொடுத்து ஜெயிக்கிறது அதெல்லாம் மேலடா நாம் இங்கேயே நாம் பதவி காப்பாத்திக்கறதுக்கு எத்தனை போராட்டம் பண்ணிட்டு இருக்க எத்தனை தில்லு முல்லு பண்ணிட்டு இருக்க நம்மளுக்கு தெரியும் அதனால என் பின்னாடி வாங்கடா.
இங்க பாரம்மா உங்களுக்கு பயந்தோன்னு நம்ப போகல உங்களை வேற விதத்தில் நானா பழிவாங்குவேன்.
ஆமா நீ எந்த அளவுக்கு பழி வாங்குவன்னு எங்களுக்கு தெரியும் போடா வேலை பார்த்து என்று சொல்லி சிரித்தனர்.
தொடரும்...