Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 367
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 85
பாகம் - 85
அவர் அமைச்சர் அவரையா இத்தனை நேரம் ஆறுவிரல் அலறுது என்று சொன்னீங்க என்று எமி கேட்கவும்.
ஜெஜெ உடனே ஆமாண்டி உனக்குத் தெரியாது இல்லையா நிழலா அவர்களின் பல்ப் பீஸ் போக வைத்து விட்டது. என்று கூறிவிட்டு சிரித்தார்கள்.
ஹேய் எனக்கும் சொல்லி விட்டு சிரியுங்கப்பா என்னவோ? பெருசா நடந்து இருக்கிறது அது தான் நீங்கள் எல்லாரும் சிரிக்கிறீங்க என்று எமி சொல்லவும்.
அதுக்குத் தான் கதை படிக்க வேண்டும் என்று சொல்வது.
நீங்கள் எல்லாரும் முதலில் இருந்து படிக்கிறீங்க அதனால் உங்களுக்கு தெரிகிறது. ஆனால் நான் இன்னும் படிக்கவே இல்லை என்று சோககீதம் வாசிக்க.
ஏய் எருமை மூஞ்சிய அப்படி வைக்காதே பார்க்க சகிக்கலை என்று ஆதிரா சொல்லவும்.
நீங்கள் என்ன நடந்தது என்று சொன்னதால் தான் நான் இயல்பா இருப்பேன். இல்லாட்டி இப்படி தான் இருப்பேன்.
சரி நாங்கள் சொல்வோம் நீ சிரித்து உனக்கு வயிற்று வலி வந்தது என்றால் நாங்க பொறுப்பு இல்லை என்று கூறிவிட்டு.
நிழல் நிழலாவாக பெயர் மாற்றி விட்டு நாதாரி நாதா என்று இரண்டு எபிசோட் செய்த லீலைகள் அனைத்தும் சொல்லி விடவும் இப்போது எமிக்கு உண்மையில் சிரித்து வயிறு வலிக்குதுப்பா செமயா இருக்கிறது. இந்த நிழலா செய்த ஆசிட் ஆப்ரேஷன் என்று கூறிவிட்டு சிரித்தார்கள் தோழிகள் அனைவரும்.
முக்கால் வாசி பங்காளிகள் முகூர்த்தகால் பிடிப்பதால் அங்கு சென்று விட்டனர். அதனால் இவர்கள் நல்லா வட்ட மேசை மாநாடு போட்டு பேசிக் கொண்டு இருந்தனர்.
அங்கே வந்த ஆறு விரல் அல்லக் கைகள் இங்க பாருங்க நிறைய பச்சை இருக்குது அப்படியே வண்ண வண்ண மலரா இருக்குது என்று திருமணத்துக்கு வந்த பெண்களை பார்த்து கூறிக் கொண்டிருந்தனர்.
பீஸ் போனாலும் பல்பு பீஸ் போன பல்பு வச்சிட்டு இன்னும் அடங்க மாட்டேங்கிறாங்க என்ற அங்கு இருக்கும் நிழல்கள் இருங்கடா உங்களுக்கு இனிமேல் தான் ஆட்டம் இருக்குது என்று அவர்களின் அருகில் வந்து இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டிவிட்டது.
உடனே அவர்கள் நெளிந்து கொண்டே இருந்தனர். என்னப்பா கல்யாண மண்டபத்துக்கு வந்த பின்னால நம்ம உடம்புல இன்னுமும் ஊர மாதிரி இருக்குதே.
இப்ப பிரியா சட்டை கழட்டி பார்க்க முடியாது வேட்டி கழட்டிப் பார்த்தால் நம்ம மானமே போயிரும்.
ஆமாங்க தலைவரே நான் அதை இப்ப எல்லாம் அன்றவார் போடாம லெகின்ஸ் போடுற மாதிரி போட்டு சுத்திட்டு இருக்கிறோம்.
என்ன பண்றது நம்மளுக்கு நடந்த கொடுமை யாருக்குமே நடக்கக்கூடாது.
ஏன்டா அப்படி சொல்ற அது இல்லாட்டி என்ன வேற மாதிரி டீல் பண்ணிக்கலாம்.
ஒண்ணுமே புரியல அது புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா போதும்டா உனக்கு எல்லாம் புரியும் என்கிற அவசியமில்லை. கொஞ்சம் மூடிட்டு இருங்க.
என்னங்க தலைவரே இப்படி கேவலமா பேசுறீங்க ?
அட டேய் அதை சொல்லடா கை வச்சிட்டு கம்முனு உட்காந்து இருங்கோ. அதைத்தான் சொன்னேன் நீங்க பாட்டுக்கு அங்கே மிங்கியும் சொரிஞ்சிட்டு இருக்காதீங்க.
உங்கள பாத்தா அந்த ரோட்ல பிச்சை எடுக்குறாங்களா அவங்க பண்ற மாதிரியே இருக்குது ஆம்பள பாதி பொம்பளபாதி.
என்னங்க தலைவாய் இப்படி சொல்லிட்டீங்க?
என்ன எப்படி சொல்றதாம்மா நானே கண்ட்ரோலா இருக்கிறேன். இவே கல்யாணம் பண்றான்ல அவன் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? அவனோட அரண்மனை மேல எனக்கு ஒரு கண்ணு இருக்குது.
கண்ணு இருந்து என்ன பண்றது ஆறு விரல் அல்லக்கை உனக்கு தான் குழந்தை இல்லையே யாருக்கு இப்படி சொத்து சேர்க்கணும்னு தெரியல.
அட நாம்மளாவது கொஞ்ச நாளைக்கு அந்த அரண்மனையில் வாழலாமே என்னதான் அமைச்சரா இருந்தாலும் அந்த காலத்தில் கட்டின அரண்மனை டா அதுல கொஞ்ச நாள் வாழ்ந்திடலாமே.
இவன் லேஸ் பட்ட ஆள் எல்லாம் இல்ல பெரிய பணக்காரன் கல்லூரி எவ்வளவு பெருசு தெரியுமா ?அதை நான் எப்படியாவது வாங்கி போடலாம்னு பார்த்தேன் அதுக்குள்ள இவங்க முந்திட்டாங்க .
சரிங்க தலைவரே உங்ககிட்ட இல்லாத சொத்தா?
டேய் எத்தனை சொத்து இருந்தாலும் அது நம்மளும் குறைவா தான் இருக்கு அடுத்தவங்க கிட்ட இருந்தா அதை எப்படியாவது மிரட்டி வாங்கி போடணும்னு நாம நினைக்கிறோம் ஆனா ஏன்னு தெரியல இப்ப கொஞ்ச நாளா எனக்கு எல்லாமே தடங்காலாத்தான் நடக்குது.
நிழலா தேவானந்த் வீட்டுக்கு சென்றது அங்கே வனிதா ரெடியாகி காத்திருந்தாள்.
ஆண்டவா எல்லாரும் கல்யாணத்துக்கு போயிட்டாங்க நம்மள மட்டும் விட்டுட்டு நாம எப்படி போறது நாமளும் போகலாமே இங்க தனியா இருக்கிறோமே என்று நினைத்துக் கொண்டிருந்தால்.
அங்கே சென்ற நிழலா அவளை சுற்றி ஒரு காற்று சுழல் காற்று வர வைத்தது அவள் உடனே அங்கிருந்து மண்டப வாயிலுக்கு வந்து நின்றாள்.
அட இது எப்படி வந்தனே தெரியலையே ஆமா நீயே வந்தவாரு வானத்துல பறந்துட்டு எல்லாம் நான் கொண்டுவந்து உன்னை இங்க சிக்க வச்சிருக்கிற அங்கிருந்தாலாவது நீ நிம்மதியா தூங்கிட்டு இருந்து இருப்ப.
உனக்கு விடிய விடிய என்ன நடக்குதுன்னு பாரு என்று நிழலா நினைத்து விட்டு அவளை நேராக சமையலறைக்கு இழுத்துச் சென்றது.
அட என்ற கால் என்ன என்னை மண்டபத்துக்குள்ள கூட்டிட்டு போகாம சமையல் கெட்டு கூப்பிட்டு போகுது.
சரி வந்ததே வந்தாச்சு போய் சாப்பாடெல்லாம் ஒரு புடி புடிச்சுக்க வேண்டிய தான். நல்லா கல்யாணம் விருந்து செமையா இருக்கும்.
சாப்பிட்டு போட்டு என்னென்ன கோல்மால் பண்ண முடியுமோ? பண்ணலாம். இந்த விஜய் லதா அக்கா எங்க காணோம் கண்ணுலையே தட்டு பட மாட்டேங்கிறாங்க அவங்க இருந்தாங்கன்னா அவங்களுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்தா நம்மளுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
நீ யோசிக்கிற அளவுக்கு வந்துட்டியா ?உன்கிட்ட இருந்த நிழல் அதுக்குள்ள அதுக்கு ஒரு அவசர சோழி வந்துவிட்டது என்று உன்னை விட்டு போட்டு போயிருச்சு.
இப்போ உன்னை நான் ஆட்டிப் படைக்கிறேன் பாரு நான் உள்ள விழுந்துட்டேன் என்று நிழலா வனிதாவின் உள்ள புகுந்து கொண்டது.
உடம்பு ஒரு மாதிரி வெயிட்டா இருக்குது. என்ன ஆச்சுன்னு தெரியலை? இத்தனை நேரம் நல்லாத்தான் இருந்தேன்.
ரெண்டு ரெண்டு கண்ணு தெரியுது கை இன்னும் என் கையால் இவ்வளவு நீளமா இருக்குது.
என்னால எதுவுமே எடுத்து சாப்பிட முடியல என்ற உடம்பு எங்கேயும் இழுத்துப் போகுது எங்கே இழுத்துட்டு போகுதுன்னு தெரியலையே.
அங்கே மலையாக குவிந்து வைத்திருந்த சமையல் பாத்திரங்களை வனிதாவை வைத்து கழுவ வைத்தது நிழலா.
இத்தனை சாமானம் இருக்குது நான் எப்படி கழுவுவேன்னு தெரியலையே!!!என்ன என்று உருவமே மாறிப்போச்சு என்னால் இந்த இடத்தை விட்டு நகர முடியலை என்ற கையே என்ற சொன்னபடி கேட்க மாட்டேங்குதுன்னு இவ்வளவு ஸ்பீடா மிஷினமாதிரி இருக்கு என்று வனிதா பயந்துவிட்டால்.
எப்படியோ அப்பா சாமானத்தை கழுவியாச்சு இடுப்பே முறிஞ்சு போகும் போல இருக்குது. எங்கயாச்சும் போய் இப்படி எங்கயாச்சும் ஓரமா படுத்துக்கணும்.
இங்க இருக்கிற வெங்காயத்தை பூரா நீ இப்ப தொளிச்சாகனும் இழுத்துட்டு போகுது அங்க இருக்குற வெங்காயம் அத்தனையும் தொலிக்க வைக்கிறது .என்னாலயே நம்ப முடியல மின்னல் மாதிரி என்ற கை வேலை செய்து என்னாலயே நம்ப முடியல அட சாமி பேசாம வீட்டிலேயே இருந்து இருக்கலாம் போல இருக்குது .என்று அவளை ஒரு மணி நேரத்துக்குள் அத்தனை வேலைகளை வாங்கிவிட்டு ஒரு ஸ்டோர் ரூமில் கொண்டு போய் அடச்சு வச்சுட்டு நிழலில் வந்து விட்டது.
அங்கே உணவு அருந்தி கொண்டிருந்தனர் பப்பே சிஸ்டத்தில் கொண்டிருந்தனர். ஆறுவிரல் அங்கே தான் இருந்தனர்.
நிழலா வந்து அவர்கள் சாப்பிட வைத்திருந்த ஜிலேபிக்கு பதிலாக மிளகாயில் செய்யப்பட்டிருந்த சிவப்பு கலர் ஸ்வீட்டை கொண்டு வந்து அவர்களின் கைகளில் வைத்து விட்டது.
அவர்கள் ஜிலேபி ஏற்கனவே ஒன்று சாப்பிட்டு இருக்க. அட இது என்ன புதுசா இருக்குது. சாப்பிட்டு போடுவோம் .என்று வாயில் வைத்தனர் முதலில் இனிப்பது போல் இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக தொண்டையில் இறங்கும்போது காரம் பிடித்து விட்டது. அட இது என்னது பசை மாதிரி ஒட்டிட்டு பயங்கரமா காரம் அடிக்குது என்று பக்கத்தில் இருப்பவர்களை சுரண்டினார்.
அவர்களுக்கு பேச்சே வரல எவன் அவன் சுரண்டுவது என்று அங்கிருந்த பெண்மணிகள் ஏன்டா வெள்ளையும் சொல்லையும் போட்டு வந்து கேவலமா பொம்பளைங்க ஜாக்கெட்டை சுரண்டிட்டு இருக்கிற இடுப்ப புடிக்கிற என்று நல்ல மிதி மிதி மிதித்து விட்டுட்டார்கள்.
அவர் தாங்க அமைச்சர் காத்தவராயன் அமைச்சர் இருந்தா அவனுக்கு என்ன கொம்படா முளைச்சிருக்குது.
கல்யாணத்துக்கு வந்த இடத்துல வந்து பொம்பளை பின்னால் உரசர இரு ஈபி-க்கு 344 செக்சன் உங்கள எல்லாம் கொண்டு போயி குண்டர் சட்டத்தில் போடுவது என்று அங்கிருந்து எமி சொல்லவும் .
சட்டத்த பத்தி ஏம்பா நானே சும்மா உனக்கு பயப்படுற மாதிரி 344 ன்னு சொன்னேன் .ஆனா குண்டர் சட்டத்தில் தான் தூக்கி போடணும் பப்ளிக்கில் நின்னுட்டு பொம்பளைகள் பின்னால் ஜாக்கெட் சுரண்டிட்டு இருந்திருக்கிறார்கள். அது தான் நல்லா அந்த பொம்பளை எச்ச கைலயே போட்டு சாத்தி விட்டுட்டாங்க.
ஏன்டா நீங்களும் அரசியல்வாதிக்குதானா இல்ல சும்மா அந்த நாடக கொட்டையிலிருந்து கூத்து பட்டறை இருந்து மாறு வேஷத்துக்கு துணி கட்டிட்டு வந்தீங்களா? ஆமா இவங்க எல்லாம் அமைச்சராக இருந்திருந்தா இவங்களோட போலீஸ் வந்திருக்கும் இல்ல ஆனா இவங்க ஆறு பேர் சுத்திட்டு இருக்காங்க.
எங்கம்மா ஆறு பேர் நல்லா பாரு நாங்க நாலு பேரு தான் சுத்திட்டு இருக்கிறோம்.
அப்புறம் என்னடா உன்ற பின்னால் ரெண்டு பேர் நின்னுட்டு இருக்காங்க.
அவங்க என்ன எங்க பின்னால நிக்கிறாங்களா? யாரு?
நல்லா பாருடா உங்க பின்னால தான் நிக்கிறாங்கன்னு அங்க இருக்கும் தோழிகள் அனைவரும் பயத்தை போட்டு விட்டனர்.
அவர்களுக்கு தெரியும் அங்கே ரெண்டு நிழலா நிக்குது என்று ஆனால் அமைச்சர் அரசியல்வாதிகளுக்கு அவர்களுக்கு தெரியாது.
உடனே ஏமா உங்களுக்கெல்லாம் பைத்தியம் பிடிச்சிருச்சா?
டேய் பூச்சிக்கொல்லி மருந்தா உன் கண்ணில் தாண்டா பூச்சி விழுந்துருச்சு பாருடா.. உங்களுக்கு பின்னால ஒன்னு ரெண்டு பேர் நிக்கல..
என்னம்மா கொஞ்சம் கூட மரியாதையே கொடுக்க மாட்டேங்கிறீங்க.
இவங்க எல்லாம் எதுக்கு உனக்கு மரியாதை கொடுக்கணும் பொம்பளைகளை ஜாக்கெட்டு சுரண்டி இடுப்பு சுரண்டிகிறாய் இரு இரு நாளைக்கு இது பேப்பர்ல வர்ற மாதிரி இப்பவே செல்லுல whatsapp பேஸ்புக் பக்கத்தில் போடுகிறேன்.
உங்கள கையெழுத்து கும்பிடு கிறேன் அது மாறல பண்ணிராதீங்கம்மா நாங்க எல்லாம் வேணும்னு அப்படி பண்ணலைமா பாருமா அந்த ஸ்வீட்டை சாப்பிட்டோமா அது அப்படியே தொண்டையில குரல் வராம அடச்சி புடிச்சிருக்கு.
இப்ப நல்லாத்தாண்டா பேசுற. தொண்டையில் என்ன வந்து இறங்குச்சு. நடிப்பு தானே..
தொடரும்..