• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
366
நீ உடல் நான் நிழல்
பாகம் - 84

விஜயலதாவை அழைத்துக் கொண்டு ரவிக்குமார் மண்டபம் வந்து சேர்ந்தான்.

கிருஷ்ணவேணி தம்பி எங்கேடா போனாய் அதுக்குள்ளே?

அம்மா அவளை அழைத்து வரப் போனேன். ஏன் தம்பி இப்போது எப்படி இருக்கிறது அவளுக்கு, அம்மா அவளால் ரொம்ப நேரம் நிற்க முடியாது. அதனால் அவள் இங்கே மண்டபத்தில் உட்கார்ந்து கொள்ளட்டும்.

சரிப்பா நீ போய் வரவேற்பில் நில்லு போ பெரியவன் மட்டும் நிற்கிறான் என்று அனுப்பி விட்டு அவர் வந்து வரவேற்பிற்கு நின்று கொண்டார்.

மாப்பிள்ளை அழைப்பிற்கு நேரம் ஆகி விட்டது எல்லோரும் போய் விட்டாங்க.. அத்தை என்று வானதி சொல்லவும்.

ஓ அது தான் அத்தனை பெண்களையும் காணோமா நான் என்னடா ஒரு பெண்களும் தட்டுப்படலை என்று இருந்தேன்.

கவிமகிழினி சொன்னாங்க எல்லாரும் மாப்பிள்ளை பக்கமே இருந்தால் எப்படி? பொண்ணு சார்பாக பாதிப் பேர் நில்லுங்கள்
அப்போது தான் சபை களை கட்டும்.

அப்படீங்கிறார்களா? ஓகே டீல் என்று எமி , விமலா, மங்கை, ஜெஜெ, மகாராஜா பரமேஸ்வரி இவர்கள் எல்லாம் பெண் சைடும்

கவிமகிழினி, கனவுகளின் தோழி ஆதிரா , இந்து பிரபாகரன், சாருபிரபா, தமிழ் ஆதினி, இவர்கள் எல்லாம் மாப்பிள்ளை சைடும் நின்று கொண்டார்கள்.

என்ன? நாங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து இருக்கிறோம். எங்களை அழைத்து வர நீங்கள் சார் வண்டி
எடுத்து வந்து இருக்க வேண்டும். நாங்கள் எல்லாம் நடந்து வரமாட்டோம். வெள்ளைக் குதிரை பூட்டிய சாரட் வண்டி தான் வரவேண்டும் இல்லை என்றால் நாங்கள் இப்போது மண்டபத்துக் குள்ளே வர மாட்டோம் என்று சொல்லி விட..

ஆமா எங்கள் பொண்ணு தேவதை அவளை கட்டிக்க நீங்கள் தான் தங்கம் வைரம் வைடூரியம் எல்லாம் வண்டி வண்டியா கொண்டு வர வேண்டும் என்று இந்து பிரபாகரன் சொல்ல,

ஆமா நீங்க எல்லாம் வாசலிலே ஒரு பெட்ராமஸ் லைட் வைத்துக்
கொண்டு ஓட்டை குடையை வைத்துக் கொண்டு வெறும் வாயில் வரவேற்பதில் தெரிகிறது சரியான கஞ்சப் பிசுனாரி என்று ஏனுங்க அண்ணா நாம் என்ன? அப்படி வழி இல்லாமலா? போய் விட்டோம் இந்தப் பொண்ணைப் போய் கட்டுவதற்கு என்று ஆதிரா கேட்கவும்.

அடியே ஒரு வக்கீல் முன்னாடியே வரதட்சிணை கேட்கிறாயா? என்று தனது சட்டப்புத்தகத்தில் தான் கரைத்து குடித்தவைகளை வாதமாய் எமி முன்வைக்க..

அடியே எமி இது என்ன கோர்ட்டா சட்டம் எல்லாம் பேசுவதற்கு கொஞ்சம் கூல் ஆகுமா? இதெல்லாம் ஒரு பன் தானே..

ஏம்பா பார்த்துட்டு சும்மா இருக்கிறீங்க ஒரு கூல்ட்ரிங்ஸ் கொண்டு வாங்க கொஞ்சம் அனல் காற்று அடிக்கிறது. என்று சாருபிரபா சொல்லவும்.

நெருப்பின் சாம்பலாய் கதையாசிரியர் உங்களுக்கு அனல் காற்று தான் அடிக்கும். நாங்க எல்லாம் கொஞ்சம் தள்ளியே நின்று கொள்கிறோம். புது பட்டுச் சேலை பொசுங்கி விட்டது என்றால் என்ன செய்வது? என்று தமிழ் ஆதினி சொல்ல.

என்ன நக்கலா நம் சண்டை அப்புறம் போடலாம் முதலில் நாங்க மாப்பிள்ளை அழைக்கலாம். சரி போனால் போகுது சார்ட் வண்டி இல்லாட்டி பரவாயில்லை ஒரு புல்லட் அதாவது கொடுப்பீங்களா?

கவிமகிழினி அக்கா அவரே புல்லட் மாதிரி தான் இருக்கிறார். அதனால் ஒரு வீட்டில் இரண்டு புல்லட் எதற்கு எங்களால் முடிந்தது சிவப்புக் கம்பளம் விரித்து வைத்து இருக்கிறோம் வாங்க என்று மங்கை சொல்லவும்.

அப்போது நீங்கள் ஒத்துக் கொள்கிறீங்க நீங்கள் கஞ்சூஸ் என்று சிரித்துக் கொண்டு அவர்கள் கேட்கவும்.

சரி நீங்கள் இத்துனை தூரம் கேட்பதால் மாப்பிள்ளைக்கு கூஜா தூக்கியவர்கள் எல்லாருக்கும் நாங்க பாதுஜா தருகிறோம் என்று அவர்கள் அனைவரின் வாயிலும் பாதுசா ஊட்டி விடவும்.

இது என்னடி டெக்னிக் புதுசா இருக்கிறது. பின்ன நாம் எல்லாம் சிங்கிளா இருந்தாலே பயங்கரமா சுத்த விடுவோம். நம்ம தேவிஜி நம்மள எல்லாரையும் ஒரே இடத்தில் கூட வைத்து இருக்கிறாங்க நாம யார் என்று திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தெரிவிக்க வேண்டுமே.. அது தான் எப்பூடி.. என்று இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டு சொல்லவும்..

அண்ணா உங்களுக்கு கண்டிப்பாக இந்த கஞ்சூஸ் வீட்டுப் பொண்ணே தான் வேண்டுமா? நம்ம ரேஞ்சுக்கு ஒரு சமந்தா ஐஸ்வர்யா ராய் இவங்களே கிடைப்பாங்க.

ஹலோ உங்களுக்கு ஐஸ்வர்யா ராய் கிடைக்கும் போது எங்களுக்கு ஒரு விஜயதேவர கொண்டா கிடைக்க மாட்டாரா என்று சொல்லவும்..

அம்மாடி அன்பான பாசமான தங்கச்சிகளே எனக்கு இந்த கஞ்சூஸ் வீட்டுப்பொண்ணே போதும் என்று தேவ் ஆனந்த் கூறிவிட..

அச்சோ எங்கண்ணனுக்கு ஊசிப் போன பாதுசா கொடுத்து கவுத்து விட்டாங்களே என்று எதிர் வாதிட..

ஹலோ இத்தனை நேரம் இங்கே வாய்ச்சவாடல் விட்ட கொஞ்ச பேர் இருந்தாங்களே அவுங்க எல்லாம் எங்கே காணம்.

அதுவா ஆடி மாசம் அடிச்ச காத்திலே அம்மியே பறக்கிறது இவுங்க மட்டும் நிற்பாங்களா? அதுவும் இத்தனை நேரம் அடிச்ச வாய் பாதுசா போய் உள்ளே பசை போட்டு ஒட்டி விட்டதே.

சரி வாங்க உள்ளே போகலாம் என்று அழைக்க இத்தனை நேரம் வாதம் செய்தவர்கள் உடனே தங்களது கையில் தீபம் ஏற்றி வந்து தேவ் ஆனந்த் வரவேற்க மீதி இருந்தவர்கள் அனைவரும் அப்படியே மாப்பிள்ளையின் முன்பு சினிமா பாட்டிற்கு ஆடிக் கொண்டு வர..

*காட்டுமல்லி ம்மா, ஏய் வாச்சமல்லி ம்மா ஏய் கனகவல்லி
ம்மா சே சே ஏய் சே சே...
ஆசைப் பட வைச்சான்
ஆள விழ வைச்சான் ஏய் ஏய்
மாப்பிள்ளை.. சே சே சே..

போலா இரு மச்சான்
ஆள வர வைச்சான்

மயிலாட்டம் இருக்கிறதா

ஆத்தி சந்தன கட்ட ஆட்டம் பம்பரக்கட்ட என்ற பாட்டிற்கு ஆட்டம் போட்டனர் இளவட்டங்கள்..


இருபக்கமும் மீதம் இருந்தவர்கள் அனைவரும் உதிரிப்பூக்களை
போட்டு வரவேற்க.. பார்க்கப் பார்க்க கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.

தேவ் ஆனந்த் வரவேற்பு மேடைக்குச் சென்றதும். அவனின் தாய்மாமா மாலை அணிவித்து விட.. அடுத்தது என்ன பொண்ணு வரவேற்பு மேடைக்கு அழைத்து வர வேண்டும்.

மாப்பிள்ளை அழைத்து வரவே இத்தனை ஆட்டம் பாட்டம் போட்டார்கள். இனி பொண்ணு அழைத்து வர என்னவெல்லாம் செய்கிறார்களோ? பார்ப்போம்.

தேனருவியை பல்லக்கில் அமர வைத்து நித்யா உடன் நடந்து வர
சபரிநாதன் அண்ணா ஒரு புறமும் மகாராஜா பரமேஸ்வரி ஒருபுறமும் மேலும் மாமா முறை இருப்பவர்கள் கார்முகிலன் மற்ற உறவினர்கள் பல்லக்கில் அழைத்து வர..

அதே போல் அண்ணிகள் அனைவரும் தேனருவிக்கும் பாட்டுப் பாடி..

பல்லக்கில் பவனிவரும் பைங்கிளி..
பக்கத்தில் அமரப் போகும்
பார்த்திபனைக் காண

பருவமங்கை புதுப் பூவாய்
மலர்ந்திருக்க..
புள்ளிமான் விழியாலே
பூத்திருக்கா வெட்கத்திலே..

விளக்கு ஏற்றி இருபுறமும் ஆடிப் பாடி அழைத்து வர அதே போல் பல்லக்கில் வரும் தேனருவிக்கு பூக்கள் போட்டு வரவேற்க..

வரவேற்பு மேடையருகில் பல்லக்கு வைக்கப்பட தேவ் ஆனந்த் கீழே வந்து பதுமை அவளைத் தன் கரம் கொண்டு
மேலே மேடைக்கு அழைத்துச் சென்றான்.

இளவட்டங்கள் தங்கள் மகிழ்ச்சியை கூச்சலிட்டு தெரிவித்தனர்.

தேனருவி அழகுக்கலை நிபுணர்களால் தேவதை போல் ஜொலித்தால், தாய்மாமன் மாலை அணிவித்து விட இப்போது கீழே இருந்த தோழிகள் அனைவரும் இப்போது மேடைக்குச் சென்றனர். அனைவரும் போட்டோ வீடியோ எடுத்து விட்டு மிகப்பெரிய கேக் வெட்டி கொண்டாடினர்.

சரி வாங்க நாம கீழே போகலாம் என்று மற்ற உறவினர்களுக்கு வழி விட்டு அனைவரும் மேடையை விட்டு கீழே சென்றனர்.

நிழலா தான் பாவம் நாம் எல்லாம் இவ்வளவு ஜாலியாக இருக்கிறோம். அது எங்கே இருக்கிறதோ?

ஹாய் மை பேன்ஸ் நான் இங்கே தான் இருக்கிறேன் என்று நிழலா சொல்லவும் குரல் வந்த திசையை அனைவரும் பார்த்தனர்.

( தேனருவிக்கு மட்டுமே கேட்கும் நிழலாவின் குரல் அதனுடைய பேன்ஸ் வந்ததால் அவர்களுக்கு சிறப்பு சலுகை கொடுத்து இருக்கிறது. இரண்டு நாட்கள் மட்டுமே தான்.

என்ன ரைட்டர் ஜி ஆடித் தள்ளுபடி மாதிரி இருக்கிறது. நீங்கள் விடுவதே உடான்ஸ்.. அது எப்படிங்க ஜி நம்புகிற மாதிரியே உடான்ஸ் விடுகிறீங்க..

எல்லாம் ஒரு ஜாலி தான்டா மா.)

ஹேய் நிழலா என்ன பல்லக்கில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய்?

ஆமா இதைப் பார்த்ததும் எனக்கு பழைய நியாபகம் வந்து விட்டது.

ஏன்? அப்படிச் சொல்கிறாய்?

ஆமாம் நான் சிறு வயதில் இது போல் பல்லக்கில் தான் பக்கத்து ஊர்களுக்கு என் அம்மா அப்பாவோடு போவேன் அது தான் அவர்கள் நியாபகம் வந்து விட்டது என்று சோகமாகி விட்டது.

அச்சோ நிழலா எங்கள் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டு நீ சோகமாகி விட்டாய்? கூலா இரு.. நீ ஆசைகள் நிறைவேறாமல் அந்தப்
பெட்டிக்குள் அடைந்து கிடைந்தாய்.

உன்னை வெளிக் கொண்டு வந்து இன்றைக்கு உன் எதிரியைப் பழிவாங்கி இருக்கிறாய்? எத்தனை நல்ல விடயங்கள் செய்து கொண்டு இருக்கிறாய்?

உன்னை வெளியே கொண்டு வந்தவளுக்கு திருமணம் நீ எவ்வளவு சந்தோசம் பட வேண்டும் இப்படி அந்த பல்லக்கில் உட்கார்ந்து கொண்டு பீல் செய்தால் எப்படி அந்த ஆறுவிரலை அலற விடுவது கமான் லெட்ஸ் கோ பேபி என்று அவர்கள் அழைக்கவும் நிழல் எழுந்து சரி நீங்கள் எல்லோரும் இருங்கள் நான் போய் அந்த வனிதாவை எப்படியாவது திருமணத்திற்கு இழுத்து வருகிறேன்.

ஆமா நிறையக் காய்கறிகள் வெட்ட வேண்டும் அதனால் இழுத்து வா இன்றைக்கு இரவு நல்லா அவளை வைத்து ஆர்க்கெஸ்ட்ரா போட்டு விடலாம்.

அங்கே பாருங்கப் பா ஆறுவிரல் அலறுது வருது. ஏய் அந்த பேட்டை ரவுடிகளுக்கு காது கேட்டு விடப் போகுது மெதுவா பேசுங்கள்.

யாரைப் பார்த்து பேட்டைகள் என்று சொன்னாய்? அவனுக இப்போதைக்கு பெட்டைகள் தான்.

என்னப்பா இப்படி பொசுக்குனு சொல்லி விட்டாய்?

ஆமா நிழலா அவனுக பல்ப் பீஸ் போக வைத்து விட்டது என்று சொல்லி விட்டு சிரித்தனர்.


தொடரும்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top