Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 385
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 83
பாகம் - 83
நீ என்ன சொல்ற நிழலு அவங்களுக்குள்ள என்ன பிரச்சனை போயிட்டு இருக்குது.
ஆமா அவரு ரவிக்குமார் அண்ணன் விஜய் லதா செய்த தில்லுமுல்லு அனைத்தும் அவர் கண்டுபிடிச்சிட்டாரு.
நீ அடங்கவே மாட்ட என்று காலையில் சத்தம் போட்டு இருந்தாரு .ஒரு ரெண்டு நாள் பொறுமையா இரு அதுக்கு பின்னால உனக்கு நான் டைவர்ஸ் கொடுத்துடுறேன்.
இத்தனை நாள் நீ பண்ணுவது எல்லாம் எனக்கு தெரியாது நினைச்சுட்டியா? நானும் நம்ம பையன் அபிநவுக்காக தான் உன்னை கண்டுங்கானமிருந்தேன்.
ஆனா உன்னால் என்னோட மான மரியாதையே போச்சு தல குனிவா இருக்குது உனக்கு என்ன அவ்வளவு பணத்து மேல ஆசை நான் வேணும்னா டைவர்ஸ் கொடுத்துடறேன். நீ போயி நல்லா பணம் இருக்கிற கிழவனை போய் கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு பயங்கரமா திட்டிட்டாரு.
அதுக்கு அவ அழுதுட்டு உக்காந்து இருந்தா நல்லா வேணும் அவளுக்கு எல்லாம் இப்படித்தான் சாக் ட்ரீட்மென்ட் கொடுக்கணும்.
ஆமா எப்ப இத்தனை நாளா அவ பண்ண எத்தனை மன கஷ்டம் உண்டு பண்ணா இத்தோடு விட்டார் என்று சந்தோஷம் படவேண்டும். நானா இருந்தா நல்ல ஏறி முதிச்சுட்டு வந்து இருப்பேன் .அவளை அவரு அதுதான் பயங்கரமா திட்டிவிட்டார் இதெல்லாம் நீ அங்க இருந்து கேட்டு வந்தாயா?
நிழல் ஆமா இதெல்லாம் கேட்டுட்டு அவங்க எல்லாம் மண்டபத்துக்கு கிளம்பிட்டாங்கன்னு தெரிஞ்சு பின்னாலும் இங்க மட்டும் வந்தேன்.
ஆனால் விஜயலதா வில்லத்தனம் பண்ணாலும் கடைசில அது பூரா அவளை காமெடி பீசா இத்தனை நாள் நல்ல என்டர்டைன்மென்டாக இருந்தது.
அதுக்காகவாவது நாமெல்லாம் சேர்ந்து ரவிக்குமார் அண்ணன் கிட்ட சொல்லி அவள் திருந்திட்டாங்கன்னா விட்டுவிடலாம். தானே மேலும் வந்து அவரு ஏதாவது ஆக்சன் எடுத்தா அது தேனருவி மேல தானே போகும்.
தேனருவி அந்த வீட்ல சந்தோசமா வாழனும் இல்ல இவனாலதான்னு எச்சா கோபத்தை உண்டு பண்ணும்.
சரி எதுவா இருந்தாலும் கல்யாணம் முடிஞ்ச பின்னால பாத்துக்கலாம். இப்ப போலவா நாம் எல்லாரும் இங்கேயே இருந்தா அப்புறம் யசோதா அம்மா ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க.
ஏன்னா பூவிழிக்கு இப்போ கொஞ்ச நேரத்துல நிச்சயமாகும் ஒன்று கூடி இங்கு நின்னுட்டு இருந்தா நல்லா இருக்காது வாங்க உள்ள போலாம் மகாராஜா அண்ணா மட்டும் தனியாக இருக்கிறாங்க அண்ணி அவங்க பொண்ணுக்கு ரெண்டு பேரு எல்லாம் நாம அவங்க கூட சேர்ந்து இருக்கலாம் போலாம் என்ற எல்லாரும் உள்ளே சென்றனர்.
நிச்சயத்துக்கு வேண்டியது தாம்பூல தட்டுகள் அனைத்தும் மேடையில் வைக்கப்பட்டது.
அப்பொழுது போய் பொண்ணை அழைச்சிட்டு வாங்க என்று சீர் செய்யும் பெண்மணி சொல்லவும் அதேபோல் போய் பூவிழியை இவர்கள் அனைவரும் அழைத்துக் கொண்டு வந்தனர்.
நிச்சயத்திற்கு வச்ச புடவை குடுங்க போய் மாத்திட்டு வரட்டும் என்று ஒரு பெரியவர் சொல்லவும். சீர் காரம்மாள் அதைப்போல் பெண்ணை அந்த மேடையை சுற்றி வந்து எதிர்க்க இருக்கும் அனைவருக்கும் வணக்கம் வைத்த பின் அவர்கள் புடவை புடவையை சீர் செய்து அதை பூவிழிக்கையில் கொடுக்கவும் காலில் விழுந்து அதை வாங்கிக்கொண்டு இப்போது அந்த சேலையை மாற்றுவதற்காக அழைத்துச் சென்றனர்.
அதேபோல் புடவையை மாற்றியதும் இப்போது பூவிழி அழைத்துக் கொண்டு மேடைக்கு வந்தனர் .அப்போது கார்முகிலனும் வந்தான் இருவரும் எதிர்க்க உள்ள அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தனர்.
பொண்ணு மாப்பிள்ளை இருவருக்கும் பூஜை செய்து திருநீர் வைத்துவிட்டு கலாட்டா செய்வதற்கு வேண்டி பெண்கள் அனைவரும் சந்தனம் குங்குமம் வைத்து விட்டனர்.
என்ன புள்ளைகளா புதுசு புதுசா பண்ணிட்டு இருக்கீங்க?
அதெல்லாம் இப்போது தான் பண்ண முடியும்.
அப்புறம் பூவிழிக்கு கார்முகிலன் மோதிரம் போட்டு விட்டான். அவளின் கைக்கு முத்தமும் வைத்து விட்டான். அங்கே இருந்தவர்கள் ரொமான்ஸ் ஸ்டராட் ஆகி விட்டது. அண்ணா இது மண்டபம் நாங்க எல்லாரும் இங்கே தான் இருக்கிறோம்.
அனைவரும் சிரித்து விட பூவிழிக்கு வெட்கமாக போய் விட்டது. அண்ணி எங்க அண்ணா எத்தனை நேரம் தான் கையை நீட்டிக் கொண்டு இருப்பார்.
அதில் சுயத்திற்கு வந்தவள் அதேபோல் கார்முகிலனுக்கு பூவிழி மோதிரம் போட்டு விட்டாள். பத்திரிக்கை வாசித்து விட்டு இன்னும் மூன்று மாதங்களில் இவர்கள் இருவருக்கும் திருமணம் என்று அறிவிப்பு செய்து இரண்டு பக்கமும் வெத்தல பாக்கு தட்டு மாத்திட்டாங்க பொண்ணு வீட்டு சைடுல நித்தியா சபரிநாதன் தட்டத்தை வாங்கிட்டாங்க.
அப்புறம் என்ன எல்லாரும் கொஞ்ச நேரம் கூட நின்னு போட்டோ எடுத்துட்டு இப்போது மறுபடியும் எல்லாம் அவங்க அவங்க பேசிட்டு இருந்தாங்க.
எப்படி இருந்தாலும் பட்டினி தண்ணீர் வாக்குறது இருக்குது 11 மணிக்கு தேவானந்துக்கும் தேன் அருவிக்குமா இன்னும் நேரம் இருக்கிறதுனால அதுக்கு தேவையானது எல்லாம் எடுத்து வச்சுட்டு இருந்தாங்க முதல்ல மாப்பிள்ளைக்கு அப்புறம் பொண்ணுக்கு.
ஒருத்தர துணி கொடுத்து அந்த துணியை இருவரும் அணிந்த பின்னால் தேன் தேவ் ஆனந்த் இப்போது பட்டினி தண்ணீர் வாப்பதற்காக அங்கே சென்றவன் தான் அவனோட மொறைமைக்கார எல்லாம் மஞ்சளு பூவு சாப்பாடு இதெல்லாம் கலந்து தண்ணியில் அவன் மேல் ஊற்றினர்.
பூவுழியும் அவளுடைய பங்குக்கு அப்பளம் காய்கறிகள் மீந்து போனது இதையெல்லாம் போட்டுக் கொண்டு ஒரு பக்கெட் தண்ணி எடுத்துட்டு போயி தேவ ஆனந்த் மேல் ஊற்றினாள்.
அட பூவிழி இதெல்லாம் ஒரு வாய்ப்பு இதுக்கு பின்னால அவர் எப்படி வர மாட்டார் மூணு மாசம் கழிச்சு இதே மாதிரி இருக்குதுன்னு சொல்லிட்டு அதுக்காக என்ற உரிமை விட்டுக் கொடுக்க முடியுங்களா?
அது அப்ப பாக்கலாம்..
அதேபோல் அடுத்தது தேன் அருவி வந்தால் தேன் அருவி மேல் பூ அதிகமா ஊத்துனாங்களா அண்ணிமார்களும் ஊத்த ஆரம்பிச்சிட்டாங்க எங்க அண்ணி இன்னைக்கு நீங்க இதுதான் நாங்க சொன்ன உங்களுக்கு கிப்ட் என்று லைனாக பக்கெட் பக்கெட் ஊத்தினார்கள். எல்லாத்துக்கு அண்ணி நீங்க அதனாலதான் இன்றைக்கு உங்க மேல தண்ணி ஊத்தி இருக்கோ எங்க அண்ணன் இனி விட மாட்டாங்க அதனால இன்னைக்கு எங்க ஆசை பூரா நிறைவேத்திக்கிறோம்.
இது சீர் முடிந்ததும் மாப்பிள்ளை க்கு உருமாலை கட்சீர் அது முடிந்ததும் அனைவரும் மதிய சாப்பாடு சாப்பிட சென்றனர்.
அதற்கு பின்னால் அவங்கவங்க எல்லா ரெடியாக போயிட்டாங்க.
இதற்கிடையே விஜயலதாவை வீட்டில் சென்று அழைத்துக் கொண்டு வருவதற்காக ரவிக்குமார் சென்றான்.
அப்போது அவளுக்கு முடியாமல் படுத்து இருந்தால். அப்படி என்ன பெரிய அடி பற்றுச்சோ என்று அவளருகில் சென்று பார்த்தான்.
இவனைப் பார்த்ததும் அவ சொன்னா என்னால எந்திரிக்கவே முடியல எனக்கு ரொம்ப பசிக்குது ப்ளீஸ் என ஹாஸ்பிடல்லையாவது கொண்டு போய் விட்ருங்க நீங்க ரெண்டு நாள் கல்யாணத்துக்கு போயிருங்க என்று அவள் அழுகவும் அவனுக்கும் கஷ்டமாக இருந்தது.
சரி என் கைய புடிச்சு அப்படியே மெதுவா வா இந்த இதுல சாப்பிடறதுக்கு மூஞ்சி கழுவிட்டு சாப்பிடு சாப்பிட்டபின்னால ஹாஸ்பிடல் கூப்பிட்டு போறேன்.
அதைப் போல அவள் சாப்பிட்ட பின்னால் மருத்துவமனை அழைத்துச் சென்றதுக்கு சென்று பார்த்தல் டாக்டர் அவளை பரிசோதித்து விட்டு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டார்.
என்ன சார் சொல்றீங்க அவ்வளவு பெரிய அடிபட்டு இருக்குதா? ஆமா என்னாச்சு அவங்களுக்கு பாத்ரூமில் வலிக்கிவிட்டேன் என்று சொன்னாங்க பார்த்தா அப்படி தெரியல எங்கேயும் மேல இருந்து கீழ விழுந்த மாதிரி இருக்குது எதுவா இருந்தாலும் எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் தான் தெரியும் அதேபோல எக்ஸ்ரே எடுத்து பார்த்த பின்னால் இடுப்பு எலும்பில் பரவாயில்லைங்க அவ்வளவுக்கும் ஒன்னும் பெருசு இல்ல சின்ன பிராக்ஸர் தான் அதுக்கு இவங்க பெல்ட் போட்டா போது ஆயில்மெண்ட் மாத்திரை கொடுக்கிற நடக்கும்போது பெல்ட் போட்டுக்குங்க.
நைட் தூங்கும்போது ஆயின்மென்ட் போட்டு தூங்குங்க சார் பெல்ட் வெளியில தான் போடணுமா? உள்ளவேனாலும் போட்டுக்கலாமா? ஏன்னா எங்க தம்பிக்கு இன்றைக்கு கல்யாணம் இவங்க வராம இருக்க முடியாது வந்தது ஆகணும் அதனாலதான்.
இப்படி கேக்க வேண்டியது பாக்குறதுக்கு ஆட்களும் இல்லை என்று ரவிக்குமார் எடுத்துச் சொல்லவும்.
அங்க போனாலும் நடக்காம ஒரே இடத்தில் உட்கார்ந்து கொள்வது கல்யாணத்துக்கு கூப்பிட்டு போங்க இல்லாட்டி வேண்டாம். உடல்நிலை தான் முக்கியம் கல்யாணம் எப்ப வேணா கலந்துக்கலாம் அதாவது இந்த விசேஷம் இல்லைன்னா மறுபடியும் நீங்க உங்க வீட்டுக்கு தான் வர போறாங்க ஆனா உடம்பு சரியில்லாமல் என்ன பண்ணுவீங்க இன்னைக்கு வந்து சும்மா ப்ராக்ச்சர் தான் இருக்குது ன்னு அதனால ரெண்டு மாசத்துக்கு மூணு மாசத்துக்கு எந்திரிச்சு நடக்கவே முடியாது.
சரி டாக்டர் நாங்க ஏதாவது பார்த்துக்கிறோம் நாங்க வரோம். நீ என்ன மாதிரி பண்ணி வச்சிருக்கிறேனு நீ நல்லது நினைச்சிருந்தா உனக்கு நல்லது நடந்திருக்கு நீ எப்ப பார்த்தாலும் அடுத்தவங்களுக்கு கெடுதல் நினைக்கும்னே நினைச்சுட்டு இருந்த என் தம்பியோட கல்யாணத்த நடக்க கூட கூடாதுன்னு நினைச்சா ஆனா கடைசியில என்ன இருக்குது நீ தான் நடக்க முடியாம போயிட்ட அவன் கல்யாணம் எல்லாம் ஜாம் ஜாமு நடந்துட்டு இருக்குது.
உன்ற நாள நான் என் தம்பி கல்யாணத்துல கலந்துக்க முடியாம உன் பின்னால சுத்திட்டு இருக்கேன். கல்யாணத்துக்கு கூப்பிட்டு போவ வீட்டுக்கு போறோம் ரெண்டு பேரு நீ பட்டு சேலைக்கு கட்டிக்கோ கல்யாணத்துக்கு போகலாம்.
என்ன என்னால பதில் சொல்ல முடியல மத்தவங்க என்கிட்ட கல்யாணத்துக்கு வருவீங்க அதனால மட்டும் தான் உன்னை கூப்பிட்டு போறேன் ஒரே இடத்தில் உட்கார்ந்து அசைய கூடாது சரியா?
இந்த அளவுக்கு இவர் மனசு மாறினதே போதும் என்ற நிலைமையாய் விட்டது. நிஜமாவா சொல்றீங்க கண்டிப்பா நானும் எதுவும் பண்ண மாட்டேங்க. இனிமேலும் நான் இது மாற தவறு செஞ்சு என் வாழ்க்கை தொலைச்சு கெடுத்துக்க விரும்பல இனிமேல் எப்பவுமே உங்களுக்கு மனைவியா நம்ம குழந்தைக்கு அம்மாவா மட்டும் இருப்பேன் என்று மனதுக்குள் தான் நினைத்தால் அதை வெளியில் சொன்னால் இன்னும் வேற ஏதாவது பெரிய பிரச்சனை உருவாகிவிட்டால் என்ன செய்வது அவரே ரெண்டு நாள் டைம் சொல்லி இருக்கிறார் அதுக்குள்ள நாமோ நடந்துக்குறது வச்சு அவரும் மனசு மாறுவாரு சரி இவரா டைவர்ஸ் பண்றேன்னு சொன்னாலும் அத்தை எல்லாம் விட மாட்டாங்க என்று ஒரு நம்பிக்கையில் அமைதியாக அமர்ந்து வந்தால்.
என்ன அமைதியா உக்காந்துட்டு இருக்குற பாரு உன்னை ஏதாவது பிளான் பண்ண இப்படியே இப்ப இங்க சாக்கடையில் தள்ளி விட்டு போயிருவேன் என்று ரவிக்குமார் கூறவும்...
ப்ளீஸ்ங்க என்னை மன்னிச்சுருங்க . அதைச்சொல்றதுக்கு கூட எனக்கு இப்ப தகுதி இல்லை ஆனா இதுக்கு மேல நான் எதுவும் பண்ண மாட்டாங்க ..போதுமே இப்ப நடந்தது என்னன்னு நான் ஒன்னும் உங்களுக்கு சொல்லல நான் சொல்றேன்.
நாளைக்கு சொல்றேன் என்ன பெரிய பீடிகை எல்லாம் போடுற நீயே பயந்திருக்கிறேனோ அதைவிட பெருசா ஏதாவது பாத்து பயந்து இருக்கிறாயா?
சரி சரி பொருத்தது பொருத்தேன் ரெண்டு நாள் டைம் இருக்குதெல்லா அதுக்குள்ள தீர்த்துக்கலாம்.
தொடரும்...