• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
363
நீ உடல் நான் நிழல்
பாகம் - 81

ரவிக்குமார் இவ எங்கே போனால் இன்னும் ரெடியாகவில்லை என்று சந்தேகத்தில் வனிதாவின் அறைக்குச் சென்றான். ஆனால்
என்ன தான் தன் மனைவி இங்கே இருக்கிறாள் என்றாலும் வனிதாவும் இருப்பதால் இப்போது தனது அண்ணி வானதியின் உதவியை நாடி
அண்ணி என்று அவர்கள் அறை முன் நின்று அழைக்க.

இது என்ன இந்த நேரத்தில் அழைக்கிறார் என்று வானதி வெளியே வந்து பார்த்து. ஏனுங்க சின்ன மாமா நீங்கள் இன்னமும் கிளம்ப வில்லையா?

அபிநவ் நான் குளிக்க வைத்து விட்டேன் அவன் அதிரா ஆதிரா கூட விளையாண்டு கொண்டு இருக்கிறான்.

அண்ணி அதில்லை விஜயலதா என்று கூறியவனைப் பார்த்து.

ஏனுங்க கொழுந்தனாரே அவுங்களுக்கு என்னாச்சு.. என்று பதட்டமாக கேட்கவும்.

அண்ணி அதெல்லாம் பயப்பட ஒன்றுமில்லை. அவளை எங்கள் அறையில் இல்லை. நேற்று இரவு வனிதா அறைக்கு போனா இன்னும் வரவில்லை அது தான் நான் எப்படி அங்கே தனியாகச் செல்வது அது தான் உங்களை அழைக்க வந்தேன்.

இதென்ன வம்பா போச்சு மறுபடியும் ஏதாவது சதி செய்கிறாங்களா? சரி வாங்க என்று யோசனையாக இருவரும் அங்கே அந்த அறைக்குச் செல்ல
நீங்க இங்கேயே இருங்க நான் முதலில் உள்ளே என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறேன்.

வானதி உள்ளே சென்றவள் அறைக்குள் சென்ற வேகத்தில் குமட்டிக் கொண்டு வர வெளியே வந்தாள். அவளின் செய்கையில் பயத்தவன் அண்ணி என்னாச்சு ஏன் இப்படி வருகிறீர்கள்.

கொழுந்தனாரே உள்ளே போவதற்கு முன்பாக ஏதோ ஒரு வாசம் உள்ளே போனதும் வாமிட் வருவது போல் இருக்கவே நான் என்னால் நிற்க முடியவில்லை அது தான் வந்து விட்டேன்.

அண்ணி ஏசியிலிருந்து ஏதாவது கேஸ் லீக் ஆகி விட்டதா? என்று பதரவும் அதுக்கு எல்லாம் வாய்ப்பில்லை தம்பி அவுங்க இரண்டு பேரும் தூங்கிட்டுத் தான் இருக்கிறாங்க இது வேற வாசம், அது எப்படி வேற வாசம் அடிக்கும்.

ரவிக்குமார் உள்ளே சென்றான் உண்மையில் வானதி சொன்னது போல் பயங்கர நாத்தம் இது என்ன கருமத்தை அறைக்குள் சிந்தி வைத்து இருக்கிறார்கள் என்று சுற்றிலும் பார்த்தவன்.

அங்கே மருதாணி கோன்கள் கிடக்க அதை எடுத்துப் பார்த்தான். அதில் தான் கெட்ட வாடை வந்தது. இது என்ன நாய் மோசன் வாசம் அடிக்கிறது.

அண்ணி நீங்கள் உங்கள் தங்கையை எழுப்புங்கள் நான் இவளை எழுப்புகிறேன்.

விஜயலதா என்று அவளின் கன்னத்தில் தட்டி எழுப்பினான். அவள் என்ன தூங்கிட்டு இருந்தால் எழுப்பலாம் அவள் தான் மயக்கத்தில் இருக்கிறாளே
அதனால் இப்போது அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அதைத் திறந்து தண்ணீர் அவள் முகத்தில் தெளிக்கவும் இப்போது அவளிடம் கொஞ்சமாக அசைவு இருந்தது.

அவளோ இரவு நடந்த பயத்திலேயே இருந்ததால் அவளுக்கு பேய் பிடித்து இருக்கிறது. அவள் என்னை தலைக்கு மேல் வைத்து கரகரவென்று சுத்தி தூக்கி கீழே போட்டு விட்டாள். எனானங்க என்னால் எழுந்து கொள்ளவே முடியவில்லை என்று அழுதாள்.

ஆமா நீ நம் அறையில் இருந்து இங்கே எதுக்கு வந்தாய்? நான் காலையில் தான் நீ அங்கே என் அருகில் இல்லை என்று தான் இங்கே தான் இருப்பாயோ ? என்று அண்ணியை அழைத்து வந்து பார்த்தால் இது என்ன கருமத்தை இந்த அறைக்குளீ போட்டு வைத்து இருக்கிறீங்க நாத்தம் குடல் குண்டாமணி எல்லாம் வெளியே வந்து விடும் போல் இருக்கிறது.

இப்போது அவளைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றவன் முதலில் குளியலறையில் விட்டு குளித்து விட்டு வா என்று கூறிவிட்டு இப்போது அந்த அறைக்கு மறுபடியும் சென்றவன்.

அண்ணி உங்கள் தங்கையை நீங்கள் வேறு அறைக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் இந்த அறையை சுத்தம் செய்ய ஆட்களை வரச் சொல்கிறேன்.

சரிங்க கொழுந்தனாரே நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்.
இவளைக் கண்காணிக்க என் அப்பா அம்மா இருவரும் இருக்கிறார்கள், நீங்களும் போய் குளித்து ரெடியாகுங்கள். அப்புறம் இங்கே நடந்ததை இப்போதைக்கு அத்தை யிடம் சொல்லி அவங்களை டென்சன் படவைக்க வேண்டாம்.

சரிங்க அண்ணி டாக்டர் வரச் சொல்வா? என்று கேட்கவும். அதெல்லாம் எதுவும் வேண்டாம் தம்பி இவளை நான் பார்த்துக் கொம்கிறேன். விஜயலதா தான் நடக்க முடியாமல் நடந்தாங்க அவங்களுக்கு வேண்டும் என்றால் மருத்துவ மனை அழைத்துச் செல்ல முடியுமா? என்று பாருங்கள்.

தேவ் ஆனந்த் திருமணம் இல்லை என்றால் நானுமே கூட வந்து விடுவேன். ஆனால் இப்போது ஒரு இக்கட்டான நிலையில் என்ன செய்வது என்று கூறிவிட்டு வனிதா சென்று விட.

ரவிக்குமார் ஆட்களை வரச் சொல்லி சுத்தம் செய்யச் சொல்லி விட்டு இப்போது தனது அறைக்குள் சென்று பார்க்கும் போது விஜயலதா அழுது கொண்டு இருந்தாள்.

ஏய் என்னாச்சு எதுக்குடி அழுகிறாய்? உன்னால் எப்போதும் மத்தவங்க தான் அழுவாங்க உனக்கு என்னடி இத்தனை கெட்ட எண்ணம். நீயும் ஒரு பெண் தானே தேனருவி தேவ் ஆனந்த் திருமணத்தில் தடை உருவாக்க நீயும் சளைக்காமல் ஒவ்வொரு ப்ளான் போடுகிறாய் ஆனால் அதில் சிக்கிக் கொள்ளவது என்னவோ? நீ தான் உனக்கு அப்படி என்னடி சொத்து வெறி பிடித்துக் கிடக்குது.

நீ செய்யும் செயல் என்னை எந்த அளவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தது என்று உனக்குத் தெரியுமா? உன்னைக் ஏண்டா திருமணம் செய்தோம் என்று இப்போது கவலையாக இருக்கிறது. என் தம்பி திருமணம் நல்லபடியாக முடிய வேண்டும் அதற்காகத்தான் தான் அமைதியாக இருக்கிறேன்.

அதற்குப் பிறகு நான் உனக்கு டைவர்ஸ் கொடுத்து விடுகிறேன். நீ போய் என்னை விடப் பணக்காரனைப் பார்த்து திருமணம் செய்து கொள் டி உன்னோட பேராசைக்கு என் தம்பி வாழ்க்கையில் நீ இந்த அளவுக்கு விளையாட நினைத்து இருந்தும் நான் அமைதியாக இருந்ததிற்கு ஒரே காரணம் தான் அதைத் தெரிந்து கொள் நம் பையன் அபிநவ்..

பெத்த பையனை கவனிக்க கூட உனக்கு நேரமில்லை எந்த நேரமும் நீ என்ன நினைக்கிறாயோ? அது மட்டும் தான் உனக்கு முக்கியம் அது தானே மனசாட்சி என்று ஒன்று இருந்தால் நீ ஏன் இப்படி இருக்கப் போகிறாய்?

மூன்று வேளையும் நோகாமல் சோத்தை ஆக்கித் தின்று விட்டு வேற எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறாய் தானே பிறகு இது போல் தான் உனக்கு எண்ணம் வரும்.

என்னஙக என்று அழுதவளை வாயை மூடு நான் பேசி முடிக்கும் வரைக்கும் வாயைத் திறந்தாய் தொலைத்து விடுவேன்.

ஒரு இரண்டு நாட்கள் பொறுத்துக் கொள் பிறகு உன் திமிரை அடக்கி உன் அப்பன் வீட்டிற்கு அனுப்பி விடுகிறேன்.

நான் இனி மேல் எதுவும் செய்ய மாட்டேன். என்னை ஒதுக்கி வைக்காதீர்கள்.

விஷமிருக்கும் பாம்பைக் கூட நம்பலாம் ஆனால் உன் பேச்சை நம்புவதற்கு இனி நான் தயாராக இல்லை.

உன் கோணப்புத்தியால் உன் தங்கச்சி வாழ்க்கையை சீரழித்தாய். அன்றைக்கு அந்த இடத்தில் சுரேஷ் இல்லாமல் வேறு யாராவது இருந்து இருந்தால் அவளுக்கு நடந்த மோசமான நிகழ்வு ஏற்கனவே திருமணம் ஆனவனால் நிகழ்ந்து இருந்தால் என்னடி செய்து இருப்பாய். உன் வாழ்க்கையில் பங்கு கொடுத்து இருப்பாயா?

நீ என்ன வேண்டுமானாலும் செய்வாய் ஏன்னா நீ தான் சதி திட்டம் தீட்டுவதில் கில்லாடி ஆயிற்றே.. ஒரு விசேசம் ஆவது மனதில் சந்தோசமாக அனுபவிக்க முடியுதா?

தயவுசெய்து நீ கல்யாணத்திற்கு வரவேண்டாம். அதையும் மீறி வந்தாய்? நடக்கிறதே வேற என்று எச்சரித்து விட்டு இப்போது அவன் குளிப்பதிற்கு சென்றான்.

விஜயலதா தாமதமாக உணர்ந்தாள் இத்தனை நாட்கள் தான் செய்த தவறுகள் அனைத்தும் ரவிக்குமாருக்கு தெரியாது என்று இருக்க இப்போது அவன் சொல்வதில் உணர்ந்தவள் அவள் எதிர்பார்க்கவில்லை ரவி அவளைத் தன் வாழ்க்கையை விட்டு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னதையும் நினைத்து அழுது கொண்டு இருந்தாள்.

அனைவரும் கிளம்பி இருந்தனர் மண்டபத்திற்கு, தேவ் ஆனந்த் சிவக்குமார் காரில் அமர்ந்து கொண்டான்.

கிருஷ்ணவேணி தான் ரவி எங்கடா விஜயலதாவைக் காணவில்லை.

அம்மா அவள் காலையில் குளிக்கும் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டாள். அது சாய்ந்திரம் நான் அழைத்து வந்து கொள்கிறேன்.

அடத்தம்பி அடி பலமோ இது என்ன சாவகாசமாக சொல்கிறாய்? டாக்டரிம் அழைத்துச் செல்லலாம் என்று கூறவும்.

அம்மா அந்த அளவுக்கு எல்லாம் இல்லை. அவளுக்கு கொஞ்ச நேரம் படுத்து இருந்தால் சரியாகி விடும் நல்ல நேரம் முடிவதற்குள் நாம் மண்டபம் போக வேண்டும்.

பெண் வீட்டில் அனைவரும் கிளம்பியாச்சாமா? இப்போது தான் மகாராஜா அண்ணா போன் செய்தாங்க.

ஆமா அங்கே தான் அத்தனை பேர் இருந்தாங்களே ஏதாவது வண்டி ஏற்பாடு செய்து இருக்கிறார்களா?

அவுங்க பேருந்து எடுத்துக் கொண்டு போகிறாங்க.. நாம் தான் இன்னும் வீட்டில் இருக்கிறோம்.

போனதும் சாப்பிட்டு விட்டு பூவிழி கார்முகிலன் இருவருக்கும் நிச்சயம் செய்ய வேண்டும். அதுவும் யசோதா நேற்றே சொல்லி விட்டாங்க நாளைக்கு நீங்கள் தான் முன்னால் நின்று செய்ய வேண்டும் என்று பரவாயில்லை சின்னவளுக்கும் நல்ல இடம் கிடைத்து விட்டது.

கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப இரண்டு தற்குறிகளும் தேவ் ஆனந்த் திருமணத்திற்கு செல்ல முடியாமல் இப்போது வீட்டில் விஜயலதா இடுப்பு ஒடிந்தும் வனிதா தனக்கு என்ன ஆனது என்று தெரியாமலே தூங்கிக் கொண்டு இருக்கிறாள்.

மண்டபத்தில் பெண் வீட்டார் செல்லும் போதே கார்முகிலன் குடும்பத்தார் இவர்களை வரவேற்றனர்.

மதுரையில் இருந்து வரகிறவர்கள் கூட வந்து விட்டார்கள் பக்கத்திலேயே இருக்கிற நாம் தான் லேட்டாக வந்து விட்டோம்.

கார்முகிலனுக்கு பூவிழியைப் பார்க்கும் போது பேசாமல் நம்மளும் இப்பவே திருமணம் செய்து கொள்ளலாமா? என்று தான் இருந்தது.

என்ன சின்ன அண்ணா பூவிழியை இப்பவே நேரா திருமணம் செய்து கொள்ளலாமா? ப்ளேன் போடுகிறீர்களா?

ஐயோ எப்படிங்க என் மனதில் நினைத்ததை சரியாக கண்டு பிடித்தீர்கள்.

அடப்பாவமே நாங்கள் எல்லோரும் எழுத்தாளர்கள் அதனால் அடுத்த சீன் என்ன நினைப்பார்கள் என்று எழுதுகிற எங்களுக்குத் தெரியாதா?

தேனருவி தான் இன்னும் தேவ் ஆனந்த் வரவில்லை என்று வாசலைப் பார்க்க..

அண்ணியாரே அதெல்லாம் அவரும் வந்து விடுவார். என்னவோ பார்த்தே ரொம்ப நாள் ஆன மாதிரி இப்படி பார்வையில் பரிதவிக்கிறீங்க இத்தனை நேரம் பஸ்ஸில் வரும் போது பேசிக் கொண்டு தானே வந்தீக..

அதற்காக அவுங்க ஜோடியை தேடாமல் இருப்பாங்களா?

சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விழியால் சுட்டீக..
அப்படித்தானே அண்ணியாரே..



தொடரும்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top