Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 364
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 82
பாகம் - 82
மதுரையில் இருந்து கூட வந்துட்டாங்க சின்ன மாப்பிள்ளை ஆனா நாம இங்கிருந்து இத்தனை நேரம் ஆயிருச்சு என்று பேசிக்கொண்டே பெண் வீட்டார் மண்டபத்தில் உள்ளே வந்தனர்.
கார்முகிலன் பூ விழியை பார்த்து அவளின் அழகில் சொக்கிப் போனான். பேசாம இப்பவே தாலி கட்டி போடலாமா? என்று அவன் மனதில் எண்ணமோட அதை அறிந்து கொண்டது போல் ,
அண்ணா என்ன இப்பவே தாலி கட்டிவிடலாம் என்று தான் நீ யோசிக்கிறீங்க? என்று எஸ்தர் கேட்கவும் .
யாருப்பா? நீங்கெல்லாம் நான் மனசுல நினைச்சத எப்படி கரெக்டா உள்ள வந்து பார்த்த மாதிரி சொல்றீங்க?
நாங்க எல்லாம் யாரு?
என்ன உங்களுக்கே தெரியலையா?
ஐயோ இப்படி டேமேஜ் பண்றீங்களே அண்ணா உங்க தங்கச்சிகளை .. எத்தனை சினிமாவில் பார்த்து இருப்போம்.
ஓ அப்படி சொல்ல வர்றீங்களா?
ஆமா அப்போ அடுத்த சீன் எப்படி இருக்குன்னு எங்களுக்கு தெரியாதா? அதனால தான் சொன்னேன். பார்த்தா நீங்க அதைத்தான் நினைச்சிருக்கிறீங்க?
பின்ன இத்தனை அழகா வந்தா எப்படி நிச்சயத்தோட விட முடியும் தாலி கட்டி கூட்டிட்டு போகணும் தானே நினைப்பு வரும்.
ஹலோ அப்படியெல்லாம் அவசரப்படாதீங்க, எங்களுக்கு தேவானந்த் கல்யாணத்துக்கு எப்படி எல்லாம் செஞ்சிருக்காங்களோ அதே மாதிரி உங்க கல்யாணத்துக்கும் எங்களுக்கெல்லாம் பட்டுச்சேலை எடுத்து கொடுக்கணும் நாங்க வந்து இது மாதிரி கலக்கணும்.
அதற்கு என்ன இப்பவே போன் பண்ணி சொன்னா வந்துருது. காலையில் ஒரு சேரி பொழுதோட ஒரு சேரி கட்டிங்கோ.
அதெல்லாம் நாங்க ஒத்துக்கவே மாட்டோம் எப்படி இருந்தாலும் மெஹந்தி பங்க்ஷன் முடிஞ்சது.
இல்லை ரெண்டு பேரையும் தான் நீங்க வரவேற்பு செஞ்சீங்க அப்பவே சொல்லி இல்ல ரெண்டு மாப்பிள்ளையும் தானே வரவேற்கிறீங்க ?
அதனால இப்ப கல்யாணம் இன்னிக்கு பண்ணிக்கலாமா?
இதெல்லாம் போங்கு நாங்க ஒத்துக்க மாட்டோம். முதல்ல எங்க முதல் அண்ணனுக்கு கல்யாணம் அப்புறம் வந்து சின்ன அண்ணாக்கு கல்யாணம்.
சரி சரி எல்லாம் வாசலில் நின்னுட்டு அரட்டை அடிச்சிட்டு இருக்க எல்லா உள்ள வாங்க சாப்பிட்டு அப்புறம் ஆக வேண்டியது பார்க்கலாம் .
அம்மா இருங்க இன்னும் தேவானந்த் குடும்பம் இன்னும் ஒருத்தர் வர காணம் .
அப்புறம் நீங்க எல்லாம் அங்க போயி பெரிய மாப்பிள்ளை கூப்பிட்டு வராம எல்லாம் பொண்ணை மட்டுமே அழைச்சுட்டு பொண்ணு கூட வந்து நிக்கிறீங்க?
அவங்க வேற கோவிச்சுக்க போறாங்க? அது தான் காணோம்.
அப்படி எல்லாம் இல்லம்மா அவங்களும் வந்துட்டே இருக்காங்க..நாங்க போன் பேசிட்டு தானே வந்தோம்.
அதேபோல் தேவானந்த் குடும்பம் மண்டபத்தில் உள்ளே வரவும். இப்போதுதான் தேனஅருவிக்கு நிம்மதியாக இருந்தது.
ஆதிரா உடனே தேவானந்த் அண்ணா நீங்க வேற லேட்டா வந்துட்டீங்க. இங்க ஒரு ஆளுக்கு ஒரே டென்ஷன் ஆகி போச்சு இறங்கி எவ்வளவு நேரம் ஆச்சு உள்ள வராம உங்களைவே பார்த்துட்டு இருக்குறாங்க.
அப்படி தேடிட்டு நீங்க வந்தது என்னன்னு எங்க அண்ணி பாக்காம சுத்தி மத்தவங்க கூட பேசிட்டு இருக்கீங்க?
தேனருவி உடனே நான் அப்படியெல்லாம் ஒன்று பார்க்கவில்லை நான் சும்மா எல்லாத்தையும் பாத்துட்டு இருந்தேன் என்று தேவையில்லாமல் வாயைவிட்டா
பொண்ணு பேச ஆரம்பிச்சிட்டாங்க இத்தனை நேரம் அந்த பேச்சு எங்க ஓடி
ஒழிந்தது. கண்சிமிட்டாமல் நின்னுட்டு இருந்தீங்க?
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சும்மா கிண்டல் பண்ணாதீங்கப்பா என் மருமகளுக்கு ஆமா அவளுக்கு கட்டிக்கு போறவன் இன்னமும் காணோமே அப்படின்னு தவிச்சிட்டு பார்த்துட்டு இருப்பா அது நல்ல விஷயம் தானே எல்லாரும் சேர்ந்து என் மருமகளை கிண்டல் செய்கிறீங்களா என்று கிருஷ்ணவேணி அம்மா கேட்டுக்கொண்டே உள்ள வரவும்,
வாங்க அத்தை இவங்க எல்லாரும் என்னைய அப்படித்தான் கிண்டல் அடிக்கிறாங்க!
அப்படியா ?!!!சரி இன்னைக்கு ஒரு நாள் தானே அடிச்சுட்டு போறாங்க விடு.
அப்படி சொல்லுங்கம்மா இன்னைக்கு எங்ககிட்ட அண்ணி பாருங்க நீ உங்களுக்கு எத்தனை வெச்சிருக்கிறோம் லைனா எவ்வளவு கிப்ட் இருக்குது அதுல இருந்து எஸ்கேப் ஆக முடியாது.
வாங்க வாங்க எல்லாரும் போய் சாப்பிடலாம் அனைவரும் டைனிங் ஹால் சென்று காலை உணவினை உண்டனர்.
அப்போது எல்லாரும் கவனிச்சீங்களா? ஹாய் பிரண்ட்ஸ் ஒரு ரெண்டு பேரு மட்டும் காணோம் என்ன ஆச்சுன்னு தெரியல என்று தோழிகளுக்குள் பேசிக் கொண்டனர்.
சரி எப்படி இருந்தாலும் வானதி அக்காட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம் நம்மளுக்கு அண்ணி தான் எதுவும் ஏதோ ஒன்னுடி என்ன ஆச்சுன்னு தெரியல எல்லாரும் நிழலா எங்க இருக்குன்னு தெரியல இத்தனை பேர் இருக்கறதுனால நாமளும் நிழலாக தேடியது கூட பேச முடியாது கல்யாணம் மண்டபம் தான் இப்ப எல்லாம் உள்ள வரலாம் இல்ல கோயிலா இருந்தா தானே வர முடியாது.
ஹலோ நான் நிழலா நீங்க எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு வாங்க நாங்க ஐஸ் கிரீம் கொடுக்கிற இடத்தில் இருக்கிறோம் என்று ஒரு குரல் கேட்டது.
ஐஸ்கிரீம் எல்லாம் நீ சாப்பிடுவியா?
அதெல்லாம் ஜில்லுனு இருக்குது.
அது எப்படி உன்னால உணர முடியும் .
நான் எங்கே சாப்பிடுகிறோம். சாப்பிடுகிறவர்களை பார்க்கிறோம் இல்ல அவங்க முகம் நாக்குல வச்சுட்டு கண்ண மூடி அவர்கள் அனுபவிக்கிற பீல வச்சு சொல்றேன்
ஆமாமா நீங்க எதுக்கு நின்னு பார்த்துட்டு இருக்கிறதா அவுங்களுக்கு தெரியாது அதனால ஃப்ரீயா சாப்பிடுறாங்க தெரிஞ்சா எல்லாம் தலை
தெறிக்க ஓடிருவாங்க
சரி உங்களுக்கு மேட்டர் தெரிய வேணும்னா என்னை பார்க்க வாங்க நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
அருவி பார்த்தையா?
நீங்களே இத்தனை பேர்
இருக்கீங்களே நீங்க பாருங்க எனக்கு நிறைய வேலை இருக்குது.
அப்படி என்ன வேலை செய்யப் போற நிழலு?
எத்தனை விஐபி எல்லாம் வராங்க அவைகள் எல்லாம் பாக்கணும் அப்புறம் செக் பண்ணனும்.
செக் பண்ற வேலையெல்லாம் நீ செய்யறியா?
பின்ன நான் செக் பண்ணாம யார் செக் பண்ணுவா அந்த அமைச்சர் காத்தவராயன் அவனோட ஆளுங்களோட வருவான்.
என்ன அவனையெல்லாம் கூப்பிட்டு இருக்குதா?
என்ன பண்றது பெரிய மனுசன்கிற பேர்ல இருக்கிறானே அவன் இருக்கிற பதவிக்கு தான் கூப்பிட்டு இருக்காங்க .ஆனா அவன் மனசுக்குள்ள இருக்கிறது பூரா சாக்கடை அது நம்மளுக்கு தெரியும் மத்தவங்களுக்கு தெரியுமா இந்த தொகுதி எம்எல்ஏ ன்னு கூப்பிட்டு இருக்காங்க அவங்க கூட வர்றவங்கனால எந்த பிரச்சனையும் ஆகக்கூடாது இல்ல அதனால கவனமா இருக்கிறேன்.
அதுவே நீ அவனை ஆல் ரெடி சோலி முடிச்சுட்டியே?
நான் முடித்து விட்டேன் ஆனால் அவங்க அடங்குவாங்களா அந்த புத்தி குறையுமா இப்பவுமே தேவானந்த் வாங்கி இருக்கிற கல்லூரிய அவனோட பேர்ல மாத்தணும்னு திரிஞ்சுகிட்டு இருக்கிறான் .
அது தெரிஞ்சு நானும் அவனுக்கு இன்னுமே நிறைய சாக் ட்ரீட்மென்ட் கொடுக்கணும்.
இன்னைக்கு இந்த இடத்துல கண்டிப்பா அவனுக்கு இருக்குது. அவனுக்கு தேவகோட்டை அரண்மனை மேலே ஒரு கண்ணு இருக்குது அதுக்காகவே அவங்களோட எல்லாம் நல்லவன் மாதிரி பேசிட்டு வருவான்.
யாருமே கூட இருக்குறவங்க தானே கூட்டிட்டு எதுக்கு இருக்கறவீங்களா எதிரி கூட நம்பிடலாம் ஆனா அந்த கூழக் கும்பிடு போட்டு சலாம் அடிக்கிறவங்களை தான் நம்ப முடியாது.
என்ன நிழலா ஒரே பிளாஸிபி பேசுறே.
என்ன பண்றது நானும் இந்த பூமியில் தான் சுத்திட்டு இருக்கேன். அதனால தெரியாத விஷயம் எத்தனையோ தெரிஞ்சு போச்சு இத்தனை வருஷமா புக்குக்குள்ள அடைந்து கிடந்த அப்போ எனக்கு தெரியல ஆனா மனுசங்க தான் கீழ்த்தரமா நடந்துக்கிறாங்க அதை எல்லாம் பார்க்கும் போது ஆதிகாலம் எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணுது.
சரி நிழலா நீ அங்க போ நாங்க நீ எல்லாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தை திருத்த முடியாது. என்னாதா திருப்பி திருப்பி சொன்னாலும் அவங்க என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் நடத்துவாங்க பார்ப்போம் நம்மனால முடிஞ்சது நாம செய்வோம்.
அனைவரும் சாப்பிட்டுவிட்டு நிழலாவை தேடிச் சென்றனர். சொல்லு நிழலா என்ன பண்ண?
நான் என்னதே உங்ககிட்ட உதவி கேட்டாலும் எல்லாத்துக்கும் எப்படி இருந்தாலும் தெரிஞ்சு அதனால் நேத்து நைட்டு தேவ் ஆனந்த் வீட்டுக்கு போன அங்க போய் பார்த்தா அந்த வனிதாவும் விஜயலதாவும் இன்னும் எப்படி எல்லாம் தடங்கள் பண்ணலாம் அப்படிங்கறதை யோசிச்சிட்டு இருந்தாங்க.
அதுதான் நாமும் செல்லுல அண்ணனுக்கு அனுப்பிவிட்டு இருந்தோமே அதை யாருமே பாக்கலையா ?
ஆமா நீங்க அனுப்பிச்சு விட்ட நேரத்துக்கு அதுல ஒருத்தர் தான் பார்த்தாரு.
அப்படின்னா அவருக்கு தெரிஞ்சிருச்சு இல்ல அவர் பார்த்து இருப்பார் அப்படின்னு தோழிகள் சொல்லவும்.
அப்படி எல்லாம் அவிங்கள லேஸ்ல விற்ற முடியாது என்ன வேணா பிளான் பண்ணுவாங்க அதனாலதான் ஒரு சந்தேகத்துக்கு நான் அங்க போனேன்.
அப்புறம் விஜய்லதா வனிதாவும் மெஹந்தி வைக்க ஆரம்பிச்சாங்க எனக்கு ஒரே காண்ட் ஆயிடுச்சு இவங்க கெட்ட கேட்டிற்கு மெஹந்தி ஒரு கேடா என்று நினைத்து அதை மாத்தி வைத்து விட்டேன்.
பரவாயில்லையே என்னத்த மாத்தி வச்ச நிழலா..
மெஹந்திப்பதுவா நாய் மலத்தை வச்சுட்டோம் அது தெரியாம அவங்க வச்சுட்டாங்க ஒரே ஸ்மல் அப்புறம் வனிதா அந்த மெஹந்தி கோனை அழுத்திப் பிடிக்க விஜயலதா வாய்க்குள் சென்று அங்க நடந்த கலாட்டா அனைத்தையும் நிழலா சொல்ல இப்போது தோழிகள் அனைவருக்கும் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
நேத்து செமய பண் பண்ணி இருக்கிறப்பா நாங்கள் இதை பார்க்க முடியல நேர்ல எப்ப பார்த்தாலும் நீ மட்டும் பண்ணி என்ஜாய் பண்ணிட்டு வந்து மறுபடியும் உன்னோட நெஞ்சுல இருக்குற ஸ்கிரீன் ஓபன் பண்ணி தேனருவிக்கு காமிக்கிறே.
அந்த நேரத்துல தான் நாங்களும் அதை படிச்சு தெரிஞ்சுக்க முடியுது. அப்பா நேத்து பாரு நீ என்ன என்ன வேலை பண்ணியிருக்கிறாய்.
சரி அது பண்ணுனதுக்கு இப்ப அவங்க வராம இருக்குறதுக்கு என்ன காரணம்.
அதுவே சொல்ல வர்றேன்னே அதுக்குள்ள உங்களுக்கு என்ன இத்தனை அவசரம்?
சரி சரி சஸ்பென்ஸ் வைக்காம சீக்கிரம் சொல்லு நாங்களும் என்ஜாய் பண்ணுவோம் இல்ல.
நல்லா என்ஜாய் பண்ணுங்க விஜயலதாவை தலைக்கு மேல தூக்கி கரகரன்னு சுத்தி கீழே போட்டேன் அதுல அவங்களுக்கு இடுப்புல கொஞ்சம் பிரச்சனை ஆயிடுச்சு.
அப்புறம் வனிதாவுக்கு உள்ள ஒரு நிழலை போட்டு வச்சிட்டு வந்து இருக்கிறேன்.
உங்க பாஷைய சொல்றேன் அதாவது வனிதாவுக்கு பேய் பிடிச்சிருக்கு.
அட பாவமே அப்ப இரண்டு பேர் கல்யாணத்துக்கு வர மாட்டாங்க வந்தாங்கன்னா நாங்களும் கொஞ்சம் என்டர்டைன் பண்ணலாம்னு நினைச்சுட்டு இருந்தோம்.
போ நிழலா எங்கள எல்லாம் நீ ஏமாத்திட்ட?
வருவாங்க அவங்களே வர வைக்கலாம் ஆனா கல்யாணத்துல எந்த சிரமமும் கொடுக்காத மாதிரி நடந்துக்கோனும்.
தடை இல்லாம கல்யாணம் நடக்கணும் சமையல் ரூம்ல விட்டுடலாம் எல்லா வேலையும் சீக்கிரம் செஞ்சு கொடுத்துடுவால்ல.
அட ஆமாம் புள்ள இப்படி கூட ஒரு ஐடியா இருக்குதுல்ல சரி அவளை எப்படியாவது கிளப்பி கூப்பிட்டு வர்ற அந்த கல்யாணத்துக்கு அப்புறம் விஜய லதா அவங்களுக்குள்ள ஏற்கனவே நிறைய பிரச்சனை போயிட்டு இருக்குது .
அவ அடங்கிட்டானு நினைக்கிறேன் அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறாய் நிழலா?
தொடரும்...